Tamil News | Online Tamil News |
- 'இனி எப்ப வேணாலும் சந்திக்கலாம்': மோடி சொல்லிட்டார் என்கிறார் விஜயகாந்த்
- பா.ஜ.,வுக்கு இப்போதைக்கு புதிய தலைவர் இல்லை: ராஜ்நாத் சிங்கே சில மாதங்கள் தொடர்வார்
- 'அவ்வை நடராஜனுக்கு அதிகாரம் எங்கே?': கருணாநிதி
- குறுவை சாகுபடிக்கு ரூ.32.95 கோடியில் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- ஒரு மாதத்தைக் கடந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: அணையில் 142 அடி உயர்த்துவது எப்போது
- லோக்சபா சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு: பிரதமர் மோடி புகழாரம்
- 'வழவழ, கொழகொழ' விவகாரங்கள் மோடிக்கு பிடிக்காது: மத்திய அரசின் துறை செயலர்கள் தகவல்
- புனித கங்கை நதியை சுத்தப்படுத்த பேச்சு துவக்கம்: நான்கு துறைகள் இணைந்து செயல்பட முடிவு
- பிரதமர், தலைவர்கள் காலில் விழ எம்.பி.,க்களுக்கு தடை : 'காக்கா பிடிக்கும் வேலையில் ஈடுபடாதீர்கள்' என கண்டிப்பு
| 'இனி எப்ப வேணாலும் சந்திக்கலாம்': மோடி சொல்லிட்டார் என்கிறார் விஜயகாந்த் Posted: 'என்னை சந்திக்க முடியாததற்கு, மோடி வருத்தம் தெரிவித்தார். இனி, எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; தொலைபேசியிலும் பேசலாம் என, உறுதியளித்து உள்ளார்' என, மாவட்ட செயலர்களிடம், விஜயகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மாதம் 26ம் தேதி, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு சென்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மோடியை சந்தித்து பேச, தீவிர முயற்சி எடுத்தார். ஆனாலும், மோடியை சந்திக்க முடியவில்லை.அதனால், விரக்தியுடன் சென்னை திரும்பினார்.அதிருப்திஅதேநேரத்தில், முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் டில்லி சென்று மோடியையும், மத்திய அமைச்சர்களையும் ... |
| பா.ஜ.,வுக்கு இப்போதைக்கு புதிய தலைவர் இல்லை: ராஜ்நாத் சிங்கே சில மாதங்கள் தொடர்வார் Posted: புதுடில்லி: 'பா.ஜ., தேசிய தலைவராக, ராஜ்நாத் சிங், இன்னும் சில மாதங்களுக்கு தொடர்வார்; புதிய தலைவர்கள் தேர்வு இப்போதைக்கு இல்லை' என, டில்லி, பா.ஜ., தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி, பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையிலான அமைச்சரவையில், பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக உள்ளார். 'ஒருவருக்கு ஒரு பதவி' முறை, பா.ஜ.,வில் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில், கட்சித் தலைவர் பொறுப்பு, ராஜ்நாத் வசம் இருந்து பிறருக்கு ... |
| 'அவ்வை நடராஜனுக்கு அதிகாரம் எங்கே?': கருணாநிதி Posted: 'செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராஜனுக்கு அதிகாரம் வழங்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:என் பிறந்த நாளன்று, 14.50 லட்சம் பேர், என் மீது கொண்டுள்ள பாசம், அன்பின் காரணமாக, குறுஞ்செய்தி, முகநூல், டுவிட்டர் மற்றும் இணையதளம் வாயிலாக, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.நிறுவனத்திற்கு, கட்டப்பட வேண்டிய கட்டட பணிகள் விரைவுபடுத்தப்படாமல் உள்ளன.சில நாட்களுக்கு முன், இந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராஜன், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ... |
| குறுவை சாகுபடிக்கு ரூ.32.95 கோடியில் திட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு Posted: சென்னை: குறுவை சாகுபடியை ஊக்குவிக்க, 32.95 கோடி ரூபாய் செலவில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். மேலும், 'ஜூன் 12ம் தேதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க இயலாது' என்றும் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில், நடப்பு ஆண்டு, குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் ... |
| ஒரு மாதத்தைக் கடந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: அணையில் 142 அடி உயர்த்துவது எப்போது Posted: கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில், 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி, ஒரு மாதம் கடந்த நிலையில், இதுவரை தீர்ப்பை அமல்படுத்தாமல், தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதால், கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது.பெரியாறு அணை தொடர்பாக, தமிழகம், கேரளா இடையே 1979 முதல் பிரச்னை இருந்து வருகிறது. நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு நடந்தது. கடந்த 2006 பிப்., 27ல், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அமல்படுத்த விடாமல், கேரள அரசு பல்வேறு தடைகளை ... |
| லோக்சபா சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வு: பிரதமர் மோடி புகழாரம் Posted: புதுடில்லி: புதிய லோக்சபாவின் சபாநாயகராக, சுமித்ரா மகாஜன், 71, ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.பதினாறாவது லோக்சபாவின், முதல் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான நேற்று, சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரும், இந்தூர் லோக்சபா தொகுதியில் இருந்து, எட்டு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவருமான சுமித்ரா மகாஜனை, சபாநாயகராக தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். அதை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வழிமொழிந்தார்.குரல் ஓட்டெடுப்பு: இதுதவிர, மகாஜனுக்கு ஆதரவாக, ஆளும் கட்சி மற்றும் ... |
| 'வழவழ, கொழகொழ' விவகாரங்கள் மோடிக்கு பிடிக்காது: மத்திய அரசின் துறை செயலர்கள் தகவல் Posted: புதுடில்லி: 'வழவழ, கொழகொழ விவகாரங்கள், மோடிக்கு பிடிக்காது; ஒன்றிரண்டு வரிகளில், பதிலை எதிர்பார்க்கிறார்; அவருக்கு அனுப்பப்படும் பைல்களிலும், சுருக்கமான, எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், செயலர்கள் எழுத வற்புறுத்துகிறார்' என, மத்திய அரசின் செயலர்கள் தெரிவித்துள்ளனர்.நாட்டின், 15வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு, ஏற்கனவே, குஜராத் முதல்வராக, 13 ஆண்டுகள் இருந்த அனுபவம், அதிக அளவில் கைகொடுக்கிறது. அவரின் அணுகுமுறை குறித்து, செயலர் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது: தகவல் தொழில்நுட்ப அறிவு, அவருக்கு அதிகம் உள்ளதால், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ... |
| புனித கங்கை நதியை சுத்தப்படுத்த பேச்சு துவக்கம்: நான்கு துறைகள் இணைந்து செயல்பட முடிவு Posted: புதுடில்லி: 'புனித நதி கங்கையை சுத்தப்படுத்துவோம்' என, தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது, அடுத்த சில நாட்களிலேயே செயல் வடிவம் பெறத் துவங்கியுள்ளது. மத்திய நீர்வளத்துறை, சாலை போக்குவரத்து துறை, கப்பல் போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா துறைகள் இணைந்து, நேற்று இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுத்து உள்ளன.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மோடி, 'நாட்டின் நதிகளை சுத்தப்படுத்துவோம்; அதற்கான ஏற்பாடுகளை முழு மனதுடன் மேற்கொள்வோம்; குறிப்பாக, கங்கை நதியை ... |
| Posted: புதுடில்லி:'எம்.பி.,க்கள் யாரும் என் காலிலோ அல்லது இதர பா.ஜ., தலைவர்களின் காலிலோ விழக்கூடாது. 'காக்கா பிடிக்கும் வேலையிலும் ஈடுபடக் கூடாது' என, பிரதமர் நரேந்திர மோடி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். 'அறிவுத் திறமையை வளர்த்து, சிறந்த எம்.பி.,க்களாக பணியாற்ற வேண்டும்' என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் பங்கேற்ற, பா.ஜ., பார்லிமென்ட் கட்சிக் கூட்டம், பார்லி., மைய மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:என்னை சந்திக்கும், புதிய எம்.பி.,க்கள் பலர், என் காலைத் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 07,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |