மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மந்திரி பதவி இல்லை: தெலுங்கு தேசம் எம்எல்ஏ-க்கு மாரடைப்பு
- கராச்சியில் தாக்குதலின் போது விமானத்தை கடத்த தீவிரவாதிகள் முயற்சி
- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை: பாஜக
- இமாச்சல் ஆற்று வெள்ளத்தில் உயிர் தப்பியவர்களின் கண்ணீர் பேட்டி
- பீகாரில் இருந்து டெல்லி மேல்சபை எம்பி பதவிக்கு சரத்யாதவ் உள்பட 3 பேர் போட்டி
- கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம்
- மோடி அரசிடம் உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை: காங்கிரஸ் கருத்து
- மகாராஷ்டிராவில் 44 சுங்கவரி வசூல் மையங்களை மூட முடிவு
- கேம்பகோலா அடுக்குமாடி குடியிருப்பு: முறைகேடான வீடுகளின் சாவியை ஒப்படைக்க உத்தரவு
- பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும்: வானிலை மையம்
- மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு முடிவு
- டெல்லி மேல்–சபை பா.ஜனதா தலைவராக அருண் ஜெட்லி நியமனம்
- நாக்பூர் புலிகளின் தேசம் என்று அறிவிக்கப்படும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி
- வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முதல் அரசு முறை பயணமாக வங்காளதேசம் செல்கிறார்
- குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் படேல் பிரதமர் மோடியை சந்தித்தார்
- வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பிரச்சினைகளை இந்தியா கவனிக்கும்: சுஷ்மா சுவராஜ்
- உங்கள் தலைமையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: மோடியிடம் சீன அமைச்சர் பேச்சு
- அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும்: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்
- முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்தியஸ்தராக மத்திய அரசு செயல்பட கேரளா தீர்மானம்
- சாரதா நிதி நிறுவனத்தில் 35 சதவீதம் கமிஷன் பெற்ற ஏஜெண்டுகள்
| மந்திரி பதவி இல்லை: தெலுங்கு தேசம் எம்எல்ஏ-க்கு மாரடைப்பு Posted: 09 Jun 2014 11:14 PM PDT புதிய ஆந்திராவின் முதல்–மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். மந்திரி பதவி கிடைக்காதவர்கள் சந்திரபாபு நாயுடு மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தெலுங்கு தேச கட்சியின் மாநில துணைத் தலைவர் பண்டாரு சத்ய நாராயண மூர்த்தி மந்திரி பதவி கிடைக்காததால் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார். இதே போல் தெலுகுண்டா தொகுதி எம்.எல்.ஏ. வி.கே.பார்த்த சாரதி தனது மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். |
| கராச்சியில் தாக்குதலின் போது விமானத்தை கடத்த தீவிரவாதிகள் முயற்சி Posted: 09 Jun 2014 11:13 PM PDT பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள், கமாண்டோ படை வீரர்கள், போலீசார் இணைந்து தீவிரவாதிகளை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். |
| பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை: பாஜக Posted: 09 Jun 2014 10:25 PM PDT பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்குவது இல்லை என்று பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எனவே எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு வழங்கப்படாது என்றும் பிரதான எதிர்க்கட்சி இல்லாமலேயே செயல்பட பா.ஜனதா முடிவு செய்துள்ளது. |
| இமாச்சல் ஆற்று வெள்ளத்தில் உயிர் தப்பியவர்களின் கண்ணீர் பேட்டி Posted: 09 Jun 2014 10:18 PM PDT ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விக்யான் ஜோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவ–மாணவிகள் 48 பேர் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள பியாஸ் ஆற்றில் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போ லார்ஜி நீர் மின்நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக அங்குள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பியாஸ் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் நின்று கொண்டு இருந்த 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கரையில் நின்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடிவில்லை. அவர்கள் அனைவரும் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. |
| பீகாரில் இருந்து டெல்லி மேல்சபை எம்பி பதவிக்கு சரத்யாதவ் உள்பட 3 பேர் போட்டி Posted: 09 Jun 2014 10:05 PM PDT பீகாரில் இருந்து டெல்லி மேல்–சபையில் இடம் பெற்றிருக்கும் எம்.பிக்களில் 3 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. இந்த மேல்–சபை எம்.பிக்கள் 3 பேரையும் பீகாரில் இருந்து தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது. இந்த பதவிக்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாரும் போட்டியிடப் போவதில்லை என்று நிதிஷ் குமார் முன்பு அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சித்தலைவர் சரத்யாதவுடன் நிதிஷ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பிறகு டெல்லி மேல்–சபை |
| கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் Posted: 09 Jun 2014 09:21 PM PDT கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை கடந்த 6–ந்தேதி தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தலைநகரான திருவனந்தபுரத்தில் பெய்த மழை காரணமாக தம்பானூர், கரமனை பகுதிகளில் சாலைகளில் |
| மோடி அரசிடம் உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை: காங்கிரஸ் கருத்து Posted: 09 Jun 2014 08:41 PM PDT பாராளுமன்றத்தில் நேற்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உரையாற்றினார். அவரது உரை குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி, பா.ஜனதா தலைமையிலான அரசு நிர்வாகம், வேலை வாய்ப்புகளை |
| மகாராஷ்டிராவில் 44 சுங்கவரி வசூல் மையங்களை மூட முடிவு Posted: 09 Jun 2014 05:23 PM PDT மகாராஷ்டிராவில் சாலைப்பணிகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் 44 சுங்க வரி வசூல் மையங்களை மூட உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சரான அஜித் பவார் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது அம்மாநில வாகன ஓட்டிகளுக்கு பலத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| கேம்பகோலா அடுக்குமாடி குடியிருப்பு: முறைகேடான வீடுகளின் சாவியை ஒப்படைக்க உத்தரவு Posted: 09 Jun 2014 05:01 PM PDT மும்பையில் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2005ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு கேட்டு மாநகராட்சியை அணுகினர். அப்போது ஐந்து மாடிகள் வரைக்குமே கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்த அந்த கட்டிட நிர்வாகம், 7 மாடிகள் வரை கட்டியுள்ளது என்று அனுமதி மறுத்தனர். |
| பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும்: வானிலை மையம் Posted: 09 Jun 2014 03:20 PM PDT நாட்டில் தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு குறிப்பிட்டபடி சில நாட்களுக்கு முன் கேரளாவில் பருவ மழை தொடங்கியது. எனினும் வழக்கத்தை விட இந்த வருடம் மழையளவு குறைவாகவே |
| மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு முடிவு Posted: 09 Jun 2014 02:18 PM PDT மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு கூடுதலாக 10000 துணை ராணுவ படைகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 2000 பொறியாளர்களை பயன்படுத்தி இடது சாரி தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. |
| டெல்லி மேல்–சபை பா.ஜனதா தலைவராக அருண் ஜெட்லி நியமனம் Posted: 09 Jun 2014 01:35 PM PDT பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு டெல்லி மேல்–சபையின் முதல் கூட்டம் அதன் தலைவர் அமீது அன்சாரி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, நிதி மந்திரி அருண் ஜெட்லியை மேல்–சபையின் ஆளும் கட்சி (பா.ஜனதா) தலைவராக நியமித்து அமீது அன்சாரி அறிவித்தார். |
| நாக்பூர் புலிகளின் தேசம் என்று அறிவிக்கப்படும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி Posted: 09 Jun 2014 01:20 PM PDT மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கப்பல்துறை மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நாக்பூர் பகுதியை சேர்ந்த கர்மகாரி, மேகர், நஜீர் உள்ளிட்ட |
| வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முதல் அரசு முறை பயணமாக வங்காளதேசம் செல்கிறார் Posted: 09 Jun 2014 01:16 PM PDT நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவியேற்ற சுஷ்மா சுவராஜ் முதன் முறையாக வங்காளசேதத்திற்கு வரும் 25ந் தேதி அரசு முறைப் பயணமாக செல்கிறார். அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்து அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட பலரை சந்திக்க உள்ளார். |
| குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் படேல் பிரதமர் மோடியை சந்தித்தார் Posted: 09 Jun 2014 12:57 PM PDT குஜராத் முதல் மந்திரி ஆனந்தி பென் படேல் இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து அம்மாநிலத்திற்கு தேவையான உதவிகள் குறித்து விவாதித்தார். சர்தார் சரோவர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நீண்ட காலமாக |
| வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பிரச்சினைகளை இந்தியா கவனிக்கும்: சுஷ்மா சுவராஜ் Posted: 09 Jun 2014 11:27 AM PDT வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகளில் இந்திய அரசு தீவிரமாக கவனிக்கும் என வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இப்பிரச்னைகளை தீர்க்க புதிய வழிமுறைகளை கையாளப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து ஏழு மில்லியன் மக்கள் |
| உங்கள் தலைமையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: மோடியிடம் சீன அமைச்சர் பேச்சு Posted: 09 Jun 2014 10:31 AM PDT பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று சந்தித்தார். அப்போது "உங்கள் தலைமையின் கீழ், இந்தியா மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வளர்ச்சி அடையும்" என்று சீன அதிபர் ஜின்பிங் மோடியிடம் கூறச்சொன்னதாக தெரிவித்தா |
| அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும்: தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல் Posted: 09 Jun 2014 08:37 AM PDT உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் நடந்த கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவத்திற்கு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்து வருவதை தடுக்க உத்தர பிரதேச நிர்வாகம் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள தேசிய மகளிர் ஆணையம், முதல்வர் அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. |
| முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்தியஸ்தராக மத்திய அரசு செயல்பட கேரளா தீர்மானம் Posted: 09 Jun 2014 06:59 AM PDT முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் குடியரசு தலைவர் தலையிட வேண்டும் என்று கேரள சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய அணை கட்டுவதற்கு கேரள-தமிழக அரசுகளுக்கு இடையில் மத்தியஸ்தராக மத்திய அரசு செயல்படவேண்டும் என்றும், கேரளாவின் பாதுகாப்பு, தமிழகத்திற்கு தண்ணீர் இரண்டையும் உறுதி செய்வதுதான் இறுதி தீர்வு என்றும், தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரணை நடத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் |
| சாரதா நிதி நிறுவனத்தில் 35 சதவீதம் கமிஷன் பெற்ற ஏஜெண்டுகள் Posted: 09 Jun 2014 05:14 AM PDT சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், நிதி நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்திய மார்க்கெட்டிங் ஏஜெண்டுகள் 35 சதவீதம் வரை கமிஷன் பெற்று தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், "சாரதா நிறுவனத்தில் 3 முதல் 5 ஆண்டு திட்டங்களில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |