Tamil Star |
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க எம்.பி-க்கள் கோரிக்கை!
- கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற விஜயகாந்த்! புகைப்படம் எடுக்க விரும்பிய தமிழர்கள் ஷாக்
- தாலிபான்களை இலங்கையில் அமெரிக்கா ஊக்குவிக்கிறது:அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
- ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை!
- சேனாவைத் தடை செய்ய முடியாது! ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டம்
- இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! சிவில் சமூகம் கோரிக்கை
- மனிரோபாவைச் சேர்ந்த பெண் லாட்டரியில் வெற்றிபெற கண்ட கனவு நனவாகிய ஆச்சரியம்!!!
- கனடாவிற்கு வருகைதரும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7-டாலர்கள் செலுத்த வேண்டும்!
- ஐந்து நாட்களில் 3வது கொலையாக இந்த வருடத்திலிருந்து திகிலூட்டும் சம்பவங்கள்!
- வாழை இலையின் நன்மைகள்!!!
- வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாடும் ‘ரு’
- இசை என்பது ஒரு மாமருந்து! இதோ ஒரு அனுபவம்
- நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் மரணம்
- ஜிகர்தண்டா படம் வெற்றி பெற திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்!
- 2011 எம்.டி. 3வது கல்லையும் கண்டெடுத்தது நாசா!
- உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது! ஐநா அகதிகள் பராமரிப்பு மையம் தகவல்
- இப்படியொரு அக்மார்க் திருடிகளை எங்காவது பார்த்ததுண்டா?
- காதலனை இவ்வளவு கேவலமாவா சீட் பண்ணுவாங்க!
- சிவலிங்கத்தை பாதுகாக்கும் நாக பாம்புகள்!… மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி !
- நடனத்தில் விஜய்க்கு போட்டியாக கிளம்பிய மனிதர்
| Posted: 20 Jun 2014 11:57 PM PDT
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி-க்கள் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எட்ராஸ், ஜார்ஜ் ஹோல்டிங் ஆகிய எம்.பி-க்கள் சபாநாயர் ஜான் போனருக்கு இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் மோடி அமெரிக்கா வரும் போது நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அரசியல்,பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் தெற்காசியாவில் இந்தியாவைப் போன்று நட்புநாடு வேறு எதுவும் இல்லை என்பதை கருத்தில் கொண்டு இதில் முடிவு எடுக்கவேண்டும் என்று எம்.பி-க்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சபாநாயகர் உடனடியாக இதுபற்றி முடிவெடுக்கவில்லை என்ற போதிலும் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்துக்கு பின்னர் மோடிக்கு விசா வழங்க அமரிக்கா மறுத்து வந்தது. அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரமரானதும் அந்நாடு தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட மோடி வரும் செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவத்தை மோடிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு எம்.பி-க்களே விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 20 Jun 2014 11:50 PM PDT
கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், 'சகாப்தம்'. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், 'நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க' என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம்.அவர்கள் கும்பகோணம், பாண்டிச்சேரி, காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அறையை காலி பண்ணுவதற்காக பிரேமலதா ரிசப்ஷனுக்கு சென்றுவிட்டார். விஜயகாந்த்தும் கைடு ஒருவரும் வெளியே நின்றிருந்தனர். விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். பிறகு அவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார்.கடுப்பான அவர், 'ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?' என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார். இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள். 'ஏங்க இப்படி பண்ணுனீங்க?' என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், 'இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?'' என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார். 'தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...' என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாலிபான்களை இலங்கையில் அமெரிக்கா ஊக்குவிக்கிறது:அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு! Posted: 20 Jun 2014 10:27 PM PDT
தாலிபான்களை இலங்கையில் ஊக்குவிக்க அமெரிக்கா முனைவதாக ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், முன்னதாக தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இது பின்னர் அமெரிக்காவுக்கே ஆபத்தாக அமைந்தது. இதேபோன்று தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் மிக்செய்ல் சிசன் இலங்கையில் தாலிபான்களை ஊக்குவித்து வருகிறார். இது இலங்கைக்கு மாத்திரம் அல்ல, முழு உலகத்துக்கும் ஆபத்தாக அமையப் போகிறது என்று ரணவக்க குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் செய்த அதே தவறையே அமெரிக்கா, அளுத்கமை விடயத்தில் செய்வதாக அவர் குறிப்பிட்டார். அளுத்கமையில் உள்ள முஸ்லிம் குழுக்களை கொண்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா ஊக்குவிக்க முனைகிறது. இந்தநிலையில் இலங்கையின் படையினர் அளுத்கமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுக்கூட அனுமதித்தனர். எனினும் அங்கு சிங்களவர்கள் பேரணியை நடத்த அனுமதிக்கவில்லை என்று ரணவக்க குற்றம் சுமத்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எதிரொலித்தது அளுத்கம வன்முறை! Posted: 20 Jun 2014 10:20 PM PDT
அளுத்கம பிரதேசத்தில் கடந்த வாரம் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்டபெற்ற வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் நடந்துவரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜேர்மனி, கனடா, நோர்வே ஆகிய நாடுகளே அளுத்கம வன்முறைச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பின. இதனையடுத்து, இலங்கையின் ஜெனிவாவுக்கான பிரதி தூதுவர் மனிசா குணசேகர, பதில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அவ்வறிக்கையில், இலங்கை அரசாங்கம் எந்தவொரு இன அல்லது மத வன்முறைகளையும் மன்னித்ததில்லை. சம்பவம் தொடர்பான நம்பகமான தகவல்கள் திரட்டப்பட்டு, அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும். எல்லா மக்கிளனதும். வழிபாட்டு இடங்கள் மற்றும் சொத்துக்களினதும் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று இந்த சபைக்கு உறுதிமொழி அளிக்கிறது. இந்த வன்முறைகளில், 2 முஸ்லிம்கள் ஒரு தமிழர் என மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 6 காவல்துறையினர் உள்ளிட்ட 13 சிங்களவர்கள், 13 முஸ்லிம்கள் என 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு சமூகங்களினதும், 69 வீடுகள், 83 கடைகள், 11 வாகனங்கள் சேதமாக்கப்பட்டன. தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 28 சிங்களவர்கள், 17 முஸ்லிம்கள் என 43 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில், 12 சிங்களவர்கள், 5 முஸ்லிம்கள் என 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வன்முறைச்சம்பவங்களுக்க பொறுப்பானவர்கள் மீது பாராபட்சமற்ற விசாரணை நடைபெறுமென அனைத்து சமூகங்களுக்கும் உறுதியளித்துள்ளார் என அவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சேனாவைத் தடை செய்ய முடியாது! ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டம் Posted: 20 Jun 2014 10:15 PM PDT
பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அளுத்கம வன்முறைகளுக்குக் காரணமான பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று நேற்று முன்தினம் காலையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால், அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், பொது பல சேனாவைத் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். அதற்கு ஜனாதிபதி பொது பல சேனாவைத் தடை செய்ய முடியாது என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் கதாநாயகர்களாகி விடுவர் என்றும் குறிப்பிட்டார். அடிப்படைவாத அமைப்புகளைத் தடை செய்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும், அதன் மூலம் மதங்களுக்கிடையிலான பிரச்சினை முடிந்து விடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, அளுத்கம வன்முறைகளுக்கு சிங்கள, முஸ்லிம் அடிப்படைவாதிகளே பொறுப்பு என்று குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! சிவில் சமூகம் கோரிக்கை Posted: 20 Jun 2014 10:09 PM PDT
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடன் நிறுத்தக்கோரி தனியாட்களையும், நிறுவனங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு வெளியிடப்படடுள்ள அறிக்கை ஒன்றில் பொதுபலசேனாவினால் அளுத்கம, பேருவளை, வெலிப்பன்ன மற்றும் தர்கா நகரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள வெட்கக்கேடான நிலையை போக்க உடனடியாக இந்த வன்முறைகளை நிறுத்துவதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறும் சிவில் சமூகம் கோரியுள்ளது. குறித்த வன்முறை சம்பவங்களில் குறைந்தது 7 முஸ்லிம்களும் ஒரு தமிழரும் கொல்லப்பட்டுள்ளனர் இது ஞானசார தேரரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியின் பின்னரே இடம்பெற்றிருக்கிறது. முஸ்லிம் மக்களின் வியாபாரத்தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கௌதம புத்தரின் வழியில் நின்று பௌத்தர்கள் ஏனைய மதங்களுக்கு மதிப்பு தரவேண்டும் என்று சிவில் சமூகம் கோரியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிரோபாவைச் சேர்ந்த பெண் லாட்டரியில் வெற்றிபெற கண்ட கனவு நனவாகிய ஆச்சரியம்!!! Posted: 20 Jun 2014 09:54 PM PDT
கனடா-.மனிரோபாவைச் சேர்ந்த பெண் ஒருவர் 649 லாட்டரியல் கிட்டத்தட்ட 7-மில்லியன் டாலர்களை வென்றதால் அவரது கனவு நனவாகியுள்ளது. மரியா டிகெல் கடந்த 30-வருடங்களாக ஒரே இலக்கங்களை தொடர்ந்து விளையாடி வந்நதாகவும் யூன் மாதம் அந்த இலக்கங்கள் வென்றுவிட்டதெனவும் கூறினார். 7, 11, 12, 13, 35, 41 ஆகிய இலக்கங்களே அவர் தெரிவு செய்திருந்தவைகளாகும். இந்த இலக்கங்களை தெரிவு செய்வதற்கும் அவர் ஒரு அர்த்தத்தை வைத்திருந்தார். தசாப்தங்களிற்கு முன்னர் கனடாவிற்கு குடியேறிய போது அவரது குடும்பத்தினரது வயதுகள் மற்றும் இந்த நாட்டை வந்தடைந்த திகதி என்பன இந்த இலக்கங்களாகும். பலசரக்கு சாமான்கள் வழக்கமாக வாங்க போகும் ரியல் கனடியன் சுப்பஸ்ரோரில் வாரந்தோறும் லாட்டரி சீட்டை வாங்கி வந்துள்ளார். 6, 986, 491.90 டாலர்கள் பரிசை வெல்வதற்கு முதல் இரவு ஒரு கனவு கண்டதாகவும் அதில் தான் ஒரு மில்லியன் டாலர்கள் வென்று அத்தொகையை தனது குடும்பத்தினரிடையே பகிர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். தனது கனவில் சொல்லியது போன்று வெற்றித் தொகைப்பணத்தை தனது குடும்ப அங்கத்தவர்களிடையே பகிர்ந்து கொள்ள போவதாகவும் தனது அவசர தேவைகளிற்காக ஒரு தொகையை வைத்துக்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். 'நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வேன். எனக்கு ஆடம்பர குடியிருப்பு தேவை இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்'. என கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 20 Jun 2014 09:47 PM PDT
கனடாவிற்கு வருகைதரும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ஒரு புதிய எலக்ரோனிக் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்ப கட்டணமாக 7-டாலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் இச்செய்தியை இன்று அறிவித்துள்ளது. கனடாவிற்கு வருவதற்கு விசா தேவைப்படாத வெளிநாட்டுப் பிரஜைகள் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்கள் எலக்ரோனிக் பயண அனுமதி எனப்படும் இந்த அனுமதிக்கான விண்ணப்பத்தை விமான மூலம் வந்தடைவதற்கு முன்னதாக வெற்றிகரமாக செய்து முடித்திருக்க வேண்டும். யு.எஸ். குடிமக்களிற்கு இந்த தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பார்வையாளர்கள் குடியுரிமை மற்றும் குடிவரவு திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக தங்களது சுயசரிதை விபரங்கள், பாஸ்போர்ட் மற்றும் பின்னணி தகவல்கள் போன்றனவற்றை தெரியப்படுத்த வேண்டும். இத்தகவல்கள் கனடிய நுழைவு துறைமுகங்கள் அல்லது ஒரு விசா விண்ணப்பங்களில் அதிகாரிகளால் கேட்கப்படுகின்றன. ஒரு எலக்ரோனிக் அமைப்பு இந்த தகவல்களை உறுதிப்படுத்துவதோடு விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐந்து நாட்களில் 3வது கொலையாக இந்த வருடத்திலிருந்து திகிலூட்டும் சம்பவங்கள்! Posted: 20 Jun 2014 09:39 PM PDT
ஐந்து நாட்களில் 3வது கொலையாக இந்த வருடத்திலிருந்து இதுவரையில் கிட்டத்தட்ட குறிப்பிட்ட அதே பகுதியல் 13 கொலைகள் நடந்திருப்பது அப்பகுதி மக்களைத் திகிலடைய வைத்திருக்கின்றது. கொலைகள் பொதுவாக நடைபெறுகின்றன. ஆனால் 5 நாட்களில் 3 கொலைகளாக ஒன்றின் விசாரணை முடிவதற்குள் மற்றையது என மாறி மாறி நடந்திருக்கின்றது கனடிய மாகாணமான பிரிட்டிஸ் கொலம்பியாவில் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக Surrey எனுமிடத்தில் நடந்திருப்பாக வன்கூவர் சன் எனும் ஊடகம் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட சம்பவம் பற்றி ஒன்றிணைந்த Homicide Investigation குழுவானது தனது விசாரணையை நடாத்துகின்றது. முதலாவது கொலையானது Surrey யின் தென் பகுதியான வாந 2500 block of 156 Street ல் நடந்திருக்கின்றது. அங்கு உடல் மரணமடைந்த நிலையில் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கான காரணங்கள் போலிசாரினால் கண்டறிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வியாழக்கிழமை 13100-block of 65B Avenue in Newton எனும் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையின்போது ஒரு இழைஞர் மரணமடைந்திருக்கின்றார். இதன் பின்பு வெள்ளிக்கிழமை Mandeepak "Deepak" Chahal என அழைக்கப்படுகின்ற 22 வயதுடையவர் யில் மரணமடைந்திருக்கின்றார் எனப் போலிசாருக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது. அவரது மரணமானது குழுக்களுடனோ அல்லது போதைப்பொருள் சம்பந்மானதாகவோ இல்லை என்பதை போலிசார் உறுதி செய்திருக்கின்றார்கள். திங்கட்கிழமை Shaunce Poirier என அழைக்கப்படுகின்ற 33 வயதுடையவர் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்பு அவர் அங்கு மரணமடைந்திருக்கின்றார் எனத் தெரியவருகிறது. இந்தச் சம்பவமும் Surrey யில் 13200-block of 108th Avenue எனும் பகுதியில் நடந்திருக்கின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 20 Jun 2014 04:34 AM PDT
முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழத்தில் எப்படி எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளதோ, அதேப் போன்று அதன் இலைகளிலும் பலரும் அறிந்திராத வகையில் நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் நமது முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு காரணமாக வாழை இலையும் உள்ளது என்று சொல்லாம். ஏனெனில் அக்காலத்தில் எல்லாம் தட்டுக்களை பயன்படுத்துவதை விட, வாழை இலையைத் தான் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் விருந்து என்று சொன்னாலே, வாழை இலை இல்லாமல் விருந்து நடைபெறாது. அந்த அளவிற்கு வாழை இலையானது மிகவும் முக்கியமான ஒன்றாக நம் முன்னோர்களின் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய வேகமான காலத்தில் மக்கள் வாழை இலையை மறந்து, பல்வேறு டிசைன்களில் தட்டுக்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம், நம் முன்னோர்கள் சொல்லை நாம் மதிக்கவில்லை என்பதை விட மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!! எனவே எந்த ஒரு சூழலிலும் நாம் முன்னோர்கள் கூறியவாறு வாழை இலையிலேயே சாப்பிட்டு வந்திருந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட்டு இருக்கலாம். இப்போதும் ஒன்று ஆகப் போவதில்லை. அனைவரும் இன்று முதல் வாழை இலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அதுமட்டுமின்றி, வாழை இலையில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், இது சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் போன்றவற்றிற்கும் தீர்வை வழங்கும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! இங்கு பலரும் அறிந்திராத வாழை இலையின் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!! வாழை இலையில் உணவை உண்ணும் போது, எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. எப்படியெனில் வாழை இலையில் உணவை வைக்கும் போது, அதில் உள்ள உப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்றவை செரிமான ஆசிட்டின் சுரப்பை அதிகரித்து, உணவானது எளிதில் செரிமானமடைய உதவுகின்றன. மேலும் இலையில் சாதத்தை சூடாக வைக்கம் போது, சாதமானது இலையில் உள்ள குளோரோபில்லை உறிஞ்சிவிடுவதால், உடலுக்கு வேண்டிய குளோரோபில் கிடைக்கிறது. வாழையில் தினமும் சாப்பிட்டு வந்தால், இளநரை வருவது தடுக்கப்பட்டு, நீண்ட நாட்கள் முடியானது கருப்பாகவே இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களை தடுக்க, வாழை இலையில் நல்லெண்ணெயை தடவி, அந்த இலையை சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து, அவ்விலையின் மேல் குழந்தையை படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து குழந்தைக்கு வைட்டமின் டி கிடைப்பதுடன், வாழை இலையானது குழந்தையை குளிர்ச்சியுடன் வைத்து சரும நோயில் இருந்து பாதுகாக்கும். குழந்தைகள் விளையாடுகிறேன் என்று எங்காவது விழுந்து காயம் ஏற்பட்டால், அதனை விரைவில் குணமாக்க, துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து, காயம் அல்லது புண் உள்ள இடத்தில் வைத்து, அதன் மேல் வாழை இலையை வைத்து கட்டினால், காயம் அல்லது புண் விரைவில் குணமாகும். சின்னம்மை விரைவில் குணமாக வேண்டுமானால், வாழை இலையில் தேன் தடவி, அதன் மேல் சில மணிநேரம் படுக்க வைக்க வேண்டும். சொரியாசிஸ் அல்லது சரும அழற்சியினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து கட்டினால், நாளடைவில் குணமாகிவிடும். வெளியே செல்லும் போது, உண்ணும் உணவை பாலிதீன் பேப்பர் கொண்டு கட்டி செல்வதை விட, வாழை இலை கொண்டு கட்டிச் சென்றால், உணவானது கெடாமல் இருப்பதுடன், நல்ல மணத்துடனும் இருக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாடும் ‘ரு’ Posted: 20 Jun 2014 04:21 AM PDT
'ரு' என்பது தமிழில் ஒரு உயிர்மெய் எழுத்து என்பது தெரியும்... ஆனால் சுத்தத் தமிழில், அது ஒரு எண். 5 என்பதை தமிழில் ரு என்றுதான் குறிப்பிடுவார்கள். இன்றும் தமிழ் எண்களைப் பயன்படுத்த விரும்புவோர் இப்போதும் தங்கள் வாகனங்களில் இந்த தமிழ் எண் உருக்களைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இன்னொன்னு சென்டிமென்ட், நம்பிக்கைப்படியும் ஐந்து என்ற எண்ணுக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. இப்போது இந்த 'ரு' என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்கள், ஒரு புதிய படத்துக்கு. சமூகத்தில் வாழ கூடாத,வாழ தகுதி இல்லாத ஐந்து மனித மிருகங்களை வேட்டையாட விழைகிறான் ஒரு இளைஞன். சினிமாவில் நாயகனாக வர கனவு காணும் அவன், நிஜ வாழ்வில் நாயகனாக ஆகிறானா என்பதை அந்த ஐந்து பேர்தான் தீர்மானிக்கின்றனர். சர்வதேச அரங்கில் நமது நாடு தலை குனிய வைக்கும் ஒரு மிக பெரிய சமூக அவலத்தை இந்தப் படத்தில் காட்டப் போவதாகக் கூறுகிறார் 'ரு ' இயக்குநர் சதாசிவம். தொலை காட்சி தொடர் மூலம் அறிமுகமாகி இன்று திரை உலகில் கால் ஊன்றி நிற்கும் இர்பான் 'ரு ' படத்தில் நாயகனாக நடிக்கிறார். ரக்ஷிதா நாயகியாக நடிக்கிறார். இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் உள்ள இந்தப் படம் ஜூலையில் வெளியாகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இசை என்பது ஒரு மாமருந்து! இதோ ஒரு அனுபவம் Posted: 20 Jun 2014 04:16 AM PDT
ரஜினி நடித்த 'ஜானி', 'கைகொடுக்கும் கை', 'மன்னன்', கமல் நடித்த 'வெற்றி விழா', 'மை டியர் மார்த்தாண்டன்' மற்றும் 'உதிரி பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே', 'மெட்டி', 'நடிகன்', 'மலபார் போலீஸ்', 'கோவில்பட்டி வீரலட்சுமி' உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ஜாம்பவான், அசோக்குமார்! தமிழில் சில்க் ஸ்மிதா நடித்த 'அன்று பெய்த மழையில்', அன்றைய காலகட்டத்தில் ஆந்திராவை ஒரு கலக்கு கலக்கிய தெலுங்கு 'அபி நந்தனா', இந்தி 'காமாக்னி' உள்பட சில படங்களை அவர் இயக்கியுள்ளார். 'ஜென்மபூமி', 'நெஞ்சத்தை கிள்ளாதே' படங்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கியுள்ளார். திரையுலகில் எண்ணற்ற சாதனைகள் படைத்து, மற்ற மொழி தொழில்நுட்பக் கலைஞர்களை கோலிவுட் பக்கம் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் அசோக்குமார். இப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை. சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில், உயரிய சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல்நிலை தேற வேண்டும் என்று தமிழ் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். நிற்க. சொல்ல வந்த விஷயம் என்ன தெரியுமா? அசோக்குமாரை அருகிருந்து கவனித்துக் கொள்ளும் அவரது மகனும், 'தொட்டால் பூ மலரும்' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான ஆகாஷ், சொன்ன ஒரு தகவல் மெய் சிலிர்க்க வைத்தது. அசோக்குமாருக்கு பழைய ஞாபகங்களைக் கொண்டு வருவதற்காக, தினமும் அவரது செவிகளில் ஹெட்போன் வைத்து இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க வைக்கிறார்களாம். இளையராஜா இசையில், மகேந்திரன் இயக்கத்தில், அசோக்குமாரின் அற்புதமான ஒளிப்பதிவில், 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்துக்காகப் உருவாக்கப்பட்ட 'பருவமே... புதிய பாடல் பாடு' என்ற பாடலை அடிக்கடி ஒலிக்க வைக்கிறாராம். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ததில், இந்தப் பாடல் காட்சிதான் அவருக்கு மிகவும் பிடித்ததாம். அதனால் அதை ஒலிபரப்பி, அவருக்கு பழைய ஞாபகம் திரும்பவும் வருகிறதா என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்! 'பருவமே...' பாடலைக் கேட்கும்போது மட்டும், அசோக்குமாரிடம் சின்னச்சின்ன அசைவுகள் தெரிகிறதாம்... இதைக் கேட்கும்போதே நமக்கு மெய்சிலிர்த்தது. அதனால்தான் அவசர அவசரமாக இந்தப் பதிவு. 'இசை கேட்டால் புவி அசைந்தாடும்', 'இசையால் வசமாகா இதயம் எது' போன்ற பாடல்கள் இசையின் மேன்மையை நமக்குச் சொல்கின்றன. இசைமேதை இளையராஜாவின் இசை, அசோக்குமார் என்கிற உன்னதமான ஒளிப்பதிவுக் கலைஞனின் நினைவுகளை சில நிமிடங்களாவது மீட்டுத் தருகிறதே என்பதே மிகப் பெரிய ஆறுதல்தானே!This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் மரணம் Posted: 20 Jun 2014 04:09 AM PDT
நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் மாரடைப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மீனா. இவரது தந்தை துரைராஜுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ராஜ் மல்லிகா என்ற மனைவியும், மீனா என்கிற மகளும் உள்ளனர். இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜிகர்தண்டா படம் வெற்றி பெற திருப்பதியில் மொட்டை போட்டார் நடிகர் சித்தார்த்! Posted: 20 Jun 2014 03:55 AM PDT
திருப்பதி திருமலை கோயிலுக்குச் சென்ற நடிகர் சித்தார்த், தலையை மொட்டை போட்டுக் கொண்டார். தமிழில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். இரண்டு படங்களுமே முடிந்துவிட்டன. விரைவில் வெளி வரவிருக்கின்றன. இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்றார் சித்தார்த். முதலில் மொட்டை போட்டுக் கொண்டார். பின்னர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அடுத்து வரவிருக்கும் தனது ஜிகர்தண்டா படம் வெற்றி பெற கடவுளிடம் வேண்டிக் கொண்டார். சித்தார்த்துடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதியில் சாமி கும்பிட்டார்கள். "திருமலைக்கு வந்து பிரார்த்தனை செய்வது எப்போதுமே மனசுக்கு நிறைவான விஷயம். இந்த முறை ஜிகர்தண்டா படம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன்," என்றார். சித்தார்த்துக்கு தெலுங்கில் பொம்மரிலு படத்துக்குப் பிறகு ஒரு வெற்றிப் படம் கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2011 எம்.டி. 3வது கல்லையும் கண்டெடுத்தது நாசா! Posted: 20 Jun 2014 03:34 AM PDT
விண்வெளி ஆராய்ச்சிக்காக சந்திரனைச் சுற்றி விண்கற்கள் அமைக்கும் திட்டத்திற்கு பொருத்தமான மூன்றாவது கல் கிடைத்திருப்பதாக நாசா அறிவித்துள்ளது. விண்வெளி, அதிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் துணைக் கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 'விண்கல் (திருப்புதல்) திட்டம் என்ற ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதாவது வருங்காலத்தில் விண்வெளி வீரர்கள் விண்கற்களில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவான கற்களைத் தேர்வு செய்து சந்திரனுக்கு அருகில் நிறுத்தி வருகிறது. ஏற்கனவே இத்திட்டத்திற்கென இரண்டு விண்கற்களைத் தேர்வு செய்து விட்ட நாசா, தற்போது மூன்றாவது கல்லையும் அடையாளம் கண்டு விட்டதாம். 2011 எம்.டி... ஸ்பிரிட்சர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப் பட்டுள்ள இந்த விண்கல்லிற்கு 2011 எம்.டி எனப் பெயரிட்டுள்ளது நாசா. வெற்றிடம்... பூமிக்கு அருகில் உள்ள விண்கல்லானது தோராயமாக 20 அடி அளவில் அமைந்திருப்பதாகவும், இதன் உள்ளே வெற்றிடமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பார்ப்பதற்கு கட்டிட இடிபாடுகளை குவித்து வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் உள்ளதாம் இந்த விண்கல். தகுதிகள்... மேலும், இந்த விண்கல்லானது உருவம் மற்றும் பண்புகளில் நாசாவின் விண்கல் திட்டத்திற்கு ஏற்றபடி அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். துல்லியமான தகவல்கள்... ஸ்பிட்சர் கண்டறிவதற்கு முன்னதாகவே இந்த விண்கல் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வந்தபோதும், தற்போது தான் துல்லியமான தகவலகள் கிடைக்கப் பெற்றுள்ளதாம். முதல் இரண்டு விண்கற்கள்... 2011 எம்.டி க்கு முன்னதாக நாசா தேர்வு செய்த மற்ற இரண்டு விண்கற்களின் பெயர் முறையே 2009 பிடி மற்றும் 2013 இசி 20 ஆகும். ரோபோடிக் விண்கலம்... தற்போது ஆராய்ச்சிக்கு தேர்வாகியுள்ள இந்த விண்கற்களை ரோபாடிக் விண்கலம் மூலமாக, ஏற்கனவே தேர்வு செய்துள்ள இடத்திற்கு நகர்த்தி கொண்டு செல்ல நாசா திட்டமிடப் பட்டுள்ளது. 2020ம் ஆண்டு... இனி, வரும் காலத்தில் விண்வெளி வீரர்கள் இந்த விண்கற்களில் இறங்கி அருகிலுள்ள கோள்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்த முன்னேற்பாடு திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன்படி, வரும் 2020ல் விண்வெளி வீரர்கள் இந்த விண்கற்களில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது. தொடரும் தேடுதல் பயணம்... இந்த மூன்று கற்களோடு தனது தேடுதல் பயணத்தை நாசா முடித்துக் கொள்ளப் போவது இல்லையாம். இன்னும் சில பொருத்தமான கற்களைத் தேடும் பணி நடந்து வருகிறதாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது! ஐநா அகதிகள் பராமரிப்பு மையம் தகவல் Posted: 20 Jun 2014 03:29 AM PDT
உலக அளவில் அகதிகளின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக ஐநா சபையின் அகதிகள் பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை இப்போதுதான்முதன்முறையாக அதிக அளவில் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த செய்தியானது, 2012இல் 4 கோடியே 90 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை, சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போரின் விளைவாக பெருமளவு அதிகரித்து விட்டதாக குறிப்பிடுகிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவிவரும் சூழ்நிலையே இந்த எண்ணிக்கை பெருக முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. பாகிஸ்தான், ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் மற்ற நாடுகளை விட அதிக அகதிகளுக்கு புகலிடம் அளித்துள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இப்படியொரு அக்மார்க் திருடிகளை எங்காவது பார்த்ததுண்டா? Posted: 20 Jun 2014 03:22 AM PDT |
| காதலனை இவ்வளவு கேவலமாவா சீட் பண்ணுவாங்க! Posted: 20 Jun 2014 03:17 AM PDT |
| சிவலிங்கத்தை பாதுகாக்கும் நாக பாம்புகள்!… மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி ! Posted: 20 Jun 2014 03:12 AM PDT |
| நடனத்தில் விஜய்க்கு போட்டியாக கிளம்பிய மனிதர் Posted: 20 Jun 2014 03:08 AM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















