Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்திய பெண்ணுக்கு அமெரிக்காவில் கவுரவம்!

Posted: 05 Jun 2014 12:13 AM PDT

Holocost-Memoriyal

Holocost-Memoriyalஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் உள்ள, 'அமெரிக்க ஹோலோகாஸ்ட் மெமோரியல் கவுன்சில்' உறுப்பினர் பதவிக்கு, இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின்போது, ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள், 60 லட்சம் பேர், ஜெர்மனி சர்வாதிகாரி, அடால்ப் ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்டனர். அதன் நினைவாகவும், அத்தகைய இன, மத வேற்றுமையை பின்பற்றக் கூடாது என வலியுறுத்தியும், அமெரிக்காவில் ஒரு அமைப்பு உள்ளது. ஹோலோகாஸ்ட் மெமோரியல் கவுன்சில் என்ற அந்த அமைப்பில், 55 உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுக்கு இரு முறை கூடும் அந்த அமைப்பின் உறுப்பினராக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கலிபோர்னியாவில் வசிக்கும் பெண், ஷிபாலி ரஸ்டான் துக்கால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒபாமா, 2004 மற்றும் 2008ம் ஆண்டுகளில் போட்டியிட்ட போது, அவருக்காக ஏராளமான நிதி சேகரித்தவர். ஒபாமா நிர்வாகத்தில், பல முக்கிய பொறுப்புகளில், இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் தான் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவை பலவீனப்படுத்தி விட்டார் ஒபாமா! அமெரிக்க மக்களின் அதிரடி கருத்துக்கள்

Posted: 05 Jun 2014 12:04 AM PDT

Obama

Obamaஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, 'ஒபாமாவின் ஆட்சியைப் பற்றி உங்களது கருத்து என்ன?' என்று கடந்த முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரை நாடு தழுவிய அளவில் 1,006 பேரிடம் தொலைபேசி மூலமாக கணிப்பு நடத்தியது. இதில், 55 சதவீதம் மக்கள் அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். வெறும், 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கா பலமாக உள்ளதாக கூறியுள்ளனர். இவர்களில் 68 சதவீதம் பேர், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் ஆட்சியை விட செயல் திறனில் ஒபாமாவின் ஆட்சி பின் தங்கியுள்ளது என்றும், 48 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சி போல் ஆற்றல் மிகுந்ததாக இல்லை எனவும் கூறியுள்ளனர். அவரது தலைமைத் தகுதியை சிறந்ததென 39 சதவீதத்தினரும், மோசமானது என 61 சதவீதம் மக்களும் சான்றுரைத்துள்ளனர். இதேபோல், ஒபாமா கடைபிடிக்கும் வெளியுறவு கொள்கை தொடர்பாக 56 சதவீதம் பேர் அதிருப்தியும், 33 சதவீதம் பேர் திருப்தியும் தெரிவித்துள்ளனர். ஒபாமாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை 39 பேர் ஆதரிக்கும் அதே வேளையில், 58 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர் என்பதும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரம்புத்தளர்ச்சி நீக்கும் மாதுளம் பூ?

Posted: 04 Jun 2014 11:58 PM PDT

Madhulam-poo

Madhulam-pooமாதுளம் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் மாதுளம் பூக்களும் பலவித நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது. சளி, இருமல்,மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களுக்கு எளிய மருந்தாக உள்ளது மாதுளம்பூ.இருமல் போக்கும் மாதுளம் பூ மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும். தொண்டை ரணம் மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவேண்டும். இதனால் தொண்டைக்கமறல், தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும். தாதுபலம் தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும். மாதுளம் பூச்சாறு 300 கிராம், பசுநெய் 200 கிராம் சேர்த்து அடுப்பில் காய்ச்சவும். பின் இறக்கி ஆறியபின் அகலமான வாய் உள்ள பாட்டிலில் எடுத்து வைக்கவும். வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டு வரவேண்டும். ரத்த மூலம் குணமாக மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சுழலும் கேமரா கொண்ட Oppo N1 மினி ஸ்மார்ட்போன்!

Posted: 04 Jun 2014 11:51 PM PDT

Oppo-N1

Oppo-N1Oppo நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று, மினி வேரியன்டில் அதன் தலைமை ஸ்மார்ட்போனான Oppo, N1 மினி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. சீன கைபேசி தயாரிப்பு நிறுவனமான Oppo அதன் அதிகாரப்பூர்வமான Weibo பக்கம் வழியாக செய்தியை உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் மூலம் டீஸர் படத்தில் Oppo, N1 மினி ஸ்மார்ட்போன் ஒரு swiveling கேமரா கொண்டு வரும் என்று உறுதிப்படுத்துகிறது. Oppo N1 உடன் ஒப்பிடுகையில், Oppo N1 மினி ஸ்மார்ட்போன் சற்று சிறியதாக மற்றும் இலகுவான உடல் அமைப்பு, 4.0 ஆதரவு ப்ளூடூத், 2140mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் சுழலும் கேமரா, 4G இணைப்பு மற்றும் ஒரு 5 இன்ச் 720p HD டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுவதாக பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடி மந்திரம் வேலை செய்கிறது போல… கேட்பது மனோ கணேசன்!

Posted: 04 Jun 2014 11:39 PM PDT

mano-ganesan

mano-ganesanஅரசியல் சாசன திருத்தத்தின் 13வது பிரிவையே பேசாதீர்கள் என்று சொன்ன ராஜபக்சே அரசு இப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தால் அதே 13வது திருத்தத்தை ஏற்றுக் கொண்டு போலீஸ் அதிகாரத்தை மட்டும் தர முடியாது என சொல்கிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் மனோ கணேசன் நேற்று கூறியதாவது: இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி ராஜபக்சே அரசு தான் தள்ளுகிறது. உள்நாட்டு பிரச்சினைக்கு உலக நாடுகளிடம் தீர்வை கோருகிறோம் என தமிழர்களை இனி எவரும் குறை கூற கூடாது. ஐக்கிய நாடுகள் சபையையும், இந்தியாவையும் நோக்கி நாம் செல்வதற்கு ராஜபக்சேவின் முட்டாள் அரசாங்கம்தான் காரணம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். "இலங்கை நாட்டு பிரிவினையை எதிர்க்கிறோம்; இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் சாசன திருத்தம் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள்" என்று இந்திய பிரதமர் மோடி கடுமையாக கூறிவிட்டார். அத்துடன் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இருகரங்கூப்பி வரவேற்று உரையாடியுள்ளார். இருவரும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். இதன்மூலம் ஒருநாட்டு பிரதமர் தனது நாட்டின் இன்னொரு கட்சியை சார்ந்த ஒரு மாநில முதல்வரை எவ்விதம் நாகரீகமாக நடத்த வேண்டும் என்ற பாடத்தையும் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கற்று கொடுத்துள்ளார். அரசியல் சாசன திருத்தம் 13ஐ பற்றி பேசவே பேசாதீர்கள். பேச வேண்டுமானால் நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு வாருங்கள் என்று அகம்பாவத்துடன் பேசியவர்கள், இன்று 13ஆம் திருத்தத்தில் போலீஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை நடைமுறைப்படுத்த செய்ய தயார் என சொல்கிறார்கள். இனி நாளை இன்னொரு மோடி சந்திப்புக்கு பிறகு போலீஸ் அதிகாரத்தையும் தருகிறோம் என சொன்னாலும் ஆச்சரியமில்லை. உள்நாட்டில் நாம் கெஞ்சினாலும் சட்டத்தில் உள்ள உரிமையைகூட வழங்க மாட்டீர்கள். ஆனால், வெளிநாட்டில் பலம் பொருந்தியவர்கள் அழுத்தம் கொடுத்தால் இணங்குகிறீர்கள். ஆகவேதான் கேட்கிறேன், மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? இவ்வாறு மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர் மாகாண அரசுகளிடம் போலீஸ் அதிகாரத்தை நிச்சயமாக ஒப்படைக்க முடியாது! மோடி கோரிக்கை நிராகரிப்பு

Posted: 04 Jun 2014 11:30 PM PDT

peiris

peirisதமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் உள்பட மாகாண அரசுகளிடம் போலீஸ் அதிகாரத்தை நிச்சயமாக ஒப்படைக்க முடியாது என இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இத்தகவலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமும் ராஜபக்சே தெரிவித்து விட்டதாக இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் கலந்து கொண்டார். அப்போது, தமிழர்களுடன் இணக்கமான உறவு நிலவ, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாகாணங்களுக்கு போலீஸ், நில அதிகாரங்களை வழங்க வேண்டும், 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார். இந்நிலையில், இலங்கை அதிபர் இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அறிய விரும்புவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ் அளித்த பதிலாவது :- சார்க் அமைப்பு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்கால திட்டம், பொருளாதார விரிவாக்கம் மற்றும் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையில் கால் நூற்றாண்டு காலமாகவே நடைமுறையில் இருக்கும் 13-வது சட்ட திருத்தத்தை இங்குள்ள எந்த அரசாலும் சரிவர அமல்படுத்த முடியவில்லை என்று இந்தியாவிடம் எடுத்து கூறினோம். மாகாண அரசுகளுக்குபோலீஸ் அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்னும் நமது நிலைப்பாட்டையும், இனப்பிரச்சனைக்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் மாகாணத்துக்கு போலீஸ் அதிகாரத்தை வழங்குவது என்பது கொள்கை அளவில் ஏற்புடையது அல்ல என்பதை தெள்ளத் தெளிவாக இந்தியாவிடம் கூறி விட்டோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 1987ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம், நில அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இத்திருத்தம் வகை செய்கிறது. இதன் மூலம், தமிழர்-சிங்களர் இடையிலான பதற்றம் தணியும் என்று கருதப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மாகாணங்களுக்கு போலீஸ் அதிகாரம் அவசியம் என்று தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண சபையின் கவுன்சிலர் பிரிமஸ் சிரைவா தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இவங்க மீன் பிடிக்கிற ஸ்டைல கொஞ்சம் பாருங்களேன்…. உங்களுக்கும் ஆசை வந்திருக்குமே!

Posted: 04 Jun 2014 11:15 PM PDT

Tuna-Fishing-South-Pacific-BBC-Two

Tuna-Fishing-South-Pacific-BBC-Two

This posting includes an audio/video/photo media file: Download Now

திடீரென உடைந்த திருமண மேடை: தண்ணீரில் தத்தளித்த மணமக்கள்!

Posted: 04 Jun 2014 11:12 PM PDT

wedding_river

wedding_river

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய அணி இன்று ஸ்பெயினுடன் மோதல்! வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா

Posted: 04 Jun 2014 11:09 PM PDT

Hockey

Hockeyஉலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று ஸ்பெயினுடன் மோதுகிறது. நெதர்லாந்ன் ஹேக் நகரில் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, முதல் 2 லீக் போட்டியிலும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. பெல்ஜியம், இங்கிலாந்திடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்று ஸ்பெயினுடன் மோதுகிறது. கடைசியாக இந்தியா, ஸ்பெயின் அணிகள் 2013 உலக லீக் தொடரில் மோதின. இதில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினுடன் வீழ்ந்த இந்தியா 5வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தது. ஸ்பெயினை பொறுத்த வரையில் இந்திய அணியை விட ரேங்கிங்கில் பின்தங்கிய அணிதான். இதனால், நமது அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் எர்ராணி அதிர்ச்சி தோல்வி!

Posted: 04 Jun 2014 11:04 PM PDT

Tennis

Tennisகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 11ம் நாளான நேற்று மழை காரணமாக போட்டிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மகளிர் ஒற்றையர் பிரிவு கால்இறுதி போட்டிகள் நடந்தன. தரவரிசையில் 10ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் சாரா எர்ராணி, 28ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை எதிர்த்து விளையாடினார். ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பெட்கோவிக்கை அதிரடியை சமாளிக்க முடியாமல் தடுமாறினார் எர்ராணி. முதல் செட்டை 27 நிமிடத்தில் இழந்த எர்ராணி, அடுத்த செட்டிலும் நெருக்கடி தர முடியாமல் தோல்வியை சந்தித்தார். அபாரமாக ஆடிய பெட்கோவிக் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் ரோமானியானின் ஹலீப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் கஸ்னட்சோவாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா செல்கிறார் மோடி! ஒபாமாவின் கோரிக்கையை ஏற்றார்

Posted: 04 Jun 2014 10:58 PM PDT

modi-obama

modi-obamaவெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அச்சமயத்தி்ல இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி மோடி அமெரிக்கா வருவதற்கான விசாவை அந்நாடு ரத்து செய்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இதனையடுத்து அமெரி்க்காவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து மோடி தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. அமெரி்க்க அதிபர் ஓபாமா புதிய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்திருப்பதது வெளியுறவுக் கொள்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உள்நாட்டு உக்ரைன் கலவர பகுதியிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றம்!

Posted: 04 Jun 2014 10:47 PM PDT

Ukrain

Ukrainஉள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் லுகான்ஸ்க் நகரிலிருந்து 1000 இந்தியர்கள் உக்ரைன் தலைநகர் கியிவ்க்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்தியா திரும்புகின்றனர். இவர்களில் பெரும் பாலானவர்கள் மாணவர்கள். இதில் 300 தமிழர்களும் அடங்குவர். உக்ரைனில் உள்நாட்டு கலவரம் நடந்து வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் பகுதிகளில் கலவரம் வெடித்தது. அதையடுத்து அப்பகுதிகளில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் இந்திய மாணவர்கள் உட்பட 1000 இந்தியர்கள் கியிவ்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 350 பேர் கேரளம், 300 பேர் தமிழ்நாடு, 150 பேர் ஆந்திரா, 60 பேர் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா 25 பேர் அடங்குவர். அனைத்து இந்தியர்களும் நாடு திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டெல்லியில் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிதைவுகளைக் கண்டுபிடித்துள்ளதாம் இராணுவம்! கிளிநொச்சியில் பௌத்த விகாரை

Posted: 04 Jun 2014 10:41 PM PDT

uruthrapuram-viharai

uruthrapuram-viharaiகிளிநொச்சியில் பௌத்த விகாரை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் பொலன்நறுவ ஆட்சிக்காலத்தில் அங்கிருந்த பௌத்த விகாரைக்குரிய ஆதாரங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் 66-2 பிரிகேட்டின் கீழுள்ள 20வது இலகு காலாற்படைப் பிரிவினரால், இந்த பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தொல்பொருள் ஆய்வு நிபுணர்களுடன் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது, சுமார் 60 அடி விட்டமும், 12 அடி உயரமும் கொண்ட தாதுகோபத்தின் சிதைவுகள், பழங்கால செங்கல் அடுக்குகள். பாதச்சுவடுகள் பதிந்த கல், கற்தூண்கள், போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை பொலன்நறுவ ஆட்சிக்காலத்தில், அங்கிருந்த பௌத்த விகாரை ஒன்றினது சிதைவுகள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பகுதியில், விரைவில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்தப் பிரதேசத்தை புனிதப் பிரதேசமாக பிரகடனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை, இந்தப் பகுதியில், 1940ம் ஆண்டு வரை ஒரு பிள்ளையார் கோவில் இருந்ததாகவும், அதன் பின்னர், 1980களில் சிவன் கோவில் கட்டப்பட்டதாகவும் அந்தப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 1965இல், இந்தப் பகுதியைத் துப்புரவு செய்த ஆலயக் குருக்கள், 4-6 அடி உயரமுள்ள, சமாதி நிலை புத்தர் சிலை ஒன்றைக் கண்டெடுத்ததாகவும், அதனையும், அந்தப் பகுதியில் காணப்பட்ட அரச மரம் ஒன்றையும் பின்னர் புலிகள் அழித்து விட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பள்ளிவாசல் விவகாரம்! முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதி

Posted: 04 Jun 2014 10:37 PM PDT

dambulla-mosque

dambulla-mosqueதம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடன் பேசி சுமுக தீர்வு காண்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அனைத்து இனங்களுக்காகவும் குரல் கொடுப்பதாகக் கூறிவரும் ஐ.தே.க சிறுபான்மையினரின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்ப முற்படும்போது அதனைத் தடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் அவர் கூறினார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக ஆங்கில ஊடக மொன்றில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சரின் உரைக்கு இடையூறாக எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க கருத்துத் தெரிவித்தார். இதன்போது பதிலளித்த அமைச்சர், சிறுபான்மை கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முயலும்போது எதிர்க்கட்சி அதற்கு தடங்கலாக செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கையில் இவ்வாறு நடந்து கொள்வது உகந்ததல்ல என்றும் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கூறியதாவது, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வு பெற்றுத்தருவதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்திருந்தார். இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களைச் சந்தித்துப் பேசுவதாகவும் கூறியிருந்தார். சிறுபான்மையினருக்கு தாம் விரும்பிய மதத்தை வழிபட உரிமையுள்ளது. முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பள்ளிவாசலை அகற்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் முழு முஸ்லிம்களுடன் தொடர்புபட்டதாகும். பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக தம்புள்ளை விகாராதிபதியுடன் பேசி இணக்கப்பாடு காணப்பட்டதாக கூறப்பட்டாலும் இது தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை. இது தொடர்பில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட விடயம் எந்தளவு உண்மை என வினவுகிறேன் என்றார் ஹக்கீம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி வேண்டுகோள்!!

Posted: 04 Jun 2014 10:31 PM PDT

Anandhi-sasidharan

Anandhi-sasidharanஎமது மக்கள் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர் யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சி செய்வதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இலங்கை இராணுவத்திற்கு கட்டாய அடிப்படையில் அரச அதிகாரிகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்பு தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையில், அண்மைக் காலங்களில் இராணுவத்தினர் படைக்கு ஆட்களைத் திரட்டும் பணியில் வடக்கில் பல்வேறு வழிமுறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். படையினர் வீடு வீடாக சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு விண்ணப்பப் படிவங்களை வழங்க இளைஞர்களையும் யுவதிகளையும் ஒருவிதமான அழுத்தங்களையும் கொடுப்பதன் மூலம் படையில் சேர்ப்பதற்கான முயற்சியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு கட்டளைகளை வழங்கி அவர்கள் கிராம சேவையாளர்கள் மூலம் படைக்கு ஆட்களை திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே மேற்படி பணியில் ஈடுபடுமாறு தான் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியதாக தெரிவித்திருந்தார். இப்படியான ஒரு நிலையில் இந்தக் கேள்விகள் எழுகின்றன. ஒன்று: பாதுகாப்பு அமைச்சின் முறைப்படியான வர்த்தமானி அறிவித்தல் இன்றி ஒரு பிராந்தியத் தளபதி தன்னிச்சையாக படைக்கு ஆட்சேர்க்க முடியுமா? அடுத்தது: ஒரு மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு இராணுவத் தளபதியின் கட்டளையை ஏற்றுச் செயற்பட முடியுமா? இந்த இரு விடயங்களும் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பாலானவை என்பது மட்டுமன்றி மரபு வழியான நடைமுறைகளுக்கும் அடங்காதவை. எனினும் இவை ஏன் எப்படி நடைபெறுகின்றன? இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் பொது நிர்வாக அலகுகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனவா? இப்படி ஒரு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆணை பிறப்பிக்கப்பட்டதா? இப்படி எதுவும் இடம்பெறாத நிலையிலும் இங்கு இவை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இலங்கையில் ஒரேயொரு இராணுவம் தான் உண்டு. அதற்கென ஒரேயொரு தலைமைத் தளபதி தான் உண்டு. அவர் நேரடியாகவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுபவர். இராணுவ ஆட்சேர்ப்பு என்பது பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளுக்கு அமைய இராணுவம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விண்ணப்பங்களைக் கோரும். அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்முகத் தெரிவு நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுபவர்கள் படைக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இது வழமையான நடைமுறை! சட்டபூர்வமானதும் கூட! இப்போ ஒரு பிராந்திய தளபதி கட்டளையிட அரச அதிபர் பிரதேச செயலாளர்களிற்கூடாக படைக்கு ஆட்சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளார். இவ்வகையில் அரச அதிபர் என்பவர் ஜனாதிபதியின் மாவட்ட பிரதிநிதி. அவர்களிற்கு கட்டளையிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் பொது நிர்வாக அமைச்சுக்கும் மட்டுமே உண்டு. சில அவசர சந்தர்ப்பங்களில் மாவட்ட மட்டத்தில் பொலிசாரையோ, இராணுவத்தினரையோ அமைக்கும் அதிகாரம் அவரிற்கு உண்டு. ஆனால் வடக்கில் அவர் இராணுவத்தினரின் கட்டளைகளை நிறைவேற்றுமளவிற்கு நிலை தாழ்த்தப்பட்டு விட்டார். அதாவது இராணுவத்தினரினதும், ஜனாதிபதியினதும் பொது நிர்வாக அமைச்சினதும் அதிகாரங்களை தானே கையில் எடுத்துக் கொண்டு உள்ளார். இந்த ஆட்சேர்ப்பு விவகாரத்தில் பிரதேச செயலாளர்களோ, கிராம சேவையாளர்களோ தங்கள் மேலதிக பணியான அரச அதிபரின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு. ஆனால் அரச கருமம் அப்படியல்ல. ஒரு பிராந்திய இராணுவ தளபதியின் கட்டளையை மறுக்க அவருக்கு முழு அதிகாரம் உண்டு. அது மட்டுமல்ல தனது கடமைக்கு குறுக்கிடுவதாக பொது நிர்வாக அமைச்சுக்கோ, ஜனாதிபதிக்கோ முறைப்பாடு செய்யும் உரிமையும் அவருக்கு உண்டு. ஆனால் யாழ்மாவட்ட அரச அதிபரோ தன் பதவியின் அதிகாரம், அந்தஸ்து, கடமை எல்லாவற்றையும் மறந்து இராணுவத்தினருக்கு சேவை செய்யும் பாதையில் தானும் பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் வழிநடத்துகிறார். இது வடக்கில் ஒரு இராணுவ மேலாதிக்கம் கொண்ட ஒரு இலங்கை அரசியல் சட்டத்திற்கு அப்பால் இடம்பெற்று வருகின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக காட்டுகிறது. அந்த இராணுவ மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே படைக்கு தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்பிற்குரிய இளைஞர்களே! இதுவரை ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் இராணுவத்தை விட்டு தப்பி ஓடி விட்டனர். கவர்ச்சிகரமான சம்பளம், பல சலுகைகள், எல்லாம் இருந்த போதும் அவர்கள் தப்பி ஓடுகின்றனர். காரணம் கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் மேல் நடாத்தப்படும் அதிகார மேலாதிக்கம் விடுமுறைகள் வழங்காமை. உறவுகளிடம் இருந்தும் சமூகத்திடமிருந்தும் பிரிந்து நீண்ட காலம் தனிமைப்படுத்தல் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமை அதனை முறையற்ற விதத்தில் பூர்த்தி செய்ய முற்பட்டால் கிடைக்கும் மோசமான தண்டனை, அடிமைத்தனம் என்பன அவர்களை விரக்தி வக்கிரக மன நிலைக்குள் தள்ளுகின்றன. எனவே படையை விட்டு தப்பியோடும் நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. அப்படி தப்பி ஒடுபவர்கள் வெளியே வந்து இயல்பு வாழ்வு வாழ முடியாது. தலைமறைவான வாழ்க்கை வாழ்கின்றனர். வேலையற்ற நிலைமை வாட்டுகின்றன. இறுதியில் பாதாள உலகக் குழுக்களில் இணைகின்றனர். பின்பு கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் எனப் பாரிய குற்றங்களை மேற்கொண்டு நிரந்தரக் குற்றவாளிகளாக தமது எதிர்காலத்தையே இழந்து விடுகின்றனர். இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்பட வேண்டுமா? எமது அன்புக்குரிய யுவதிகளே! ஏற்கனவே கிளிநொச்சியில் படையில் இணைத்த யுவதிகள் மனநிலை பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நீங்கள் அறிவீர்கள். அனுராதபுரம் மகிந்த முகாமில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டமை வீடியோ நாடாக்கள் மூலம் வெளிவந்தன. இராணுவத்தினர் பாலியல் கொடுமைகளில் எப்படிப்பட்டவர்கள் எனபதை நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள். இப்படியான நிலைக்குள் அகப்பட்டு தப்ப முடியாமல் தவிக்கும் நிலை உங்களுக்கும் வேண்டுமா? இளைய தலைமுறையே! உங்களை வாட்டும் வறுமை, வேலையற்ற பிரச்சனை, படையினரின் பிரச்சாரம் என்பன உங்களை படையில் இணையும்படி தூண்டலாம். ஆனால் அதற்காக நாம் எங்கள் எதிர்காலத்தை இழந்து விடலாமா? நாம் விமோசனம் என எண்ணுவது அடிப்படையில் ஒரு விலங்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் அவ்வறிக்கையினில் மேலும் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈழ விவகாரத்தில் மோடியால் நன்மை விளையும்! தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரன் பேட்டி

Posted: 04 Jun 2014 10:20 PM PDT

Uruthirakumaran

Uruthirakumaranஇந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ச. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?' என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டி:- 2009-ல் போர் முடிந்த போது இருந்த சர்வதேச சூழலுக்கும், இன்றைய உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா? நிச்சயமாக! மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, சிறிலங்காவை உலக நாடுகள் பாராட்டின. ஐ.நா-வில் முதல் தீர்மானம், சிறிலங்காவைப் பாராட்டியே நிறைவேற்றப்பட்டது. மேற்கு உலக ஊடகங்கள், தமிழர்கள், மனித உரிமை அமைப்புகளின் இடைவிடாத முயற்சிகளால் இனப்படுகொலை ஆதாரங்கள் உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கிய பிறகே, உலக நாடுகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று, ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் விசாரணைக்கு உள்ளாகும் ஒரு நாடாக சிறிலங்கா மாறியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றம் சர்வதேச புவிசார் நலன்களின் அடிப்படையில் அமைந்தாலும்கூட, ஈழ மக்களுக்குச் சாதகமாக இவை மாறும் வாய்ப்புகள் உள்ளன! ஆனால், அது அத்தனை எளிதல்ல என்பதையும் நாம் அறிவோம். சீனாவின் பக்கபலத்துடன் இந்தியாவையும் அமெரிக்காவையும் தனது நலன்களின் அடிப்படையில் அணுக முடியும் என நம்புகிறது சிறிலங்கா. இப்போது சீனா, சிறிலங்கா முழுக்க எங்கும் வியாபித்துவிட்டது. சிறிலங்கா விரும்பினாலும் சீனாவின் பிடியில் இருந்து இனி அது தப்ப முடியாது. இனியும் சிங்கள அரசுடன் உறவாடி, இலங்கைத் தீவில் இருந்து சீனப்பாம்பை இந்திய மயிலால் கொத்திக் கலைக்க முடியும் என நாம் கருதவில்லை. இந்த நாடுகளின் பரமபத வியூகங்கள் இடையேதான், இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல விளைவுகளை உண்டாக்க வேண்டும்! இலங்கை மீதான சர்வதேச விசாரணை எப்போது தொடங்கும்? சர்வதேச விசாரணைக்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஐ.நா-வின் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று சிறிலங்கா அறிவித்துள்ளது. இதனால் இலங்கைத் தீவுக்கு வெளியில் இருந்துதான், இந்த விசாரணையை மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டிவரும். அதே நேரம், இந்த விசாரணை முடிவு என்பது மிகவும் கீழ்மட்ட நிலையில் அமைந்துள்ளதே தவிர, ஈழத் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் இந்த விசாரணையின் மூலமாக வெளிவரும் உண்மைகள், சிங்களத்தை இன அழிப்புக் கூண்டில் ஏற்றத் துணை செய்யும் என்றே நாம் நம்புகிறோம். ஆனாலும், நாம் பல வழிகளிலும் போராட வேண்டியுள்ளது. குறிப்பாக, உலகின் பல நீதிமன்றங்களில் ஈழப் படுகொலைகளுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட வேண்டும்! இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த காங்கிரஸ் அரசு பல ஈழ அமைப்புகளையும் பிரமுகர்களையும் இந்தியாவில் தடை செய்ததே. உங்கள் அமைப்புக்கும் அது பொருந்துமா? இல்லை. எங்களைத் தடை செய்யவில்லை! 'இனப் படுகொலை குற்றவாளிகள்' என்று 12 பெயர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டிருக்கிறது 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'. நீங்கள் வெளியிட்டுள்ள இனப்படுகொலை குற்றவாளிகள் பட்டியலில், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் பெயர் உள்ளது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கே பெயர் விடுபட்டுள்ளது. இனக்கொலையாளிகள் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற முறையில், முப்படைகளின் மேன்மைத் தளபதியாகவும் இருந்தவர். ரணில், இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டது இல்லை. யாழ்குடா நாட்டின் மீதான 'சூரியக்கதிர்', வன்னி பெரு நிலம் மீதான 'வெற்றி நிச்சயம்' போன்ற இராணுவ நடவடிக்கைகள், சந்திரிகாவின் தலைமையில் நடந்தவைதான். சந்திரிகாவின் யுத்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சிதான் ராஜபக்சவின் தலைமையில் உச்சம் பெற்று இன அழிப்புப் போராக முள்ளிவாய்க்காலில் முடிந்தது. தமிழ் இன அழிப்பு முயற்சிகள் ராஜபக்சவால் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல! புலிகளுக்குப் பின்னர் ஈழ ஆதரவாளர்கள் சிதறிவிட்டார்கள். ஒரே குடையின் கீழ், உங்களால் மக்களை அணி திரட்ட முடியவில்லையே? ஈழ மக்கள், தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவருமே 'ஈழ விடுதலை' என்ற ஒற்றைக் கருத்தில் உறுதியோடு இருக்கிறார்கள். தமிழீழ தனி அரசை நோக்கிய பயணத்தில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்புகளும் 'ஐக்கிய முன்னணி' என்ற பெயரில் இணைவதன் மூலமாகவே, மக்களை ஒரு குடையின் கீழ் திரட்ட முடியும். அது மட்டுமே பூரண வெற்றியளிக்கும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும்! ஆனால், தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களிடையே உங்களுக்கு ஆதரவு இல்லையே? எங்களுடைய அரசியல் செயல்பாடுகளுக்கு, தமிழகத்தில் பூரண ஆதரவு உள்ளது. தமிழகத்தின் கோரிக்கையும், தமிழகச் சட்டமன்றத் தீர்மானங்களும், தமிழக முதல்வரின் கோரிக்கையும், எங்கள் கோரிக்கையும் ஒன்றுதான். எங்கள் அமைப்புக்கான ஆதரவு தளத்தைத் தமிழகத்தில் விரிவுபடுத்தி வருகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் தமிழகத்தில் செயற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அறிவுச் சமூகமும் எமக்கு ஆதரவாக உள்ளது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் மேலும் விரிவடையும் என நாம் உறுதியாக நம்புகிறோம்! மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்ஷே கலந்துகொண்டிருக்கிறார். இந்திய அரசு, ஈழத்துக்காகப் போராடும் சக்திகளுக்கு நண்பனாக இருக்குமா? அதற்கான வாய்ப்புகள் இனி அதிகம். ஈழத்தில் தமிழர்களை சிங்கள அரசு ஏன் அழித்தது என்ற உண்மையை, இந்தியாவின் புதிய பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. மகாவம்சத்தால் வளர்த்தெடுக்கபட்ட சிங்கள மனப்பான்மை, அடிப்படையில் இந்திய எதிர்ப்பால் கட்டப்பட்டது. இதற்கு, உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். 1898-ல் சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோவில் இருந்து இலங்கை வந்தபோது, அவரை, சிங்களப் புத்த பிக்குகள் சூழ்ந்துகொண்டு மறித்திருக்கிறார்கள். இதனை சுவாமி விவேகானந்தரே தனது எழுத்துகளில் பதிந்துள்ளார். உலகம் போற்றிய ஒரு மகானை சிங்கள புத்த பிக்குக்கள் எதிர்த்தது, சிங்களத்தின் இந்திய இந்து எதிர்ப்பு உணர்வின் ஓர் அடையாளம். ஈழத் தமிழர்களை இந்தியாவின் வரலாற்று நீட்சியாகவே சிங்களவர்கள் பார்க்கிறார்கள்! தமிழர்களை அழிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கைத் தீவில் இருந்து அகற்றலாம் என, சிங்களம் எண்ணுகிறது. இந்தப் பார்வையில் ஈழத் தமிழர்களின் தோல்வி என்பது இலங்கையில் இந்தியாவின் தோல்வியாகவே அமையும். இதனைப் புரிந்துகொண்டு சிறிலங்கா தொடர்பான கொள்கைகளை மோடி அரசாங்கம் வகுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழீழ நிலப்பரப்பு, இந்து மகா சமுத்திர கேந்திரத்தின் முக்கியம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பும், தமிழர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றன. சிங்களத் தலைவர்கள், நிலைமைகளுக்கு ஏற்ப வளைவதில் வல்லவர்கள். மோடியின் முன்னால் குனிவதுபோல ராஜபக்ச நடித்திருப்பார். ஆனால், அவரே பின்னால் சென்று சீனாவுடன் சேர்ந்து உதைத்துத் தள்ளலாம். இந்திய - ஈழத் தமிழ் மக்கள் உறவில் இடையில் ஏற்பட்ட கசப்புகளை நாம் கடந்து சென்று, புதியதோர் நல்லுறவுப் பாலத்தை பிரதமர் மோடியின் காலத்தில் கட்டி எழுப்ப முடியும் என நம்புகிறோம்! எதன் அடிப்படையில் ஈழத் தமிழர் விவகாரத்தில், முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்து பா.ஜ.க. அரசாங்கம் வேறு அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? காங்கிரஸ் அரசாங்கம், இந்திய நலன்களை தொலைநோக்கில் முன்னிறுத்த தவறி, 'ராஜீவ் காந்தி கொலை' என்ற ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையாண்டது. இதனால் அறிவுபூர்வமான அணுகுமுறையைவிட உணர்ச்சிமயமான அணுகுமுறையே தலைதூக்கி இருந்தது. விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்ற தமது விருப்பம் கைகூட வேண்டும் என்பதற்காக, பெரும் தமிழினப் படுகொலை ஒன்று சிங்களத்தால் நடத்தப்படுவதற்கு, முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அனுசரணையாக இருந்தது என்பதை எம் மக்கள் மறக்கவில்லை. மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், இத்தகைய பழைய சுமைகளைக் கொண்டிருக்கவில்லை. புதிய நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கும் நெருக்கமான உறவுக்கான புற நிலைகள் தற்போது உருவாகி இருப்பதை அது புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன், இந்திய நலன்களும் ஈழத் தமிழர்களின் நலன்களும் வெவ்வேறானவை அல்ல!

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜய்யின் காமெடி மற்றும் அக்ஷன் எனக்கு பிடித்த 2 விஷயங்கள்: சொல்கிறார் ஏ. ஆர். முருகதாஸ்

Posted: 04 Jun 2014 01:33 AM PDT

ar-murugadoss

ar-murugadossஇயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு விஜய்யின் காமெடி மற்றும் அக்ஷன் பிடிக்குமாம். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து எடுத்த துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள இந்த படம் வரும் 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து முருகதாஸ் ரிலீஸ் வேலையில் பிசியாக உள்ளார். ஹாலிடே பட ரிலீஸுக்காக முருகதாஸ் தான் தற்போது விஜய்யை வைத்து எடுத்துவரும் கத்தி படப்பிடிப்புக்கு ஒரு குட்டி பிரேக் விட்டுவிட்டு மும்பை கிளம்பியுள்ளார். பாலிவுட்டில் பெரிய ஹீரோக்களுடன் பணிபுரியும் முருகதாஸ் தனது ஹீரோக்களிடம் தனக்கு பிடித்தவை பற்றி தெரிவித்துள்ளார். பாலிவுட் ஹீரோ ஆமீர் மிகவும் சீரியஸானவர். அவர் வேலை வேலை என்று இருப்பவர் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸின் இந்தி கஜினியில் நடித்தவர் ஆமீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷய் குமாரும் சின்சியர் ஆனவர். அவர் டென்ஷனாகாமல் ஜாலியாக வேலை செய்பவர். அவர் படப்பிடிப்பில் மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார் முருகதாஸ். தென்னிந்திய திரை உலகில் எனக்கு விஜய்யுடன் பணியாற்ற பிடிக்கும். அவரின் காமெடி டைமிங் மற்றும் ஆக்ஷன் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நான்தான் பாலா படத்திற்காக முறையாக சமஸ்கிருதம் கற்று டப்பிங் பேசிய விவேக்!

Posted: 04 Jun 2014 01:27 AM PDT

Naanthan-bala

Naanthan-balaபகுத்தறிவு பேசும் பார்ப்பணராக சாமி படத்தில் நடித்து கலக்கிய விவேக், மீண்டும் அதே போன்றதொரு வேடத்தில் நடித்துள்ளார், நான்தான் பாலா படத்தில். ஆனால் இதில் காமெடியனாக அல்ல... கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருப்பவர் கண்ணன். பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர், தன் முதல் படத்துக்கு தலைப்பாக குருவின் பெயரையே வைத்திருக்கிறார். வெங்கட் க்ரிஷி இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.லாரன்ஸ் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனைத்து விஷயங்களும் உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக, விவேக் முறையாக சமஸ்கிருதம் கற்றாராம். அது மட்டுமல்ல, டப்பிங்கில் சமஸ்கிருதத்தில் பேசி அசத்தினாராம். இப்படம் ஒரு முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக வந்துள்ளது. வரும் 13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நான்தான் பாலா, விவேக் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் படமாக அமையும் என்கிறார் தயாரிப்பாளர் லாரன்ஸ்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லேகர் ஹம் தீவானா தில் இந்திப் படத்துக்காக ஹாலிவுட் படத்தைத் தவிர்த்த ஏ ஆர் ரஹ்மான்!

Posted: 04 Jun 2014 01:19 AM PDT

ar-rahman

ar-rahmanவிரைவில் வெளியாகும் லேகர் ஹம் தீவானா தில் என்ற இந்திப் படத்துக்காக, தனக்கு வந்த ஒரு ஹாலிவுட் வாய்ப்பையே மறுத்துவிட்டாராம் ஏ ஆர் ரஹ்மான். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் லேகர் ஹம் தீவானா தில் (ஹம் கிஸிஸே கம் நஹி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி). இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தை ஆரிப் அலி இயக்குகிறார். அர்மான் ஜெய்ன், தீக்ஷா சேத் நடிக்கிறார்கள். இந்தப் படம் வரும் ஜூலை 4-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன் ஜூன் 12-ல் படத்தின் இசை வெளியாகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தனக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பை மறுத்துவிட்டாராம் ரஹ்மான். ஆனால் ஹாலிவுட்காரர்களோ, 'நீங்க வந்தா மட்டும் போதும்..' என ரஹ்மானுக்காகக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்களாம். ரஹ்மான் தற்போது இந்தி மற்றும் தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! சோனாக்ஷி சின்ஹா பேட்டி

Posted: 04 Jun 2014 01:14 AM PDT

sonakshi-sinha

sonakshi-sinhaரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் அடுத்த ஷெட்யூலில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடிக்கும் படம் கோச்சடையான். இதில் அவருக்கு சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, லாரன் இர்வின் என மூன்று ஜோடிகள். நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் முதல் ஷெட்யூல் முடியப் போகிறது. படத்தில் நடிக்கும் சோனாக்ஷி சின்ஹா, முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு வாரம் கலந்து கொண்டார். ரஜினியுடன் அவர் நடிக்கும் காதல் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட்டது. பின்னர் அவர் மும்பை கிளம்பிவிட்டார். ஆனால் அப்படிக் கிளம்பியவர், தொடர்ந்து லிங்கா பற்றியும் ரஜினியுடன் தான் நடித்த அனுபவம் குறித்தும் புகழ்ந்து பேசி வருகிறார். அவர் கூறுகையில், "ரஜினி சார் ரொம்ப உயர்வான மனிதர். எனக்கு வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். 1940-ல் நடப்பது போல வரும் காட்சிகளில்தான் நான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். மிக சுவாரஸ்யமான காட்சிகள். ரொம்ப அனுபவித்து நடித்தேன். இந்தப் படத்தில் நடிப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. பொதுவாகவே, தென் இந்தியப் படங்கள் மிகவும் கற்பனை வளம் மிக்கவையாக உருவாகின்றன. ரஜினி சார் எனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் மேடை, எனது தென்னிந்திய திரைப் பயணத்தை வெற்றிகரமாக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. அடுத்து சூர்யா, மகேஷ் பாபு போன்ற ஹீரோக்களுடனும் நடிப்பேன் என நம்புகிறேன். ஷங்கர் போன்ற இயக்குநர்கள் படங்களில் இடம்பெற வேண்டும். இப்போதே அவரிடம் அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்," என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™