Tamil Star |
- ரஜினியும் ஷங்கரும் இணையவிருக்கும் படம் ரோபோ 2?
- ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி!
- என் ஷூட்டிங்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! களஞ்சியத்துக்கு அஞ்சலி பதில்
- பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்? கமல் ஹாஸன் மறுப்பு!
- மூன்றில் ஒரு பங்கு நிதியை மட்டுமே பாதுகாப்புக்கு செலவிடும் இந்தியா!
- அமெரிக்க உளவு அமைப்பை நாம் உளவு பார்க்கலாம்! சிஐஏ சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது!
- நடக்க முடியாத மாணவனை காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் பாதுகாவலர்கள்!
- இவங்களுக்குள்ள அப்படியென்ன கதைச்சிருப்பாங்க…. இவ்வளவு ஜாலியா இருக்காங்க!
- சுறாவின் வாயிலிருந்து வெளிவந்த மனிதர்…. அதிர வைக்கும் காட்சி!
- இந்த சிறுமியின் புத்திசாலித்தனத்தை பாருங்க… இந்த வயசுல எம்புட்டு அறிவு!
- எதற்கு இந்த பெண்ணை இத்தனை பேர் துரத்துறாங்க
- புதையுண்ட ஜீப்பை மீட்கப் போய் இறுதியில் இப்படி ஆகிவிட்டதே!
- லெனோவா எ7-50 டேப்லெட் ரூ.15,499 விலையில் அறிமுகம்!
- ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச்
- இந்தியாவும்-பாகிஸ்தனும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்!
- பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மீது ஜியோ டிவி அவதூறு வழக்கு!
- ஐநா விசாரணைக்குழுவில் இருவர் நீக்கம்! விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கைக்கு நவநீதம்பிள்ளை வேண்டுகோள்
- மோடி அரசை ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் ஜெஹான் எச்சரிக்கை!
- கிழக்கு உக்ரைனில் இருந்து நான்கு இலங்கை மாணவர்களை மீட்ட இந்திய அதிகாரிகள்!
- தனிப்பட்ட கொள்கைகளுடன் செயற்பட்டு வரும் இணையத்தளங்கள் தடைசெய்யப்படும்!
| ரஜினியும் ஷங்கரும் இணையவிருக்கும் படம் ரோபோ 2? Posted: 07 Jun 2014 01:43 AM PDT
லிங்கா படம் முடிந்ததும் ரஜினியும் ஷங்கரும் இணையவிருக்கும் படம் ரோபோவின் இரண்டாம் பாகம் என கற்பூரம் அடிக்காத குறையாக சொல்ல ஆரம்பித்துள்ளது மீடியா. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை.. இப்படி ஒரு ஐடியா அவர்களுக்கு இருக்கிறதா என்பதை அவர்களாகச் சொன்னால்தான் உண்டு. எந்திரன் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' (ரோபோ) படம் 2010-ல் வெளி வந்தது. ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி 'விஞ்ஞானி', 'ரோபோ' என இரு கேரக்டரில் வந்தார். பிரமாண்ட படமாக வந்த எந்திரன், வசூலிலும் கோடிகளைக் குவித்தது. எந்திரன் 2 இதன் இரண்டாம் பாகம் 'எந்திரன் - 2' என்ற பெயரில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டதாக முன்பே தகவல் வெளியானது. ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் இதனை உறுதிப்படுத்தினார். ராணா ஆனால் ரஜினியோ ராணாவை அப்போது அறிவித்தார். ராணா நின்றதும், கோச்சடையான் உருவானது. மீண்டும்... இப்போது ரஜினி - ரவிக்குமார் காம்பினேஷனில் லிங்கா படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இந்தப் படம் முடிந்ததுமே, ஷங்கருக்குத்தான் அடுத்த படம் பண்ணுவார் ரஜினி என தகவல் வெளியாகியுள்ளது. ரோபோ 2 ஷங்கரும் ஐ படத்தின் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுக்கு தயார் செய்து கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ரோபோ 2-க்கான பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளனவாம். படத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை ஷங்கர் தயார் செய்து ரஜினியிடம் சொல்லி ஒப்புதல் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ரூ 200 கோடி இப்படத்தை எடுக்க ரூ.200 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராய் மற்றும் இன்னொரு முன்னணி நடிகையை இந்தப் படத்துக்காக பேசி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு கண்களை தானம் செய்தார் ஷில்பா ஷெட்டி! Posted: 07 Jun 2014 01:38 AM PDT
பிரபல இந்தி நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி, தனது கண்களை தானம் செய்தார். நேற்று மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயம் சென்று தரிசனம் செய்தனர் ஷில்பாவும் அவர் கணவர் ராஜ் குந்த்ராவும். பின்னர் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்ற நடிகை ஷில்பா ஷெட்டி, முறைப்படி தனது கண்களை தானம் செய்தார். இதுகுறித்து ஷில்பா கூறுகையில், "நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. எனது மரணத்துக்கு பின்னர், எனது கண்கள் மற்றவர்களுக்கு பார்வை வழங்கும் என்ற செய்தியே இப்போது மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றார். மேலும் அவர் கூறுகையில், "நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| என் ஷூட்டிங்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! களஞ்சியத்துக்கு அஞ்சலி பதில் Posted: 07 Jun 2014 01:33 AM PDT
என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்பட வேண்டாம். என் ஷூட்டிங்கை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி. என் படத்தில் நடிக்கும் வரை, யார் படத்திலும் அஞ்சலியை நடிக்கவிடமாட்டேன் என்று இயக்குநர் மு களஞ்சியம் நேற்று முன்தினம் மிரட்டும் தொனியில் பேட்டி அளித்திருந்தார். இது மீடியாவில் வெளியானதும், அதற்கு பதிலடியாக நேற்று மாலை அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அஞ்சலி என் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நான் ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துவிட்டேன். அடுத்து, புனித் ராஜ்குமாருடன், நான் ஒரு கன்னட படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. நடிப்பது என் தொழில். நான் படப்பிடிப்புக்கு சென்றால், என்னை தடுத்து நிறுத்தப்போவதாக யாரோ ஒருவர் கூறுவதாக கேள்விப்பட்டேன். என்னை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. நான் எந்த தவறும் செய்யாதவள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் எனக்கு எல்லோரும் ஆதரவாக இருக்கிறார்கள். என்னை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர்கள் கவலைப்படவேண்டாம். நான் என் தொழிலில் முழுமையான ஈடுபாடுடன் இருப்பேன். இவ்வாறு அஞ்சலி அறிக்கையில் கூறியிருக்கிறார். அஞ்சலியை வைத்து சில ஆண்டுகளுக்கு முன் ஊர் சுற்றிப் புராணம் என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பித்தார் களஞ்சியம். ஆனால் அந்தப் படம் பின்னர் வளரவில்லை. மேலும், சித்தி பாரதிதேவியுடன் சேர்ந்து, மு களஞ்சியம் தன் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டினார் அஞ்சலி. இதைத் தொடர்ந்து ஹைதராபாத் போன அஞ்சலி, அதன் பிறகு சென்னைக்கு வரவே இல்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்? கமல் ஹாஸன் மறுப்பு! Posted: 07 Jun 2014 01:27 AM PDT
மலையாளத்தில் தயாராகும் பெருச்சாழி படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிப்பதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தரப்பு தெரிவித்துள்ளது. மோகன்லால், ஆன்ட்ரியா, முகேஷ் நடிக்க, அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள மலையாளப் படம் பெருச்சாழி. இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் கதை பற்றிக் கேள்விப்பட்ட கமல் ஹாஸன், அந்தக் கதையின் தமிழ் ரீமேக்கில் தானே நடிக்க விருப்பம் தெரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை கமல் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியில் உண்மையில்லை. கமலுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே மோகன் லால் நடித்து பெரும் வெற்றிப் பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் கமல் ஹாஸன்தான் நடிப்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூன்றில் ஒரு பங்கு நிதியை மட்டுமே பாதுகாப்புக்கு செலவிடும் இந்தியா! Posted: 07 Jun 2014 01:22 AM PDT
சீனா தனது பாதுகாப்புக்கு செலவிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்கைத்தான் இந்தியா செலவிடுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உடனடியாக சீனா இத்தகவலை மறுத்துள்ளதுடன், அண்டை நாடுகளுடன் சுமுகமாக செல்லவே சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் ஆண்டுதோறும் பிற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இந்தாண்டுக்கான அறிக்கையை பென்டகன் நேற்று அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்தது. அது தாக்கல் செய்த அறிக்கையில் ஆசிய நாடுகளின் ராணுவ செலவீனங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ செலவீனம் பற்றிய தகவல்கள் உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சீனா 2013ம் ஆண்டு பாதுகாப்பு திட்டங்களுக்காக 119.5 பில்லியன் டாலர்களை அதாவது, இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால் அதே ஆண்டு இந்தியா 39.2 பில்லியன் டாலர்களை அதாவது, ரூ.2.32 லட்சம் கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. ரஷ்ய நாடு 2013ம் ஆண்டு பாதுகாப்புத்துறை திட்டத்துக்கு 69.5 பில்லியன் டாலர்களையும், ஜப்பான் 56.9 பில்லியன் டாலர்களையும், தென்கொரியா 41.8 மில்லியன் டாலர்களையும் ஒதுக்கியிருந்தன. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் மேம்பட்டுள்ளபோதிலும், இரு நாடுகளுக்கிடையே அருணாச்சல பிரதேசத்திலுள்ள நாலாயிரத்து 57 கிலோமீட்டர் தொலை உள்ள எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவின் நடவடிக்கைகள் குறிப்பாக, ராணுவரீதியிலான நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு தெரியாமல் மேற்கொள்ளப்படுவதால் அது இரும்புத் திரை நாடு என்று வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா எப்படியோ அதை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 Jun 2014 01:18 AM PDT
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்துள்ளது. அமெரிக்காவில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் அமெரிக்க ராணுவ அமைப்பு சிஐஏ எனப்படும் மத்திய உளவு ஏஜென்சி. சிஐஏ கண்களுக்கு தப்பாமல் உலகின் எந்த மூலையிலும் பெரிய சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாது. இப்போது சிஐஏவும் சமூக வலைத்தளங்களில் புகுந்து பயனாளிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய வலைத்தளங்களில் நேற்று முதல், சிஐஏ இணைந்துள்ளது.இணைந்த ஓரு நாளுக்குள், அதாவது இன்று காலை நிலவரப்படி 3 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். "இதுதான் எங்கள் முதல் கீச்சு என்பதை நாங்கள் உறுதி செய்யவும் இல்லை, அதே நேரம் மறுக்கவும் இல்லை" என்பதுதான் சிஐஏவின் முதல் ட்விட். கமலஹாசன் பேசும் வசனம் போல சுற்றிவளைத்து ஒரு தகவலை செல்ல வரும் இந்த ட்விட்டை, அர்த்தம் புரிந்தோ, புரியாமலோ மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரம் பேர் ரீட்விட் செய்துள்ளனர். 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் பேவரைட் செய்துள்ளனர். ட்விட்டர் பயனாளிகளின் ஏகோபித்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ள சிஐஏ தனது இரண்டாவது ட்விட்டில், "ட்விட்டர் வரவேற்புக்கு நன்றி. சிறந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளது. இன்று நண்பகல் வரை இவ்விரு ட்விட்டுகளும்தான் சிஐஏவால் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டருக்குள் வந்தாலும், உளவு சார்ந்த விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க மாட்டோம் என்று அமெரிக்க உளவு அமைப்பு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. சிஐஏயின் முதலாவது கீச்சு சிறப்பாக இருந்ததாக பாலோவர்கள் பலரும் கூறியுள்ள நிலையில், 'ஒரு ஜோக்குடன் தனது அக்கவுண்ட்டை ஆரம்பித்துள்ளது சிஐஏ' என்று பிபிசி கிண்டல் செய்துள்ளது. பேஸ்புக்கிலும் கால்பதித்த சிஐஏ ஒரே நாள் இரவுக்குள், 7,300 லைக்குகளை அள்ளியுள்ளது. "நாங்கள்தான் நாட்டின் முதல்தர பாதுகாப்பு அமைப்பு. பிறர் செய்து முடிக்காததை செய்து முடிப்போம், பிறர் போக முடியாத இடத்துக்கும் நாங்கள் போவோம்" என்று பேஸ்புக் பக்கத்தில் சிஐஏ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐஏ வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக்குறிப்பில் "ஏற்கனவே வெப்சைட், செல்போன் சைட், பிளிக்கர், யூடியூப் ஆகியவற்றில் சிஐஏ கணக்கு வைத்துள்ளநிலையில், பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இணைந்துள்ளோம். இதன் மூலமாக மக்களிடமிருந்து நேரடியாக தகவல்களை சிஐஏ பெற முடியும். நாங்கள் யாருக்காக சேவையாற்றுகிறோமோ அந்த அமெரிக்க மக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க இந்த வலைத்தளங்கள் உதவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் சிஐஏ இணைந்ததற்கு அமெரிக்காவில் சில ஊடகங்களும், பொதுமக்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அறிந்தோ அறியாமலோ நாட்டின் ரகசியங்கள் வெளியே செல்ல இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடக்க முடியாத மாணவனை காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் பாதுகாவலர்கள்! Posted: 07 Jun 2014 01:10 AM PDT |
| இவங்களுக்குள்ள அப்படியென்ன கதைச்சிருப்பாங்க…. இவ்வளவு ஜாலியா இருக்காங்க! Posted: 07 Jun 2014 01:06 AM PDT |
| சுறாவின் வாயிலிருந்து வெளிவந்த மனிதர்…. அதிர வைக்கும் காட்சி! Posted: 07 Jun 2014 01:02 AM PDT |
| இந்த சிறுமியின் புத்திசாலித்தனத்தை பாருங்க… இந்த வயசுல எம்புட்டு அறிவு! Posted: 07 Jun 2014 12:59 AM PDT |
| எதற்கு இந்த பெண்ணை இத்தனை பேர் துரத்துறாங்க Posted: 07 Jun 2014 12:55 AM PDT |
| புதையுண்ட ஜீப்பை மீட்கப் போய் இறுதியில் இப்படி ஆகிவிட்டதே! Posted: 07 Jun 2014 12:52 AM PDT |
| லெனோவா எ7-50 டேப்லெட் ரூ.15,499 விலையில் அறிமுகம்! Posted: 07 Jun 2014 12:45 AM PDT
லெனோவா நிறுவனம் எ தொடர் டேப்லெட்டான லெனோவா எ7-50 டேப்லெட் இந்தியாவில் நிறுவனத்தின் ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளது. லெனோவா எ7-50 குரல் அழைப்பு டேப்லெட் தற்போது ரூ.15,499 விலையில் கிடைக்கிறது மற்றும் உத்தியோகபூர்வ ஸ்டோரில் 8-10 வர்த்தக நாட்களில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, லெனோவா எ7-50 டேப்லெட் லெனோவா எ7-30, எ8 மற்றும் எ10 டேப்லெட் உடன் இணைந்து, ஏப்ரல் மாதம் உலக அளவில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. லெனோவா எ7-50 டேப்லெட் ஒற்றை சிம் ஆதரவு கொண்டு வருகிறது மற்றும் குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இப்போது தேதியில் டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டேப்லெட்டில் ரேம் 1GB உடன் 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT8382) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, வருகிறது. டேப்லெட்டில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளடக்கியுள்ளது. லெனோவா எ7-50 டேப்லெட் இணைப்பு விருப்பங்கள், 3G, Wi-Fi, மைக்ரோ-USB, எ-ஜி.பி. எஸ், GPRS / EDGE, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். மேலும் லெனோவா A7-50 டேப்லெட்டில் Wi-Fi வேரியன்ட் மட்டுமே அறிவித்துள்ளது, ஆனால் தற்போது, இந்தியாவில் கிடைப்பது மற்றும் விலை பற்றி எந்த வார்த்தையும் அறிவிக்கப்படவில்லை. டேப்லெட்டில் ஒரு 3450mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட் மிட்நைட் ப்ளூ வண்ணத்தில் கிடைக்கும். லெனோவா எ7-50 டேப்லெட் அம்சங்கள்: ஒற்றை சிம், 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் மீடியா டெக் (MT8382) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3G, Wi-Fi, மைக்ரோ-USB, எ-ஜி.பி.எஸ், GPRS / EDGE, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 3450mAh பேட்டரி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிச் Posted: 07 Jun 2014 12:40 AM PDT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, நம்பர் 2 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) தகுதி பெற்றார். அரை இறுதியில் லாத்வியா வீரர் எர்னஸ்ட்ஸ் குல்பிசுடன் (18வது ரேங்க்) ஜோகோவிச் நேற்று மோதினார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் அவர் 22வது முறையாக களமிறங்கிய நிலையில், குல்பிஸ் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை எதிர்நோக்கினார். நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), தாமஸ் பெர்டிச் (செக்.) ஆகியோரை வீழ்த்தி குல்பிஸ் அரை இறுதிக்கு முன்னேறி இருந்ததால், இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.எனினும், தனது அனுபவ ஆட்டத்தால் குல்பிசை திணறடித்த ஜோகோவிச் 63, 63 என்ற கணக்கில் முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். மூன்றாவது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய குல்பிஸ், ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து 63 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் நான்காவது செட்டில் அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பதற்றமின்றி விளையாடிய ஜோகோவிச் 63, 63, 36, 63 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இந்த போட்டி 2 மணி 34 நிமிடம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் நம்பர் 1 ஜோடியான சூ வெய் ஸை (தைபே) ஷுவாய் பெங் (சீனா) 62, 57, 62 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் முகுருசா நவர்ரோ ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் இத்தாலியின் சாரா எர்ரானி ராபர்டா வின்சி (2வது ரேங்க்) ஜோடி 62, 61 என்ற நேர் செட்களில் மிசெல்லா கிராஜிசெக் (நெதர்லாந்து) லூசி ராடெக்கா (செக்.) ஜோடியை எளிதில் வென்றது. பைனலில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஜோடிகள் மோத உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (7வது ரேங்க், ரஷ்யா), ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பை (4வது ரேங்க்) எதிர்கொள்கிறார். ஷரபோவா 9வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பைனலில் விளையாடுவதுடன், பிரெஞ்ச் ஓபனில் தொடர்ந்து 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. மர்ரே ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது அரை இறுதியில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்), இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் மோதினார். பிரெஞ்ச் ஓபனில் 8 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நடால், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். மர்ரேவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 63 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியைத் தொடர்ந்த அவர் 62 என வென்று 20 என முன்னிலையை அதிகரித்தார். நடாலின் ஆக்ரோஷ தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய மர்ரே 36, 26, 16 என்ற நேர் செட்களில் சரணடைந்தார். பிரெஞ்ச் ஓபன் பைனலுக்கு 9வது முறையாக தகுதி பெற்றுள்ள நடால், நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நம்பர் 2 வீரர் நோவாக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொள்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவும்-பாகிஸ்தனும் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது அவசியம்: அமெரிக்கா வலியுறுத்தல்! Posted: 07 Jun 2014 12:32 AM PDT
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இசைவு தெரிவிக்கப்பட்டது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் விரைவில் பேச்சு நடக்கும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹாக் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இரு தரப்பு உறவை மேம்படுத்த முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு நாடுகளும் இந்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மீது ஜியோ டிவி அவதூறு வழக்கு! Posted: 07 Jun 2014 12:28 AM PDT
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மீது ஜியோ டிவி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. தமது தொலைக்காட்சி பெயருக்கு களங்கம் விளைவித்ததாக ஐ.எஸ்.ஐ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தவறாக குற்றம் சுமத்திய ஐ.எஸ்.ஐ 14 நாளுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஜியோ டிவி அறிவித்தது. ஐ.எஸ்.ஐ புகாரால் ஜியோ டிவி ஒளிபரப்பு பாகிஸ்தானில் நிறுத்தப்பட்டது. புகார் தவறு என்று நிரூபணம் ஆனதால் ஜியோ டிவி ஒளிபரப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 Jun 2014 12:22 AM PDT
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 10 ஆம் திகதி நியமிக்க உள்ள விசாரணைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த இரண்டு பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு காரணமாகவே இந்த பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரிகளான ஜெப்ரி ரொபர்ட்சன், டெனிஸ் ஹெலிடே ஆகியோரின் பெயர்களே நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் புலம்பெயர் புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்ததை அடுத்தே இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. விசாரணைக் குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் உயிரிழந்த புலிகளின் தலைவர் ஒருவருக்காக இரங்கல் செய்தியை வெளியிட்டவர் என தெரியவந்துள்ளது என்றும் திவயின கூறியுள்ளது. கொபி அனான் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனின் மறைக்கு இரங்கல் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 26 வது மனித உரிமை கூட்டத் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் இலங்கை சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் அதில் கலந்து கொள்ள உள்ளனர். இதனிடையே போர் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட உள்ள குழுவிற்கு சாட்சியங்களை வழங்க புலம்பெயர் புலிகள் 21 சாட்சியாளர்களை தயார்ப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது எனவும் திவயின மேலும் குறிப்பிட்டுள்ளது. போர்க்குற்ற விசாரணைக்காக இலங்கையின் ஒத்துழைப்பை நவநீதம்பிள்ளை கோரவுள்ளார் இலங்கையின் போர் தொடர்பில் தமது அலுவலகத்தின் ஊடாக நடத்தப்படவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகளி;ன் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிவுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் சபையின் 26வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது நவநீதம்பிள்ளை அந்த கோரிக்கையை விடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. எனினும் போரினால் பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை. இந்தநிலையில் தமது அலுவலகம் இலங்கையின் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தவுள்ளது. இதற்கு திறமைவாய்ந்த நிபுணர்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். எனவே இந்தவேளையில் இலங்கை அரசாங்கம் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆற்றவுள்ள ஆரம்ப நிகழ்வுக்காக தயாரித்துள்ள உரையில்; நவநீதம்பிள்ளை சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் நவநீதம்பிள்ளையின் விசாரணைக்கு இணங்கப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடி அரசை ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் ஜெஹான் எச்சரிக்கை! Posted: 07 Jun 2014 12:14 AM PDT
கடந்த காலங்களில் இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை போல மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசையும் ஏமாற்ற கொழும்பு முயன்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் அரசுக்குக் கொழும்பு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. பின்னர் அவற்றை நிறைவேற்றவில்லை. அது போன்றே தற்போதைய மோடி அரசையும் ஏமாற்ற முயன்றால் விளைவுகள் நிச்சயம் பாரதூரமானதாக இருக்கும் என்றார் அவர். அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்று, நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் கூறியமை ஜெனிவாவில் எதிர் காலத்தில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அதிலுள்ள பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாது எனக் கூறியுள்ளமையானது அடுத்த வருட ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியாவின் ஆதரவு கிடைக்கப்பெறாமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: இலங்கையில் தற்போதுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்திய பா.ஜ.க. அரசு நன்கு அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இலங்கையிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து அது அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் முக்கிய பிரச்சினைகளில் அதன் தலையீடு நிச்சயமாக இருந்துகொண்டே இருக்கும். மோடி அரசு காங்கிரஸ் அரசைப்போல பலவீனமானதல்ல. அப்படி இருந்தாலும் காங்கிரஸ் அரசும் இங்குள்ள பிரச்சினைகள் குறித்து அழுத்தம் கொடுத்தே வந்தது. மோடி பலம் மிக்க ஒருவர் என்றே அவரை இந்தியர்கள் பிரதமராகத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே, காங்கிரஸ் அரசிடம் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஏமாற்றியதைப் போல மோடி அரசிடமும் செய்துவிடலாம் என இலங்கை அரசு நினைத்தேனும் பார்க்கக்கூடாது. பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருப்பதற்கு இந்திய அரசு உடனடியாகப் பதில் எதனையும் வழங்காது. ஆனால், இதன் பின்விளைவாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்காமல் போகும் வாய்ப்புள்ளது. இலங்கை அரசு, பா.ஜ.கவை எளிதாக எடைபோடாது சற்று அவதானமாகவே செயற்பட வேண்டும் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிழக்கு உக்ரைனில் இருந்து நான்கு இலங்கை மாணவர்களை மீட்ட இந்திய அதிகாரிகள்! Posted: 07 Jun 2014 12:08 AM PDT
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு யுக்ரெய்னில் இருந்து நான்கு இலங்கை மாணவர்களை இந்திய அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்திய வெளியுறவு பேச்சாளர் சயீட் அக்பர்டீன் இதனை தெரிவித்துள்ளார். இந்த பிரதேசத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 1000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இதன்போதே இலங்கை மீனவர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டதாக அக்பர்டீன் குறிப்பிட்டார். இலங்கை மாணவர்களை தவிர நேபாளம், பூட்டான், பங்களாதேஸ், பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளின் மாணவர்களும் அகற்றப்பட்டதாக அக்பர்டீன் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தனிப்பட்ட கொள்கைகளுடன் செயற்பட்டு வரும் இணையத்தளங்கள் தடைசெய்யப்படும்! Posted: 07 Jun 2014 12:02 AM PDT
தனிப்பட்ட கொள்கைகளுடன் செயற்பட்டு வரும் இணையத்தளங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். இணையத்தளங்களை தடைசெய்வது தொடர்பான விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஒழுக்கமுள்ள சமூகம் ஒன்றுக்கு இடையூறாக உள்ள இணையத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான கலந்துரையாடலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினரும் முன்வரவேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்தார். சில இணையத்தளங்கள், ஒருவர் மீது சேறு பூசுவதற்கும் முறையற்ற காதல் விவகாரங்களை வெளிப்படுத்தும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டரீதியாக பதிவுசெய்யப்பட்ட பல இணையத்தளங்கள் தடைசெய்யப்படுவது ஏன் என்பதை தெரிந்து கொள்ளும் முகமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விவாதத்தை கோரியிருந்தார். இந்தநிலையில் இன்றைய விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர, இணையத்தளங்கள் தடைசெய்யப்படுகின்ற செயலுக்கு கெஹலிய ரம்புக்வெல்ல காரணம் அல்ல. அதிகாரம் மிக்க ஒருவரே இந்த செயலுக்கு பின்னால் இருப்பதாக மங்கள சமரவீர குறிப்பிட்டார். இதேவேளை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் அஸ்வர், தமது உரையின்போது ஐக்கிய தேசியக் கட்சியினரே குற்றவாளிகளாக செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















