மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தாஜ்மகாலின் எழிலுக்கு பொலிவூட்டும் பணிகள் விரைவில் ஆரம்பம்
- ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் மருத்துவம்
- 4 மாநில சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்– நிதிஷ்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை
- திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 35 மணி நேரம் காத்திருப்பு
- மோடி மந்திரிசபையில் வக்கீல்களின் ஆதிக்கம்
- அலகாபாத்தில் வரலாறு காணாத வெயில்: 119 டிகிரியை எட்டியது
- பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு
- பருவமழை தீவிரம்: கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
- வீட்டு வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை கற்பழித்த பாதிரியார் கைது
- சந்திரபாபு நாயுடு பொதுமக்கள் முன்னிலையில் இன்று பதவி ஏற்பு
- தெலுங்கானாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி: ஐந்து பேர் காயம்
- பொற்கோவிலில் நடந்த சம்பவத்திற்கு சீக்கிய தலைவர் வேதனை
- காங்கிரஸ் சார்பில் நின்றிருந்தால் மோடியும் தோல்வியடைந்திருப்பார்: சஞ்சய் நிரூபம் காமெடி
- உ.பி.யில் மீண்டும் கொடூரம்: மேலும் இரு சிறுமிகளை மூன்று பேர் கும்பல் கற்பழித்தது
- கடலோர ரோந்துப் பணிக்காக மேலும் இரு ரோந்து கப்பல்கள்: அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்
- காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி அனந்தகுமார்
- பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 தீவிரவாதிகள் கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்
- பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி நாளை பேசுகிறார்
- பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் சுட்டுக் கொலை: உ.பி.யில் பதட்டம்
- மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது
| தாஜ்மகாலின் எழிலுக்கு பொலிவூட்டும் பணிகள் விரைவில் ஆரம்பம் Posted: 07 Jun 2014 11:42 PM PDT உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மகாலின் அழகுக்கு மெருகூட்டும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. மனைவி மும்தாஜின் நினைவாக மொகலாய மன்னர் ஷாஜஹான் கி.பி. 1632 மற்றும் 1652-ம் ஆண்டுகளுக்கு இடையில் வெண்பளிங்குக் |
| ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் மருத்துவம் Posted: 07 Jun 2014 11:33 PM PDT ஐதராபாத்தை சேர்ந்த பத்தினிகவுடு குடும்பத்தினர் ஆஸ்துமா நோயாளிகளுக்காக ஆண்டுதோறும் இலவச மீன் மருத்துவ முகாமை நடத்தி வருகிறார்கள். ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மருந்தை மீனுக்குள் வைத்து அந்த மீனை உயிருடன் நோயாளிகளை விழுங்க செய்வதே இந்த மருத்துவத்தின் சிறப்பாகும். இந்த மீன் மருத்துவ முகாம் ஐதராபாத் நாம் பள்ளியில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை வரை முகாம் நடக்கிறது. மீன் மருத்துவம் பெற 3 லட்சம் நோயாளிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தில் இடம் பிடிக்க இன்று காலையிலேயே அவர்கள் குவிய தொடங்கினார்கள். |
| 4 மாநில சட்டசபை தேர்தல்: காங்கிரஸ்– நிதிஷ்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை Posted: 07 Jun 2014 10:44 PM PDT இந்த ஆண்டு இறுதிக்குள் 3 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு பீகாரிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மராட்டியம், ஜார்க் கண்ட், அரியானா ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது பற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதே போல் பீகார் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு |
| திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் 35 மணி நேரம் காத்திருப்பு Posted: 07 Jun 2014 10:37 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி, சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்துக்காக காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 35 மணிநேரம் ஆனது. ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி ஆகிய மலைப்பாதைகளில் பாதயாத்திரையாக நடந்து வந்த திவ்ய தரிசன |
| மோடி மந்திரிசபையில் வக்கீல்களின் ஆதிக்கம் Posted: 07 Jun 2014 10:25 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் மந்திரிகளாக பதவி வகிக்கும் 44 பேரில் மூன்றில் ஒரு பங்கினர் சட்டம் பயின்றவர்கள் என்ற சுவாரஸ்யமான தகவல் தெரிய வந்துள்ளது. கேபினட் மந்திரிகளான சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கைய்யா |
| அலகாபாத்தில் வரலாறு காணாத வெயில்: 119 டிகிரியை எட்டியது Posted: 07 Jun 2014 09:53 PM PDT தென் மாநிலங்களில் கோடை காலம் முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் வெப்பம் குறைந்து வருகிறது. அதே சமயம் வட மாநிலங்களில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் 110 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இதே போல் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, |
| பிரியங்கா, ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகை தொடரும்: மத்திய அரசு முடிவு Posted: 07 Jun 2014 09:53 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கும் அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கும் விமான நிலையங்களில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவர்களிடம் மற்ற பயணிகள் போல எந்த சோதனையும் நடத்தப்படுவது இல்லை. எந்த சோதனையும் இல்லாமல் அவர்கள் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால் சோனியாவுக்கு மட்டுமின்றி அவரது மருமகன் ராபர்ட் வதேராவும் இந்த சலுகையை கடந்த 10 ஆண்டுகளாக அனுபவித்து வந்தார். |
| பருவமழை தீவிரம்: கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை Posted: 07 Jun 2014 09:33 PM PDT கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 5–ந்தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை நீடிக்கிறது. பாலக்காடு மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அதிகளவு மழை பெய்து உள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, பத்தனம்திட்டா, மலப்புரம் பகுதிகளில் 7 செ.மீ. மழை பெய்து உள்ளது. ஆலுவா, பூங்கோடு ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழையும், கோழிக் கோட்டில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது. |
| வீட்டு வேலைக்கு வந்த இளம் சகோதரிகளை கற்பழித்த பாதிரியார் கைது Posted: 07 Jun 2014 08:34 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், சஹரன்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக ரூர்கி பகுதியில் இருந்து இரண்டு இளம் வயது சகோதரிகளை அழைத்து வந்தார். சமீபத்தில், ரூர்கியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்த இளைய சகோதரி, அந்த பாதிரியார் தன்னையும் அக்காவையும் மிரட்டி கற்பழித்து விட்டதாக தாயாரிடம் தெரிவித்தார். மேலும், பாதிரியாரின் மகன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் தங்களை அடுத்தடுத்து கற்பழித்ததாகவும் அந்த பெண் கூறியதையடுத்து, அவரது தாயார் இது தொடர்பாக ரூர்கி போலீசில் புகார் அளித்தார். |
| சந்திரபாபு நாயுடு பொதுமக்கள் முன்னிலையில் இன்று பதவி ஏற்பு Posted: 07 Jun 2014 08:09 PM PDT ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவி ஏற்கிறார். ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகி விட்டது. எஞ்சிய ஆந்திர மாநிலம், ஆந்திரா என்ற பெயரிலேயே நீடிக்கிறது. சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் பதவி ஏற்றார். தெலுங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி அங்கு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து குண்டூர்-விஜயவாடா இடையே ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழகம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் இரவு 7.27 மணிக்கு சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். |
| தெலுங்கானாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி: ஐந்து பேர் காயம் Posted: 07 Jun 2014 04:05 PM PDT தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள நிம்போலியட்டா பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் முறைகேடான வழியில் சமையல் கேஸ் சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டர்களுக்கு கேஸை மாற்றிக்கொண்டிருந்த போது தீடிரென அது வெடித்தது. கொழுந்து விட்டு எரிந்த தீ அக்கம் |
| பொற்கோவிலில் நடந்த சம்பவத்திற்கு சீக்கிய தலைவர் வேதனை Posted: 07 Jun 2014 03:37 PM PDT சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் புளூஸ்டார்' என்ற 30-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில் 12 பேர் காயம் அடைந்தனர். |
| காங்கிரஸ் சார்பில் நின்றிருந்தால் மோடியும் தோல்வியடைந்திருப்பார்: சஞ்சய் நிரூபம் காமெடி Posted: 07 Jun 2014 02:29 PM PDT நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மோடி போட்டியிட்டிருந்தாலும் கூட படுதோல்வியை தான் சந்தித்திருப்பார் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி.யும், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் நிரூபம் கூறியுள்ளார். மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிரூபம், |
| உ.பி.யில் மீண்டும் கொடூரம்: மேலும் இரு சிறுமிகளை மூன்று பேர் கும்பல் கற்பழித்தது Posted: 07 Jun 2014 01:38 PM PDT உத்திரப்பிரதேச மாநிலத்தின் பதான் மாவட்டத்தில் கடந்த வாரம் இரு சிறுமிகள் மூன்று பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்றதொரு கொடூரம் அங்கு நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. |
| கடலோர ரோந்துப் பணிக்காக மேலும் இரு ரோந்து கப்பல்கள்: அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார் Posted: 07 Jun 2014 01:20 PM PDT நாட்டின் கடலோர ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக ஐ.சி.ஜி.எஸ். அச்சூக், ஐ.சி.ஜி.எஸ். அக்ரிம் என்ற இரு ரோந்து கப்பல்களை இந்திய கடற்படைக்கு மத்திய மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். புதிய தொழில்நுட்பத்தில் அதி வேக ரோந்து பணியில் ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல்களில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை மும்பை கடலோர பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற |
| காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி அனந்தகுமார் Posted: 07 Jun 2014 12:52 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். |
| பாட்னா குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 2 தீவிரவாதிகள் கைது: வெடிகுண்டுகள் பறிமுதல் Posted: 07 Jun 2014 12:39 PM PDT பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் 27-ந்தேதி நரேந்திர மோடி உரையாற்ற இருந்த பொதுக் கூட்ட மைதானம் மற்றும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்புகளை அரங்கேற்றினர். இந்த கொடூர சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். |
| பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி நாளை பேசுகிறார் Posted: 07 Jun 2014 12:37 PM PDT பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 16-வது பாராளுமன்றம் அமைக்கப்பட்டு அதன் முதல் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. மத்திய மந்திரி கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி புதிய |
| பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் சுட்டுக் கொலை: உ.பி.யில் பதட்டம் Posted: 07 Jun 2014 10:47 AM PDT பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் பண்டிட் உ.பி.யில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் சுட்டுகொல்லப்பட்டார். பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு ஏராளமான பா.ஜ.க.வினர் அங்கு குவிந்து |
| மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகர் கைது Posted: 07 Jun 2014 08:57 AM PDT ராஜஸ்தானில் 30 வயதான மலேசிய பெண்ணை கற்பழித்த வர்த்தக ஆலோசகரை போலீசார் கைது செய்தனர். மலேசியாவைச் சேர்ந்த அந்த பெண் தொழில் விஷயமாக கடந்த மே மாதம் ஜோத்பூருக்கு வந்துள்ளார். அங்கிருந்து மே 21-ம் தேதி ஜெய்ப்பூர் வந்த அவர், தனது தொழில் திட்டம் தொடர்பாக புனித் ஜெயின் (30) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது முதல் எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றுள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |