Tamil News | Online Tamil News |
- 126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா?
- மாவோயிஸ்ட் வன்முறை பாதித்த பகுதிகளில் இளம் ஐ.பி.எஸ்.,களை பணியமர்த்த திட்டம்
- மோசடி விளம்பரங்களால் பணம் இழக்கும் பரிதாபம்: 'டிவி' பார்க்கும் பெண்களே... உஷார்
- சட்டசபையில் 'நாக்கை' கடித்தது ஏன்? தொண்டர்களுக்கு விளக்கம் சொன்ன விஜயகாந்த்
- போஸ்டர், பேனர்களுக்கு தி.மு.க.,வில் கட்டுப்பாடு: அ.தி.மு.க., பாணியில் செயல்பட திடீர் உத்தரவு
- என் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் : பொதுமக்களுக்கு முதல்வர் ஜெ., வேண்டுகோள்
- இடிபாடுகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
- கட்டட விதிமீறலை ஆராய உயர்நிலை குழு: விதிகள் தளர்த்தியதை சமாளிக்க அரசு நடவடிக்கை
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்வு
- அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும்
- இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை பாராட்டி மோடி பெருமிதம் : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.,
| 126 நவீன போர் விமானங்களை பிரான்சிடம் வாங்குகிறது இந்தியா? Posted: புதுடில்லி: பிரான்ஸ் நாட்டின், 'தாசல்ட் ஏவியேஷன்' நிறுவனம், ரபாலே ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நவீன 126 போர் விமானங்களை வாங்க, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, விமான உற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே, தொழில்நுட்ப ரீதியிலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று உள்ளன. அதனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்த போர் விமான ஒப்பந்தத்தை முடிவு செய்ய வேண்டிய இறுதிக் கட்டத்தில், மத்திய அரசு உள்ளது. விமானங்களுக்கான, 1 லட்சம் கோடி ரூபாய், 10 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். விமானப் படையில், தற்போது, 39 போர் ... |
| மாவோயிஸ்ட் வன்முறை பாதித்த பகுதிகளில் இளம் ஐ.பி.எஸ்.,களை பணியமர்த்த திட்டம் Posted: புதுடில்லி: புதிதாக, ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவோர், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு, மாவோயிஸ்ட் ஆதிக்க பகுதிகளில் பணிபுரிவதை கட்டாயமாக்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.ஆலோசனை:மாவோயிஸ்ட் வன்முறை தொடர்பாக, கடந்த மாதம், 27ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தெரிவிக்கப்பட்ட யோசனைகள் குறித்து, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள், மாவோயிஸ்ட் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த மாநிலங்களில், குறைவான, ஐ.பி.எஸ்., அதிகாரிகளே ... |
| மோசடி விளம்பரங்களால் பணம் இழக்கும் பரிதாபம்: 'டிவி' பார்க்கும் பெண்களே... உஷார் Posted: திருப்புவனம் : நாட்டில் பல்வேறு வகைகளில் மோசடிகள் நடந்து வருகின்றன. தற்போது டி.வி., சேனல்களில் ஒளிபரப்பாகும் 'டெலி ஷாப்பிங்' என்ற பெயரில் புதுவித மோசடி நடந்து வருகிறது. 'டிவி'., சேனல்களில் அரை மணி நேரம் தனியார் விளம்பரதாரர் நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன் 'இந்த நிகழ்ச்சிக்கும், டிவி., நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை' என ஒரு சில நொடிகள் காண்பித்து விட்டு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை குறித்து விளம்பரம் செய்கின்றனர் .அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் ... |
| சட்டசபையில் 'நாக்கை' கடித்தது ஏன்? தொண்டர்களுக்கு விளக்கம் சொன்ன விஜயகாந்த் Posted: நாமக்கல்லில் கட்சித் தொண்டர்களுடன் கலந்து கொண்ட, உங்களுடன் நான் கலந்தாலோசனை நிகழ்ச்சியில், சட்டசபையில் நாக்கை கடித்ததற்கு, விளக்கம் கொடுத்து பேசினார் விஜயகாந்த்.கலந்தாலோசனை நிகழ்ச்சிக்காக, மாவட்டம் வாரியாக, சுற்றுப்பயணம் செய்து வரும் விஜயகாந்த், நேற்று முன்தினம் நாமக்கல் வந்தார்.அங்கு நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில், விஜயகாந்த் பேசியதாவது:லோக்சபா தேர்தலில் தோற்றது குறித்து, யாரும் கவலைப்பட வேண்டாம். கட்சிக்கு, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். குறிப்பாக, கட்சித் தொண்டர்கள் குடும்பத்தின் உறவினர்களையும், கட்சியில் உறுப்பினராக ... |
| போஸ்டர், பேனர்களுக்கு தி.மு.க.,வில் கட்டுப்பாடு: அ.தி.மு.க., பாணியில் செயல்பட திடீர் உத்தரவு Posted: திராவிட இயக்கத் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமி, அண்ணா துரை மற்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் போட்டோக்களுக்கு தான் முக்கியத்துவம் அளித்து, பேனர்களை கட்ட வேண்டும்; போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்ற, வாய்மொழி உத்தரவு, 65 மாவட்டச் செயலர்களுக்கும் பிறப்பிக்கப்பட இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.கோஷ்டிகள் உருவாகி...கட்சி தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் போன்றவர்களின் போட்டோக்களை போடாமல் போஸ்டர்களையும், பேனர்களையும் வைக்கும் கலாசாரம், தி.மு.க.,வில் ஊடுருவியுள்ளது. இது, தி.மு.க., தலைவர் கருணாநிதியை வருத்தம் அடைய வைத்துள்ளது. ... |
| என் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் : பொதுமக்களுக்கு முதல்வர் ஜெ., வேண்டுகோள் Posted: 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில், தமிழகத்தை அழைத்து செல்ல, நான் எடுத்து வரும், அனைத்து நடவடிக்கைகளுக்கும், ஒத்துழைப்பு தர வேண்டும்' என, பொதுமக்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில், 193 கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா; 172 கோடி ரூபாயில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா; பல்வேறு துறை சார்பில், 64 கோடி ரூபாய் மதிப்புள்ள, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று, ஸ்ரீரங்கத்தில் நடந்தது.விழாவில், முதல்வர் ஜெயலலிதா, நலத் திட்டங்கள் வழங்கி பேசியதாவது:பல்வேறு ... |
| இடிபாடுகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு Posted: சென்னை: சென்னையில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்தது. இவர்களில், மூன்று பேர், அடையாளம் தெரியவில்லை. காயமடைந்த, 23 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டடம் இடிந்து விழுந்த பகுதி முழுவதும், துர்நாற்றம் வீசுவதால், இடிபாடுகளில் சிக்கியவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. மீட்பு பணி, தொடர்ந்து நடந்து வருகிறது.இரவிலும் மீட்பு பணிமுதல் நாள் இரவு, ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று முன்தினம், மழை காரணமாக, பணிகள் பாதிப்படைந்தது. ... |
| கட்டட விதிமீறலை ஆராய உயர்நிலை குழு: விதிகள் தளர்த்தியதை சமாளிக்க அரசு நடவடிக்கை Posted: சென்னை, மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி அளிக்கும் போது, சில விதிகள் தளர்த்தப்பட்டது அம்பலமாகியுள்ள நிலையில், இத்திட்டத்தில் உள்ள விதிமீறல்களை ஆய்வு செய்ய, உயர்நிலைக் குழு அமைக்க, தமிழக அரசு தயாராகி வருகிறது. இதற்கான பரிந்துரைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், அரசுக்கு அனுப்பியுள்ளது.சென்னை, போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' நிறுவனம் சார்பில், இரு பிரிவாக, 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. தில் ஒரு கட்டடம், பணிகள் முடியும் நிலையில், கடந்த சனிக்கிழமை ... |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்வு Posted: புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.69 ரூபாயும், டீசல் விலை, 50 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.69 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டது. உள்ளூர் வரி அல்லது வாட் வரி சேர்த்து, ஒவ்வொரு நகரத்திலும், இந்த விலை உயர்வில் மாற்றம் இருக்கும்.அதேபோல், மாதாந்திர அடிப்படையில் உயர்த்தப்படும், டீசல் விலையும் நேற்று லிட்டருக்கு, 50 காசுகள் ... |
| அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு: குடிநீருக்காக அவசரகால திட்டம் தயாரிக்க வேண்டும் Posted: புதுடில்லி:குடிதண்ணீர் சப்ளைக்காக, அவசரகால திட்டம் ஒன்றை தயாரிக்கும்படி, அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.தென்மேற்கு பருவமழை, ஜூன் மாதத்தில், எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வழக்கத்தை விட, 42 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. 113 ஆண்டுகளில், 12வது முறையாக, வழக்கத்தை விட, மழை குறைவாக பெய்துள்ளது.அதேநேரத்தில், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், 80 சதவீதம், மழை குறைவாக பெய்துள்ளது. எனவே, நாட்டின் பல பகுதிகளில், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.அதனால், வறட்சி நிலவரங்களை சமாளிக்கும் வகையில், குடிநீர் ... |
| இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை பாராட்டி மோடி பெருமிதம் : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., Posted: சென்னை : 'பி.எஸ்.எல்.வி., சி - 23' ராக்கெட், ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் நேற்று காலை, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்ட, பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை பாராட்டியதுடன், விண்வெளி ஆய்வு மையத்தின் சாதனைகளை கூறி, பெருமிதம் அடைந்தார்.பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய, முதல் ஏவுதளத்தில் இருந்து, நேற்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ராக்கெட் ஏவப்பட்ட, 17வது நிமிடத்தில், பிரான்ஸ் நாட்டின், 714 கிலோ எடை, 'ஸ்பாட் - ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |