Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உயிரைப் பறிக்கும் இம்மாதிரியான விளையாட்டு எதற்கு?

Posted: 26 Jun 2014 10:53 PM PDT

funny-videos

funny-videos

This posting includes an audio/video/photo media file: Download Now

வந்து கொண்டிருக்கும் ரயிலிலிருந்து உயிர்தப்புமா இந்த பசு!

Posted: 26 Jun 2014 10:40 PM PDT

Lucky Cow Crossing Railway Track

Lucky Cow Crossing Railway Track

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினி நடித்தால் மட்டுமே எந்திரன் 2 வேறு யாருக்கும் அந்த பட்ஜெட் தர முடியாது!!

Posted: 26 Jun 2014 10:35 PM PDT

endhiran-robot

endhiran-robotஷங்கரின் எந்திரன் 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தால் மட்டுமே அந்த பெரும் தொகையை பட்ஜெட்டாகத் தர முடியும். வேறு யார் நடித்தாலும் அந்த அளவு செலவு செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் உறுதியாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இப்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12-ல் வெளியாகிறது. இந்தப் படம் முடிந்ததுமே அடுத்து ஷங்கர் இயக்கும் எந்திரன் 2 படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஷங்கர் நேரில் போய் ரஜினியிடம் இந்தக் கதையைக் கூறி சம்மதமும் பெற்றுவிட்டார். ஆனாலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் ரஜினி ஆலோசனை கேட்டபோது, கடினமான காட்சிகளில் நடிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் ரஜினி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. படத்துக்கான பட்ஜெட்டாக ரூ 200 கோடி வரை தோராயமாக கணக்குக் கொடுத்திருந்தார் ஷங்கர். படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பதற்காகவே இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால் தற்போது ரஜினி தயங்குவதாக செய்தி வெளியானதால், இந்தப் படத்துக்கு ரஜினி ஹீரோ என்றால் மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தரமுடியும் என்றும், வேறு யார் நடிப்பதாக இருந்தாலும் ரூ 60 கோடிக்குமேல் செலவழிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்களாம். எனவே ரஜினிக்கு அதிக ரிஸ்க் தராத வகையில் படத்தின் காட்சிகளை எடுக்க மாற்றுத் திட்டம் தயாரித்துள்ளாராம் இயக்குநர் ஷங்கர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா! செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி

Posted: 26 Jun 2014 10:30 PM PDT

preity-zinta

preity-zintaநெஸ் வாடியா தன்னை பலாத்காரம் செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டிய தினத்தில், ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்ததையும், அதனால் காயமடைந்து வீங்கியிருந்ததையும் நான் பார்த்தேன் என ஒரு சாட்சி வாக்குமூலம் தந்துள்ளார். தனது முன்னாள் காதலனும், கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் மீதான விசாரணையை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். பலர் முன்னிலையில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், 3 முறை அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறினார். 14 சாட்சிகளின் பெயர்களையும் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மே 30-ந்தேதி மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றிய கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மைதானத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் 172 முறை சுழன்று காட்சிகளையும் பதிவு செய்துள்ளன. 5 கண்காணிப்பு கேமராக்கள் பிரீத்தி ஜிந்தா அமர்ந்து இருந்த பகுதியில் இருந்தன. அனைத்து கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா!

Posted: 26 Jun 2014 10:25 PM PDT

tamanna

tamannaஇயக்குநர் ராஜமவுலி பிரமாண்டமாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. இவர் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஈகா (நான் ஈ) படத்துக்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிவரும் படம் பாகுபலி. இந்தப் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடிக்கின்றனர். தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி வந்த ராஜமவுலி, கோடைக்காலம் என்பதால் சில தினங்கள் படக்குழுவுக்கு விடுமுறை அளித்திருந்தார். இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடம் ஒன்றிற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்தார் ராஜமவுலி. தமன்னா வருகையுடன் பாகுபலி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்துக்காக ஹைதராபாதில் அன்னப்பூர்ணா ஸ்டுடியோவிலும், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியிலும் சிறப்பு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு தளங்களிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்புகளை நடத்தவிருக்கிறார் ராஜமவுலி.

This posting includes an audio/video/photo media file: Download Now

சதை வளர்ச்சிக்கு ஜா‌தி‌க்கா‌ய்!

Posted: 26 Jun 2014 10:20 PM PDT

jathikkai

jathikkaiதொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம். இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும். இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய். .

This posting includes an audio/video/photo media file: Download Now

4.2 கிட்கேட் கொண்ட ஹவாய் ஹானர் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Posted: 26 Jun 2014 10:16 PM PDT

smart-phone

smart-phoneஹவாய் நிறுவனம் ஹானர் 3Cக்கு பிறகு ஹவாய் 4G LTE இணைப்பு கொண்ட நிறுவனத்தின் இரண்டாவது கைபேசியான ஹானர் 6 ஸ்மார்ட்போன் இந்த மாதம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய ஹவாய் ஹானர் 6 ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை1 ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தற்பொழுது, உலக அளவில் கிடைப்பது பற்றி விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 16 ஜிபி உள்ளடங்கி சேமிப்பு கொண்ட ஹானர் 6 ஸ்மார்ட்போன் CNY 1,999 (சுமார் ரூ. 19,300) விலையிலும் மற்றும் 32 ஜிபி உள்ளடங்கி சேமிப்பு கொண்ட ஹானர் 6 ஸ்மார்ட்போன் CNY 2,299 (சுமார் ரூ. 22,200) விலையிலும் வரும் என்று தெரிவித்துள்ளது. ஹவாய் ஹானர் 6 ஸ்மார்ட்போன் ஒற்றை சிம் ஆதரவு கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் எமோசன் 2.3 UI உடன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட் கேட் இயங்குகின்றது. இது 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 440ppi பிக்சல் அடர்த்தி வருகிறது. இதில் 3ஜிபி ரேம் மற்றும் மாலி T628, MP4 ஜி.பீ. யூ உடன் இணைந்த அக்டா கோர் கிரின் 920 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. microSD அட்டை வழியாக 16 ஜிபி மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி உள்ளடங்கி சேமிப்பு வகைகள் வருகிறது. ஹானர் 6 ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா, மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் ஒரு 3000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. ஹவாய் ஹானர் 6, இணைப்பு விருப்பங்கள் ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ப்ளூடூத், Wi-Fi, மற்றும் 4G LTE உள்ளிட்டவை இருக்கின்றன. ஹானர் 6 ஸ்மார்ட்போனில் மெஷர்ஸ் 139.8x68.8x6.5mm மற்றும் 135 கிராம் எடையுள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஹவாய் நிறுவனம் மேலும் இரண்டு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களான ஹானர் 3C 4G மற்றும் ஹானர் 3X ப்ரோ சீனாவில் தொடங்கப்பட்டது. ஹவாய் ஹானர் 6 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: ஒற்றை சிம், 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 440ppi பிக்சல் அடர்த்தி, மாலி T628, MP4 ஜி.பீ. யூ உடன் இணைந்த அக்டா கோர் கிரின் 920 பிராசசர், 3ஜிபி ரேம், microSD அட்டை வழியாக 16 ஜிபி மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64 ஜிபி உள்ளடங்கி சேமிப்பு, 13 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா, 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ஜி.பி. எஸ் / எ -ஜி.பி. எஸ், ப்ளூடூத், Wi-Fi, 4G LTE, எமோசன் 2.3 UI உடன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 3000mAh பேட்டரி, 135 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் நடால் தகுதி!

Posted: 26 Jun 2014 08:31 PM PDT

Nadal

Nadalவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் செக் குடியரசின் லூகாஸ் ரசோலுடன் நேற்று மோதிய நடால் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் கடுமையாகப் போராடிய நடால் டை-பிரேக்கரில் 7-6 (8-6) என வென்று சமன் செய்தார். தொடர்ந்து அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 4-6, 7-6 (8-6), 6- 4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். போலந்தின் லூகாஸ் குபாட், சைமன் போலெல்லி (இத்தாலி), மிலோஸ் ரயோனிக் (கனடா), கெய் நிஷிகோரி (ஜப்பான்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் சேனல் ஷீப்பர்சை எளிதில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கம்பீர் அரை சதம் பயிற்சியில் இந்தியா ரன் குவிப்பு!

Posted: 26 Jun 2014 08:27 PM PDT

Gambir

Gambirலெஸ்டர்ஷேர் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காம், டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை 9ம் தேதி தொடங்குகிறது. இபோட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், லெஸ்டர்ஷேர் கவுன்டி கிளப் அணியுடன் இந்தியா 3 நாள் ஆட்டத்தில் மோதுகிறது. கிரேஸ் ரோட் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. விஜய் 20 ரன் எடுத்து அந்தோனி அயர்லேண்ட் பந்துவீச்சில் ராப்சன் வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து தவானுடன் அனுபவ வீரர் கம்பீர் இணைந்தார். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். தவான் 60 ரன் (100 பந்து, 12 பவுண்டரி), கம்பீர் 54 ரன் (101 பந்து, 7 பவுண்டரி) எடுத்து ஓய்வு பெற்றனர் (ரிட்டயர்டு ஹர்ட்). இந்திய அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்திருந்தது. செதேஷ்வர் புஜாரா 23 ரன், விராத் கோஹ்லி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

‘ஆட்டோ பைலட்’ முறையில் பறந்தது மலேசிய விமானம்: ஆஸ்திரேலியா புதிய தகவல்

Posted: 26 Jun 2014 07:53 PM PDT

Malaysia-Airlines

Malaysia-Airlinesதெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளான போது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தானாக இயங்கக் கூடிய 'ஆட்டோ பைலட்' முறையில் பறந்தது என செயற்கைக்கோள் தகவல்களை ஆராய்ந்த ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி இரவு, கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநர் பீஜிங்குக்கு புறப்பட்டு சென்றது. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 227 பயணிகளும், விமான சிப்பந்திகள் 12 பேரும் பயணம் செய்தனர். புறப்பட்ட 1 மணி நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தகவல் தொடர்பு துண்டானது. இன்மர்சாட் செயற்கைக் கோள் மூலம் விமானத்தின் ரேடியா ஒலி அலைகளை ஆராய்ந்ததில், அந்த விமானம் பயணப் பாதையில் இருந்து விலகி தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக 7 மணி நேரம் பறந்தது தெரியவந்தது. விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்பட்டது. இந்த விமானத்தை தேடும் முயற்சியில் சர்வதேச நாடுகள் இறங்கின. ஆனால், விமானத்தின் எந்த பாகத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெற்கு இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதியில் விழுந்து விமானம் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை விரிவாக ஆராயும் பணியில் ஆஸ்திரேலிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் இறங்கினர். இது குறித்து அதன் தலைமை ஆணையர் மார்டின் டோலன் கூறுகையில், ''செயற்கைக்கோள் புள்ளி விவரங்களை ஆராய்ந்ததில், மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானபோது, விமானியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ''ஆட்டோ பைலட்'' முறையில் பறந்துள்ளது. விமானத்தின் எரிபொருள் தீர்ந்து விபத்துக்குள்ளாகும் வரை அந்த விமானம் ஆட்டோ பைலட் முறையிலேயே பறந்துள்ளது. விமானத்தின் ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறோம். ஆனால், எப்போது ஆட்டோ பைலட் சுவிட்ச் இயக்கப்பட்டது என தெரியவில்லை.'' என்றார். விமானி வேண்டும் என்றே இப்படி செய்தாரா அல்லது தீவிரவாதிகளின் கைவரிசையா என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை. இருந்தாலும் விமானத்தை தேடும் முயற்சி தொடர்ந்து நடக்கிறது. இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் நீர்மூழ்கி ட்ரோன் மூலம் சுமார் 850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கடலின் அடிப்பகுதியில் தேடும் பணி கடந்த வாரம் நடந்தது. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து 1800 கி.மீ தொலைவில் உள்ள 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள உள்ள பகுதியில் தற்போது தேடும் பணி நடக்கிறது. இங்கு சக்திவாய்ந்த சோனார் கருவி மூலம் விமானத்தின் பாகங்கங்கள் தேடப்படுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து எல்லை ஒப்பந்தம், நதிநீர் பங்கீடு குறித்து சுஷ்மா பேச்சுவார்த்தை!

Posted: 26 Jun 2014 07:48 PM PDT

sushma-swaraj

sushma-swarajவங்கதேசத்திற்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை நேற்று சந்தித்து பேசினார். வங்கதேசத்துக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் தாகாவில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் ஹாசன் மகமூத் அலி, பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்தியா - வங்கதேசம் இடையேயான எல்லை ஒப்பந்தம், விசா முறையை எளிமை படுத்துதல், டீஸ்தா நதிநீர் பங்கீடு, வங்கதேச மக்கள் இந்தியப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறும் பிரச்னை, திரிபுரா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சார சப்ளை போன்ற விஷயங்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இருதரப்பு இடையே எந்த முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்தும் நல்லெண்ண பயணமாகவே இது இருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சுஷ்மா சுவராஜ், தனியாக மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து பூடான் சென்றார். ஹசினாவுக்கு அழைப்பு: இந்தியாவுக்கு வருமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை மோடியின் சார்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்தியாவின் அழைப்பை ஹசினா ஏற்றுக் கொண்டார். ஆனால், அவர் எப்போது இந்தியாவுக்கு வருவார் என்பது குறித்து இரு நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பயண விவரத்தை முடிவு செய்வார்கள் என்று வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன. விசா முறை எளிமை: வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் மகமுத் அலி செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கு இடையிலான விசா முறையை எளிமைப்படுத்தவும், 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 ஆண்டுக்கான பல முறை பயணம் செய்யும் விசாவை வழங்கவும் இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாற்றங்களை கொண்டு வர ரணில் முயற்சி! சஜித் பிரேமதாச கருத்து

Posted: 26 Jun 2014 07:43 PM PDT

ranil

ranilஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாப்பரசர் இலங்கை வருகிறார். இந்தநிலையில் தமது கட்சிக்குள் மாற்றங்களை கொண்டு வர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குள் இருக்கும் தீவிர போக்குடையவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போரில் மாற்றத்தை கொண்டு வரவே அவர் முயற்சிப்பதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் பிரதம அமைப்பாளர் ஜோன் அமரதுங்கவை அந்த பதவியில் இருந்து அகற்றி அந்த இடத்துக்கு கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்லையை நியமிக்க அவர் முயற்சிக்கிறார். பல தடவைகளாக அமைச்சு பதவி உறுதியளிக்கப்பட்டு அரசாங்கத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் அதனை மறுத்து தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருப்பதை கருத்திற்கொண்டே ரணில் இந்த முயற்சிகயை மேற்கொண்டுள்ளார். எனினும் அவர் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டுள்ளது – சஜித் பிரேமதாச அரசாங்கம் சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தை எதிரியாக்கிக் கொண்டதன் மூலம் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. ஆளும் கட்சி அமைச்சர்கள் மேடைகளில் வீராவேசமாக பேசும் பேச்சுக்களுக்கு தொடர்ந்தும் கரகோசம் எழுப்பி உற்சாகமளிக்க மக்கள் தயாரில்லை. அமைச்சாகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும்போக்குவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், சர்வதேச சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டுமெனவும மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு விசாரணைகளை நடத்தவுள்ளது. விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், விசாரணைக் குழுவின் விசாரணைகளை நிறுத்த முடியாது. அரசாங்கம் அமைச்சர்களை தர்ம தூதர்களாக்கி நாடு முழுவதிலும் அனுப்பி வைத்துள்ளது. அண்மைய வன்முறைகளில் உயிர், உடமை மற்றும் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது. பாரிய சேதம் விளைவிக்கப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது. ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்து அரசாங்கம் செய்வதறியாது செயற்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாந்தோட்டை கொஹலகங்கல என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியலில் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சிக்கும் மேற்கத்தைய நாடுகள்! தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்!

Posted: 26 Jun 2014 07:33 PM PDT

Sri-Lanka-America

Sri-Lanka-Americaஇலங்கையின் அரசியலில் மேற்கத்தைய நாடுகளின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா என்பன இந்த செல்வாக்கை செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் அளுத்கமையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், இதில் மிக முக்கிய பாத்திரத்தை கொண்டிருக்கிறார். அளுத்கம சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரங்கீனும் ஒன்றாக சேர்ந்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அதேநேரம் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அமெரிக்க தூதுவர் சந்தித்தார். இதேவேளை நேற்று அளுத்கம சம்பவத்தின் போது பொதுபலசேனாவின் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவரபெருமவை தூதுவர் சந்தித்துள்ளார். இதேவேளை மிக முக்கியமாக ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜீத் பிரேமதாஸவுக்கும் இடையிலான வேறுப்பாடுகளை அமெரிக்கா தற்போது தீர்த்து வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கப்பால், நீண்டகாலமாக இலங்கையின் அரசியலில் முக்கிய ஊடகமாக கருதப்படும் சிரச தொலைக்காட்சி ரணில் விக்ரமசிங்கவின் பேட்டியை ஒலிபரப்பு செய்யவுள்ளது. இலங்கையின் பலமிக்க எதிர்க்கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிரச ஊடகம் அறிவித்துள்ளது. இவையாவும் இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன. எனினும் தமது பரம்பரைக்கான ஆட்சியதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும், அவரின் சகோதரர்களும் ஆட்சி மாற்றத்தை தடுக்க தன்னாலான அனைத்தையும் செய்வர் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இலங்கையின் அரசியலில் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை, குழப்பநிலைகளை எதிர்ப்பார்க்க முடியும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலைக் குற்றவாளி ஒருவருக்கு 17 வருடங்களின் பின்னர் யாழ் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு!

Posted: 26 Jun 2014 07:28 PM PDT

judgement

judgementசுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுன்னாகம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒருவரை பொல்லால் தாக்கி மரணம் விளைவித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மாவட்ட நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளார். மரணம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவருக்கு 5 வருட சிறைத் தண்டளையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14ம் திகதி சுன்னாகம் பகுதியில் இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தலையில் பொல்லால் தாக்கப்பட்டு பொன்னர் கதிரவேலு என்பவர் உயிரிழந்தார். அத்துடன் கதிரவேலு குகனந்தினி, கிட்டினன் ஜெயராசா ஆகியோருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை நவரத்தினம் என்ற தந்தையும், நவரத்தினம் பிரதீஸ்கரன், நவரத்தினம் சதீஸ்வரன் ஆகிய இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று, 2006ம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டு மீண்டும் 2009ம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தீர்ப்பிற்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த யாழ். மாவட்ட நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னத்துரை நவரத்தினம் நிரபராதி எனக் கண்டு விடுதலை செய்தார். குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு மகன்களில் கொலை செய்தமைக்காக நவரத்தினம் பிரதீஸ்கரனுக்கு மரண தண்டனையும், இறந்தவரின் மகளான கதிரவேலு குகனந்தினி என்பவரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் நவரத்தினம் சதீஸ்வரனுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனையும், விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். இதேவேளை கொலையாளியான நவரத்தினம் பிரதீஸ்கரனுக்கு சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரச புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம்கள் வேண்டாம்! பொதுபல சேனா அமைப்பு

Posted: 26 Jun 2014 07:24 PM PDT

Thilan

Thilanஅரச புலனாய்வு சேவையில் உள்ள அனைத்து முஸ்லிம் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு வலியுத்தியுள்ளது. இது தொடர்பாக பொது பல சேனாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திலான் விஜேசிங்க, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சார செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட புலனாய்வுப் பிரிவின் ஊடாகவே பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னதாக ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் நாட்டில் இல்லாத சமயத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக ஒரு குறுஞ்செய்தி தகவல் வெளியாகியிருந்தது. பொது பல சேனாவின் உறுப்பினர்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பகிரப்பட்ட அந்த தகவலை புலனாய்வுத்துறையில் உள்ள ஒரு சிங்கள அதிகாரியே வெளியில் கசிய விட்டிருந்தார். எனினும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளே இருப்பதாக பொதுபல சேனா நம்புகின்றது. அதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவித இரகசிய செயற்திட்டங்களையும் வகுக்க முடியாத நிலையை பொது பல சேனா எதிர்கொண்டுள்ளது. இந்நிலையை தவிர்ப்பதாயின் புலனாய்வுத்துறையில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளை நீக்கினால் மட்டுமே சாத்தியப்படும் என்றும் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் நம்புகின்றனர். எனவே சிங்கள மக்கள் மத்தியில் தற்போது அதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ளது. இதற்காக அவர்கள் வித்தியாசமான பிரச்சார அணுகுமுறையொன்றை கையாண்டுள்ளனர். அதாவது முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட சில முஸ்லிம் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரிகள் சிங்கள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தனது பிரச்சாரம் ஊடாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பான தகுந்த ஆதாரங்கள் எதனையும் பொதுபல சேனா குறிப்பிடவில்லை என்ற நிலையிலும் கூட இந்தப் பிரச்சாரத்திற்கு சிங்கள மக்களிடையே பரவலான ஆதரவு கிடைத்து வருவதாக தெரிய வந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா கழிவறை காகிதத்தில் சட்ட ஆவணம்!

Posted: 26 Jun 2014 07:19 PM PDT

Roll

Rollகனடா- கழிவறை காகிதம் வழக்கமாக அசுத்தத்தை சுத்தம் செய்ய உபயோகிக்க படுவது. ஆனால் சஸ்கற்சுவான் மாகாணத்தின் பிறின்ஸ் அல்பேர்ட் பகுதியில் வழக்கறிஞர் Ron Cherkewich பணியாள் உடன்படிக்கை ஒன்றை கட்சிக்காரர் ஒருவருக்கு கழிவறை காகிதத்தில் எழுதி உள்ளார். சட்ட சமுதாய சட்ட ஆலொசகர் ரிம் ஹூபர் இது தினமும் காணப்படுவதொன்றல்ல என கூறியுள்ளார். Cherkewich 44-வருடங்களாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதோடு முன்னொரு போதும் ஒழுங்கு சார்ந்த பதிவுகள் எதுவும் அற்றவராக இருந்துள்ளார். ஒரு நொடி மடத்தனத்தில் சந்தையில் மிக சிறந்த ரிசுவை உபயோகித்ததாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில் கழிவறை காகிதம் துப்பரவாக இருந்ததுடன் சந்தையில் மிக சிறந்த வகை ரிசு எனவும் கூறியுள்ளார். சட்ட சங்கம் இப்புகார் மீது விசாரனைக்கு வழிவகுத்தது. Cherkewich 500 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்ற செலவினங்களிற்கு 10,000 டொலர்கள் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அழகா இருந்தது குற்றமாம்…. சக மாணவியின் வெறிச்செயல்!

Posted: 26 Jun 2014 04:25 AM PDT

beauty_girl

beauty_girl

This posting includes an audio/video/photo media file: Download Now

மூதாட்டிக்கு அரங்கேறிய கொடுமை! கண்கலங்க வைக்கும் பரிதாபக் காட்சி!

Posted: 26 Jun 2014 04:21 AM PDT

somerset

somerset

This posting includes an audio/video/photo media file: Download Now

யாரும் கண்ணு வைச்சிறாதீங்க இவங்கள பார்த்து!

Posted: 26 Jun 2014 04:18 AM PDT

Buddys-Baby-Crawling-School

Buddys-Baby-Crawling-School

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட ஏசி முரளிமோகன் தற்கொலை!

Posted: 26 Jun 2014 03:55 AM PDT

Murali-mohan

Murali-mohanஹார்லிக்ஸ் மாமா என அழைக்கப்பட்ட பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஏசி முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது உடல், புரசைவாக்கத்தில் உள்ள அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுத்துள்ளனர். வம்சம், தென்றல் போன்ற தொடர்களிலும், இருவர், சிட்டிசன், தில், பாய்ஸ், ரெண்டு உள்பட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். அள்ளித்தந்த வானம் படத்தில் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக தோன்றியிருப்பார் முரளி மோகன். இதில் தமிழை இந்த தொலைக்காட்சிகள் எப்படி கொலை செய்கின்றன என்ற காட்சியில் இவரும் விவேக்கும் கலக்கியிருப்பார்கள். 'ஆங்கிலத்துக்கு கட் அவுட். தமிழுக்கு கெட் அவுட்டா..' என்று விவேக் வசனம் பேசுவது இதில்தான். முரளிமோகன் தோன்றிய ஹார்லிக்ஸ் விளம்பரம் ரொம்ப பிரபலமானதால், அவரை ஹார்லிக்ஸ் மாமா என்றும் குறிப்பிடுவதுண்டு. என்ன காரணத்தால் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™