Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம்!

Posted:

அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

மறக்க இயலா கானங்கள்: "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ... "

Posted:

பேரூந்து! அதுதாங்க பஸ் . ( Bus) எத்தனை எத்தனை நினைவுகளை சுமந்து வரும் கனவு வாகனம் தெரியுமா ?  அது போல ஒரு கனவு வாகனம் வேறு எதுவுமே இல்லையென்பேன்.


Read more ...

தமிழகத்தில் இந்த முன்னணித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்!:வானதி ஸ்ரீனிவாசன்

Posted:

தமிழகத்தில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது?: ரிசர்வ் வங்கி

Posted:

எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளன என்கிற அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் ஹர்த்தல் அனுஷ்டிப்பு!

Posted:

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டித்து வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 


Read more ...

மேற்கு வங்கத்தில் இரண்டு நாட்களில் 19 குழந்தைகள் பலி!

Posted:

மேற்குவங்கத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 19 குழந்தைகள் ஒருவகை வைரஸ் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர்.


Read more ...

green peas தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதியுதவி வருவதை ரத்து செய்ய வேண்டும்:தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

Posted:

green peas தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து நிதியுதவி வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அறிக்கை அளித்துள்ளார்.


Read more ...

இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்!:ப்ரீத்தி ஜிந்தா

Posted:

இந்தியாவை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன் என்று, ஐபிஎல் கிரிக்கெட் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பிரபல நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.


Read more ...

ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரர் மீது தாக்குதல்!

Posted:

ஜாதிக பல சேனாவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மஹிங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜித்த தேரர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாணந்துறை ஹிரன பாலத்திற்கு அருகிலேயே அவர் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய தேசிய ஆள் அடையாள அட்டையும், தேரர்கள் அணியும் மஞ்சள் ஆடையும் அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலமாகத் தாக்கப்பட்டுள்ள வட்டரக்க விஜித்த தேரர் அவசர சத்திரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமையால், வாக்குமூலம் பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, கொழும்பிலுள்ள விடுதியொன்றில் வட்டரக்க விஜித்த தேரர் உள்ளிட்ட ஜாதிக பல சேனாவின் முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை அண்மையில் நடத்துவதற்கு தயாரான போது, அங்கு அத்துமீறி நுழைந்த பொது பல சேனாவின் பிக்குகள் அவரை மிரட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


Read more ...

40 இந்தியர்கள் கடத்தப்பட்டதை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது!

Posted:


ஈராக்கில் 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது.


Read more ...

வாய்மொழி உத்தரவாக ஆளுனரை பதவி விலகச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது!:சங்கர நாராயணன்

Posted:

வாய்மொழி உத்தரவாக ஆளுனர்களை பதவி விலகச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது என்று மகாராஷ்டிர ஆளுநர் சங்கர நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார்.


Read more ...

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து த.தே.கூ, த.தே.ம.மு நாளை போராட்டம்!

Posted:

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டப் போராட்டத்தினை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தின் முன்னால் நடத்தவுள்ளன. 


Read more ...

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசிலிருந்து விலகிச் செல்ல விமல் வீரவங்ச போதும்: மனோ கணேசன்

Posted:

தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியுற்று விலகிச் செல்ல அமெரிக்காவின் செயற்பாடுகள் தேவையில்லை. அமைச்சர் விமல் வீரவங்ச போன்றவர்களே போதும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. விசாரணைக்கு எதிரான பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Posted:

இறுதிமோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு இலங்கை மீது முன்னெடுக்கவுள்ள விசாரணைக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 


Read more ...

நடை கட்டியது நடப்புச் சாம்பியன் ! : ஸ்பானியா சிலியிடம் அதிர்ச்சித் தோல்வி

Posted:

உலகக் கோப்பைக்கான போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றில் அணிகள் விளையாடத் தொடங்கியிருக்கும் நிலையில்,  நேற்று (18.06.2014 ) நடைபெற்ற இரு ஆட்டங்களும்  மிக விறுப்பானதாகவே அமைந்திருந்தன.

முதலாவது ஆட்டம்  ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.   ஸ்பாணியாவுடனான தமது முதலாவது ஆட்டத்தில், 5 கோல்களை அடித்து, அதிரடியான வெற்றிபெற்றிருந்த நெதர்லாந்து அணி, அதே உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கலந்து கொண்டது. சிலியுடனான தமது முதலாவது ஆட்டத்தில்  தோல்வியைத் தழுவியிருந்த  போதும் வெற்றிக்கான நம்பிக்கையோடு களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி.

ஆட்ட  முழுமைக்கும்  அந்த உற்சாகத்தை கொண்டிருந்த இந்த அணிகளுக்கிடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.  இன்றை ஆட்டத்தின் போதும்,  Estádio Beira-Rio மைதானத்தின் பெரும் பகுதியை ஆரஞ்சு வர்ணத்தில்  ஆக்கிரமித்திருந்தார்கள் நெதர்லாந்து அணியின் ரசிகர்கள்.

நெதர்லாந்து அணி வீரர்களும், சென்ற உலகக் கோப்பையில்  தம்மிடமிருந்து நழுவிச்சென்ற  வெற்றி வாய்ப்பினை இம்முறை பெற்றேதீரவேண்டுமென்ற பெருவிருப்பின் விளையாட்டு, ரசிக்கத்தக்கதாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் விளையாட்டினை குறை சொல்வதற்கில்லை.  இரு அணிகளும் வெற்றிக்கான பந்து நகர்த்தலிலும் சரி, களத்தடுப்பிலும் சரி சிறப்பாக விளையாடினார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஆட்டம் தொடங்கிய 20 நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தவர் நெதர்லாந்து அணியின் அர்ஜென் றொபென் ( Arjen Robben ).  ஆனால் அடுத்த ஒரு நிமிடத்தில்  ஆஸ்த்திரேலியா அணியின்  வீரர் திம் ககில் ( Tim Cahill )  தமது அணிக்கான கோலினை அடிக்க ஆட்டம் விறுவிறுப்பானது.  இந்த விறுவிறுப்பான ஆட்டத்துக்குள்  விஷமத்தனமான விளையாட்டும் மெல்லத் தலைகாட்டியது.
அதன் காரணமாக, 43 வது நிமிடத்தில்,  ஆஸ்திரேலியாவின்  திம் ககில்லும்,  47 வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வான் பெர்சியும் மஞ்சள் அட்டை பெற்றார்கள்.

54 வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவுக்கான 2வது கோலினை அடித்தார் ஆஸ்திரேலிய வீரர் ஜெடினக் ( Mile Jedinak) .  அடுத்த 4 நிமிடத்தில்,  நெதர்லாந்தின் வன் பெர்சி ( Robin van Persie )  நெதர்லாந்து அணிக்கான மற்றுமொரு கோலை அடித்து, ஆட்டத்தை சமநிலையிலாக்கினார்.  68 வது  நிமிடத்தில், நெதர்லாந்து அணியின்,  டெபெய் ( Memphis Depay ) அடித்த கோல் இந்த ஆட்டத்தின் வெற்றியை நெதர்லாந்துக்கு உரியதாக்கியது.

இறுதிவரை வெற்றிக்காகக் கடுமையாகப் போராடிய இரு அணிகளும், தப்பாட்டத்திலும் சளைக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி 18 தவறுகளையும், நெதர்லாந்து அணி 25 தவறுகளையும் விட்டிருந்தன. 3:2 என்ற கோல்களில் வெற்றிகொண்ட நெதர்லாந்து அணி இந்த ஆட்டத்தில், அதிக தூரங்களுக்கான பந்து கடத்தல்களைச் செய்து முன்னேறியது.  இந்த ஆண்டுப்போட்டிகளில் நெதர்லாந்து அணியின் சிறப்பாகத்தெரிவது, இந்த நீண்ட பந்துகடத்தல்களும், வீரர்களின் விரைவான ஓட்டங்களுமெனலாம். இன்றைய ஆட்டத்திலும்  நெதர்லாந்து அணியிடம் நிறைவாக்க காணப்பட்ட இந்தவகையான  உத்தியில்  முன்வந்த பந்துகளை, ஆஸ்திரேலிய அணி வெற்றிகரமாகச் சமாளிததது என்பதும் மிகையல்ல.

றியோ ஜெனரோவின் கடற்கரையில், பெருந்திரையில் பந்தாட்டம் காணும் ரசிகர்கள்.

இன்றைய ஆட்டத்தினைப் பார்க்கையில் , இம்முறை உலகக் கோப்பைக்கான இறுதிநிலைப் போட்டிக்கு நெதர்லாந்து அணி வரும் என்கின்ற நம்பிக்கையினை, அவர்களுக்கு மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் தோற்றுவித்திருக்கலாம்.

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவுடனான  தனது முதல் ஆட்டத்தில் 3: 1 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டிருந்த சிலியும், நெதர்லாந்திடம் தோல்வி கண்டிருந்த நடப்பு சம்பியனான ஸ்பாணியா அணியும் மோதின.

இந்த ஆட்டமும் சுவாரசியமானதாக இருந்த போதும், எந்தவொரு கோல்களையும் அடிக்காது ஸ்பாணியா அதிர்ச்சித் தோல்வியினைச் சந்தித்து, 20வது உலகக் கோப்பைக்கான போட்டித் தொடர்களின் முதல் நிலையிலேயே, தொடரிலிருந்து வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை நடப்பு சம்பியனான ஸ்பாணியாவிற்கு இந்த அதிர்ச்சித் தோல்வி ஏன்..? அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லையா? எனில் ஆம் என ஒற்றைச் சொல்லில் ஒதுக்கிவிடமுடியாது. நன்றாகவே விளையாடினார்கள்இ ஆனால் அவர்களது விளையாட்டினை அதனிலும் மேலாக நன்றாக எதிர்கொண்டார்கள் அவர்களை எதிர்த்து ஆடியவர்கள் என்பதே சரியானதாகும்.

ஸ்பாணியாவுடனான முதலாவது ஆட்டத்தில் வெற்றிகொண்ட நெதர்லாந்து அணியும், இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி கொண்ட சிலி அணியும், ஸ்பானிய வீரர்களின் ஆட்டத்தை திறமை எதிர்கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதற்கும் மேலாக, ஸ்பானியாவின் பக்கம் இம்முறை அதிர்ஷ்டக் காற்று வீசவில்லை என்றும் சொல்லாம்.

சிலியுடனான இந்த இரண்டாவது ஆட்டத்தில் 14 தடவைகள் அது வெற்றிக்கான பந்து நகர்த்தல்களைச் செய்திருந்தது. 8 தடவைகள் கோல் அடிப்பதற்கு முயன்றது. ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. ஆனால் இதைவிடவும் குறைவான முயற்சிகளை மேற்கொண்ட சிலி வெற்றிபெற்றிருக்கிறது.

ஸ்பானியாவின் பல கோல் போடும் முயற்சிகளை சிலியின் கோல்கீப்பர் ப்ராவோ (C. Bravo)  வெற்றிகரமாக முறியடித்தார். அவரைத் தாண்டி கோல் போடுவதற்காக அடித்த பந்துகள் யாவும் இலக்குத் தவறிச் சென்றன. அல்லது உயரக் கிளம்பின. தவறுகளை ஏறக்குறைய இரு அணிகளும் ஒரேயளவில் ( 14 :15 )  செய்திருந்தாலும், சிலிக்கு 2, ஸ்பானியாவுக்கு 1 என மஞ்சள் அட்டை கிடைத்தது.

ஆட்டத்தின் முதற் பாதியில் 20 நிமிடத்தில் சிலியின் எட்வார்டோ வார்காசும் (Eduardo Vargas ),  40 நிமிடத்தில் சார்லஸ் ஆரங்குய்சும் (Charles Aránguiz )  , அடித்த கோல்கள் சிலிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தன. இரண்டாம்பகுதி ஆட்டத்தில் ஸ்பானிய கோல் அடிப்பதற்காக கடுயைமாக விளையாடியது. அதனைத் தடுத்தாடுவதிலேயே சிலியின் பிரயத்தனங்கள் முடிந்ததால், மேலதிகமாக கோல்கள் போட முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இரண்டாவது பாதியில் பந்து அதிக நேரம் ஸ்பாணியாவின் உந்துகைக்குள்ளேயே இருந்தது. ஆயினும் அதிர்ஷ்டம் அதன் பக்கம் இல்லாது போனதால் ஸ்பானியா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது என்றே சொல்லத் தோன்றுகிறது.

பிறேசிலின் மற்றொரு புறத்தின் தெருவில் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டி காணும் மக்கள்

நடப்புச் சாம்பியனான ஸ்பானிய அணித் தலைவனும், சிறந்த பந்துக் காப்பாளனுமான, இகெர் கசிலாஸ் ( Iker Casillas ) கவலை தோய்ந்த முகத்துடன் ஆடுகளத்தினின்றும் வெளியேற  ' ஆட்டியோஸ் ' சொல்லி வழியனுப்பினார்கள் ஸ்பானியா ரசிகர்கள்.

Photos : Getty Images, AFP

- 4தமிழ்மீடியாவிற்காக :யாமினி


Read more ...

ஈராக்கின் மிகப் பெரிய எண்ணெய்ச் சுத்திகரிப்புச் சாலையும் தீவிரவாதிகள் கையில் வீழ்ந்தது!

Posted:

வடக்கு ஈராக்கின் பாயிஜி நகரிலுள்ள ஈராக்கின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்புச் சாலையின் 75% வீதப் பகுதி சுன்னி தீவிரவாதிகளின் (ஜிஹாடிஸ்ட்டுக்கள்) கையில் வீழ்ந்துள்ளது.


Read more ...

மலேசியக் கடல் பகுதியில் மூழ்கியது இந்தோனேசிய அகதிகள் படகு:30 பேரைக் காணவில்லை

Posted:

இந்தோனேசியாவில் இருந்து சுமார் 97 அகதிகளுடன் புறப்பட்ட அகதிகள் படகு இன்று புதன் அதிகாலை 1 மணியளவில் மலேசியாவின் மேற்குக் கடற்கரையோரமாக மலாக்கா கழிமுகத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

விமர்சனம்:முண்டாசுப்பட்டி கலகலப்பான காமெடி டப்பாசு!

Posted:

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக!


Read more ...

ஜூலை மாதம் 7ம் திகதி மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்?

Posted:

ஜூலை மாதம் 7ம் திகதி நாடாளுமன்றத்தின்  பட்ஜெட் கால கூட்டத் தொடர் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நைஜீரியாவில் உதைபந்தாட்ட காணொளி திரையிடப்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பு!:21 பேர் பலி

Posted:

நைஜீரியாவில் போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகின்றது.


Read more ...

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை கண்டிக்கிறோம்: தமிழ் சிவில் சமூக அமையம்

Posted:


இலங்கையின் தென் மேற்குப் பகுதியில், குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 


Read more ...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு இன்று இறுதிக்கட்ட வாதம்!

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் இன்று இறுதிக் கட்ட வாதத்தைத் துவக்கலாம் என்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Read more ...

அளுத்கம, பேருவளை கலவரங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

களுத்துறை மாவட்டத்தின் அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கருணை மனுக்களை நிராகரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை!

Posted:

தூக்குத் தண்டனைக் கைதிகள் 6 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கான மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது நடைப்பெறும் தாக்குதலைக் கண்டித்து குரல்கொடுக்கவேண்டும்: கருணாநிதி

Posted:

இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும்  தாக்குதலைக் கண்டித்து மத்திய மாநில அரசுகள் குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

ஐ.நா. விசாரணைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாது(?)

Posted:


இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்குழு, இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கவுள்ள விசாரணைகளை எதிர்க்கும் அரசாங்கத்தின் பிரேரணை மீதான வாக்கெடுப்பிலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.  


Read more ...

ஈராக்கில் தவித்து வரும் இந்தியர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம்

Posted:

ஈராக்கில் தவித்து வரும் இந்தியர்களைத் தொடர்புக்கொள்ள முடியவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™