மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவி ஏற்றார்
- இந்தியாவுக்கான அமெரிக்க இடைக்கால உயர்தூதர் கேத்தலீன் ஸ்டீபன்ஸ் பதவி ஏற்றார்
- பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொன்ற பாசக்கார பேத்தி
- பொற்கோவிலில் கோஷ்டி மோதல்: 6 பேர் காயம்
- பாட்னாவில் போலி என்கவுண்டரில் 3 மாணவர்கள் கொலை: 8 பேர் குற்றவாளிகள்
- பஸ் மோதி ஊனமுற்றவருக்கு ரூ.14.6 லட்சம் நஷ்டஈடு: தீர்ப்பாயம் உத்தரவு
- போலீஸ் தேடிய கம்யூ. நிர்வாகிக்கு உம்மன்சாண்டி பரிசு: காங்கிரசார் அதிர்ச்சி
- தென்மேற்கு பருவமழை எதிரொலி: கேரளாவில் பரவலாக சாரல் மழை
- கொழிஞ்சாம்பாறை: குளியல் அறையில் தாய்–மகள் மர்மச்சாவு
- மான நஷ்ட வழக்கில் நிதின் கட்காரி, கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்
- பேஸ்புக்கில் அவதூறு: சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை வழக்கில் 17 பேர் கைது
- கடன்களை ரத்து செய்யாததால் சந்திரசேகர ராவை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்
- ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு 8-ந் தேதி பதவி ஏற்கிறார்
- குஜராத்தில் இரண்டு கிலோ எடை கொண்ட மாங்கனி விளையும் அதிசயம்
- 200 கோடி பணப்பரிமாற்றம்: தனக்கு தொடர்பில்லை என ராசா நீதிமன்றத்தில் விளக்கம்
- பிரதமராக பொறுப்பேற்ற பின் முதலில் பூடான் செல்லும் மோடி
- முண்டே மரணம் பற்றி பிரதமர் மோடியிடம் மத்திய மந்திரி கட்காரி நேரில் வலியுறுத்தல்
- சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் போட்டியின்றி இன்று தேர்வு ஆகிறார்
- ராஜினாமாவை திரும்ப பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் அஞ்சலி தமானியா
- மோடியின் தாய்க்கு நவாஸ் ஷெரிப் அனுப்பிய பரிசு
| பாராளுமன்ற சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவி ஏற்றார் Posted: 05 Jun 2014 11:12 PM PDT பாராளுமன்ற சபாநாயகரை தேர்ந்து எடுப்பதற்கான மனுதாக்கல் நேற்று நடந்தது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், அந்த கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. சபாநாயகர் பதவிக்கு பா.ஜ.க.வில் முதலில் அத்வானி பெயர் பரிசீலிக்கப் பட்டது. ஆனால் சபா நாயகர் பதவியை ஏற்க அத்வானி |
| இந்தியாவுக்கான அமெரிக்க இடைக்கால உயர்தூதர் கேத்தலீன் ஸ்டீபன்ஸ் பதவி ஏற்றார் Posted: 05 Jun 2014 10:53 PM PDT இந்தியாவுக்கான அமெரிக்க உயர்தூதராக இருந்த நான்சி பவெல் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்று கடந்த மாதம் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனையடுத்து, காலியாக இருந்த அந்த பதவியில் கேத்தலீன் ஸ்டீபன்ஸ் என்பவரை இடைக்கால உயர்தூதராக அமெரிக்க அரசு நியமித்தது. இதனையடுத்து, நேற்று அமெரிக்காவில் இருந்து புதுடெல்லி வந்தடைந்த |
| பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொன்ற பாசக்கார பேத்தி Posted: 05 Jun 2014 10:42 PM PDT பாட்டிக்கும்-பேத்திக்கும் உள்ள பாச பந்தத்தைப் பற்றி 'பூவே பூச்சூட வா' திரைப்படத்தில் வெகு கவித்துவமாக விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால், மைசூரை சேர்ந்த ராமரத்னம்மாள்(72) 'இப்படி ஒரு பேத்தி நமக்கு வாய்ப்பாள்' என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சுமார் 15 லட்சம் ரூபாய் நகைகள் மற்றும் ரொக்கத்துக்கு சொந்தக்காரியான ராமரத்னம்மாள், பெங்களூரின் பின்னிபேட் பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு |
| பொற்கோவிலில் கோஷ்டி மோதல்: 6 பேர் காயம் Posted: 05 Jun 2014 10:40 PM PDT பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் இன்று காலை இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் அவர்கள் வைத்திருந்த வாளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர். |
| பாட்னாவில் போலி என்கவுண்டரில் 3 மாணவர்கள் கொலை: 8 பேர் குற்றவாளிகள் Posted: 05 Jun 2014 10:29 PM PDT பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆசியானா நகர் அருகே சந்தை உள்ளது. 2002–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந்தேதி விகாஷ்ரஞ்சன், பிரசாந்த்சிங், ஹிமான்ஷுசேகர் ஆகிய மாணவர்கள் ஆசியானா நகர் சந்தைக்கு வந்தனர். அங்குள்ள ஒரு டெலிபோன் பூத்துக்கு சென்று போனில் பேசினார்கள். அப்போது போன் கட்டணம் தொடர்பாக மாணவர்களுக்கும் கடைக்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. |
| பஸ் மோதி ஊனமுற்றவருக்கு ரூ.14.6 லட்சம் நஷ்டஈடு: தீர்ப்பாயம் உத்தரவு Posted: 05 Jun 2014 10:14 PM PDT டெல்லி அருகே உள்ள காசியாபாத்தை சேர்ந்தவர் கபீந்திரா சர்மா. தனியார் நிறுவன கணக்கு அதிகாரி. 2006–ம் ஆண்டு செப்டம்பர் 4–ந்தேதி இவர் தனது நண்பருடன் டெல்லி ஐ.எஸ்.பி.டி. பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். முகர்பா சவுக் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது தனியார் பஸ் ஒன்று மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேரும் கீழே விழுந்தனர். கபீந்திரா |
| போலீஸ் தேடிய கம்யூ. நிர்வாகிக்கு உம்மன்சாண்டி பரிசு: காங்கிரசார் அதிர்ச்சி Posted: 05 Jun 2014 10:14 PM PDT கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டுமென போராட்டத்திலும் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்ணூரில் நடந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க வந்த உம்மன்சாண்டியை கண்டித்து கம்யூனிஸ்டு |
| தென்மேற்கு பருவமழை எதிரொலி: கேரளாவில் பரவலாக சாரல் மழை Posted: 05 Jun 2014 09:57 PM PDT கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கும் எனவும், குறைந்த அளவிலேயே மழை இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே கேரளாவின் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நேற்று முன்தினமே மழைக்கான அறிகுறிகள் |
| கொழிஞ்சாம்பாறை: குளியல் அறையில் தாய்–மகள் மர்மச்சாவு Posted: 05 Jun 2014 09:40 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரை அடுத்துள்ளது ஏலம்பாறை. இங்கு வசித்து வந்தவர் அம்மாளு (வயது 70). இவரது மகள் சஜிதா (33). நேற்று மதியம் இவர்களது குளியல் அறையில் இருந்து கரும்புகை கிளம்பியது. |
| மான நஷ்ட வழக்கில் நிதின் கட்காரி, கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர் Posted: 05 Jun 2014 09:14 PM PDT நாட்டின் மிகப் பெரிய ஊழல்வாதிகள் என்றொரு பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் வெளியிட்டார். பா.ஜ.க.வின் முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி, ஊழல் செய்து முறைகேடான வகையில் ஏராளமான சொத்துக்களை குவித்து விட்டதாகவும், அந்த சொத்துக்கள் பற்றிய விபரமும் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் மீது நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் |
| பேஸ்புக்கில் அவதூறு: சாப்ட்வேர் என்ஜினீயர் கொலை வழக்கில் 17 பேர் கைது Posted: 05 Jun 2014 08:51 PM PDT மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் ஷேக் மொகசின் சாதிக் (வயது 28). புனேயில் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணி செய்து வந்தார். இவர் கடந்த திங்கட்கிழமை நண்பர்கள் இருவருடன் சென்ற போது, மர்ம கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர் அவர்களை ஆக்கி மட்டையால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஷேக் மொகசின் சாதிக் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை |
| கடன்களை ரத்து செய்யாததால் சந்திரசேகர ராவை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் Posted: 05 Jun 2014 08:00 PM PDT தெலுங்கானா மாநிலத்தின் முதல், முதல்-மந்திரியாக பதவி ஏற்ற சந்திரசேகரராவ், ஏற்கனவே அளித்த தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது சில குறிப்பிட்ட கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள விவசாயிகள், கொடுத்த வாக்குறுதிப்படி நகைக்கடன் உள்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி |
| ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு 8-ந் தேதி பதவி ஏற்கிறார் Posted: 05 Jun 2014 04:57 PM PDT தெலுங்கானா தவிர்த்த, இதர பகுதிகள் அடங்கிய ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் அக்கட்சி 102 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து, திருப்பதியில் தெலுங்கு தேசம் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் சட்டசபை குழு தலைவராக |
| குஜராத்தில் இரண்டு கிலோ எடை கொண்ட மாங்கனி விளையும் அதிசயம் Posted: 05 Jun 2014 04:30 PM PDT மத்திய குஜராத்தில் விளையும் மாங்கனி இரண்டு கிலோ எடை கொண்டதாக இருப்பது விஞ்ஞானிகளையும், விவசாயிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விளைந்ததல்ல மாறாக நாட்டின் ஒரு பகுதியில் இயற்கையாகவே இவை விளைந்து வருவது குறிப்பிடத்தக்கது. |
| 200 கோடி பணப்பரிமாற்றம்: தனக்கு தொடர்பில்லை என ராசா நீதிமன்றத்தில் விளக்கம் Posted: 05 Jun 2014 01:53 PM PDT மத்திய அமலாக்கத்துறை சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் மீது கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப்பரிமாற்றம் நடந்தது குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. |
| பிரதமராக பொறுப்பேற்ற பின் முதலில் பூடான் செல்லும் மோடி Posted: 05 Jun 2014 01:23 PM PDT பாரதப் பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் அரசு முறைப் பயணமாக அண்டை நாடான பூடானுக்கு இம்மாத இறுதியில் செல்கிறார். மோடி பூடான் செல்ல முடிவெடுத்தது இரு நாடுகளுக்கிடையேயான உறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இமயமலைப்பகுதி நாடான பூடான் அதிபருடன் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்தும், பிராந்திய விவகாரங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். |
| முண்டே மரணம் பற்றி பிரதமர் மோடியிடம் மத்திய மந்திரி கட்காரி நேரில் வலியுறுத்தல் Posted: 05 Jun 2014 12:48 PM PDT நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம், பீட் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபிநாத் முண்டே. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஊரக வளர்ச்சித்துறை கேபினட் மந்திரியாகவும் பதவி ஏற்றார். |
| சபாநாயகர் பதவிக்கு சுமித்ரா மகாஜன் போட்டியின்றி இன்று தேர்வு ஆகிறார் Posted: 05 Jun 2014 12:10 PM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, 16-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், விபத்தில் பலியான மத்திய ஊரக வளர்ச்சி துறை மந்திரி கோபிநாத் முண்டேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர் |
| ராஜினாமாவை திரும்ப பெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் அஞ்சலி தமானியா Posted: 05 Jun 2014 10:44 AM PDT ஆம் ஆத்மி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவரான அஞ்சலி தமானியா இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக கூறியதை திரும்ப பெற்றுள்ளளார். தொடர்ந்து கட்சி பணியில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். |
| மோடியின் தாய்க்கு நவாஸ் ஷெரிப் அனுப்பிய பரிசு Posted: 05 Jun 2014 10:36 AM PDT பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மோடி பிரதமராக பொறுப்பேற்ற விழாவிற்கு வந்த போது அவரது தாயாருக்கு சால்வையை பரிசாக வழங்கினார். பதவியேற்பு விழாவுக்கு பின் தாய்நாடு திரும்பிய ஷெரிப் தனது தாயாரை சந்தித்து மோடி அவருக்கு அளித்த பரிசை கொடுத்தார். அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக நவாஸின் மகள் மரியம் தனது டுவிட்டர் மூலம் உறுதிசெய்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |