Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஏலத்துக்கு வரும் இந்தியக் கலைப்படைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சை அதிகரிப்பு

Posted: 26 Jun 2014 11:03 PM PDT

சமீபகாலமாக ஏலத்துக்கு வரும் இந்தியக் கலைப்படைப்புகளின் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சை அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் ரவீந்தரநாத் தாகூரின் கலைப்படைப்புகளில் ஒன்று ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே ஓவியத்தின் ஒரிஜினல் பதிப்பு சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதிகருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது.

பங்களா ஒதுக்கீட்டில் இழுபறி: முன்னாள் மந்திரிகளுக்கு மீண்டும் நோட்டீசு

Posted: 26 Jun 2014 10:29 PM PDT

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள், எம்.பிக்களுக்கு பங்களாக்களை ஒதுக்கும் பணி நடந்து வருகிறது. ஊரக மேம்பாட்டுத் துறை மந்திரி வெங்கய்யா நாயுடு இந்த பணிகளை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் உள்ள அரசு பங்களாக்களில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிகள், எம்.பிக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும்

ஆந்திராவில் 40 ஆண்டுகளாக மயானத்தில் குடியிருக்கும் தமிழக குடும்பங்கள்

Posted: 26 Jun 2014 10:28 PM PDT

ஆந்திர மாநிலம் நெல்லூரில் 40 ஆண்டு காலமாக மயானத்தில் 100 குடும்பம் குடியிருப்பதாகவும் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி அறிவு இல்லாமல் மண்டை ஓடுகளுடன் விளையாடுவதாகவும் மாநில குழந்தைகள் உரிமை நல கமிஷனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அக்கமிஷன் உறுப்பினர்கள் புகாரில் தெரிவிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டம் போடி காளி தொட்டா மயானத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆந்திராவில் கெயில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து: 14 பேர் பலி

Posted: 26 Jun 2014 10:18 PM PDT

மத்திய அரசுக்கு சொந்தமான 'கெயில்' நிறுவனம் நாடு முழுவதும் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்து வருகிறது. 'கெயில்' நிறுவனத்தின் கியாஸ் பைப் லைன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நாகாராம் என்ற கிராமம் வழியாக செல்கிறது. அந்த கிராமத்தின் நடுவே கியாஸ் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது.

வேன் மோதி படுகாயம்: உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய முதல்–மந்திரி

Posted: 26 Jun 2014 10:00 PM PDT

ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தராராஜே அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த 24–ந்தேதி ஸ்ரீகங்கா நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் ஸ்ரீகங்கா நகர் ராணுவ மையம் அருகே வந்தபோது, 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அருகில் மோட்டார்சைக்கிள் ஒன்று நொறுங்கிய நிலையில் கிடந்தது.

திருப்பதி கோவிலில் இனி காத்திருக்க வேண்டாம்: டிக்கெட் வாங்கும் போது தரிசன நேரம்

Posted: 26 Jun 2014 09:57 PM PDT

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் பக்தர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது. இவர்கள் ஏழுமலையானை தரிசிக்க அதிகபட்சமாக 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. தரிசனத்துக்காக அவர்கள் கியூவில் காத்து நிற்க வேண்டியது உள்ளது. 300 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட் எடுப்பவர்கள் கூட

ஈராக்கிலிருந்து நாடு திரும்பும் மலையாளிகளின் விமான செலவை அரசே ஏற்கும்: உம்மன்சாண்டி

Posted: 26 Jun 2014 09:45 PM PDT

ஈராக்கில் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக உள்நாட்டு போர் மூண்டுள்ளது. அங்குள்ள வெளிநாட்டினர் பலரும் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்டு பணய கைதிகளாக வைக்கப்பட்டு உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து ஈராக்கிற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

5 நாள் அரசு பயணமாக துணை ஜனாதிபதி சீனா சென்றார்

Posted: 26 Jun 2014 08:21 PM PDT

துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய வர்த்தக ராஜாங்க மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதாசிங் மற்றும் உயர்மட்டக்குழுவினரும் சென்று உள்ளனர். சீனா செல்லும் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அங்கு இன்றும் (வெள்ளி) நாளை (சனி) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் பஞ்சசீல ஒப்பந்த 60-வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். சுற்றுப்பயணத்தின்போது சீன துணை ஜனாதிபதி லீ யுன்சோவை ஹமீத் அன்சாரி சந்தித்து இரு

முதல் முறையாக வீடு வாங்கினால் மத்திய பட்ஜெட்டில் வட்டி சலுகை?

Posted: 26 Jun 2014 08:16 PM PDT

மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசின் முதலாவது பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி வரும் 10-ந் தேதி தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா கூட்டணி அரசுக்கு மட்டுமல்ல, அருண் ஜெட்லிக்கும் இதுவே முதல் பட்ஜெட். பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில் மத்திய

மைனர் பெண் கற்பழிப்பு: நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது

Posted: 26 Jun 2014 07:53 PM PDT

மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). இவர் இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாந்திரா பகுதியில் உள்ள ஒரு நடிகை வீட்டில் வேலை செய்யும் 17 வயது மைனர் பெண்ணுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. கார் டிரைவர் ராஜேந்திர கவுதம் அந்த பெண்ணிடம் நடிகர் ஷாருக்கான்

ஈராக்கில் உள்ள புனிதத்தளங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உறுதிமொழி

Posted: 26 Jun 2014 05:18 PM PDT

ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் ஷியா பிரிவு அரசுக்கு எதிரான சன்னி பிரிவு போராளிகளின் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 1300ஐத் தாண்டியிருக்கும் என்று கூறப்படுகின்றது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து தீவிர இஸ்லாமிய தேசத்தை உருவாக்க இந்த ஈராக்கிய மாநில மற்றும் லேவண்ட் போராளிகள் முயற்சித்து வருகின்றனர்

ஐ.பி.எஸ் வேலைக்காக 52 லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற வேலையை ராஜினாமா செய்தவர்

Posted: 26 Jun 2014 05:12 PM PDT

இந்தியாவை சேர்ந்த வினாயக் வர்மா என்பவர் தனது லட்சியமான ஐ.பி.எஸ் வேலையில் சேருவதற்காக பாரிசில் ஆண்டொன்றுக்கு 52 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் வேலையை ராஜினாமா செய்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு அரசு பணியாளருக்கான தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற விநாயக், பெங்களூரில் உள்ள தேசிய

சில துறைகளில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது: நரேந்திர மோடி ஒப்புதல்

Posted: 26 Jun 2014 05:07 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, பதவி ஏற்று 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அவர் தனது வலைத்தள பக்கத்தில் தனது கருத்துகளை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- புதிய அரசுகளுக்கு ஒரு சவுகரியம் உண்டு. ஊடக நண்பர்கள் அதை 'தேனிலவு காலம்' என்று வர்ணிப்பார்கள். சில அரசுகள், அந்த காலத்தை

பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை: மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்

Posted: 26 Jun 2014 03:02 PM PDT

மத்திய சுகாதாரத்தறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் எய்ட்ஸை கட்டுப்படுத்த ஆணுறை அணியுங்கள் என்று பிரச்சாரம் செய்வது மலிவானது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

உணவு பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டு அமைக்க மாநில அரசுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 26 Jun 2014 02:35 PM PDT

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இந்த பருவத்தில் ஜூன் 17-ந் தேதி வரை 45 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. நடப்பு ஆண்டு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவாகவே மழை பெய்யும். சராசரியில் 93 சதவீதம் வரை மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையமும் கூறியுள்ளது.

டாக்காவில் வங்கதேச வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை: பிரதமர் ஷேக் ஹசீனாவையும் சந்தித்தார்

Posted: 26 Jun 2014 02:27 PM PDT

இந்தியா-வங்காளதேசம் இடையே நீண்ட காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. இந்த உறவை மேம்படுத்தும் வகையில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு வங்காளதேசம் சென்றார்.

ஆற்றில் மூழ்கிய ஆந்திர மாணவர்களில் மேலும் இருவரின் சடலம் கிடைத்தது

Posted: 26 Jun 2014 10:09 AM PDT

இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானார்கள். அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் அந்த ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாயும்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வாகனத்தை நிறுத்திய ராஜஸ்தான் முதல்வர்

Posted: 26 Jun 2014 10:02 AM PDT

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியான வசுந்த்ரா ராஜே சிந்தியா ஸ்ரீ கங்கா நகரிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள லால்கர்க்-ஜடன் பகுதியை கடந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய அவர், தன்னுடன் வந்த

ஸ்ரீநகர் பேக்கரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 11 பேர் காயம்

Posted: 26 Jun 2014 08:20 AM PDT

ஸ்ரீநகரில் உள்ள ஜகூரா பகுதியில் உள்ள ஒரு பேக்கரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 11 பேர் காயம் அடைந்தனர். ஜகூரா பகுதியில் உள்ள பிஸ்மில்லா காலனியில் ஒரு பேக்கரி செயல்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பேக்கரியில் திடீரென கியாஸ்

தேசிய நலன் கருதியே முடிவுகளை எடுக்கிறோம்: மோடி

Posted: 26 Jun 2014 06:56 AM PDT

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பதவியேற்று 100 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுகள் வந்துள்ளதாகவும், தேசத்துக்காக உழைப்பதால் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™