Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தொழில் நிறுவன ஒதுக்கீடு பி.இ. இடங்கள்: ஜூன் 20 ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகம்
- ஹைதர் அலியை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல்
- சிதம்பரத்தில் தலித் வீடுகள் மீது தாக்குதல்: நிவாரணம் வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கடிதம்
- கிருஷ்ணா நீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
- பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள்: பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை
- மேம்பாலப் பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ரயில்வே கோட்ட மேலாளர்
- பள்ளிகளில் ஜூன் 9 முதல் 13 வரை மழைநீர் சேகரிப்பு வாரம்
- அரக்கோணம் பணிமனைப் பகுதியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன
- புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது: ராமதாஸ்
- திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை: குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமா அரசு?
- இணையம் மூலம் வாழ்த்தியவர்களுக்கு கருணாநிதி நன்றி
- தேவை தூய கழிப்பறை
- நாயக் குழு பரிந்துரையும் கவர்னர் கருத்தும்
- முதல் சுற்று.. முழு வெற்றி..!
- மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்: அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு
- 2ஜி: தயாளு அம்மாள் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் இல்லை
- அதிமுகவில் பாமகவின் மு.ராமதாஸ்
- ஜூன் 10- இல் மோடியைச் சந்திக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முடிவு
- ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
- நடப்பாண்டில் இலவச கறவை மாடுகள் திட்டத்துக்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு
- கூட்டுறவு அச்சகத்துக்கு புதிய இயந்திரம்
- தேர்தல் தோல்வி: இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
- "அம்மா திட்ட முகாம்களில் 18.5 லட்சம் மனுக்களுக்கு உடனடி தீர்வு'
- கங்கை நதி தூய்மைப்பணி: 4 அமைச்சகங்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு
- அமைச்சர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி
- முல்லைப் பெரியாறு: 9இல் கேரள பேரவை விவாதம்
- அமெரிக்கத் தூதர் கேத்லீன் ஸ்டீஃபன்ஸ் பொறுப்பேற்பு
- ஆம் ஆத்மியில் வலுக்கிறது மணீஷ் சிஸோடியா-யோகேந்திர யாதவ் மோதல்
- நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு
- அஸ்ஸாமில் தீவிரவாதிகளுடன் மோதல்: எஸ்.பி. பலி
- மோடியின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்: அமெரிக்கா
- கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி தொடக்கம்
- செம்மங்காலா கால்நடை மருந்தகத்தில் உலர் தீவன கிட்டங்கி அமைக்க அரசு அனுமதி
- நாகர்கோவிலில் ரூ. 1.50 கோடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம்
- தலித் சகோதரிகள் பலாத்கார விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
- அரசுப் பள்ளியில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்தது
- பொது பட்ஜெட்: 9ஆம் தேதி நிதி அமைச்சர்கள் கூட்டம்
- விளவங்கோட்டில் ஜமாபந்தி: 187 மனுக்கள் பெறப்பட்டன
- கடல் அலையில் சிக்கி மாணவர் மாயம்
- குமரியில் ரூ. 3 கோடியில் கைவினைப் பொருள் கண்காட்சி விற்பனை மையம்
- பிளஸ் 2 மாணவிக்கு தவறான விடைத்தாள் நகல்
- மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை
- தெப்பத் திருவிழா: பகவதியம்மன் கோயில் குளத்தை நிரப்ப கோரிக்கை
- நாகர்கோவிலில் 12இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- குமரியில் 36 மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது
- நாகர்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை
- நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
- கோடை விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா
- கடலோரக் காவல் படையினர் மீன்களைப் பறித்துச் செல்கிறார்கள்
- புனித சவேரியார் ஆலய திருவுருவ பவனி
- புளியங்குளம் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம்
- ஜெயலலிதா மீதான வழக்கு: விசாரணைக்கு தடை நீடிப்பு
- சாகுபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா
- பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்குப் பரிசளிப்பு
- தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்தக் கோரிக்கை
- "இந்திய சிறைகளில் தண்டனை முடிந்த பாகிஸ்தான் கைதிகள் யாரும் இல்லை'
- சட்டப்பேரவை மனுக்கள் குழு 12-ல் தூத்துக்குடி வருகை
- நாசரேத் பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி
- பிரதமர் மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணம்
- விளாத்திகுளத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
- புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- உத்தரகண்ட் போலி என்கவுன்டர்: 18 போலீஸார் குற்றவாளிகள்: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு
- தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: கிராம மக்கள் சாலை மறியல்
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- காயல்பட்டினத்தில்அம்மா உணவகம்: அதிகாரிகள் ஆய்வு
- உடன்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்
- கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவால் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- விளாத்திகுளம் அருகே மணல் கடத்தல்: 2 பேர் கைது
- எட்டயபுரத்தில்அம்மா திட்ட முகாம்
- பாரபட்சமின்றி நடப்பேன்: பதவியேற்ற பின் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேச்சு
- ஆழ்வார்திருநகரி
- கன்னியாகுமரி
- இலங்கை: போரில் காணாமல் போனவர்கள் குறித்து 18,000 புகார்கள்
- சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீன கப்பல்கள்: ஜப்பான்
- தில்லி அரசு அதிகாரிகள் குழு குஜராத் பயணம்
- சட்டவிரோதமாக விற்பனை 315 சிலிண்டர்கள் பறிமுதல்
- இத்தாலியில் ஒரே நாளில் 2,500 அகதிகள் மீட்பு
- தனியார் மருந்துக் கடைகளில் ஆய்வு: துணைநிலை ஆளுநர் உத்தரவு
- தில்லி பல்கலை மாணவர் சேர்க்கை: 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை
- 40 முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சிங்கப்பூரில் வேலை: இலங்கை அரசு
- தலைநகரில் சில நாள்கள்மின் தடை நீடிக்கும்
- மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளம் சூசகம்
- கரி மாசுக்குறைப்பு நடவடிக்கை: "அமெரிக்காவின் கொள்கை இந்தியா, சீனாவை ஊக்குவிக்கும்'
- தலைநகர் பசுமை நடவடிக்கைக்காக வனத் துறைக்கு 37 ஏக்கர் நிலம்
- வரி உயர்வால் புகையிலை பயன்பாடு குறைந்தது
- ஆஸ்திரேலியா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு
- மாமல்லபுரத்தில் 15 நாள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது
- அம்மா திட்ட முகாம்
- தலசயனப் பெருமாள் கோயிலில் மழைநீர் சேகரிப்பு புனரமைப்புப் பணிகள் தொடக்கம்
- மழைநீர் சேகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு திட்டங்கள்
- விதிமீறிய ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம்
- இடி விழுந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
- செங்கல்பட்டு அகதிகள் 27 பேர் செய்யாறு முகாமுக்கு அதிரடி மாற்றம்
- ரசாயன முறையில் பழுக்க வைத்த 800 கிலோ மாம்பழம் பறிமுதல்
- வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு
- உக்ரைன் மீதான தலையீட்டுக்கு முடிவு
- குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது
- அகஸ்தியப்பா நகரில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
- அரசு சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- "சீனாவை விட குறைவான நிதியை பாதுகாப்புக்கு செலவிடுகிறது இந்தியா'
| தொழில் நிறுவன ஒதுக்கீடு பி.இ. இடங்கள்: ஜூன் 20 ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 06 Jun 2014 01:08 PM PDT பொறியியல் படிப்புகளில் தொழில் நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.பல்கலைக்கழகத்தின் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணைய தளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
| ஹைதர் அலியை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல் Posted: 06 Jun 2014 01:07 PM PDT அல்-உம்மா தீவிரவாதி ஹைதர் அலியை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி போலீஸார் சார்பில் கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. |
| Posted: 06 Jun 2014 01:06 PM PDT சிதம்பரத்தில் தேர்தல் வன்முறையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். |
| கிருஷ்ணா நீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 06 Jun 2014 01:04 PM PDT ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னையின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. |
| பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள்: பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை Posted: 06 Jun 2014 01:03 PM PDT பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை பெற பொதுமக்கள் தனியார் நிறுவனங்களை நாட வேண்டாம் என வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு அறிவுறுத்தி உள்ளது. |
| மேம்பாலப் பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ரயில்வே கோட்ட மேலாளர் Posted: 06 Jun 2014 01:02 PM PDT சேலம் ரயில்வே கோட்டத்தில் நடைபெற உள்ள மேம்பாலப் பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, கோட்ட மேலாளர் சுப்ரான்ஸூ வலியுறுத்தினார். |
| பள்ளிகளில் ஜூன் 9 முதல் 13 வரை மழைநீர் சேகரிப்பு வாரம் Posted: 06 Jun 2014 01:00 PM PDT அனைத்துப் பள்ளிகளிலும் ஜூன் 9 முதல் 13 வரை மழை நீர் சேகரிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. |
| அரக்கோணம் பணிமனைப் பகுதியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன Posted: 06 Jun 2014 12:59 PM PDT அரக்கோணம் ரயில் நிலைய பணிமனைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டது. |
| புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது: ராமதாஸ் Posted: 06 Jun 2014 12:56 PM PDT புதிய மதுக்கடைகளைத் திறக்காமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 06 Jun 2014 12:55 PM PDT திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், குறைபாடுகளைக் களைந்து மாணவர் சேர்க்கைக்கான அனுமதியைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| இணையம் மூலம் வாழ்த்தியவர்களுக்கு கருணாநிதி நன்றி Posted: 06 Jun 2014 12:53 PM PDT இணையத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த 14.48 லட்சம் பேருக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி கூறியுள்ளார். |
| Posted: 06 Jun 2014 12:51 PM PDT இரு இளம்பெண்கள் அந்தி வேளையில் ஊருக்கு வெளியே இயற்கையின் அழைப்புக்காக சென்றபோது வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது குறித்து அனைவராலும் பேசப்படுகிறது. |
| நாயக் குழு பரிந்துரையும் கவர்னர் கருத்தும் Posted: 06 Jun 2014 12:50 PM PDT சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட காலங்களில்கூட, இந்தியப் பொருளாதாரத்தையும், குறிப்பாக, இந்திய வங்கிகளையும் காப்பாற்றிய பெருமை ரிசர்வ் வங்கிக்கு உண்டு. |
| Posted: 06 Jun 2014 12:49 PM PDT முன்பு, 1977இல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசும், 1984இல் ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசும் ஏற்படுத்தியதைவிடவும் அதிகமான எதிர்பார்ப்பை நரேந்திர மோடி அரசு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. |
| மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம்: அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு Posted: 06 Jun 2014 12:46 PM PDT மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| 2ஜி: தயாளு அம்மாள் ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபம் இல்லை Posted: 06 Jun 2014 12:43 PM PDT 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரியுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் மனுவுக்கு ஆட்சேபம் இல்லை என்று தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. |
| அதிமுகவில் பாமகவின் மு.ராமதாஸ் Posted: 06 Jun 2014 12:41 PM PDT புதுவையைச் சேர்ந்த பாமக பிரமுகரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான மு.ராமதாஸ் அதிமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார். |
| ஜூன் 10- இல் மோடியைச் சந்திக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முடிவு Posted: 06 Jun 2014 12:38 PM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, வருகிற 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முறையிட கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு முடிவு செய்துள்ளது. |
| ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் Posted: 06 Jun 2014 12:38 PM PDT தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. |
| நடப்பாண்டில் இலவச கறவை மாடுகள் திட்டத்துக்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு Posted: 06 Jun 2014 12:36 PM PDT நடப்பு நிதியாண்டில் (2014-15) இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துக்காக ரூ.43.65 கோடி நிதி ஒதுக்குவதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. |
| கூட்டுறவு அச்சகத்துக்கு புதிய இயந்திரம் Posted: 06 Jun 2014 12:36 PM PDT சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு அச்சகத்தில் புதிய கணினி படிவங்கள் அச்சடிக்கும் இயந்திரம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. |
| தேர்தல் தோல்வி: இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் Posted: 06 Jun 2014 12:35 PM PDT மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) நடைபெறுகிறது. |
| "அம்மா திட்ட முகாம்களில் 18.5 லட்சம் மனுக்களுக்கு உடனடி தீர்வு' Posted: 06 Jun 2014 12:35 PM PDT அம்மா திட்ட முதல் கட்ட முகாம்களில் 18.5 லட்சம் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். |
| கங்கை நதி தூய்மைப்பணி: 4 அமைச்சகங்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு Posted: 06 Jun 2014 12:29 PM PDT கங்கை நதியை தூய்மைப்படுத்தி அதனை புனித சுற்றுலா மையமாக உருவாக்கும் பணியை மத்திய அரசின் 4 அமைச்சகங்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார். |
| அமைச்சர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி Posted: 06 Jun 2014 12:28 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்கள் 43 பேரை மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். |
| முல்லைப் பெரியாறு: 9இல் கேரள பேரவை விவாதம் Posted: 06 Jun 2014 12:28 PM PDT முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கேரள சட்டப் பேரவையில் வரும் 9ஆம் தேதி விவாதிக்கப்படவுள்ளது. |
| அமெரிக்கத் தூதர் கேத்லீன் ஸ்டீஃபன்ஸ் பொறுப்பேற்பு Posted: 06 Jun 2014 12:26 PM PDT இந்தியாவுக்கான தற்காலிக அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட கேத்லீன் ஸ்டீஃபன்ஸ் தில்லியில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். |
| ஆம் ஆத்மியில் வலுக்கிறது மணீஷ் சிஸோடியா-யோகேந்திர யாதவ் மோதல் Posted: 06 Jun 2014 12:24 PM PDT ஆம் ஆத்மி கட்சியில் மூத்த தலைவர்களான மணீஷ் சிúஸாடியா, யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அக்கட்சிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. |
| நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து அமித் ஷாவுக்கு விலக்கு Posted: 06 Jun 2014 12:23 PM PDT துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கில் பாஜக பொதுச் செயலரும், குஜராத் மாநிலத்தின் உள்துறை முன்னாள் அமைச்சருமான அமித் ஷா நேரில் ஆஜராவதில் இருந்து சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விலக்களித்தது. |
| அஸ்ஸாமில் தீவிரவாதிகளுடன் மோதல்: எஸ்.பி. பலி Posted: 06 Jun 2014 12:22 PM PDT அஸ்ஸாமின் கர்பி ஆங்கலாங் மாவட்டத்தில் கர்பி மக்கள் விடுதலை புலிகளுடன் நடந்த மோதலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஏ.பி.ரெüட் கூறியதாவது: |
| மோடியின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்: அமெரிக்கா Posted: 06 Jun 2014 12:20 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப்ஃ தெரிவித்துள்ளார். |
| கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி தொடக்கம் Posted: 06 Jun 2014 12:18 PM PDT நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்படுகிறது. |
| செம்மங்காலா கால்நடை மருந்தகத்தில் உலர் தீவன கிட்டங்கி அமைக்க அரசு அனுமதி Posted: 06 Jun 2014 12:17 PM PDT செம்மங்காலா கால்நடை மருந்தகத்தில் உலர் தீவன கிட்டங்கி அமைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. |
| நாகர்கோவிலில் ரூ. 1.50 கோடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடம் Posted: 06 Jun 2014 12:17 PM PDT நாகர்கோவிலில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடத்தை தமிழக ஊரக தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ப. மோகன், வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| தலித் சகோதரிகள் பலாத்கார விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு Posted: 06 Jun 2014 12:17 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில் 2 தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அந்த மாநில அரசு அமைத்துள்ளது. |
| அரசுப் பள்ளியில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்தது Posted: 06 Jun 2014 12:16 PM PDT குமரி மாவட்டம் பத்துகாணி அரசுப் பழங்குடியினர் பள்ளியில் வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| பொது பட்ஜெட்: 9ஆம் தேதி நிதி அமைச்சர்கள் கூட்டம் Posted: 06 Jun 2014 12:16 PM PDT மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வரும் 9ஆம் தேதி தில்லியில் ஆலோசனை நடத்த உள்ளார். |
| விளவங்கோட்டில் ஜமாபந்தி: 187 மனுக்கள் பெறப்பட்டன Posted: 06 Jun 2014 12:16 PM PDT விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. |
| கடல் அலையில் சிக்கி மாணவர் மாயம் Posted: 06 Jun 2014 12:16 PM PDT தேங்காய்ப்பட்டினத்தில் கடலில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்ற மாணவர் கடல் அலையில் சிக்கி மாயமானர். |
| குமரியில் ரூ. 3 கோடியில் கைவினைப் பொருள் கண்காட்சி விற்பனை மையம் Posted: 06 Jun 2014 12:15 PM PDT கன்னியாகுமரியில் ரூ. 3 கோடி செலவில் அமைந்து வரும் கைவினைப் பொருள்கள் விற்பனை மையத்துக்கான கட்டுமானப் பணிகளை மாநில ஊரக தொழில்துறை அமைச்சர் ப. மோகன், |
| பிளஸ் 2 மாணவிக்கு தவறான விடைத்தாள் நகல் Posted: 06 Jun 2014 12:15 PM PDT பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் கேட்டு விண்ணப்பம் செய்த கன்னியாகுமரி புனித அந்தோனியார் பள்ளி மாணவிக்கு தவறான விடைத்தாள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாணவி மாவட்டக் கல்வி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தார். |
| மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை Posted: 06 Jun 2014 12:15 PM PDT மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் கேட்டுக்கொண்டார். |
| தெப்பத் திருவிழா: பகவதியம்மன் கோயில் குளத்தை நிரப்ப கோரிக்கை Posted: 06 Jun 2014 12:14 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடத்தும் பொருட்டு, தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| நாகர்கோவிலில் 12இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 06 Jun 2014 12:14 PM PDT நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.ஏ. அபுபக்கர் சித்திக் வெளியிட்டு செய்திக்குறிப்பு: |
| குமரியில் 36 மாணவர்களுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது Posted: 06 Jun 2014 12:14 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் 36 மாணவ, மாணவியருக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. |
| நாகர்கோவிலில் சூறைக்காற்றுடன் மழை Posted: 06 Jun 2014 12:14 PM PDT நாகர்கோவிலில் சூறாவளிக் காற்றுடன் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் காலை முதல் வா |
| நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு Posted: 06 Jun 2014 12:13 PM PDT வள்ளியூரில் வழக்குரைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை நீதிமன்றப்பணிகளை வழக்குரைஞர்கள் புறக்கணித்தனர். |
| கோடை விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா Posted: 06 Jun 2014 12:13 PM PDT காரங்காடு, தூய அலோசியஸ் திடலில் கோடை விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. |
| கடலோரக் காவல் படையினர் மீன்களைப் பறித்துச் செல்கிறார்கள் Posted: 06 Jun 2014 12:13 PM PDT கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி மீனவர்களை தூத்துக்குடி கடலோரக் காவல் படையினர் அடித்து துன்புறுத்தி மீன்களை அள்ளிச் செல்வதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். |
| புனித சவேரியார் ஆலய திருவுருவ பவனி Posted: 06 Jun 2014 12:12 PM PDT தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவுருவ பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
| புளியங்குளம் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கம் Posted: 06 Jun 2014 12:12 PM PDT சாத்தான்குளம் அருகே புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்க விழா நடைபெற்றது. |
| ஜெயலலிதா மீதான வழக்கு: விசாரணைக்கு தடை நீடிப்பு Posted: 06 Jun 2014 12:12 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க விதித்திருந்த இடைக்காலத் தடையை இம்மாதம் 16ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சாகுபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா Posted: 06 Jun 2014 12:12 PM PDT சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. டி.சி.டபிள்யூ. நிறுவன நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்) ஜெயக்குமார் தலைமை வ |
| பொதுத்தேர்வில் சிறப்பிடம்: மாணவிகளுக்குப் பரிசளிப்பு Posted: 06 Jun 2014 12:11 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியரில் முதலிடம் பிடித்த ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. |
| தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்தக் கோரிக்கை Posted: 06 Jun 2014 12:11 PM PDT தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்த கலால் வரியில் விலக்கு அளிக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| "இந்திய சிறைகளில் தண்டனை முடிந்த பாகிஸ்தான் கைதிகள் யாரும் இல்லை' Posted: 06 Jun 2014 12:11 PM PDT இந்திய சிறைகளில் தண்டனைக் காலம் முடிந்த பாகிஸ்தான் கைதிகள் உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளதை இந்தியா மறுத்துள்ளது. |
| சட்டப்பேரவை மனுக்கள் குழு 12-ல் தூத்துக்குடி வருகை Posted: 06 Jun 2014 12:10 PM PDT தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஜூன் 12-ம் தேதி தூத்துக்குடி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| நாசரேத் பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி Posted: 06 Jun 2014 12:10 PM PDT தேசிய திறனாய்வுத் தேர்வில், நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் 5 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். |
| பிரதமர் மோடியின் தொடர் வெளிநாட்டுப் பயணம் Posted: 06 Jun 2014 12:10 PM PDT பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் பூடான் தொடங்கி ஜப்பான், பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். |
| விளாத்திகுளத்தில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 06 Jun 2014 12:10 PM PDT விளாத்திகுளத்தில் அதிமுக தொகுதி கழகம் சார்பில் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 06 Jun 2014 12:10 PM PDT கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை நக |
| உத்தரகண்ட் போலி என்கவுன்டர்: 18 போலீஸார் குற்றவாளிகள்: தில்லி நீதிமன்றம் தீர்ப்பு Posted: 06 Jun 2014 12:10 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் 2009ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் ஒருவர் போலி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 18 போலீஸாரை குற்றவாளிகள் என்று தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: கிராம மக்கள் சாலை மறியல் Posted: 06 Jun 2014 12:09 PM PDT ஆழ்வார்திருநகரி அருகே வெள்ளிக்கிழமை இரவு கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து குற்றவாளியை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை Posted: 06 Jun 2014 12:09 PM PDT தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி |
| காயல்பட்டினத்தில்அம்மா உணவகம்: அதிகாரிகள் ஆய்வு Posted: 06 Jun 2014 12:09 PM PDT தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் அம்மா உணவகம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து காயல்பட்டினத்தில் அம்மா உணவகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. |
| உடன்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2014 12:09 PM PDT பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி உடன்குடி ஒன்றிய பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. |
| கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவால் மீது குற்றச்சாட்டுகள் பதிவு Posted: 06 Jun 2014 12:09 PM PDT பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| விளாத்திகுளம் அருகே மணல் கடத்தல்: 2 பேர் கைது Posted: 06 Jun 2014 12:08 PM PDT விளாத்திகுளம் அருகே கேரளத்துக்கு மணல் கடத்தவிருந்த இரண்டு லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சூரன்குடி சந்திப்பில் |
| எட்டயபுரத்தில்அம்மா திட்ட முகாம் Posted: 06 Jun 2014 12:08 PM PDT எட்டயபுரம் வட்டம் நம்பிபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| பாரபட்சமின்றி நடப்பேன்: பதவியேற்ற பின் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேச்சு Posted: 06 Jun 2014 12:08 PM PDT மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரான சுமித்ரா மகாஜன் (72), பாரபட்சமின்றி நடந்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார். |
| Posted: 06 Jun 2014 12:08 PM PDT |
| Posted: 06 Jun 2014 12:07 PM PDT |
| இலங்கை: போரில் காணாமல் போனவர்கள் குறித்து 18,000 புகார்கள் Posted: 06 Jun 2014 12:03 PM PDT இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவால் ஏற்படுத்தப்பட்ட குழு, பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் சுமார் 18,590 புகார் மனுக்களை பெற்றுள்ளது. |
| சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் சீன கப்பல்கள்: ஜப்பான் Posted: 06 Jun 2014 12:02 PM PDT ஜி7 நாடுகளின் தலைவர்களின் எச்சரிக்கையையும் மீறி சர்ச்சைக்குரிய கிழக்கு சீன கடல் பகுதியில், 2 கப்பல்களை சீனா நிறுத்தியுள்ளது என்று ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. |
| தில்லி அரசு அதிகாரிகள் குழு குஜராத் பயணம் Posted: 06 Jun 2014 12:01 PM PDT குஜராத் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் அரசுத் திட்டடங்கள் குறித்து அறிந்துகொள்ள தில்லி அரசின் உயர் அதிகாரிகள் அடங்கிய மூன்று குழுக்கள் அந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். |
| சட்டவிரோதமாக விற்பனை 315 சிலிண்டர்கள் பறிமுதல் Posted: 06 Jun 2014 12:01 PM PDT தில்லியில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்த நிலையங்களில், மாநில அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். |
| இத்தாலியில் ஒரே நாளில் 2,500 அகதிகள் மீட்பு Posted: 06 Jun 2014 12:01 PM PDT இத்தாலியில், 24 மணி நேரத்திற்குள்ளாக 2,500 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை வெள்ளிக்கிழமை தெரிவித்தது. |
| தனியார் மருந்துக் கடைகளில் ஆய்வு: துணைநிலை ஆளுநர் உத்தரவு Posted: 06 Jun 2014 12:01 PM PDT அரசு மருத்துவமனைகளுக்கு அருகே இயங்கும் தனியார் மருந்துக் கடைகளில் ஆய்வு நடத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார். |
| தில்லி பல்கலை மாணவர் சேர்க்கை: 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை Posted: 06 Jun 2014 12:00 PM PDT தில்லி பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| 40 முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு சிங்கப்பூரில் வேலை: இலங்கை அரசு Posted: 06 Jun 2014 12:00 PM PDT இலங்கையில், அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேர், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியப் போவதாக, மறுவாழ்வுத் திட்ட ஆணையர் ஜகத் விஜேதில்லகே கூறியுள்ளார். |
| தலைநகரில் சில நாள்கள்மின் தடை நீடிக்கும் Posted: 06 Jun 2014 12:00 PM PDT மின் பற்றாக்குறை காரணமாக தில்லியில் அடுத்துவரும் சில நாள்களுக்கு மின் தடை நீடிக்கும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார். |
| மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸýக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளம் சூசகம் Posted: 06 Jun 2014 12:00 PM PDT பிகார் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஷகீல் அகமதுவை மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வுசெய்ய ஆதரவளிக்க ஐக்கிய ஜனதா தளம் தயாராக |
| கரி மாசுக்குறைப்பு நடவடிக்கை: "அமெரிக்காவின் கொள்கை இந்தியா, சீனாவை ஊக்குவிக்கும்' Posted: 06 Jun 2014 12:00 PM PDT கரி மாசுவை குறைப்பதற்கான அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய கரியமில வாயு வெளியேற்றக் கொள்கை இந்தியா, சீனா போன்ற நாடுகளை ஊக்குவிப்பதாக அமையும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
| தலைநகர் பசுமை நடவடிக்கைக்காக வனத் துறைக்கு 37 ஏக்கர் நிலம் Posted: 06 Jun 2014 11:59 AM PDT தலைநகர் தில்லியைப் பசுமையாக்கும் முயற்சியாக சாஸ்திரி பூங்கா அருகே 37 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை வனத் துறைக்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி. |
| வரி உயர்வால் புகையிலை பயன்பாடு குறைந்தது Posted: 06 Jun 2014 11:59 AM PDT சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருள்கள் மீதான வரி உயர்வு காரணமாக அவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது, இந்திய பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், அரசின் வருவா |
| ஆஸ்திரேலியா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு Posted: 06 Jun 2014 11:59 AM PDT ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கு இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 13 சதவீதம் உயர்ந்துள்ளது. |
| மாமல்லபுரத்தில் 15 நாள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது Posted: 06 Jun 2014 11:59 AM PDT மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாமல்லபுரம் டிரை சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் கிழக்கு பதிப்பகம் சார்பில் புத்தகக் கண்காட்சி |
| Posted: 06 Jun 2014 11:58 AM PDT உத்தரமேரூர் தாலுக்கா, கம்மாளம்பூண்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தலசயனப் பெருமாள் கோயிலில் மழைநீர் சேகரிப்பு புனரமைப்புப் பணிகள் தொடக்கம் Posted: 06 Jun 2014 11:58 AM PDT மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலில் மழைநீர் சேகரிப்பு புனரமைப்பு திட்டப் பணிகளை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| மழைநீர் சேகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு திட்டங்கள் Posted: 06 Jun 2014 11:58 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. |
| விதிமீறிய ஆம்புலன்ஸ் டிரைவர் பணிநீக்கம் Posted: 06 Jun 2014 11:58 AM PDT காஞ்சிபுரத்தில் விதிமீறி ஆம்புலன்ஸ் சைரனை இயக்கியபடி சென்ற டிரைவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். |
| இடி விழுந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு Posted: 06 Jun 2014 11:57 AM PDT செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் திருக்கச்சூர் கிராமத்தில் இடி விழுந்ததில் 2 பள்ளி மாணவர்கள் இறந்தனர். |
| செங்கல்பட்டு அகதிகள் 27 பேர் செய்யாறு முகாமுக்கு அதிரடி மாற்றம் Posted: 06 Jun 2014 11:57 AM PDT செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட 27 பேர் அதிரடி நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு முகாமுக்கு வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்படடனர். |
| ரசாயன முறையில் பழுக்க வைத்த 800 கிலோ மாம்பழம் பறிமுதல் Posted: 06 Jun 2014 11:57 AM PDT காஞ்சிபுரத்தில் ரசாயன முறையில் கல் வைத்து பழுக்க வைத்த 800 கிலோ மாம்பழத்தை சுகாதாரத் துறை அதிகாரிகள் அழித்தனர். |
| வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் திருட்டு Posted: 06 Jun 2014 11:57 AM PDT தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். |
| உக்ரைன் மீதான தலையீட்டுக்கு முடிவு Posted: 06 Jun 2014 11:57 AM PDT உக்ரைன் மீதான தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரும்படி ரஷிய அதிபர் புதினிடம், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார். |
| குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது Posted: 06 Jun 2014 11:56 AM PDT மறைமலைநகர் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். |
| அகஸ்தியப்பா நகரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் Posted: 06 Jun 2014 11:56 AM PDT உத்தரமேரூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| அரசு சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 06 Jun 2014 11:56 AM PDT செய்யூர் அருகே உள்ள சூனாம்பேடு அரசு சுகாதார நிலையத்தில் டாக்டர்களை நியமிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| "சீனாவை விட குறைவான நிதியை பாதுகாப்புக்கு செலவிடுகிறது இந்தியா' Posted: 06 Jun 2014 11:56 AM PDT இந்திய-சீன எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையிலும், பாதுகாப்புக்கு சீனா செலவிடுவதில் மூன்றில் ஒரு பங்கு நிதியையே இந்தியா செலவிடுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |