Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதில் சிக்கல்

Posted: 18 Jun 2014 10:40 PM PDT

கர்நாடகா குல்பர்கா மாவட்டம் ஜேவர்கியை சேர்ந்தவர் அனுமந்தா மாலிக் பாட்டீல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரியம்மா. இவர்களுக்கு 4 வயதில் அக்சதா என்ற மகள் உள்ளாள். அனுமந்தா பிஜாப்பூர் மாவட்டம் நாகடானா கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த தோட்டத்தில் உள்ள வீட்டிலேயே தனது மனைவி, மகளுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில்

சபரிமலை கோவில் கொடி மரத்தை மாற்றி புதிதாக அமைக்க முடிவு

Posted: 18 Jun 2014 10:28 PM PDT

கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரத்து அம்மன் கோவில்களில் சில பராமரிப்பு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கேரள வழக்கப்படி கோவில்களில் பராமரிப்புப் பணி நடைபெறும் முன்பு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்ட பிறகே அதற்கான பணிகள் நடைபெறுவது வழக்கம்.

ஈராக்கில் 40 இந்தியர்கள் கதி என்ன?: மாறுபட்ட தகவல்களால் மத்திய அரசு திணறல்

Posted: 18 Jun 2014 10:09 PM PDT

ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக் மற்றும் சிரியாவுக்கான இஸ்லாமிய தேசம்) எனும் இயக்கத்தை தோற்றுவித்து ஷியா முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். கடந்த 9–ந்தேதி அவர்கள் ஈராக்கின் வடக்கு பகுதியில் திடீரென அதிரடி தாக்குதலை தொடங்கினார்கள். மொசூல், திக்ரித் மற்றும் பாக்தாத்தின் வட எல்லைப் பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

சத்தீஷ்கர் மாநில கவர்னர் சேகர் தத் ராஜினாமா

Posted: 18 Jun 2014 10:09 PM PDT

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்ற முடிவு செய்துள்ளது. இதில் சில மாநில கவர்னர்களின் பதவி காலம் முடிய இன்னும் சில மாதங்களே இருப்பதால் அவர்கள் தவிர மற்ற மாநில கவர்னர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 10 முதல் 15 வரையிலான கவர்னர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், கவர்னர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை

அமித்ஷா பா.ஜனதா தலைவர் ஆகிறார்: வதோதரா தொகுதியிலும் போட்டி

Posted: 18 Jun 2014 09:56 PM PDT

பா.ஜனதா தலைவராக அமித்ஷா தேர்வு செய்யப்படுகிறார். வதோதரா இடைத் தேர்தலிலும் அவர் கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆகிவிட்டார்கள். கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் உள்துறை மந்திரியாகவும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு இலாகா மந்திரிகளாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டண தரிசனத்தில் மாற்றம்

Posted: 18 Jun 2014 09:18 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 300 ரூபாய் கட்டணத்தில் 'பிரத்யேக பிரவேச தரிசனம்' தொடங்கப்பட்டது. அதன் மூலம் பக்தர்கள் 'வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ்–1' வழியாக சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பக்தர்கள் நீண்ட தூரம்

தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முன்னுரிமை: ராஜ்நாத் சிங்

Posted: 18 Jun 2014 08:35 PM PDT

தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு திட்டம் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு, மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய மக்கள்தொகை பதிவேடு உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்கள் பதிவுக்கான பதிவாளர் ஜெனரல் சி.சந்திரமவுலி ஓர் அறிக்கை

பத்மநாபசாமி கோவில் நகைகளை கண்காட்சிக்கு வைக்க தயார்: உம்மன் சாண்டி

Posted: 18 Jun 2014 08:18 PM PDT

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாப சாமி கோவில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் ரகசிய அறைகளில், ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொற்குவியல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ரகசிய அறையில் இருந்த தங்கம், வைரம்,

சசிதரூரை தொடர்ந்து மோடிக்கு மற்றொரு காங்கிரஸ் தலைவர் பாராட்டு

Posted: 18 Jun 2014 05:06 PM PDT

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர், சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். அதனால், காங்கிரசில் எதிர்ப்பை சந்தித்தார். இந்நிலையில், மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ்

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில் கட்டணம் 5 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு

Posted: 18 Jun 2014 04:28 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரெயில்வே பட்ஜெட் ஜூலை 9-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நரேந்திர மோடி ஆலோசனை

Posted: 18 Jun 2014 02:50 PM PDT

காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பண வீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கணித்துள்ளது. இதனால், விலைவாசி மேலும் உயரும் என்ற அச்சம்

ராஜினாமா செய்ய மாட்டேன்: கற்பழிப்பு புகாரில் சிக்கிய மத்திய மந்திரி பிடிவாதம்

Posted: 18 Jun 2014 12:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரியாக பதவி வகிப்பவர், நிஹால்சந்த் மேக்வால். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு 24 வயது மதிக்கத்தக்க

செயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் அடித்துக் கொலை

Posted: 18 Jun 2014 11:41 AM PDT

டெல்லியின் விவேக் விஹார் பகுதியை சேர்ந்த முர்த்லா மெஹ்ரா என்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு ரிக்‌ஷாவில் சென்றுக் கொண்டிருந்தார். அந்த ரிக்‌ஷாவை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில்

முரளி மனோகர் ஜோஷிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கப்பட்டது

Posted: 18 Jun 2014 10:53 AM PDT

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷிக்கு ரஷ்யாவின் உயரிய விருதினை ரஷ்ய துணை பிரதமர் இன்று வழங்கி கவுரவித்தார். 'முன்னாள் மத்திய மந்திரி என்ற வகையில் இந்தியா-ரஷ்யாவிடையே பலமான கூட்டுறவு

கேதார்நாத்தில் 44 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted: 18 Jun 2014 09:33 AM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு கடும் சேதத்தை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவின்போது இறந்தவர்களில் இப்போது 44 பேரின் எலும்புக் கூடுகள் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த கனமழை மற்றும்

பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் ஒத்திவைப்பு

Posted: 18 Jun 2014 08:49 AM PDT

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் நடைபெறுவதால் பிரதமர் நரேந்திர மோடி தனது ஜப்பான் பயணத்திட்டத்தை ஒத்திவைத்துள்ளார். அடுத்த மாதம் ஜப்பான் செல்ல மோடி திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுக்கு வலுவான கொள்கை, பொருளாதார மற்றும் கலாச்சார அடித்தளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்

கொலைகார சகோதரிகள் உள்ளிட்ட 6 பேரின் கருணை மனுக்களை உள்துறை மந்திரி நிராகரிப்பு

Posted: 18 Jun 2014 07:33 AM PDT

சிறுவர்களை கொடூரமாக கொலை செய்த சகோதரிகள் உள்பட 6 பேரின் கருணை மனுக்களை உள்துறை மந்திரி நிராகரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரேணுகாபாய், சீமா, உத்தர பிரதேசத்தின் கோலி, மகாராஷ்டிராவின் ராஜேந்திர பிரகலாதராவ் வாஸ்னிக், மத்திய பிரதேசத்தின் ஜெகதீஷ், அசாமின் ஹோலிராம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7-ல் ஆரம்பம்

Posted: 18 Jun 2014 07:27 AM PDT

நாட்டின் 16வது மக்களவை அமைந்த பின் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜூலை 7-ந் தேதி தொடங்கும் என தெரிகிறது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது பட்ஜெட்

பீகார் சிறையில் உள்ள யஷ்வந்த் சின்கா ஜாமினில் விடுதலை

Posted: 18 Jun 2014 06:34 AM PDT

ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மின்வெட்டைக் கண்டித்து பா.ஜனதா கட்சியின் காசியாபாத் மாவட்ட பா.ஜனதா சார்பில் சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மாயம்: டெல்லியில் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

Posted: 18 Jun 2014 06:29 AM PDT

டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மணிஷ் சிசோடியா மாயமானதாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்பர்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வான மணிஷ் சிசோடியா டிசம்பர் 8-ம் தேதி முதல் காணாமல் போனதாக அஜய் வாலியா என்பவர் சார்பில் தொகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™