Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தேவை விவாதம்!

Posted: 05 Jun 2014 12:57 PM PDT

தேர்தலில் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்து அமைந்துள்ள 16ஆவது மக்களவையின் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

பாதிரியாரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

Posted: 05 Jun 2014 12:50 PM PDT

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 05 Jun 2014 12:49 PM PDT

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

2ஜி: கலைஞர் டிவியின் ரூ. 200 கோடி பரிவர்த்தனையில் தொடர்பில்லை

Posted: 05 Jun 2014 12:48 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் தனக்கும் தனியார் நிறுவனங்களுடன் கலைஞர் டிவி மேற்கொண்ட ரூ. 200 கோடி பரிவர்த்தனைக்கும் தொடர்பில்லை என்று ஜாமீன் கோரியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தரப்பில் வாதிடப்பட்டது.

பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 05 Jun 2014 12:47 PM PDT

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமாரை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 33 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

Posted: 05 Jun 2014 12:47 PM PDT

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 33 மீனவர்கள் வியாழக்கிழமை மாலை ராமேசுவரம் திரும்பினர்.

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

Posted: 05 Jun 2014 12:46 PM PDT

பாம்பன் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை: செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 05 Jun 2014 12:43 PM PDT

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள் விழா20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

Posted: 05 Jun 2014 12:41 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக

செங்கம் மக்கள் மைய செயற்குழுக் கூட்டம்

Posted: 05 Jun 2014 12:40 PM PDT

செங்கம் மக்கள் மையத்தின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஓய்வுபெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். மக்கள் மைய

நூலகத்துக்கு நூல்கள் நன்கொடை

Posted: 05 Jun 2014 12:38 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்குத் தேவையான நூல்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கல்லூரியில் புதிதாக 2 துறைகள் தொடக்கம்

Posted: 05 Jun 2014 12:38 PM PDT

 திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக 2 துறைகளைத் தொடங்க அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

Posted: 05 Jun 2014 12:38 PM PDT

திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கல்

Posted: 05 Jun 2014 12:37 PM PDT

புதுப்பாளையம் வட்டார வள மையத்துக்குள்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆரணி வட்டத்தில் ஜூன் 9 முதல் ஜமாபந்தி

Posted: 05 Jun 2014 12:37 PM PDT

ஆரணி வட்டத்தில் ஜூன் 9 முதல் ஜூன் 16 வரை காலை 9 மணி முதல் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை தனித்துணை வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் ஜமாபந்தி நடைபெறும் என்று ஆரணி வட்டாட்சியர் துரை.மணிமேகலை தெரிவித்துள்ளார்.

எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா

Posted: 05 Jun 2014 12:36 PM PDT

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் 11-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாம் நாளை தொடக்கம்

Posted: 05 Jun 2014 12:36 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை தொடங்குகிறது.

விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்: இன்று புகைப்படம் எடுக்கும் கிராமப் பகுதிகள்

Posted: 05 Jun 2014 12:36 PM PDT

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம்கள், போளூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வெம்பாக்கம் ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 05 Jun 2014 12:35 PM PDT

செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவர் கோமதி ரகு தலைமை தாங்கினார். வட்டார

போளூர் ஒன்றியத்தில் கூடுதல் உதவி இயக்குநர் ஆய்வு

Posted: 05 Jun 2014 12:34 PM PDT

போளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் உதவி இயக்குநர் சம்பத் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம்

Posted: 05 Jun 2014 12:34 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கற்கும் பாரதம் திட்டத்தின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் வந்தவாசி வட்டார வளமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பலாத்காரம் நடைபெறாது என்று எந்த அரசாலும் உறுதியளிக்க முடியாது: ம.பி. உள்துறை அமைச்சர்

Posted: 05 Jun 2014 12:32 PM PDT

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளே நடைபெறாது என்று எந்த அரசாலும் உறுதியளிக்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கௌர் கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் அமரீந்தர் சிங்

Posted: 05 Jun 2014 12:28 PM PDT

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும், தலைமை கொறடாவாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் பேர ஊழல்: இரு ஆளுநர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு?

Posted: 05 Jun 2014 12:28 PM PDT

சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இரு மாநில ஆளுநர்களை சாட்சிகளாக வாக்குமூலம் பதிவு செய்ய சிபிஐ விரைவில் தனது அதிகாரிகளை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவை புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

Posted: 05 Jun 2014 12:27 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான உறுப்பினர்கள் முறைப்படி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸூடன் கூட்டணி தொடரும்: லாலு

Posted: 05 Jun 2014 12:25 PM PDT

காங்கிரஸ் கட்சியுடனான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

அருமனை பகுதியில் தொடர் திருட்டு

Posted: 05 Jun 2014 12:23 PM PDT

குமரி மாவட்டம் அருமனை பகுதியில் ஒரே நாளில் 3 இடங்களில்  திருட்டு நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து ஈத்தாமொழி வரை 26 கி.மீ. ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

Posted: 05 Jun 2014 12:22 PM PDT

உலக ரத்த தான நன்கொடையாளர்கள் தினத்தை (ஜூன் 14)  முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து ஈத்தாமொழி வரையிலான 26 கி.மீ தொலைவு மாரத்தான் ஓட்டம் ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாகர்கோவிலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 05 Jun 2014 12:22 PM PDT

நாகர்கோவிலில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை

புதுக்கடை அருகே இளைஞர் மர்மச்சாவு

Posted: 05 Jun 2014 12:22 PM PDT

புதுக்கடை அருகே உள்ள வேட்டைமங்கலம் பகுதியில்  புதன்கிழமை இளைஞர் மர்மமாக இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சுசீந்திரத்தில் ஆட்டோ தீ வைத்து எரிப்பு

Posted: 05 Jun 2014 12:22 PM PDT

சுசீந்திரத்தில் ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொது சிவில் சட்டம் கோரிய மனு தள்ளுபடி

Posted: 05 Jun 2014 12:22 PM PDT

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கால நிர்ணயம் செய்து அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

சிஐடியூ போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jun 2014 12:21 PM PDT

அரசுப் போக்குவரத்துக் கழகம் திருவட்டாறு பணிமனை முன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தொழிலாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநிலங்களவை தேர்தல்: பிரஃபுல் படேல் மனு தாக்கல்

Posted: 05 Jun 2014 12:21 PM PDT

மகாராஷ்டிரத்தில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரஃபுல் படேல் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

மார்த்தாண்டம் அருகே வீட்டில் பணம் திருட்டு

Posted: 05 Jun 2014 12:21 PM PDT

மார்த்தாண்டம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் பணம் மற்றும் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். மார்த்தாண்டம் அருகேயுள்ள குளக்கச்சி  பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து

குமரி மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு திட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்

Posted: 05 Jun 2014 12:21 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளில் மாறுபட்ட கட்டணத்தை முறைப்படுத்த கோரிக்கை

Posted: 05 Jun 2014 12:20 PM PDT

ஒரே தொலைவில் உள்ள இடங்களுக்குச் செல்ல அரசுப் பேருந்துகளில்  மாறுபட்ட கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினக் கருத்தரங்கு

Posted: 05 Jun 2014 12:20 PM PDT

நாகர்கோவில் அருகே உலக சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. நாகர்கோவில் அருகே காளிகேசத்தில் பைரவி பவுண்டேஷன் மற்றும் மாவட்ட வன அலுவலகம்

நாகர்கோவில் அல்போன்சா பள்ளி வெள்ளி விழா

Posted: 05 Jun 2014 12:20 PM PDT

நாகர்கோவில் அல்போன்சா பள்ளி வெள்ளி விழா ஆண்டுக்கான   தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாகர்கோவிலில் என்.சி.சி. கூட்டுப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

Posted: 05 Jun 2014 12:20 PM PDT

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் என்.சி.சி. வருடாந்திர கூட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை ( ஜூன் 6) தொடங்குகிறது.

"ஆம் ஆத்மி'யிலிருந்து தமானியா, பிரீத்தி மேனன் விலகல்

Posted: 05 Jun 2014 12:20 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அஞ்சலி தமானியா மற்றும் மாநிலச் செயலர் பிரீத்தி மேனன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து விலகினர்.

ஜூன் 9 இல் கூட்டுறவு குறைதீர் கூட்டம்

Posted: 05 Jun 2014 12:19 PM PDT

நாகர்கோவிலில் கூட்டுறவு குறைதீர் குழுக்கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறுகிறது.

குமரியில் பாம்புகள் படக் கண்காட்சி

Posted: 05 Jun 2014 12:19 PM PDT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் பாம்புகள் குறித்த படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

குளத்து மண்ணை அள்ள அனுமதிக்க வேண்டும்

Posted: 05 Jun 2014 12:19 PM PDT

விவசாயிகள் நலன் கருதி குளத்திலுள்ள வண்டல் மண்ணை வயல்களுக்கும், விளை நிலங்களுக்கும் ஜே.சி.பி. உதவியுடன் வேன்களில் அள்ளிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் சங்கம்

மணலிக்கரை பள்ளி மாணவர்கள் மூவருக்கு இளம் விஞ்ஞானி விருது

Posted: 05 Jun 2014 12:19 PM PDT

மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மூவருக்கு குமரி அறிவியல் பேரவை, இளம் விஞ்ஞானிகள் விருதளித்து கௌரவித்துள்ளது.

உதயகிரி கோட்டையில் மரக்கன்று நடும் விழா தொடக்கம்

Posted: 05 Jun 2014 12:18 PM PDT

வனத்துறை சார்பில் உலகச் சுற்று சூழல் தினம், மற்றும் இளயராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு  உதயகிரி கோட்டையில்  மரக்கன்றுகள் நடும் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முண்டே மரணம் பற்றி சிபிஐ விசாரணையா? பிரதமர் முடிவெடுப்பார்: கட்கரி

Posted: 05 Jun 2014 12:18 PM PDT

கார் விபத்தில் முன்னாள் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இறந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துரையாடல்

Posted: 05 Jun 2014 12:18 PM PDT

காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம். அக்பர் அலி பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.

சீவலப்பேரி நீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவி ஆய்வு

Posted: 05 Jun 2014 12:18 PM PDT

சீவலப்பேரி குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வரும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி ஆகியவற்றை நகர்மன்றத் தலைவ

தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் 8-இல் மூடல்

Posted: 05 Jun 2014 12:17 PM PDT

  பராமரிப்பு பணிகளுக்காக தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் 8ஆம் தேதி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக 25,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் நிறைவு

Posted: 05 Jun 2014 12:17 PM PDT

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், இதுவரை இல்லாத சாதனை அளவாக வியாழக்கிழமை 25,000-க்கும் மேலான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

கோவில்பட்டி பேருந்து நிலைய கடையில் தீ விபத்து

Posted: 05 Jun 2014 12:17 PM PDT

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

Posted: 05 Jun 2014 12:17 PM PDT

தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப் படை சார்பில் வியாழக்கிழமை கோவில்பட்டியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

இளைஞரைத் தாக்கி இரண்டரை பவுன் நகை, பணம் கொள்ளை

Posted: 05 Jun 2014 12:17 PM PDT

தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்த இளைஞரைத் தாக்கி இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ. 2500 ரொக்கத்தை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பொறியாளர் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் உள்ள  பொறியாளர் வீட்டில் 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு: மக்களிடம் கருத்து கேட்கிறது தமிழ் தேசிய கூட்டணி

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் தமிழ் தேசிய கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.

வாயு கசிவு நடந்த தொழிற்சாலையில் ஆய்வு நடத்த உத்தரவு

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

தூத்துக்குடி தனியார் தொழிற்சாலையில் நிகழ்ந்த வாயு கசிவு தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார்.

மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

விளாத்திகுளத்தில் மனைவியை கத்தியால் குத்தியவரைப் போலீஸார் கைது செய்தனர். காடல்குடி, போஸ் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (29). இவரது மனைவி ராஜேஸ்வரி (25).

சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆன்லைனில் கோரலாம்: அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

மத்திய அரசுத்துறை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, சுற்றுச்சூழல் அனுமதிகளை இனி ஆன்லைன் மூலம் கோரலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

பெண் வெட்டிக் கொலை: கணவர் கைது

Posted: 05 Jun 2014 12:16 PM PDT

ஓட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

நாசரேத்தில் பேரின்பப் பெருவிழா இன்று தொடக்கம்

Posted: 05 Jun 2014 12:15 PM PDT

நாசரேத் தூய யோவான் பேராலய முழு இரவு ஜெபக்குழு சார்பில் 40ஆவது பேரின்பப் பெருவிழா, நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

பொதுத்தேர்வில் சிறப்பிடம்: 32 மாணவர்,மாணவிகளுக்கு விருதுகள்

Posted: 05 Jun 2014 12:15 PM PDT

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 32 மாணவர், மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அரியநாயகிபுரம் தர்காவில் கந்தூரி விழா

Posted: 05 Jun 2014 12:15 PM PDT

விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் பாவா நகரில் உள்ள முகம்மது சாகிபு பள்ளிவாசலில் 8ஆம் ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது.

மோடியின் தாயாருக்கு ஷெரீஃப் அன்பளிப்பு

Posted: 05 Jun 2014 12:14 PM PDT

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு, புடவையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பக்தர்கள் வசதிக்காக ரூ. 3 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 05 Jun 2014 12:14 PM PDT

: தூத்துக்குடி மாவட்டத்தில் புராதன நகரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின்கீழ் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, பெருங்குளம் ஆகிய பகுதிகளில் பக்தர்கள் வசதிக்காக தலா ரூ.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 05 Jun 2014 12:14 PM PDT

கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியரின் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சீமாந்திரத்தில் ஆட்சி: ஆளுநரிடம் தெலுங்கு தேசம் கட்சி கடிதம்

Posted: 05 Jun 2014 12:14 PM PDT

சீமாந்திரத்தில் ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவை அழைக்குமாறு மாநில ஆளுநர் நரசிம்மனிடம் தெலுங்கு தேசம் கட்சி கடிதம் அளித்தது.

உடன்குடி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

Posted: 05 Jun 2014 12:14 PM PDT

உடன்குடி அருள்மிகு கருப்பசாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா, செவ்வாய்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது.

இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 05 Jun 2014 12:13 PM PDT

கோவில்பட்டி நகர இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரத் தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் காசிமாரியப்பன்,

மீண்டும் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: மத்திய அரசுக்கு தாண்டே குழு பரிந்துரை

Posted: 05 Jun 2014 12:13 PM PDT

நுகர்வோருக்கான எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் எரிவாயு விநியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று எஸ்.ஜி.தாண்டே குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆழ்வார்திருநகரி

Posted: 05 Jun 2014 12:13 PM PDT

நாகர்கோவில்

Posted: 05 Jun 2014 12:13 PM PDT

"எய்ம்ஸ்' பசுமை மருத்துவமனையாக மாற்றப்படும்

Posted: 05 Jun 2014 12:01 PM PDT

எய்ம்ஸ் மருத்துவமனையை பசுமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

தலைநகரில் சுற்றுச்சூழல் தின விழா

Posted: 05 Jun 2014 12:00 PM PDT

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தலைநகரின் பல்வேறு இடங்களில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.), தில்லியின் 3 மாநகராட்சிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை சார்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92,700 பேர் தேர்ச்சி

Posted: 05 Jun 2014 12:00 PM PDT

தேசிய திறந்தவெளி பள்ளி (என்ஐஓஎஸ்) அண்மையில் நடத்திய பிளஸ் 2 தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இத்தேர்வை எழுதிய 1,94,268 பேர் எழுதினர். அதில் 92,700 பேர்

உறுப்பினர் சேர்க்கை 15-இல் தொடக்கம்:தில்லி பிரதேச பாஜக அறிவிப்பு

Posted: 05 Jun 2014 12:00 PM PDT

தில்லியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பூமியை சுத்தமாக வைத்திருக்க உறுதி ஏற்போம்

Posted: 05 Jun 2014 12:00 PM PDT

சுற்றுச்சுழலைப் பாதுகாக்கவும், பூமியை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க உறுதி ஏற்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துப்புரவுத் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்

Posted: 05 Jun 2014 11:59 AM PDT

 தில்லி மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென தில்லி பிரதேச காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக் கொலை: மர்ம நபர்கள் இருவருக்கு வலை

Posted: 05 Jun 2014 11:59 AM PDT

தில்லியில் தனியார் நிறுவன விற்பனைப் பிரதிநிதியை மர்ம நபர்கள் வியாழக்கிழமை பட்டப் பகலில் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து இருவரைத் தேடி வருகின்றனர்.

ஓடும் காரில் தீ: சகோதரர்கள் உடல் கருகி சாவு

Posted: 05 Jun 2014 11:59 AM PDT

மேற்கு தில்லியில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றிய சம்பவத்தில் இளம் சகோதரர்கள் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்ற உறவினர் படுகாயமடைந்தார்.

சாலை விபத்து: காயமடைந்தவருக்கு ரூ. 14 லட்சம் இழப்பீடு

Posted: 05 Jun 2014 11:58 AM PDT

பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ. 14 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மோடி, முலாயம் ராஜிநாமா ஏற்பு

Posted: 05 Jun 2014 11:58 AM PDT

பிரதமர் மோடியின், வதோதரா மக்களவை தொகுதி எம்.பி. பதவி ராஜிநாமாவும், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மைன்புரி மக்களவைத் தொகுதி எம்.பி. பதவி ராஜிநாமாவும்

கப்பலில் தரையிறங்கும்போது விபத்து: போர் விமானம் சேதம்

Posted: 05 Jun 2014 11:58 AM PDT

கோவா அருகே அரபிக்கடல் பகுதியில் நிற்கும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் தரையிறங்கும்போது நேரிட்ட விபத்தில், "மிக் 29கே' ரக போர் விமானம் சேதமடைந்தது.

வாகனத் திருடர்கள் 6 பேர் கைது: 12 பைக்குகள் மீட்பு

Posted: 05 Jun 2014 11:58 AM PDT

தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 12 பைக்குகள் மீட்கப்பட்டன

தேசிய அளவில் பால் உற்பத்தி அதிகரிப்பு

Posted: 05 Jun 2014 11:57 AM PDT

நாட்டில் பருவமழையும், பால் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து இருந்ததால் 2013-2014ஆம் நிதியாண்டில், பால் உற்பத்தி 6 சதவீத வளர்ச்சியுடன் 140 மில்லியன் டன் அளவை எட்டியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகரில் "இ-சுற்றுலா' திட்டம் தொடக்கம்

Posted: 05 Jun 2014 11:57 AM PDT

தில்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் வகையில் "இ-பரியட்டன்' எனும் மின்னணு சுற்றுலாத் திட்டம் தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து வளர்ச்சிக் கழகம் (டிடிடிடிசி) சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் ரொனால்டோ உலகக் கோப்பைக்கு தயார்?

Posted: 05 Jun 2014 11:57 AM PDT

போர்ச்சுகல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடதுகாலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்படுகிறார்.

வெயில் 44.7 டிகிரி செல்சியஸ்:தவிப்பில் தலைநகர்வாசிகள்

Posted: 05 Jun 2014 11:57 AM PDT

தலைநகர் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கால்பந்து அகாதெமிக்கு முதன்முறையாக அரசு ஸ்பான்சர்

Posted: 05 Jun 2014 11:56 AM PDT

இளம் தலைமுறை கால்பந்து வீரர்களை அடையாளம் காணும் விதமாக மேற்கு வங்கத்தில் அரசு நிதி உதவியின் கீழ் கால்பந்து அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலம்: சீரமைப்புப் பணி தீவிரம்

Posted: 05 Jun 2014 11:56 AM PDT

வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாலம் ரூ.1.30 கோடி செலவில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மகளிருக்கு அதிக டெஸ்ட்: மிதாலி ராஜ் கோரிக்கை

Posted: 05 Jun 2014 11:56 AM PDT

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி: 15-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

Posted: 05 Jun 2014 11:56 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர் விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: 10 பேர் கைது

Posted: 05 Jun 2014 11:56 AM PDT

செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து 3-வது முறையாக இறுதி சுற்றில் ஷரபோவா

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் கனடாவின் பெüசார்டை வீழ்த்திய ரஷியாவின் மரியா ஷரபோவா தொடர்ந்து 3-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

கோயில்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு தொடக்கம்

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் புனரமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன.

10-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜயேந்திரர் ஆசி

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தைச் சேர்ந்த சங்கரா அறக்கட்டளை பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு காமக்கோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி பாராட்டினார்.

அணிக்கு அரண்: எதிரணிக்கு முரண்

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

கருணாகரச்சேரி கிராமத்தில் ரூ. 5 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்

Posted: 05 Jun 2014 11:55 AM PDT

பல மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் மின்சாரத்தால் அவதிக்குள்ளாகி வந்த கருணாகரச்சேரி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிக்கு ரூ. 5 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர்

திருவள்ளூரில் பலத்த மழை: மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு

Posted: 05 Jun 2014 11:54 AM PDT

திருவள்ளூரில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™