Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாநிலங்களுடன் செயல்படும் மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு பாராட்டு: ஜனாதிபதி உரை அதிக நம்பிக்கை தருகிறது என்கிறார் முதல்வர் ஜெ.,

Posted:

சென்னை : 'பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிகழ்த்திய உரை, அதிக நம்பிக்கை தருகிறது' என, முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். மேலும், மாநிலங்களுடன் செயல்படும் மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு பாராட்டும் தெரிவித்து, 'அதற்கான முழு ஒத்துழைப்பு தரப்படும்' என்றும் தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்புக்குப் பின், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அதிக நம்பிக்கைஇது குறித்து, முதல்வர் ஜெயலலிதா ...

நாடு முழுவதும் புதிதாக 100 நகரங்கள் உருவாக்க அரசு திட்டம்: ஜனாதிபதி உரையில் பல கவர்ச்சி அறிவிப்புகள்

Posted:

'உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், நாடு முழுவதும், 100 நகரங்களை மத்திய அரசு உருவாக்கும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய வீடு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிடைப்பது உறுதி செய்யப்படும்' என, ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் பதவியேற்ற பின், பார்லிமென்டின் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று உரை நிகழ்த்தினார். அப்போது, அவர் கூறியதாவது:'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற, தாரக ...

பாதியில் நிற்கும் ரயில் பாதை திட்டங்கள் : தமிழகத்திற்கு அவசியம் கூடுதல் நிதி தேவை

Posted:

போதிய நிதி இல்லாமல், தமிழகத்தில், அகல ரயில் பாதை திட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. அனுமதி வழங்கப்பட்ட புதிய ரயில் பாதை பணிகளும் துவங்கவில்லை. வழக்கமாக, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, ரயில்வே பட்ஜெட்டில், ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு, 250 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.மத்தியில், மோடி தலைமையிலான புதிய அரசு சார்பில், இன்னும் ஒரு மாதத்தில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.புதிய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய, தமிழக முதல்வரும், எம்.பி.,க்களும், மத்திய இணை ...

ஆறு நாளாகியும் ஆறு பேர் குழு கூடவே இல்லை: தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிப்பு நடக்குமா?

Posted:

லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, ஆராய்வதற்காக, தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழு, கடந்த, 2ம் தேதி சென்னையில் கூடியது. இக்கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் மீது, புகார் கூறப்பட்டதால், அவர்கள், அதிரடியாக மாற்றப்படுவர் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், மாவட்ட செயலர்களை மாற்றும் கருணாநிதியின் முடிவுக்கு, அவர், முட்டுக்கட்டை போட்டார்.அறிக்கை அளிக்கஇந்நிலையில், கட்சியினரை திருப்திப்படுத்தும் விதமாக, பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். 'கட்சியில், தோல்விக்கு பொறுப்பானவர் களையெடுக்கப்படுவர்; அதற்கான ...

ஜூன் 30ம் தேதி ஜெ., சசிகலா ஆஜராக உத்தரவு: வருமான வரி வழக்கில் கோர்ட் அதிரடி

Posted:

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகவில்லை. அரசுப்பணி என, ஜெயலலிதாவும், பல் வலி என, சசிகலாவும் காரணம் தெரிவித்தனர்.முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மீது, வருமான வரித் துறையினர் வழக்கு தொடர்ந்தனர். சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்கு களை தாக்கல் செய்ய தவறியதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.ஆஜராக முடியவில்லைசென்னை, எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில், இந்த வழக்கு நடந்து ...

'இந்தியா - சீனா எல்லை பிரச்னை: மோடி - ஜின்பிங் தீர்க்க வாய்ப்பு'

Posted:

பீஜிங்:'இந்தியாவின் பலம் பொருந்திய பிரதமர் மோடியின் தலைமை மற்றும் சீனாவின் வலுவான அதிபர் ஜி ஜின்பிங் இணைந்து, இரு நாடுகளின் எல்லைப் பிரச்னையை எளிதில் தீர்க்கலாம்' என, சீன அரசின் அதிகாரப்பூர்வ, 'குளோபல் டைம்ஸ்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சீன அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும், ராணுவ தலைமை தளபதியாகவும் உள்ளார்; சீனாவில், அதிக பலம் கொண்ட தலைவராக அவர் விளங்குகிறார்.அது போல், 30 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவில் தனியொரு கட்சியாக பா.ஜ., ...

புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல்

Posted:

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால், நடப்பாண்டிலும், அரசின் புதிய சத்துணவு திட்டம் அமலாகுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.தமிழக அரசின் சத்துணவு திட்டம் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும், ஏழை, எளிய மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்து வருகின்றனர்.13 வகைகள்சத்துணவில், சாதம், சாம்பார், அவித்த முட்டை, பச்சைப் பட்டாணி சுண்டல், உருளைக் கிழங்கு கூட்டு ஆகிய, உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சத்துணவில், காலத்துக்கேற்ற மாற்றத்தைக் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்து, 2012 ...

'மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்' : கருணாநிதி

Posted:

'இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வது என்பது தொடர்கதையாக நீண்டு கொண்டே போவதால், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண, உடனடியாக மத்திய அரசு முன் வரவேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது என்பது தொடர் கதையாக, நீண்டு கொண்டே போகிறது. ஒரே நாளில் மட்டும், 82 தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்தனர். அப்போது, இலங்கை கடற்படையினரால், சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம் மீனவர்கள் 56 பேரையும். புதுக்கோட்டை ...

சென்னையில் கன மழை: மின்தடையால் பாதிப்பு

Posted:

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், வெப்பத்தில் அவதிப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கடந்த சில நாட்களாக, வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தாலும், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. மாறாக, வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்ததால், பொதுமக்கள் தவித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இரவு வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீசியது. தொடர்ந்து, பலத்த காற்று, இடி ...

சராசரிக்கும் குறைவாகவே மழை பொழிவு இருக்கும்

Posted:

புதுடில்லி: பருவமழை, இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே பெய்யும். ஆனாலும், 'எல் நினோ'வால், பெரிய அளவில் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது,'' என, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ள நிலையில், இந்தாண்டுக்கான பருவமழை குறித்த தகவலை, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.டில்லியில், செய்தியாளர்களிடம், அவர் கூறியதாவது:ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான, தென் மேற்கு பருவமழை காலத்தில், 93 முதல், 96 சதவீதம் வரை, மழை பெய்யும். இது, சராசரியை விட, ...

முல்லை பெரியாறு: கேரள சட்டசபையில் அதிரடி தீர்மானம்

Posted:

திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதில், கேரள - தமிழக அரசுகளுக்கு இடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டுவதற்காக, கேரள சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்றும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.சந்திப்புசமீபத்தில், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த, தமிழகமுதல்வர் ஜெயலலிதா, முல்லைப் பெரியாறு அணை யின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி வலியுறுத்தினார்.இந்நிலையில், கேரள சட்டசபையில், முதல்வரும், காங்., மூத்த தலைவருமான ...

பிரதமர் மோடியை சந்திக்கிறார் சித்தராமய்யா: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு

Posted:

பெங்களூரு: ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க, இன்று, பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடகா குழுவினர் சந்திக்கவுள்ளனர்,'' என, கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா தெரிவித்தார்.கர்நாடகா சட்டசபை, மேலவை தலைவர்கள் அடங்கிய கூட்டத்தை, முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமய்யா, நேற்று மாலை, பெங்களூரு விதான் சவுதாவில் கூட்டியிருந்தார்.கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் சித்தராமய்யா கூறியதாவது:எந்த காலத்திலும், கர்நாடகா மாநிலத்துக்கு அநியாயம் நேர்ந்துவிட, அரசு அனுமதிக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™