Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்

Posted: 09 Jun 2014 11:56 AM PDT

தினமலர் ஜனவரி 20,2014 ரா.பிரேம்குமார் அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதால், மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை உணர்ந்துள்ளேன். எனக்கு போனில் வாழ்த்து தெரிவித்தவர்கள், லஞ்சம் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் அலைக்கழிப்பது பற்றி வேதனையுடன் தெரிவித்தனர். அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், பணிகள் தரமாகவும், நேர்மையாகவும் இருக்கும். நாட்டின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். ...

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Posted: 09 Jun 2014 11:54 AM PDT

எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திரு கே.பாலா சார்.

Posted: 09 Jun 2014 11:46 AM PDT

இன்று பிறந்த நாள் காணும் திரு பாலா சார் அவர்களுக்கு ஈகரையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உயிர் மொழி -டாக்டர் ஷாலினி

Posted: 09 Jun 2014 11:45 AM PDT


பதிவிறக்க

உயிர் மொழி

இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Posted: 09 Jun 2014 11:42 AM PDT

இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து அதிகாலை ஒலிகள் ஐந்து மணிப் பறவைகள் இருட்கதவுதட்டும் சூரியவிரல் பள்ளியெழுச்சி பாடும்உன் பாதக்கொலுசு உன் கண்ணில் விழிக்கும் என் கண்கள் இதுபோதும் எனக்கு தண்ணீர் போலொரு வெந்நீர் சுகந்தம் பரப்பும் துவாலை குளிப்பறைக்குள் குற்றாலம் நான் குளிக்க நனையும் நீ இதுபோதும் எனக்கு வெளியே மழை வேடிக்கை பார்க்க ஜன்னல் ஒற்றை நாற்காலி அதில் நீயும் நானும் இதுபோதும் எனக்கு குளத்தங்கரை குளிக்கும் பறவைகள் சிறகு உலர்த்தத் தெறிக்கும் துளிகள் முகம் ...

மிக, மிக நல்ல செய்தி!

Posted: 09 Jun 2014 11:35 AM PDT

குணப்படுத்த முடியாத புற்று நோயிக்கு மருந்து கண்டுபிடிப்பு..: இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர் 'Imitinef Mercilet' ஆகும். இது சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கபடுகிறது. அணுக வேண்டி முகவரி :- Cancer Institute Adyar, East Canal Bank Road, Gandhi Nagar, Adyar, Chennai -600020 Landmark: Near Michael School Phone: 044-24910754, 044-24910754, 044-24911526, ...

வரலாற்றில் இன்று....!

Posted: 09 Jun 2014 11:31 AM PDT

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற
பெயருடனிருந்த இயக்கத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றப்பட்டது.

முரட்டுப் பிரியம்

Posted: 09 Jun 2014 11:26 AM PDT

பந்தயத்தில் ஓடத் தயாராக இருக்கும் தடகள வீரரைப் போல் முற்றத்தில் காத்திருந்தது என் மீதான உன் பிரியம் கதவு திறக்கும் அக்கணத்தில் உள்ளே நுழைய ஆயத்தமாக ஆக்கிரமிப்புக்கு அஞ்சி இருகத் தாளிட்டேன் இரட்டைக் கதவுகளையும் தாழ்க்கோல் துவாரத்தில் நுழைந்து அறைகள் தோறும் வியாபித்திருக்கும் அந்த முரட்டுப் பிரியத்தை எப்படிச் சுவாசிப்பது

இணையத்தில் சந்திக்கும் தவறான பாதைகள்

Posted: 09 Jun 2014 11:22 AM PDT

கோடிக்கணக்கில் தேவையற்ற மின் அஞ்சல்களும், பல ஆயிரம் எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களும், எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஹேக்கர் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கும் இணைய வெளியில், பாதுகாப்பாக ஒருவர் தனக்கான தகவல்களைத் தேடுவது என்பது அதிகத் திறன் வேண்டும் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும், இருக்கிறது. இருப்பினும், பல வேளைகளில் நாம் தெரிந்தே சில ஆபத்து வளையங்களில் சிக்கிக் கொள்கிறோம். அது போன்றவற்றைச் சரியாக உணர்ந்தால், இந்த ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம். அவற்றை இங்கு பார்ப்போம். 1. ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 09 Jun 2014 10:51 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

ஜூன் 9, 1672 - முதலாம் பீட்டர் பிறந்த நாள்

Posted: 09 Jun 2014 10:35 AM PDT

முதலாம் பீட்டர் (1672-1725) ரஷ்யாவை ஆட்சி செய்த மன்னர்களில் முக்கியமானவர். தனது 10 வயதிலேயே மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், ஆட்சியில் அவரது சகோதரி, உறவினர்கள், தாயார் ஆகியோரின் குறுக்கீடுகள் இருந்தன. அவரது அம்மா மறைந்த பின்னர்தான் முழுமையான அதிகாரம் அவர் கைக்கு வந்தது. ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய மன்னர்களுக்கும் இடையே ஓர் அரசியல் அணி ஏற்படுத்துவதற்காகப் பல நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்றார். அங்கே, ஐரோப்பிய நாடுகளின் முன்னேற்றத்துக்குக் காரணமான பல நவீன விஷயங்களைக் கற்றுக்கொண்டார். ...

எனது அறிமுகம்

Posted: 09 Jun 2014 09:33 AM PDT

பெயர்:சம்பத்
சொந்த ஊர்:பெங்களூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:surf
பொழுதுபோக்கு:Blogging,கரோகே,painting
தொழில்:Professor
மேலும் என்னைப் பற்றி:ஆங்கிலத்தில் நான் எழுதிய மூன்று புஸ்தகம் பிரசுரம் ஆகி உள்ளது.

சுஜாதாவின் கணேஷ்-வசந்த் கலக்கும் சில்வியா

Posted: 09 Jun 2014 08:32 AM PDT

முன்னேறு (நிழலாய் தொடரும்)

Posted: 09 Jun 2014 08:15 AM PDT

முன்னேறு -நிழலாய் தொடரும்.... போடாத போடாத காற்றில் கணக்கு; அது, காற்றோடு போகுமே வேண்டாம், எதுக்கு? இன்றோடு முடியாது ஈசன் கணக்கு; நீ, துணிந்தோடு முடிவில் வெற்றி நமக்கு; தொட்டதெல்லாம் தோல்வி என்றால் துவள்வது, எதற்கு? பல தோல்வி கண்ட உள்ளங்களின் வெற்றி புது, வரலாறு படைத்திருக்கு....... ......செசெ.....செல்வம்.செல்வமூர்த்தி selvamoorthy8390.blogspot.com

முன்னேறு (நிழலாய் தொடரும்)

Posted: 09 Jun 2014 07:33 AM PDT

முன்னேறு -நிழலாய் தொடரும்.... போடாத போடாத காற்றில் கணக்கு; அது, காற்றோடு போகுமே வேண்டாம், எதுக்கு? இன்றோடு முடியாது ஈசன் கணக்கு; நீ, துணிந்தோடு முடிவில் வெற்றி நமக்கு; தொட்டதெல்லாம் தோல்வி என்றால் துவள்வது, எதற்கு? பல தோல்வி கண்ட உள்ளங்களின் வெற்றி புது, வரலாறு படைத்திருக்கு....... ......செ.செ.....(செல்வம்.செல்வமூர்த்தி) selvamoorthy8390.blogspot.com

அரசுப் பள்ளியின் அவலநிலைகள் (தொடர்பதிவு)

Posted: 09 Jun 2014 06:37 AM PDT

உரத்த சிந்தனை _1 தனியார் பள்ளியில் கட்டணம் என்ற பெயரில் மிகப்பெரும் பகல் கொள்ளை நடைபெறுகிறது ஆனாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது அரசு பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன அரசு பள்ளிகளின் இன்றைய நிலை கவலை தரக்கூடியது என்பது வேதனையான உண்மை காரணம் என்ன இன்றிலிருந்து உண்மைகள் பலவற்றை முன்வைக்கப் போகிறேன் அரசுப்ப்ள்ளி ஆசிரியர்கள் பலருக்கும் பிடிக்காமல் போகும் உண்மை சுடுவது இயற்கைதானே? க்ண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையல்ல இது! கல்வித்துறையில் புகுந்துள்ள புல்லுருவிகளை புலப்படுத்த இந்த ...

மழலைச் செல்வத்தின் மகிமை

Posted: 09 Jun 2014 06:08 AM PDT

சின்னச் சின்ன அடி எடுத்து, சிங்கார நடை நடந்து, நமது செல்லக்கிளி "அம்மா' என்று அழைக்கும் போது.. மழலைச் செல்வத்தின் மகிமை புதிய கோணத்தில் புரிய தொடங்குமல்லவா! உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க ...

மாடு புல்லைக் கட்டிக்கிட்டா மேயப் போகும்? - பட்டுக் கோட்டை பிரபாகர்

Posted: 09 Jun 2014 06:05 AM PDT

தன் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்திய மனிதர்களைப் பற்றி மன நெகிழ்வோடு பேசுகிறார் நட்சத்திர எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர். அப்பா ராதாகிருஷ்ணன்: மிக இளம் வயதிலேயே எனக்குள் பெரிய தாக்கம் ஏற்படத்திய முதல் மனிதர். ஸ்கூல் படிப்பை முடித்த கையோடு, வாழ்க்கையில் சொந்தக் காலில் நிற்பதை தன் லட்சியமாகக் கொண்டு சொந்தமாக வியாபாரம் தொடங்கியவர் அவர். எதையும் மிகவும் துல்லியமாகத் திட்டமிட்டு, மிக நேர்த்தியாகச் செய்து முடிகிற அவருடைய திறமையை இன்று நினைத்தாலும்கூட எனக்கு பிரமிப்பு ஏற்படும். எப்போதும் சிரித்த ...

விமான ரகசியங்கள்!

Posted: 09 Jun 2014 05:34 AM PDT

விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன விமானம் என்றாலே சுவாரஸ்யம்தான். விமானத்தைப் பற்றி படிக்க விமானத்தில் சென்றிருக்க வேண்டுமா என்ன? விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை. ஒருவேளை படித்த பிறகு, இனி எங்கே போனாலும் பொடிநடையாகப் போய்விடலாம் என்று நீங்கள் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. முகமூடி ரகசியம் விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக ...

சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

Posted: 09 Jun 2014 05:31 AM PDT

குறிப்பு; நான் என்று இருப்பதால் எனது அனுபவம் என்று எண்ணி விடாதிர்கள் முகநூலில் உள்ள ஒருவரின் அனுபவம், பயனுள்ள தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், ...

பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி காரணம்; பாகிஸ்தான் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ்சையீது

Posted: 09 Jun 2014 05:26 AM PDT

கராச்சி: பாகிஸ்தான் கராச்சி விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்புலத்தில் இந்திய பிரதமர் மோடியின் டீம் தான் செயல்பட்டிருக்கிறது என யாரும் நம்ப முடியாத, அப்பட்டமான பொய்யை தனது டுவீட்டரில், பயங்கரவாதி ஹபீஸ் சையீது கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கராச்சி பழைய விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு புகுந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாக்., படையினர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு 10 பேரை சுட்டு கொன்றனர். பொதுமக்கள் ...

கணவருக்குப் பிரசவம் – அக்பர் பீர்பால் கதை

Posted: 09 Jun 2014 05:14 AM PDT

அக்பர் நடத்தும் அனைத்து சோதனைகளிலும் பீர்பால் வெற்றி பெற்று வந்ததை பொறாமைக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அக்பரும் பீர்பாலை ஏதாவது ஒரு வகையில் திணற வைத்து அவருக்கு தோல்வியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும் காய்ச்சலால் அவதிப்படுவது போலவும் நடித்தார். போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். அக்பர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதைக் கேள்விபட்ட பீர்பால் பதட்டத்தோடு சென்றுப் பார்த்தார். தன்னை வைத்தியர்கள் வந்து பார்த்து விட்டதாகவும் ...

நாடாளுமன்றச் செய்திகள்

Posted: 09 Jun 2014 04:48 AM PDT

16-வது பாராளுமன்றத்தில் 130 எம்.பி.க்கள் அரசியல் வாரிசுகள் நாட்டின் 16–வது பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடந்து முடிந்து புதிய எம்.பி.க்கள் கடந்த வாரம் பதவி ஏற்றனர். தேர்தலில் போட்டியிடுபவர்களின் சொத்துமதிப்பு, குற்ற பின்னணி போன்றவை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் சட்ட விதியாக உள்ளது. இதேபோல் புதிய எம்.பி.க்களின் குடும்ப பின்னணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தமுள்ள 540 எம்.பி.க்களில் 130 பேர் அரசியல் வாரிசுகள் என தெரியவந்துள்ளது. இதில் ...

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள்

Posted: 09 Jun 2014 04:25 AM PDT

கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தை சேர்ந்த பெண்கள் , தாலி கொடியில் என்ன நகைகள் கோர்பார்கள், . கோர்க்கலாம்  .உதாரணமாக ,தங்க காசு , மாங்கா போன்றவை .  புகைப்படத்துடன் அனுப்பினால் நன்றாக இருக்கும் . நீங்கள் எனக்கு பதில் அனுபுவிர்கள் என்ற நம்பிக்கையில் கேள்வி கேட்டுளேன் . மறவாத பதில் அளிக்கவும் . நன்றி .

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 09 Jun 2014 04:16 AM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுன்டர் - 17 காவல் துறையினருக்கு ஆயுள் தண்டனை

Posted: 09 Jun 2014 04:13 AM PDT

2009 ஆம் ஆண்டு டெஹ்ராடூனில் ரன்பீர்சிங் என்ற எம்.பி.ஏ. மாணவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட 17 காவல் துறையினருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.   காசியாபாத்தை சேர்ந்த 22 வயது ரன்பீர் சிங் சமூக விரோத செயலில் ஈடுபட்டதாகவும், அவர் காவல் துறையினரிடம் தப்பிக்க முயன்றதால் அவரை சுட்டு கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.   ஆனால் டெஹ்ராடூனில் வேலைக்கு சேர தயாராகிக்கொண்டிருந்த ரன்பீரை உத்தரகாண்ட் காவல்துறையினர் போலி என்கவுன்டர் செய்ததாக புகார் எழுந்தது. ...

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கோச்சடையானை பின்னுக்கு தள்ளிய விமல் படம்

Posted: 09 Jun 2014 04:12 AM PDT

5. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


சென்னை மாநகரில் சந்தானத்தின் படம் சென்ற வார இறுதியில் 1 லட்சத்தை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐந்து வாரங்களில் இதன் சென்னை சிட்டி வசூல் 1.87 கோடி.

ஐதராபாத் இன்ஜி.,மாணவர்கள் 25பேர் பலி? சுற்றுலா சென்ற போது விபரீதம்

Posted: 09 Jun 2014 04:10 AM PDT

மணாலி: ஐதராபாத்தில் இருந்து இமாச்சல் பிரதேசம் சென்ற இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் 25 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். மந்தியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள பீஸ் நதியின் கரையில் ஒருசேர நின்று ரசித்து கொண்டிருந்தனர். தண்ணீர் கண்ட மகிழ்ச்சியில் சுற்றுலாவை இன்பமாக கழித்து கொண்டிருந்த போது இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆற்றில் சென்ற மாணவர்கள் உடல்கள் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர்., விக்னன் ஜோதி இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்தவர்கள் ...

60 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஏழரை பவுன் போச்சு

Posted: 09 Jun 2014 12:51 AM PDT

மதுரை : திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி,49. குடும்பத்துடன் காரில் மதுரைக்கு சுற்றுலா வந்தனர். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர். சங்கரேஸ்வரி மட்டும் காரில் சாப்பிட்டார். அப்போது, 50 வயதுள்ள ஒருவர், சங்கரேஸ்வரியிடம் 'கீழே ஆறு 10 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடக்கின்றன' என்றார். அதை சங்கரேஸ்வரி எடுக்கும்போது, காரில் இருந்த கைப்பையை அந்த நபரும், 25 வயதுள்ள ஒருவரும் திருடிச் சென்றனர். அதில், ஏழரை பவுன் நகை, ரூ.16 ஆயிரம் மற்றும் டிஜிட்டல் கேமரா இருந்தது. புதுார் ...

நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை-பிரணாப்

Posted: 09 Jun 2014 12:46 AM PDT

புதுடில்லி: பார்லிமென்ட் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 'அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் இந்த அரசு செயல்படும். வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். இளைஞர்களின் தொழில் சார்ந்த திறமைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும். உணவு பற்றாக்குறை தீர்க்கப்படும். கிராமங்களில் குடிநீர், மின்சார பற்றாக்குறை சரி செய்யப்படும். தேசிய விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு, ...

17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

Posted: 09 Jun 2014 12:43 AM PDT

புதுடில்லி: டேராடூன் போலி என்கவுன்ட்டர் வழக்கில், 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டில்லி கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ் மொழி முதல் பாடமாக அறிவிப்பு : தனியார் பள்ளிகள் வரவேற்பு

Posted: 09 Jun 2014 12:39 AM PDT

கோவை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கம் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் டாடாபாத்தில் நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், பள்ளி அங்கீகாரம் ...

தையல் மெசின்னில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி ?

Posted: 08 Jun 2014 08:59 PM PDT

தையல் மெசின்னில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி ?சில நேரம் இப்படி செய்வதால் உடம்பு சூடாகி மூக்கில் ரத்தம் வடிதல் அல்லது எச்சில் துப்பும் போது ரத்தம் வருதல் , வெள்ளைபடுதல் , கால் மறுத்து போவது , கண் வலி போன்றவை , வர கூடியதால் , இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

நிலவு உருவானது எப்படி ?

Posted: 08 Jun 2014 08:42 PM PDT

* பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும் சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில் நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். * பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ' தியா ' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ...

ந.க. துறைவன் - ஒரு பக்கக் கதை.

Posted: 08 Jun 2014 08:18 PM PDT

* ந.க. துறைவன் ஒரு பக்கக் கதை. * யார் அவர்கள்…? * அவள் பஸ் விட்டிறங்கினாள். சற்றும் தாமதிக்காமல் அவள் முன்னால் வந்தவன், அவளை வேகமாக இழுத்து நடுத்தெருவில் வைத்து அடி அடியென்று அடித்தான். உடனே வேடிக்கைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. யாரும் எதற்காக அடிக்கிறாய்? என்று கேட்பதற்கும், விலக்கி விடுவற்கும் துணியவில்லை. கூட்டத்தினர் ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக் கொண்டு, அனுதாபப்பட்டார்கள். யாரோ ஒருத்தர் துணிச்சலாய் " ஏன்டா, அடிக்கிறாய்? என்று கேட்க வந்தவனை, அவன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் ...

பாமரர் தேவாரம்

Posted: 08 Jun 2014 06:35 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™