Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உலக கோப்பை ஹாக்கியில் முதல் வெற்றியை கண்டது இந்தியா

Posted: 09 Jun 2014 05:27 AM PDT

உலக கோப்பை ஹாக்கியில் முதல் வெற்றியை கண்டது இந்தியா

உலக கோப்பை ஹாக்கியில் முதல் வெற்றியை கண்டது இந்தியா உலக கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் ஹாக் நகரில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியை டிரா செய்து ஒரு புள்ளி பெற்றது. இதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் மலேசியாவை எதிர்க்கொண்டது. விருவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி, 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

17 வயது சிறுமியை நான் திருமணம் செய்யவில்லை.. சோயப் அக்தர் மறுப்பு

Posted: 09 Jun 2014 05:22 AM PDT

17 வயது சிறுமியை நான் திருமணம் செய்யவில்லை.. சோயப் அக்தர் மறுப்பு

17 வயது சிறுமியை நான் திருமணம் செய்யவில்லை.. சோயப் அக்தர் மறுப்பு 17 வயது சிறுமியை தான் திருமணம் செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளை பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் மறுத்துள்ளார். இது அபத்தமான, வதந்தி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு திருமணமே திட்டமிடப்படவில்லை என்றும் இதில் உண்மை இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். தயவு செய்து மீடியாக்கள் இதுபோல வதந்திகளைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரெஞ்சு ஓபன் மகளிர் பிரிவில் இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் மரியா ஷரபோவா

Posted: 09 Jun 2014 05:21 AM PDT

பிரெஞ்சு ஓபன் மகளிர் பிரிவில் இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் மரியா ஷரபோவா

[caption id="attachment_66576" align="alignleft" width="300"]பிரெஞ்சு ஓபன் மகளிர் பிரிவில் இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் மரியா ஷரபோவா பிரெஞ்சு ஓபன் மகளிர் பிரிவில் இரண்டாவது முறையாக பட்டம் வென்றார் மரியா ஷரபோவா[/caption] பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஷரபோவா 6-4, 6-7(5-7), 6-4 என்ற கணக்கில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப்பைத் தோற்கடித்தார். பிரெஞ்சு ஓபனில் இது மரியா ஷரபோவாவுக்கு 2-வது பட்டமாகும். இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை ஷரபோவா வென்றுள்ளார். இதன்மூலம் ஸ்விட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸின் சாதனையை சமன் செய்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரபெல் நடால் 9வது முறையாக பிரெஞ்சு ஓபனை வென்றார்

Posted: 09 Jun 2014 05:19 AM PDT

ரபெல் நடால் 9வது முறையாக பிரெஞ்சு ஓபனை வென்றார்

ரபெல் நடால் 9வது முறையாக பிரெஞ்சு ஓபனை வென்றார் ரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை 9வது முறையாக ரபெல் நடால் கைப்பற்றி களிமண் தரையில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான, பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரமாக பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. நடப்பு சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான ஸ்பெயினின் ரபெல் நடாலும், 2ம்நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகேவிச்சும் மோதினர். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், அந்த செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன்பிறகு நடால் சுதாரித்துக் கொண்டு ஆடத்தொடங்கினார். மொத்தம் 3 மணி நேரம் 31 நிமிடங்கள் நீடித்த கடுமையான ஆட்டத்தின் முடிவில் நடால், 3க்கு 6, 7க்கு ஐந்து, 6க்கு 2, 6க்கு 4 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச்சை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபனில் 10வது முறையாக விளையாடும் நடால், அதில் வென்ற 9வது பட்டம் இதுவாகும். கடந்த ஐந்து போட்டித்தொடர்களில் தொடர்ச்சியாக இந்த பட்டத்தை கைப்பற்றிவருகிறார். களிமண் தரையில் நடக்கும் போட்டிகளில் நடாலுக்கு இணை அவரே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சாம்பியனுக்கு ரூ.13 கோடியும், 2வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ஆறரை கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சுவெஹிசை மற்றும் சூய்பெங் ஆகிய சீன வீராங்கணைகள், இத்தாலியின் சாரா எர்ரானி, ரோபர்ட்டா ஜோடியை, 6க்கு4 மற்றும் 6க்கு 1 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி பட்டம் வென்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மணப்பெண் மணமேடையில் மயங்கி விழுந்து மரணம்!

Posted: 09 Jun 2014 04:42 AM PDT

மணப்பெண் மணமேடையில் மயங்கி விழுந்து மரணம்!

மணப்பெண் மணமேடையில் மயங்கி விழுந்து மரணம்! தேனியில் திருமண மண்டபத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அல்லிநகரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஜோதிராணி (19) என்ற பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த அழகன் மகன் மணிகண்டனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருக்கும் வேளையில் மணமேடைக்கு வந்த ஜோதிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த செய்தியை அறிந்து திருமணத்துக்காக கூடியிருந்த உறவினர்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

போலியாக என்கவுண்டர் செய்த பொலிசார்களுக்கு ஆயுள் தண்டனை

Posted: 09 Jun 2014 04:35 AM PDT

போலியாக என்கவுண்டர் செய்த பொலிசார்களுக்கு ஆயுள் தண்டனை

போலியாக என்கவுண்டர் செய்த பொலிசார்களுக்கு ஆயுள் தண்டனை உத்தரகாண்டில் 2009ல் போலி என்கவுண்டர் நடத்தி எம்பிஏ மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 17 பொலிசாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போதைய ஜனாதிபதி பிரதிபா பட்டீல் உத்தரகாண்டில் மாநிலத்துக்கு வருகை தந்த போது, மோகினி ரோட்டில் ரன்பீர் சிங்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு குற்ற செயலில் ஈடுபட முயன்றதாக கூறி எம்பிஏ மாணவர் ரன்பீர்சிங் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ரன்பீர்சிங் உடலில் 12 குண்டுகள் துளைத்திருந்ததும், 27 இடங்களில் ஆழமான காயங்கள் இருந்ததும், அவர் சித்ரவதை செய்யப்பட்டு போலி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி 18 போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை தொடர்பான வாதம் சனிக்கிழமை முடிந்தது. தண்டனையை நிர்ணயிக்க நீதிபதி விசாரணை நடத்தியபோது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொலிசார் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என சிபிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் பிரஜேஷ் குமார் சுக்லா, சிபிஐ தரப்பில் இந்திய தண்டனைச் சட்டம் 320வது பிரிவின் கீழ் கொலைக்குற்றம் இழைத்துள்ள 7 பொலிசாருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்றார். போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 18 பொலிசாரில் 7 பேர் (6 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள்) மாணவரை கொன்று குற்றம் புரிந்தவர்கள் என்று நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 17 பொலிசாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனித வளத்தை நாம் பயன்படுத்தினால் தான் சீனாவை முந்திச்செல்ல முடியும் -: மோடி விளக்கம்

Posted: 09 Jun 2014 04:32 AM PDT

மனித வளத்தை நாம் பயன்படுத்தினால் தான் சீனாவை முந்திச்செல்ல முடியும் -: மோடி விளக்கம்

மனித வளத்தை நாம் பயன்படுத்தினால் தான் சீனாவை முந்திச்செல்ல முடியும் -: மோடி விளக்கம் சீனாவுடன் இந்திய போட்டியடுவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறையாற்றினார். சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டம்' என்ற சீர்திருத்தங்கள் என்ற டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில் இவர் பேசுகையில், நமது நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான். இந்த மனித வளத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவர்களது ஆற்றலை மேம்படுத்துவது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு செய்தால் தான், நாம் சீனாவுடன் போட்டியிட முடியும் என கூறியுள்ளார். மேலும் நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதை இந்தியாவின் தேசிய கொடியுடைய நிறங்களோடு ஒப்பிட்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெள்ளத்தில் சிக்கி 24 மாணவர்கள் உயிரிழப்பு.

Posted: 09 Jun 2014 04:30 AM PDT

வெள்ளத்தில் சிக்கி 24 மாணவர்கள் உயிரிழப்பு.

வெள்ளத்தில் சிக்கி  24 மாணவர்கள் உயிரிழப்பு. ஐதராபாத்தில் இருந்து இமாச்சல் பிரதேசம் சென்ற பொறியியல் மாணவர்கள் 24 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் இதுவரை 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மந்தியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள பீஸ் நதியின் கரையில் ஒருசேர நின்று ரசித்து கொண்டிருந்தவேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தில் உள்ள பொறியியல் கல்லூரியை சேர்ந்தவர்கள் இமாச்சல் பிரதேசததிற்கு 3 நாள் சுற்றுலா சென்றனர். இங்குள்ள நதியில் இவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென நீர்வரத்து அதிகரித்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த குழுவில் 6 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்

This posting includes an audio/video/photo media file: Download Now

பௌர்ணமி கொண்டாட்டத்திற்காக தயாராகும் தாய்லாந்து

Posted: 09 Jun 2014 04:09 AM PDT

பௌர்ணமி கொண்டாட்டத்திற்காக தயாராகும் தாய்லாந்து

பௌர்ணமி கொண்டாட்டத்திற்காக தயாராகும் தாய்லாந்து தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி கொண்டாட்டங்களை முன்னிட்டு அங்கு நிலவும் ஊரடங்கு உத்தரவைத் தாய்லாந்து ராணுவம் தளர்த்தியுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா, கடந்த 2006ம் ஆண்டு பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவைப் பின்பற்றுவதால், அவரையும் பதவி இறக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்தில் தொடங்கிய போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பதவி விலகிய பிரதமர் காபந்து அமைச்சராகத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புக்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தலையும் நடத்தியுள்ளார். ஆனால் பல பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறாததால் அந்தத் தேர்தலை செல்லாததாக அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்து மறு தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இங்க்லக் பதவி விலகி பொதுக்குழு அமைந்தாலே தேர்தலை எதிர்கொள்வோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து சென்ற மாதம் 22ம் திகதி அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. அதுமுதல் பொது ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டதுடன், ஊடக செய்திகள் தணிக்கைக்கு உள்ளாகியுள்ளன. மேலும், கேள்வி எழுப்பிய அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடைபெற்று வந்த அரசியல் கொந்தளிப்புகளால் அங்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த மாத இறுதி முதலே நள்ளிரவு முதல் விடியற்காலை 4 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு சற்று தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும், பட்டாயா, கோ சமுய், புக்கட் மற்றும் கிராபி போன்ற கடற்கரை சுற்றுலாத்தளங்களில் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பௌர்ணமிக் கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற தாய்லாந்து வளைகுடாவில் உள்ள கோ சமுய் அருகில் உள்ள பங்கன் சுற்றுலாத்தளத்தில் வரும் 12ம் திகதி இரவு இந்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று முதல் 13ம் திகதி வரையில் ஊரடங்கு உத்தரவினைத் விலக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பண்பாடு குறையாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 73 பேர் பலி

Posted: 09 Jun 2014 04:08 AM PDT

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 73 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 73 பேர் பலி ஆப்கானிஸ்தானில் பக்ஹ்லன் மாகாணத்தில் மழை வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 73 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குகின்றனர். சுமார் 200 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். வெள்ளம் காரணமாக சுமார் 2,000 வீடுகளும் சேதமடைந்துள்ளன. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாரிய அனர்த்தம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கராச்சியில் விமான நிலையத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 21 பேர் பலி

Posted: 09 Jun 2014 04:02 AM PDT

கராச்சியில் விமான நிலையத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 21 பேர் பலி

கராச்சியில் விமான நிலையத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 21 பேர் பலி பாகிஸ்தானின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமான கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதங்கள் மற்றும் கிரேனட்டுகளுடன் விமான நிலையத்தின் சரக்கு பகுதிக்குள் புகுந்த தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்றிரவு 11.30 மணியளவில் மோதல் ஆரம்பமானது. இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் 5 மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றன. இதில் இரண்டு விமானங்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பலியானவர்களில் விமான நிலையத்தின் பணியாளர்கள் இருவர் அடங்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக அமைதிக்கான பிரார்த்தனையில் இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள்!

Posted: 09 Jun 2014 04:00 AM PDT

உலக அமைதிக்கான பிரார்த்தனையில் இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள்!

உலக அமைதிக்கான பிரார்த்தனையில் இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள்! உலக அமைதிக்காக வாடிகனில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தலைவர்களும் கூட்டாக கலந்து கொண்டனர். பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதிகளையும், ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையேயும் பிரச்சினைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இது குறித்து 3 ஆண்டுகளுக்கு முன்னர் தடைபட்ட பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு அமெரிக்காவின் முயற்சியினால் மீண்டும் தொடங்கியது. அதுவும் பாதியிலேயே நின்றுபோனது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த நாடுகளுக்கு பயணம் செய்த போப் பிரான்சிஸ் இஸ்ரேலின் அதிபர் ஷிமோன் பெரேசையும், பாலஸ்தீனிய அதிபர் மஹ்மூத் அபாஸையும் வாடிகனுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினை ஏற்று நேற்று இருவரும் வாடிகனுக்கு வந்தனர். அவர்கள் இருவரையும் வாடிகனின் விசாலமான போப்பாண்டவர் மாளிகையைக் கைவிட்டு தான் குடியிருக்கும் சாதாரணமான விருந்தினர் மாளிகைக்கு போப் வரவேற்றார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அதுவும் அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தை பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முறிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் முதன்முறையாக இந்த இரு அதிபர்களும் நேற்று நேரில் சந்தித்துக்கொண்டனர். பின்னர் மூவரும் வாடிகனின் எந்தவித மத அடையாளங்களும் இல்லாத நடுநிலைத்தளம் எனப்படும் இடத்துக்கு வந்தனர். அங்கு மரங்கள் அடர்ந்திருந்திருந்த பகுதியில் இருந்த அறை ஒன்றில் போப்பிற்கு இருபுறமும் அவர்கள் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன் மூலம் இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை முடிவுக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நடிகர் டிரேசி மோர்கன் பஸ் விபத்தில் சிக்கினார்

Posted: 09 Jun 2014 03:33 AM PDT

அமெரிக்க நடிகர் டிரேசி மோர்கன் பஸ் விபத்தில் சிக்கினார்

அமெரிக்க நடிகர் டிரேசி மோர்கன் பஸ் விபத்தில் சிக்கினார் அமெரிக்க நகைச்சுவை நடிகர் டிரேசி மோர்கன் (வயது 45). 'சாட்டர்டே நைட் லிவ்', '30 ராக்' ஆகிய டி.வி. தொடர்கள் மூலம் பிரபலம் ஆனவர். இவர் நேற்று முன்தினம் ஒரு சொகுசு பஸ்சில் நியூ ஜெர்சியில் பயணம் செய்தார். இவருடன் மற்றொரு நகைச்சுவை நடிகரான ஜேம்ஸ் மெக்நாயரும் (63) பயணம் செய்தார். இந்த பஸ் எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பல்வேறு வாகனங்களுடன் மோதி, கடைசியாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரேசி மோர்கன் படுகாயம் அடைந்தார். இவருடன் வேறு சிலரும் காயம் அடைந்தனர். ஜேம்ஸ் மெக்நாயர் (ஜிம்மி மேக்), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயம் அடைந்த நடிகர் டிரேசி மோர்கன் உள்ளிட்டவர்களை மீட்டு நியூ புருன்ஸ்விக்கில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹெலிகாப்டர் மூலம் கனடா சிறைக்கைதிகள் தப்பிச் சென்றனர்

Posted: 09 Jun 2014 03:31 AM PDT

ஹெலிகாப்டர் மூலம் கனடா சிறைக்கைதிகள் தப்பிச் சென்றனர்

ஹெலிகாப்டர் மூலம் கனடா சிறைக்கைதிகள் தப்பிச் சென்றனர் கனடா நாட்டின் கியுபெக் நகரத்தில் உள்ள காவல் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் நேற்றஹெலிகாப்டர் ஒன்றில் தப்பிச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை ஒன்றிற்காக அவர்கள் இந்த காவல் மையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். ஆர்சன்வில்லே தடுப்பு மையத்திலிருந்து மேற்கு நோக்கி அந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றதாக மாகாண காவல்துறையினர் கூறியுள்ளனர். கியுபெக் நகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள விமான நிலையங்கள், ராணுவத்தளங்கள் போன்றவற்றிலும் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி தரைவழித் தேடலிலும் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தகவல் தொடர்பாளர் ஆட்ரே ஆன் பிலோடியு குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் வெளிவந்த தகவல்களின் மூலம் யுவெஸ் டெனிஸ், டெனிஸ் லேபெப்ரே, செர்கே போமெர்லியு என்று அவர்களின் பெயர்களை அறிவித்துள்ள காவல்துறையினர் அவர்களைக் காண நேருவோர் காவல்துறையினரை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள இரண்டாவது சம்பவமாகும். கடந்த வருடம் மார்ச் மாதம் அங்குள்ள செயின்ட் ஜெரோம் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் ஒரு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றனர். பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டரின் விமானியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இவர்கள் தப்பிச் சென்ற சில மணி நேரங்களிலேயே கடத்தலில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், தப்பிச் சென்ற கைதிகளையும் காவல்துறையினர் பிடித்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிராம்ப்டன் நகரில் பயங்கர தீ விபத்து.

Posted: 09 Jun 2014 03:29 AM PDT

பிராம்ப்டன் நகரில் பயங்கர தீ விபத்து.

பிராம்ப்டன் நகரில் பயங்கர தீ விபத்து. கனடாவில் உள்ள Brampton நகரில் நடந்த பயங்கர தீவிபத்து ஒன்றில் 10 வயது சிறுவன் தீயில் கருகி பலியானான். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக சுமார் 100 பேர் வரை தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையில் Brampton நகரில் உள்ள townhouse complex on Ardglen Drive என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக Peel Regional Police மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10 வயது சிறுவன் தீயில் கருகி பரிதாபமாக பலியானான். அந்த சிறுவனின் பெயர் Nicolas Gabriel என தெரிய வந்துள்ளது. Peel Regional Police Const. Lily Fitzpatrick என்பவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தீ விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக அந்த குடியிருப்பில் உள்ள சுமார் 300 பேர் பத்திரமாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் சுமார் 100 பேர் தங்களுடைய வீடு முற்றிலும் தீயில் சேதமடைந்துவிட்டதாக கண்ணீருடன் கூறியுள்ளனர். வீடு இழந்தவர்களுக்கு தற்காலிகமாக தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

This posting includes an audio/video/photo media file: Download Now

மூன்று போலீஸார்களை சுட்டுக் கொன்ற மர்ம மனிதன்

Posted: 09 Jun 2014 03:27 AM PDT

மூன்று போலீஸார்களை சுட்டுக் கொன்ற மர்ம மனிதன்

மூன்று போலீஸார்களை சுட்டுக் கொன்ற மர்ம மனிதன் கனடாவில் 3 போலீஸ் அதிகாரிகளை ஒரு மர்ம மனிதன் சுட்டுக் கொலை செய்துள்ளான். கனடாவின் கிழக்கு கடற்கரை மாகாணமான நியூ புரூன்ஸ்விக்கில் உள்ளது மான்க்டன் நகரம். இங்கு ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதன் திடீரென போலீஸ் அதிகாரிகள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மர்மமனிதரை போலீசார் தேடி வருகிறார்கள். ராணுவ உடை அணிந்து வந்த மர்மமனிதனின் போட்டோவை வெளியிட்டு அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

லக்ஸ்டோ அமைப்பு நடத்திய முப்பெரும் விழா

Posted: 09 Jun 2014 03:02 AM PDT

லக்ஸ்டோ அமைப்பு நடத்திய முப்பெரும் விழா

லக்ஸ்டோ அமைப்பு நடத்திய முப்பெரும் விழா லக்ஸ்டோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழா நேற்று சனிக்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை சாஹிராக் கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் ஊடகப் பங்களிப்புக்கான கௌரவிப்பு வைபவம், "மனிதம்" குறுந்திரைப்பட இறுவெட்டு வெளியீடு, "இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்" நூல் அறிமுக நிகழ்வு என்பன இடம்பெற்றன. லக்ஸ்டோ தலைவர் கவிஞர் மருதூர் அன்சாரின் நெறிப்படுத்தலில் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.அன்சில், முதன்மை அதிதியாக கலந்து கொண்டார். அல்ஜஸீரா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி எழுதிய "இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்கள்" நூலின் முதல் பிரதியை உதவிக் கல்விப் பணிப்பாளர் இசட்.ஏ.எம்.நதீர் மௌலவி பெற்றுக் கொண்டார். அத்துடன் ஆசியா பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரியும் மெட்ரோ மிரர் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.வலீத், றினோன் கழக தலைவர் எம்.எம்.நிஹார், வர்த்தகப் பிரமுகர் எம்.எம்.ஜௌபர் உட்பட மற்றும் பலரும் சிறப்புப் பிரதிகளை பெற்றுக் கொண்டனர். அதேபோன்று கவிஞர் மருதூர் அன்சாரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள "மனிதம்" குறுந்திரைப்பட இறுவெட்டின் முதல் பிரதியை டாக்டர் எஸ்.நஜிமுதீன் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்ட உணவு, மருந்து சிரேஷ்ட பரிசோதகர் எம்.எம்.தஸ்தகீர், தொழிலதிபர் எஸ்.எம்.ஜிப்ரி உட்பட பல பிரமுகர்கள் அதன் சிறப்பு பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். இதன்போது மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், ஊடகவியலாளர் அஸ்லம் எஸ்.மௌலானா, மருத்துவ கண்டுபிடிப்பாளர் சக்கி லத்தீப் உட்பட பத்துப் பிரமுகர்கள் கல்வி, கலாசார, கலை, இலக்கிய மற்றும் ஊடகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக விருது வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகள், ஒலிபரப்பாளர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மட்டக்களப்பு வீட்டில் வாலிபனின் சடலம் மீட்பு

Posted: 09 Jun 2014 03:01 AM PDT

மட்டக்களப்பு வீட்டில் வாலிபனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வீட்டில் வாலிபனின் சடலம் மீட்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார், நேற்று மாலை சடலத்தினை மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட சடலம் இராசலிங்கம் சங்கரப்பிள்ளை (30வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய போரதீவு, மாணிக்கவாசகர் வீதியில் உள்ள குறித்த இளைஞனின் வீட்டில் இருந்தே சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அபிஷா தனியார் வைத்தியசாலையில் தாதியர் பயிற்சி நெறி!

Posted: 09 Jun 2014 02:59 AM PDT

அபிஷா தனியார் வைத்தியசாலையில் தாதியர் பயிற்சி நெறி!

அபிஷா தனியார் வைத்தியசாலையில் தாதியர் பயிற்சி நெறி! அபிஷா தனியார் வைத்தியசாலையில் கடந்த 04.06.2014 அன்று தாதியர் பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வானது அபிஷா தனியார் வைத்தியசாலையில் மூன்று மாதகால தாதியர் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கானதாகும். இவர்கள் IVA தாதியர் கல்லூரியில் கற்கை நெறிகளை முடித்து பின் பயிற்சியை அபிஷா தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தவர்களாவர். இவர்களுக்கான சான்றிதழ்களை வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வழங்கினார். மேலும் அவர் உரையாற்றுகையில், தாதியர் துறையை தேர்ந்தெடுத்து அதனை பயில்வதற்கு மனதில் தனி உறுதி வேண்டும் எனக் கூறி இவர்கள் இத் துறையை தேர்ந்தெடுத்தமைக்காகவும் தங்களது பயிற்சி காலத்தில் திறம்பட செயல்பட்டமைக்காகவும் இவர்களை பாராட்டினார். வன்னி பிரதேசத்தை பொறுத்த வரையில் தனியார் வைத்தியசாலைகளில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கான வெற்றிடம் அதிகமாக காணப்படுகின்றது. இச் சமயத்தில் இவ்வாறான ஒரு பயிற்சி நெறியை வழங்கியமைக்காக தான் பெரும் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். இவர்கள் இதனை முடித்து வெளியில் சென்று தாதியர் சேவையினை திறம்பட நிறைவேற்ற வேண்டும் என்று வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மின்சாரத்தை திருடிய 9 பேர் கைது

Posted: 09 Jun 2014 02:58 AM PDT

மின்சாரத்தை திருடிய 9 பேர் கைது

மின்சாரத்தை திருடிய 9 பேர் கைது அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக் குடியிருப்பு பனங்காடு ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோதமாக வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற 9 பேரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமைக் காரியாலய புலனாய்வு பிரிவினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் சேர்ந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 9பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வீதி மின் கம்பிகளில் கொளுவி வீடுகளுக்கு மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடம் இருந்து மின்குமிழ்கள் வயர் ஹோல்டர்கள் பல கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™