Tamil News | Online Tamil News |
- அ.தி.மு.க.,வுக்கு துணை சபாநாயகர் பதவி: உறவுகளை வலுப்படுத்த பா.ஜ., தீவிரம்
- அமெரிக்க அதிபர் ஒபாமா - பிரதமர் மோடி சந்திப்பு? செப்டம்பரில் நடைபெற அதிக வாய்ப்பு
- 8 ஆண்டாக கிடப்பில் தமிழக ரயில் திட்டங்கள்: பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா?
- ஒடிசா மாநிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க தடை: தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்?
- அரசு கேபிள் 'டிவி'க்கு 'டிஜிட்டல்' உரிமம்: மத்திய அமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம்
- சத்தியமூர்த்தி பவனில் காமராஜருக்கு சிலை: காங்., ஆட்சியை பிடிக்க கேரள ஜோசியர் யோசனை
- காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு விடிவு வருமா? மத்திய நீர்வள அமைச்சகம் சுறுசுறுப்பு
- தி.மு.க.,வில் மாவட்டங்களை பிரிக்க ஆறு பேர் குழு: களையெடுப்பில் கருணாநிதி தீவிரம்
- மீண்டும் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம்: தாண்டே குழு பரிந்துரை : மோடி அரசு ஏற்குமா?
| அ.தி.மு.க.,வுக்கு துணை சபாநாயகர் பதவி: உறவுகளை வலுப்படுத்த பா.ஜ., தீவிரம் Posted: புதுடில்லி: லோக்சபா சபாநாயகராக, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, சுமித்ரா மகாஜன் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அதே நேரத்தில், துணை சபாநாயகர் பதவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், பா.ஜ., திட்டமிட்டுள்ளது.பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடரின், இரண்டாவது நாளான நேற்று, புதிய எம்.பி.,க்கள் பதவியேற்றனர். எம்.பி.,க்கள் பதவியேற்பு இன்றுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, லோக்சபாவின் புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற ... |
| அமெரிக்க அதிபர் ஒபாமா - பிரதமர் மோடி சந்திப்பு? செப்டம்பரில் நடைபெற அதிக வாய்ப்பு Posted: வாஷிங்டன்: குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை காரணம் காட்டி, ஒன்பது ஆண்டுகளாக, 'விசா' வழங்க மறுத்த அமெரிக்கா, இப்போது இறங்கி வந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை, 63, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, 52, வரும் செப்டம்பர் மாதம் சந்தித்து பேச உள்ளதாக, இரு நாடுகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குஜராத்தில், கடந்த 2002ல், நடைபெற்ற மத கலவரங்களை கண்டித்தும், கலவரங்களை ஒடுக்க தவறினார் என, தெரிவித்தும், அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடிக்கு, 2005 முதல், அமெரிக்கா, விசா வழங்க மறுத்து வருகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக, மோடி தான் வருவார் என்பதை, முன்கூட்டியே கணித்த ... |
| 8 ஆண்டாக கிடப்பில் தமிழக ரயில் திட்டங்கள்: பட்ஜெட்டில் புதிய பாதைகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா? Posted: தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வர வேண்டிய, புதிய ரயில் பாதை திட்டங்கள் அனைத்தும், கிடப்பில் போடப்பட்டு உள்ளன. எட்டு ஆண்டுகளாக, ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும், எந்த ஒரு திட்டமும் முழுமையடையவில்லை. வரும் ரயில்வே பட்ஜெட்டிலாவது, இவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரயில்வே பட்ஜெட்டில்: 'புதிய ரயில் பாதைகளை அமைக்கவும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், நடப்பு நிதியாண்டில், 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், அடுத்த நிதியாண்டில், 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும் செய்ய, ரயில்வே துறை ... |
| ஒடிசா மாநிலத்தில் நிலக்கரி வெட்டி எடுக்க தடை: தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்? Posted: ஒடிசாவில் உள்ள, நிலக்கரி சுரங்கத்தில், கடும் வெயிலின் காரணமாக, நிலக்கரி வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழக மின் வாரிய அனல் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வட சென்னையில், அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், மின் உற்பத்தி செய்ய, நாள் தோறும், 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவை.35 ஆயிரம் டன் நிலக்கரி: இந்த நிலக்கரியானது, 'கோல் இந்தியா' நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி ... |
| அரசு கேபிள் 'டிவி'க்கு 'டிஜிட்டல்' உரிமம்: மத்திய அமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: சென்னை: 'தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, விரைவில், 'டிஜிட்டல்' உரிமம் வழங்க வேண்டும்' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 31 மாவட்டங்களில், கேபிள், 'டிவி' சேவையை வழங்கி வருகிறது. கட்டணமாக, 100 சேனல்களுக்கு, மாதம், 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம், 24 ஆயிரம் கேபிள், 'டிவி' ஆபரேட்டர், 65 லட்சம் வாடிக்கையாளர் பயன்பெறுகின்றனர். ... |
| சத்தியமூர்த்தி பவனில் காமராஜருக்கு சிலை: காங்., ஆட்சியை பிடிக்க கேரள ஜோசியர் யோசனை Posted: 'சத்தியமூர்த்தி பவனில், காமராஜர் சிலை நிறுவினால், இனி வரும் தேர்தல்களில், காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்' என, கேரள ஜோசியர் தெரிவித்த யோசனையை ஏற்று, வாஸ்து அடிப்படையில், காமராஜர் சிலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், 15ம் தேதி, காமராஜரின் பிறந்த நாளில், சிலை திறக்கப்பட உள்ளது.பணம் வசூல்: சென்னை, ராயப்பேட்டையில், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் இயங்கி வருகிறது. இந்த கட்டடம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் பொது மக்களிடம் பணம் வசூலித்து, கட்டப்பட்டது. தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில், இந்த ... |
| காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு விடிவு வருமா? மத்திய நீர்வள அமைச்சகம் சுறுசுறுப்பு Posted: நதிநீர் விவகாரங்கள் தொடர்பாக, தமிழக முதல்வர் வைத்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.சட்டரீதியாக...: தமிழகத்தைப் பொறுத்தவரை, நதிநீர் விவகாரங்களாக, முக்கியமாக பார்க்கப்படுபவை, காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் முல்லைப் பெரியாறு நீர்மட்ட உயர்வு ஆகிய பிரச்னைகள் தான். இரண்டு விஷயங்களிலுமே, பல ஆண்டுகால போரட்டத்திற்கு பின், சட்டரீதியாக தமிழகத்துக்கு நியாயம் கிடைத்தது. சுப்ரீம் கோர்ட்டில் நடந்த சட்ட பேராட்டம் தான், தமிழகத்துக்கு உரிய பலனை அளித்தது. ஆனாலும், காவிரி நடுவர் ... |
| தி.மு.க.,வில் மாவட்டங்களை பிரிக்க ஆறு பேர் குழு: களையெடுப்பில் கருணாநிதி தீவிரம் Posted: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை சீரமைக்கும் நடவடிக்கைகளில், தி.மு.க., தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாவட்டங்களை இரண்டாகப் பிரித்தால், புதிய மாவட்டச் செயலர் பதவிக்கு யார் யாரை நியமிக்கலாம் என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மாவட்ட பிரமுகர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறார். இதற்கிடையில், கட்சியில் மாவட்ட நிர்வாகங்களை எளிமையாக்குவதற்கும், வலிமைப்படுத்துவதற்கும், கட்சித் தலைமையிடம் பரிந்துரை செய்ய, ஆறு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா தேர்தல்களில், தொடர்ந்து தோல்வியைத் தழுவியதாலும், கட்சியின் ஓட்டு சதவீதம் ... |
| மீண்டும் 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம்: தாண்டே குழு பரிந்துரை : மோடி அரசு ஏற்குமா? Posted: புதுடில்லி: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானிய தொகையை, பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சேர்க்கும், 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை, மீண்டும் தொடர வேண்டும் என, தாண்டே குழு, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.சமையல் எரிவாயு: அரசின் பல்வேறு மானிய உதவிகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2013ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி, 'உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 1 முதல், இத்திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானிய தொகையை, நேரடியாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 06,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |