Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


துணிச்சலுடன் செயல்படுங்கள்: துறை செயலாளர்களுக்கு மோடி உத்தரவு

Posted: 04 Jun 2014 11:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் 72 துறை செயலாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த கூட்டத்தில் 72 துறை செயலாளர்களையும் பிரதமர் மோடி உற்சாகப்படுத்தி பேசினார். அவர் பேச்சு விவரம் வருமாறு:– மத்திய அரசின் முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் உங்களுக்கு (செயலாளர்களுக்கு) முக்கியப் பங்கு அளிக்கப்படும். எனவே எந்த முடிவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக, உடனுக்குடன் எடுக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் திட்டங்கள் வெறும் பேப்பரோடு இருந்து விடக் கூடாது. அவற்றை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.

பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்

Posted: 04 Jun 2014 11:16 PM PDT

16–வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக பொறுப்பு ஏற்ற கமல்நாத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையின் முதல் நாள் அலுவலை முறைப்படி தொடங்கி வைத்தார். பாராளுமன்ற செயலாளர் ஸ்ரீதரன் எழுந்து, 16–வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள புதிய எம்.பி.க்கள் பட்டியலை அவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு அதிகாரப்பூர்வமாக

கேரள சட்டசபை 9–ந் தேதி கூடுகிறது

Posted: 04 Jun 2014 11:00 PM PDT

தமிழக–கேரள எல்லை பகுதியில் உள்ள முல்லை பெரியாறு அணை மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக–கேரள மாநில அரசுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் வழங்கிய தீர்ப்பில் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு உடனடியாக இறங்கியது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை: உ.பி. மாநிலத்தை 3 ஆக பிரிக்க திட்டம்

Posted: 04 Jun 2014 10:50 PM PDT

நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 இடத்தை பா.ஜனதா கூட்டணி பிடித்தது. சமாஜ்வாடி கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. பாரதீய ஜனதாவின் வெற்றிக்கு மோடியின் நண்பரும், பாரதீய ஜனதா கட்சியின் செயலாளருமான அமித்ஷாவின் தேர்தல் வியூகமே காரணம் என்று கூறப்படுகிறது.

சீமாந்திரா வளர்ச்சிக்கு சோனியா கடிதம்: வெங்கையா நாயுடு பதில்

Posted: 04 Jun 2014 10:15 PM PDT

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அப்போது 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதி வளர்ச்சிக்கு பல்வேறு உறுதி மொழிகளை அறிவித்த சோனியா காந்தி விரைவில் அது நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தது. மோடி பிரதமராக பதவி ஏற்றார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார். அதில் சீமாந்திரா வளர்ச்சிக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தார்.

மேகாலயா பெண் சுட்டுக்கொலை: கெரோ தீவிரவாதிகளுடன் போலீஸ் துப்பாக்கி சண்டை

Posted: 04 Jun 2014 09:53 PM PDT

கற்பழிப்பு முயற்சியில் பெண்னை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளை பிடிக்க போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தீவிரவாதிகளுக்கும் போலீசுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தெற்கு கெரோமலை மாவட்டத்தில் கெரோ தேசிய விடுதலைப் படை என்ற பெயரில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இந்தப் பகுதியில் ராஜா ராங்கட் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் தீவிரவாதிகள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். அங்கிருந்த 35 வயது பெண்ணை தனியாக ஒரு அறையில் பூட்டியும், பின்னர் குழந்தைகள் முன்னிலையில் கற்பழிக்க முயன்றனர். ஆனால் அந்தப் பெண் இதற்கு உடன்படாமல் போராடினார்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது

Posted: 04 Jun 2014 09:41 PM PDT

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவ மழை தொடங்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை

கோபிநாத் முண்டே மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சிவசேனா வலியுறுத்தல்

Posted: 04 Jun 2014 05:04 PM PDT

மத்திய ஊரக மேம்பாட்டு துறை மந்திரி கோபிநாத் முண்டே டெல்லியில் ஏற்பட்ட கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடல் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு, சொந்த ஊரான பரேலி கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, கோபிநாத் முண்டேயின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல்

அமெரிக்காவில் ஒபாமாவுடன் மோடி செப்டம்பர் மாதம் சந்திப்பு

Posted: 04 Jun 2014 05:00 PM PDT

இந்தியாவின் 15-வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வந்த வேளையில், இவ்வாண்டு இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்

அரசு அலுவலரை தாக்கியதால் கைதான யஷ்வந்த் சின்கா ஜாமினில் வர மறுப்பு

Posted: 04 Jun 2014 01:42 PM PDT

மின்சார வாரிய அலுவலரை கட்டி வைத்து தாக்கியதாக பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா மற்றும் அக்கட்சியை சேர்ந்த சுமார் 300 தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் சில நாட்களாக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இது தொடர்பாக பல முறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட மின்சார வாரிய

கற்பழிப்பு: 2 மாதங்களாக ஜந்தர் மந்தரில் போராடிய 4 பெண்கள் வெளியேற்றம்

Posted: 04 Jun 2014 01:24 PM PDT

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 4 இளம்பெண்களை கடந்த மார்ச் மாதம் ஒரு சமூக விரோத கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. அந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு பாதிக்கப்பட்ட 4 பெண்களின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 25 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதியில் இருந்து நாட்டின்

ஆந்திராவை பிரித்த காங்கிரசை மக்கள் புதைத்து விட்டார்கள்: சந்திரபாபு நாயுடு

Posted: 04 Jun 2014 12:55 PM PDT

சீமாந்திரா பகுதி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் சட்டசபை தலைவராக சந்திரபாபு நாயுடுவை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நேற்று முறைப்படி தேர்வு செய்தனர். பின்னர், திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

பழங்காலத்து சட்டங்களை தூக்கி எறியுங்கள்: அரசு செயலாளர்களுக்கு மோடி அறிவுரை

Posted: 04 Jun 2014 12:19 PM PDT

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இடையூறாக இருக்கும் பழங்காலத்து சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு மக்கள் பிரச்சனைகளில் விரைவாக முடிவெடுக்கும்படி, அனைத்து துறைகளின் அரசு செயலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்ததாக டெல்லி விமான நிலையம் தேர்வு

Posted: 04 Jun 2014 12:00 PM PDT

சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி

முன்னுரிமை திட்டங்கள்: அரசுத்துறை செயலாளர்களுடன் மோடி சந்திப்பு

Posted: 04 Jun 2014 08:39 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று அனைத்து துறை செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது ஆட்சியின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் அம்சங்களை முன்வைக்கும்படி உத்தரவிட்டார். துறை

வயலில் சிறுநீர் கழித்த சிறுவனின் உறுப்பை அறுத்த முதலாளி

Posted: 04 Jun 2014 08:30 AM PDT

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டம் கோராலி கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி சேஷ்ராம். இவரது மகன் ரித்தேஷ் (வயது 5). இந்தச் சிறுவன் தன் தந்தை வேலை செய்யும் செங்கல் சூளை அருகே உள்ள வயல்வெளியில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தான்.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மகள்களை கட்டாயப்படுத்திய பெண் கைது

Posted: 04 Jun 2014 08:22 AM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் மகள்களை உறவு கொள்ள கட்டாயப்படுத்திய பெண் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கரில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜாஸ்பூர் மாவட்டம் கன்சாபெல் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் லீலாவதி(36).

முண்டே கவனித்த ஊரக வளர்ச்சித்துறை கட்காரியிடம் ஒப்படைப்பு

Posted: 04 Jun 2014 07:40 AM PDT

மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கோபிநாத் முண்டே டெல்லியில் நேற்று கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முண்டே மறைவையடுத்து அவர் கவனித்து வந்த ஊரக வளர்ச்சித்துறை,

பீகாரில் மேலும் ஒரு ஐக்கிய ஜனதா தளம் செய்தி தொடர்பாளர் விலகல்

Posted: 04 Jun 2014 05:12 AM PDT

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து மேலும் ஒரு செய்தி தொடர்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் சஞ்சய் சிங். அவர் இன்று கட்சியின் பீகார் தலைவர் வஷிஸ்ட் நரைன் சிங்கிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் நீரஜ் குமார் என்ற எம்.எல்.ஏ.வும் செய்தித் தொடர்பாளர்

உ.பி.யில் மட்டும்தான் பாலியல் குற்றங்கள் நடக்கிறதா? சமாஜ்வாடி தலைவர் பாய்ச்சல்

Posted: 04 Jun 2014 04:57 AM PDT

உத்தர பிரதேசத்தில் இரண்டு மைனர் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், உ.பி. அரசு மீது பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதை சமாளிக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். உ.பி. முதல் மந்திரி அகிலேஷ், பத்திரிகைகள்தான் இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்குகிறது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™