Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஈராக்கில் பணிபுரியும் கேரள நர்சுகள் பெற்றோருடன் டெலிபோனில் கதறல்

Posted: 20 Jun 2014 10:58 PM PDT

ஈராக்கில் நடைபெறும் உள்நாட்டு போரில் சன்னி பிரிவு தீவிரவாதிகளின் கை ஓங்கி உள்ளது. தீவிரவாதிகள் ஈராக்கின் முக்கிய நகரங்களான மொசூல், திக்ரித், கிர்குக் உள்ளிட்ட பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்

ஸ்ரீஹரிகோட்டாவில் 30–ந்தேதி ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

Posted: 20 Jun 2014 10:24 PM PDT

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி–சி 23 என்ற ராக்கெட்டை தயாரித்து உள்ளது. இந்த ராக்கெட் மூலம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளின் செயற்கை கோள்களை விண்ணில் ஏவுகிறது. ராக்கெட் செலுத்தும் நிகழ்ச்சி வருகிற 30–ந்தேதி காலை 9.49 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஒத்திகை 27–ந்தேதி நடைபெறுகிறது.

இந்திய தொழிலாளர்களை சிறை பிடித்து வைத்துள்ளனர்: தப்பி வந்த பஞ்சாப் தொழிலாளர் தகவல்

Posted: 20 Jun 2014 10:07 PM PDT

ஈராக்கில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக தப்பி வந்த பஞ்சாப் தொழிலாளர் கூறினார். ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு அடுத்த பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் ஆகியவற்றை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த இரு நகரங்களையும் ராணுவம்

டெல்லி, மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்

Posted: 20 Jun 2014 08:38 PM PDT

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில், தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- டெல்லி, மும்பையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். முக்கிய நிலைகள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள்

நரேந்திர மோடி வாகன பாதையில் இன்ஸ்பெக்டர் அத்துமீறல்

Posted: 20 Jun 2014 05:00 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில், ரேஸ்கோர்ஸ்-சப்தர்ஜங் சாலை சந்திப்பில் சென்றபோது, அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. மோடியின் வாகன அணிவகுப்பு சென்ற பிறகும், போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில், ஹவுஸ் காஸ் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நீரஜ் குமார் என்பவர், அத்துமீறி

ரோசய்யா உள்பட தென்மாநில கவர்னர்கள் ராஜினாமா?

Posted: 20 Jun 2014 04:02 PM PDT

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கவர்னர்களை உடனடியாக ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களிடம், தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்யுமாறு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த

மின்சார ரெயில்களில் சீசன் டிக்கெட் கட்டணம் உயர்வு

Posted: 20 Jun 2014 02:43 PM PDT

ரெயிலில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்திய மத்திய அரசு, புறநகர் மின்சார ரெயில் மற்றும் புறநகர் அல்லாத மற்ற ரெயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறது. மின்சார ரெயில்களில் தற்போது ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ஒரு முறை பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் எவ்வளவோ

ரெயில் கட்டண உயர்வை வாபஸ் பெற காங்கிரஸ் கோரிக்கை

Posted: 20 Jun 2014 12:48 PM PDT

காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ரெயில் கட்டண உயர்வு, வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டண உயர்வு. இதை உடனே வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். நல்ல நாட்கள் வரப்போவதாக பிரசாரம் செய்த பா.ஜனதா, சாதாரண மக்களின்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்

Posted: 20 Jun 2014 08:05 AM PDT

பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்தி திணிப்பை பிரதமர் கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கேட்டுக்கொண்டார்.

ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்

Posted: 20 Jun 2014 07:34 AM PDT

ரெயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், ரெயில் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கட்டாயம் என்று விளக்கம் அளித்துள்ள மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, கடந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டதை நடைமுறைப்படுத்தியிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். செலவுகளை சமாளிக்கவே இந்த கட்டண உயர்வு என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளையே மோடி தலைமையிலான இப்போதைய அரசும் தொடர்வதாக கூறிய இடதுசாரிகள், கட்டண உயர்வின் மூலம் மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருப்பதாக குற்றம் சாட்டின.

ஈராக்கில் இருந்து 16 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றம்

Posted: 20 Jun 2014 06:21 AM PDT

ஈராக்கில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இருந்து 16 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 16 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,

எம்.பி. வீட்டில் பலாப்பழங்கள் திருட்டு: தீவிரமாக விசாரிக்கிறது போலீஸ் படை

Posted: 20 Jun 2014 05:58 AM PDT

உத்தர பிரதேசத்தில் அமைச்சர் ஆசம் கானின் காணாமல் போன எருமை மாடுகளை தேடுவதற்காக காவல்துறை முடுக்கி விடப்பட்டது மோசமான நிகழ்வாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதனை மிஞ்சும் வகையில் இப்போது ஒரு எம்.பி.யின் வீட்டில் பலாப்பழம் திருடியவர்களை தேடும் பணிக்காக சிறப்பு படையை அமைத்துள்ளது டெல்லி காவல்துறை. பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மகேந்திர பிரசாத்தின் வீட்டில் உள்ள மரத்தில் 2 பலாப்பழங்களை திருடியவர்களை பிடிக்கத்தான் இந்த போலீஸ் படை களமிறங்கியுள்ளது.

சீனாவில் பஞ்சசீல கொள்கை 60-ம் ஆண்டு விழா: அன்சாரி பங்கேற்பு

Posted: 20 Jun 2014 05:25 AM PDT

பஞ்சசீல கொள்கைகள் உருவாக்கப்பட்ட 60-வது ஆண்டு விழா சீனாவில் ஜூன் 28 மற்றும் 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி அன்சாரி கலந்து கொள்கிறார். இதற்காக அன்சாரி 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இதற்கான அழைப்பு சீனாவின் துணை ஜனாதிபதி லி யூயான்சாயோவிடம்

பீகார்: கழிவறை தொட்டி கட்டியபோது மூச்சு திணறி 4 பேர் சாவு

Posted: 20 Jun 2014 05:06 AM PDT

பீகார் மாநிலம் காதிகரில் கழிவறை தொட்டி சீரமைப்பு பணியின்போது மூச்சு திணறி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். கதிகாரில் உள்ள கோதியா பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறையின் உட்புறம் இன்று சிமெண்டு கலவை பூசும் பணி நடைபெற்றது. இரண்டு பேர் 20 அடி கழிவறைக்குள் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்களை விஷ வாயு தாக்கியது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உதவி கேட்டு அலறினார்கள். இதனால் மேலே நின்று கொண்டிருந்த மேலும் இருவர்கள் கழிவறை தொட்டிக்குள்

ரெயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்ந்தது

Posted: 20 Jun 2014 04:46 AM PDT

ரெயில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூன் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

குண்டுவெடித்ததாக போலீசுக்கு பொய் தகவல் கொடுத்த 10 வயது சிறுவன்

Posted: 20 Jun 2014 03:47 AM PDT

கான்பூர் புறநகரான ராவத்பூரைச் சேர்ந்த ஷமீம் என்ற சிறுவன் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ராவத்பூரில் உள்ள உப்பு தொழிற்சாலை அருகே குண்டு வெடித்ததாக தகவல் தெரிவித்தான். இதனால் பரபரப்பான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். ஆனால் அங்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷமீம் இந்த தகவலை கொடுத்தது தெரியவந்தது. இதுபற்றி அவனிடம் கேட்டபோது, டி.வி. சீரியலில் வருவதைப்போன்று, போன் செய்தால் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகிறார்களா என்பதை பார்க்கவே இவ்வாறு செய்ததாக கூலாக கூறினான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார்,

கேம்பகோலா குடியிருப்பை இடிக்க விடாமல் பெண்கள் முற்றுகை: மும்பையில் பரபரப்பு

Posted: 20 Jun 2014 03:02 AM PDT

மும்பை கேம்பகோலா வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த குடியிருப்புகளை அகற்ற விடாமல் குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை கேம்பகோலா வளாகத்தில் 6 அடுக்குமாடி கட்டுவதற்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு 20 மாடிகள் வரை வானளாவிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 102 வீடுகள் சட்டவிரோதமாக அமைந்துள்ளன. எனவே, அதில் வசிப்பவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அந்த பிளாட்டுகளை இடிக்க நகராட்சி முடிவு செய்தது. இதனை எதிர்த்து குடியிருப்பு வாசிகள் தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™