Tamil Star |
- இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கை இல்லை: சர்வதேச நாணய நிதியம் கருத்து
- ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடாது என சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை!
- எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் குவைத்தில் கைது!
- கடுவலை இணைப்புக்குழுவில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்சவை நீக்க தீர்மானம்!
- பிலடெல்பியாவில்14-வயது மாணவனுடன் ஆசிரியை பாலியல் தொடர்பு?
- மனிரோபாவில் 7-மாத பெண் குழந்தையை ஸ்ரோலரில் விட்டு சென்ற தாய்!
- என்னிடம் வர ஏன் பயப்படணும்? இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி
- நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன்! ஜெயம் ராஜா பேட்டி
- ரஜினிகாந்த், சல்மான் கானை பகைத்துக் கொண்ட தீபிகா படுகோனே?
- தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!
- இந்தியாவில் புதிய வளர்ச்சி மற்றும் பரிமாணத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா நம்பிக்கை!
| இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கை இல்லை: சர்வதேச நாணய நிதியம் கருத்து Posted: 05 Jun 2014 11:56 PM PDT
இலங்கை அரசாங்கத்துடன் இரகசிய உடன்படிக்கைகள் எதுவும் செய்து கொள்ளப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள பல உப உடன்படிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தநிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகளின் இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர் நேற்று ரைஸிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது தாம் எழுதி வைத்திருந்த பதிலை ரைஸ வாசித்தார். அதில் தம்முடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இலங்கை 2012 ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்து விட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து தற்போது இலங்கை அரசாங்கத்துடன் எந்த நிதிக் கொடுப்பனவு உடன்படிக்கைகளும் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார். அத்துடன் பிரதான உடன்படிக்கைகளுக்கு புறம்பாக வேறு உடன்படிக்கைகள் இல்லை என்றும் ரைஸ் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடாது என சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை! Posted: 05 Jun 2014 11:49 PM PDT
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கக் கூடாது என சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகத் தெரிவித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என மூன்று சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன. சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்ச்சியாக அமுலில் இருக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு வழங்கக் கூடிய ஆற்றல் நிறைவேற்று ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என அவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் தேர்தல் முறையில் மாற்றம் செய்யக் கூடாது என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேறு இடங்கள் கிடையாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடமே பிரச்சினைகள் குறித்து அறிவிக்க முடியும். எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்வது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனவே, தற்போதைக்கு இது குறித்து தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. முற்றுமுழுதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், சில மாற்றங்கள் செய்யப்படுவதனை எதிர்க்கவில்லை என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் குவைத்தில் கைது! Posted: 05 Jun 2014 11:27 PM PDT
தற்பாதுகாப்புக்காக எகிப்தியர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண் ஒருவரை குவைத் போலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் குவைத்தின் ஹாவாலி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர் மாடி ஒன்றில் சத்தம் கேட்டதை தொடர்ந்தும் பொதுமக்கள் அங்கு சென்ற போது குறித்த எகிப்தியர் இரத்தம் தோய்ந்த நிலையில் வீழ்ந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஓடி தப்பிக்க முயற்சித்த இலங்கை பெண் ஒருவரை போலிஸார் கைதுசெய்தனர். இதன்போது வாக்குமூலம் அளித்த பெண், குறித்த எகிப்தியர் தம்மை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்தார் என்றும், அதனை தடுக்கவே தாம் தாம் அவரை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தற்செயலான சம்பவம் என்று குறித்த இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடுவலை இணைப்புக்குழுவில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்சவை நீக்க தீர்மானம்! Posted: 05 Jun 2014 11:22 PM PDT
கொழும்பின் புறநகர் கடுவலை இணைப்புக்குழு தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்சவை விலக்குவதற்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடுவலை இணைப்புக்குழுவின்; 16 ஆளும் கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அமைச்சர் விமல் வீரவன்ச, அரசாங்கத்தை சங்கடத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட்டு வருகிறார். எனவே அவரை குறித்த பதவியில் நீடிக்கச்செய்ய முடியாது என்ற அடிப்படையிலேயே அவரை நீக்குதவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலடெல்பியாவில்14-வயது மாணவனுடன் ஆசிரியை பாலியல் தொடர்பு? Posted: 05 Jun 2014 11:16 PM PDT
அமெரிக்கா பிலடெல்பியாவில் 8-ம் வகுப்பு விசேட கல்வி ஆசிரியை ஒருவர் 14-வயது மாணவனுடன் பலதடவைகள் பாலியல் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரெபனி அமரோ என்ற 30-வயது ஆசிரியர் மீது இக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜாமீன் தொகையாக 120,000 டாலர்கள் விதிக்கப்பட்டது. இவர் குறிப்பிட்ட மாணவனுடன் பல தடவைகள் தனது வீட்டிலும், காரிலும் பாலியல் தொடர்பு கொண்டுள்ளதாக மாவட்ட நீதிபதிகளின் காரியாலயத்தில் இருந்து வெளியான செய்தி தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஸ்ரெபனி அமெரோ பிலடெல்பியாவில் உள்ள ஏதன் அலன் பாடசாலையில் விசேட கல்வி ஆசிரியராக பணியாற்றுகின்றார். சம்பவத்தின் பின்னர் பாடசாலை இவரை நிர்வாக விடுப்பில் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் மைனர் என்ற காரணத்தால் அமெரோ குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மகனின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிட விரும்பாத மாணவனின் தந்தை 'எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நீதித்துறை இந்த பெண்ணை கவனிக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்'. என கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் தனது மகன் நன்றாக இல்லை. அவன் பாடசாலைக்கு போக விரும்பவில்லை. அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கின்றான் எனவும் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிரோபாவில் 7-மாத பெண் குழந்தையை ஸ்ரோலரில் விட்டு சென்ற தாய்! Posted: 05 Jun 2014 11:08 PM PDT
மனிரோபாவில் இன்று அதிகாலை 3-மணியளவில் கைக்குழந்தை ஒன்று வீதியொன்றின் நடுவில் ஸ்ரோலரில் விடப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுள்ளனர். இது சம்பந்தமாக குழந்தையின் தாயாரான 23-வயதுடைய பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறிது தூரத்திற்கப்பால் பொலிசாரால் கண்டுபிடிக்கப் பட்ட தாய் தான் மாத்திரைகளை அதிகமாக எடுத்ததால் தனது மகள் தன்னுடன் இருந்ததை மறந்து விட்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். குழந்தை மற்றும் குடும்ப சேவைகளினரிடம் ஒப்படைக்கப் பட முன்னர் குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட பெண் குழந்தையை அனாதரவாக விட்ட குற்றத்திற்காக யூலைமாதம் 31ந் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| என்னிடம் வர ஏன் பயப்படணும்? இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி Posted: 05 Jun 2014 04:04 AM PDT
இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா. சமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து உன் சமையல் அறையில் படப் பாடல்கள் குறித்து சொல்லுங்கள்... நான் கம்போஸ் பண்ண பாடல்களைப் பற்றி மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஒருவர் இசையமைத்த பாடல்கள் பற்றி அவர் பேச என்ன இருக்கிறது.. அதையெல்லாம் அவர் தன் பாடலிலேயே சொல்லிவிட வேண்டும். நீங்கள் மிகவும் தேர்ந்தெடுத்துதான் படங்களை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் பிரகாஷ் ராஜின் படங்களுக்கு மட்டும் அடுத்தடுத்து இசையமைத்துத் தருகிறீர்கள். முதலில் தோனி. இப்போது உன் சமையல் அறையில், அடுத்து மகேந்திரன் இயக்கும் படம்... அவர் மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு பரிவு? பிரகாஷ் ராஜ் மீது மட்டுமல்ல, எல்லோர் மீதுமே எனக்கு பரிவு உண்டு. ஏன் சொல்றேன்னா, தனக்கென ஒரு அடையாளமே இல்லாத புதியவர்கள் வந்து கேட்டாலும் இசையமைத்து, அவர்களுக்கு அடையாளம் தந்திருக்கிறேன். எனவே எனக்கு எல்லார் மீதுமே பரிவு உண்டு. ஆனால்.. உண்மை.. பிரகாஷ் ராஜ் மீது எனக்கு அன்பு உண்டு. ஏன்னா அவர் என் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அதிகம். என்னை ஒரு வழிகாட்டியாகவே நினைக்கிறார் அவர். பிரகாஷ் ராஜ் மட்டுமல்ல.. பலரும் உங்களை அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? அய்யோ.. யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கில்லை. ஏன் சார்... நீங்கள் சாதித்தது ஏராளம்? ஏன் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை! ஒட்டுமொத்த திரையுலகுமே உங்களை மதிக்கிறது. உச்சத்திலிருக்கும் இயக்குநர்கள் கூட உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கிறது அவர்களுக்கு... ஏன் பயப்படனும்... அவர்களைப் பற்றி அவர்களுக்கே நல்ல மதிப்பீடு இருக்கும்பட்சத்தில் என்னைப் பார்த்து ஏன் பயப்படனும்? உதாரணத்துக்கு, ஒரு டைரக்டர் என்னை அணுக கூச்சப்படறார், தயங்கறார்னு ஏன் நீங்க நினைக்கிறீங்க... ஏன்னா, அவர் படத்தோட இசை எப்படி இருக்கணும்னு தீர்மானிக்க விரும்புறார். அதை நான் அனுமதிக்க மாட்டேன்னு அவர் நம்பறார். இதை மாத்த முடியுமான்னு என் கிட்ட கேட்க அவருக்கு பயம். ஆனா, ஒவ்வொரு படத்துக்கு இசையமைக்கும்போதும், நான் அந்த டைரக்டர்கள் அளவுக்கு இறங்கிப் போய்த்தான் இசையமைக்கிறேன். என் அளவுக்கு உயர்ந்து நின்று என்னிடம் வேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை! பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பயணம் அதே வேகத்தோடு இன்றும் தொடர்கிறது... நீங்கள் எங்கும் தேங்கி நிற்கவே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன? அது ரொம்ப சாதாரணம்... இது என் சொத்து அல்ல. இது எனது மூளைத் திறனோ, எனது பங்களிப்போ, என் முயற்சியோ அல்ல. இசை என் மூலம் வருகிறது. அது தானாக வருகிறது.. அதை மற்றவர்களுக்குத் தருகிறேன். அவ்வளவுதான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகர் நடிகைகள் சிரமப்படுத்த மாட்டேன்! ஜெயம் ராஜா பேட்டி Posted: 05 Jun 2014 03:52 AM PDT
இனி என் படங்களில் நடிகர் நடிகைகளை அதிக சிரமப்படுத்தமாட்டேன், என்றார் இயக்குநர் ஜெயம் ராஜா. இயக்குனர் ஜெயம் ராஜா முதல் முறையாக நடித்திருக்கும் படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே மாதிரி முகத் தோற்றம் கொண்ட 4 பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றனர். இந்த குழந்தைகளின் அப்பாவாக ஜெயம் ராஜாவும், அம்மாவாக காதல் மன்னன் புகழ் மானுவும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடந்தது. ஜெயம் ராஜா பேசுகையில், "என் தந்தை திரைத்துறையில் நீண்ட வருடங்களாக இருப்பவர். நான் விரும்பியிருந்தால் எப்போதோ இயக்குநராகியிருப்பேன். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் இப்போது இந்தப் படத்தில் நான் நடிக்கக் காரணம், இந்த நான்கு தெய்வங்கள்... குழந்தைகள்தான். இவர்களுக்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குனராக பல படங்களை இயக்கியிருந்தாலும் நடிப்புக்கு நான் புதுசுதான். எனவே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவி சொல்லுவான், 'எங்களையெல்லாம் என்ன பாடு படுத்தினே... இப்ப தெரியுதா?' என்று. இனிமேல் நான் இயக்கும் படங்களில் நடிகர், நடிகைகளுக்கு அதிகம் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்," என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஜினிகாந்த், சல்மான் கானை பகைத்துக் கொண்ட தீபிகா படுகோனே? Posted: 05 Jun 2014 01:03 AM PDT
நடிகை தீபிகா படுகோனே பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், சல்மான் கானை பகைத்துக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மை காலமாக தீபிகா படுகோனே நடித்த இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர நினைத்து ரஜினியின் கோச்சடையான் படத்தில் நடித்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிவிட்டது. படத்தை பார்த்தவர்கள் தீபிகாவை கிண்டலடித்தனர். கோச்சடையானில் அனிமேஷனில் தன்னை அழகாக காட்டவில்லை, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று நினைத்த தீபிகா ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சௌந்தர்யா மீது கடுப்பாகி விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்தார். தீபிகா கோச்சடையான் விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணித்தது ரஜினி மற்றும் சௌந்தர்யாவுக்கு வருத்தத்தை அளித்தது. ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் சல்மானை வைத்து எடுக்கும் படத்தில் நடிக்க தீபிகாவிடம் கேட்டுள்ளனர். அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். சல்மான் கான் நடிப்பில் வெளியாகவிருக்கும் கிக் இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட அழைத்தபோதும் மறுத்துவிட்டார் தீபிகா. பாலிவுட்டின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹாரின் ஷுத்தி படத்தில் நடிக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார் தீபிகா. அடுத்தடுத்து படங்கள் ஹிட்டானதால் வெற்றி போதை தீபிகாவின் தலைக்கேறிவிட்டது. அதனால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா! Posted: 05 Jun 2014 12:41 AM PDT
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது. பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் புதிய வளர்ச்சி மற்றும் பரிமாணத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா நம்பிக்கை! Posted: 05 Jun 2014 12:23 AM PDT
'இந்திய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அந்நாட்டில் புதிய வளர்ச்சி மற்றும் பரிமாணத்தை ஏற்படுத்தும் என்ற உணர்வு, அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது போன்ற உணர்வு மற்றும் எண்ணம், எங்களுக்கும் உள்ளது' என, அமெரிக்கா - இந்தியா வியாபார கவுன்சில் அமைப்பின் தற்காலிக தலைவர், டயானே பார்ரெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது போல், அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான, ரோன் சோமர்ஸ், ''இந்தியாவின் புதிய அரசு, சுறுசுறுப்பானதாகவும், பலம் பொருந்தியதாகவும் உள்ளது. பா.ஜ., தலைமையிலான இந்த அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால், இன்னும் சிறப்பாக மாறும்,'' என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










