Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விடை.....?

Posted: 30 Jun 2014 01:30 PM PDT

மீனுக்குப் பெயருண்டு..!

Posted: 30 Jun 2014 12:59 PM PDT


-
வீட்டு வாசலில் கூடையை இறக்கி
சங்கரா, சுறா, வஞ்சிரம், வௌவால் என்றாள்
பிணமாகப் போகும் எனக்கு
வெட்கமாயிருந்தது
செத்தப் பிறகும்
மீனுக்குப் பெயருண்டு..!
-
------------------------------
>அ.யாழினி பர்வதம்


அப்போது ‘அழகு’

Posted: 30 Jun 2014 12:56 PM PDT

ஆதி நாட்களைப் போல் இல்லை இப்போது எதுவுமே அப்போது காடு நிரம்பியிருந்தது இப்போது கட்டிடம் ... அப்போது காற்று நிறைந்திருந்தது நிலமெல்லாம் இப்போது புகை மண்டலம் அப்போது ஆன்மிகம் நிறைந்திருந்தது இப்போது அரசியல் அப்போது ஆடை மறைத்திருந்தது அங்கங்களை இப்போது மேல்நாட்டு வாடை அப்போது காதல் நிரம்பியிருந்தது நெஞ்சங்களில் இப்போது காமம் ஒற்றைச் சொல்லால் சொல்வதென்றால் அப்போது 'அழகு' இப்போது ---------

ஈகரைக்கு நன்றி...!

Posted: 30 Jun 2014 12:54 PM PDT

நம் தளத்துள் நுழைந்த போது எனக்கான இனிய அதிர்ச்சி காத்திருந்தது. அது சிறப்பு பதிவாளராக எனது ரேங்க் உயர்ந்திருந்தது தான்.

சிறப்பு பதிவாளராக எனை அங்கீகரித்த ஈகரை நிர்வாக குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி.

விமந்தனி என்ற பெயர் க்ளிட்டரிங்கில் இன்னும் அழகாய் தெரிகிறது. மீண்டும் ஈகரை நிர்வாக குழுவினருக்கு எனது நன்றி.

ஏற்காடு - ஒரு அனுவபம்

Posted: 30 Jun 2014 11:27 AM PDT

[justify]நேற்று முன்தினம் 28.06.14 சனியன்று ஏற்காடு போக முடிவு செய்து கிளம்பினோம்.  மிக அருமையான சீதோஷ்ண நிலை.  அங்கு சென்று வந்த அனுபவத்தை உறவுகளிடம் பகிர்ந்து கொள்ள ஆசை.. முதலில் ஏற்காடு பற்றி ஒரு கண்ணோட்டம்: ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை நகராகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ளது. ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு ...

ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க :)

Posted: 30 Jun 2014 11:24 AM PDT



ரமதான் நோன்பு நோர்க்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த  வாழ்த்துகள் புன்னகை

வழி காட்டும் ஜோதிடம்

Posted: 30 Jun 2014 11:01 AM PDT

வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும் கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆதலால்தான் ஆய கலைகள் அறுபத்து நான்கில், ஜோதிடமும் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்வை வளம் பெறச் செய்யும் ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். கணிதம்: இது பெரும்பாலும், ஜாதகத்தோடு தொடர்பு கொண்டு, ஜாதகக் கணிதம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் இதற்காவே ஜோதிடரை அணுகுவதுண்டு. ...

எங்க வீட்டு கிரைண்டரும் வாஷிங் மிஷினும் ரிப்பேர் ஆயிடுச்சு..!

Posted: 30 Jun 2014 10:55 AM PDT

- அவள்: எங்க வீட்டு கிரைண்டரும் வாஷிங் மிஷினும் ரிப்பேர் ஆயிடுச்சு..! - இவள்: உங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே? - ---------------------------------------- - உங்க பையனைக் காணலைன்னு பேப்பர்ல விளம்பரம் போட்டிருந்தீங்களே... என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? - ஏன்? - என் பொண்ணையும் காணலைன்னு சேர்த்துப் போட்டிருக்கலாமே! - >சி.ரகுபதி, போளூர். - --------------------------------------- பெண் 1: இந்த ஹேர் ஆயில் ரொம்ப மோசம். - பெண் ...

பிளாஸ்டிக் பூ

Posted: 30 Jun 2014 10:20 AM PDT


-

பொம்மையின் கூந்தலில்
வைத்து விளையாடும்
பிளாஸ்டிக் பூவில்
குழந்தையின் வாசனை!

-
-----------------------
>சின்னமனூர் ராஜமழை(கல்கி)

_________________

தொடத் தொடத் தொல்காப்பியம் (250)

Posted: 30 Jun 2014 10:04 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பலூனாய்...

Posted: 30 Jun 2014 09:55 AM PDT


-
நிறைமாதப் பனிக்குடத்துள்
நீந்திப் பழகும் தம் சிசு
ஓங்கியுதைக்கும் ஒவ்வொரு முறையும்
பலூனாய் மிதந்து
தரையிறங்குகிறாள்
தலைச்சனைக் காணத் துடிக்கும்
கர்ப்பிணி..!
-
------------------------------
>செழியரசு (கல்கி)

மௌனத்தின் நகர்வுகளில்!

Posted: 30 Jun 2014 09:54 AM PDT


-

எத்தனை முறை
செத்துப் பிழைத்தேனென்று
தெரியாமலேயே போய்விடுகிறது
எதுவுமற்ற உன் மௌனத்தின்
நகர்வுகளில்!
-
குடித்து குடித்துச் செத்தவனின்
இறுதி ஊர்வலத்தில்
குடித்துவிட்டு ஆடிய
கால்கள்தான் அதிகம்!

---------------------

>சிவபாரதி (கல்கி)

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Posted: 30 Jun 2014 09:47 AM PDT

- வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப் போறா... போசாம நிக்கிறீங்களே? - திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன். - ----------------------------------------- - பத்திரிகை ஆசிரியர்: என்னங்க போஸ்டர் கவர் மேலேயே கதையை எழுதி அனுப்பிட்டீங்க? - எழுத்தாளர்: கவர் ஸ்டோரி வேணும்னு கேட்பீங்களே! - ------------------------------------------- - என்னங்க இது! சமையல் நல்லாயிருக்குன்னு தானே சொன்னேன். உடனே உங்க மனைவி மயங்கி சாய்ந்துட்டாங்களே! - நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே ...

ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை.

Posted: 30 Jun 2014 08:15 AM PDT

இமயம் குறித்த பெருமை இந்தியர் அனைவருக்கும் சிறு வயது முதலே உண்டு. அந்த இமயச் சிகரங்களில் ஒன்றான திருக்கைலை யாத்திரை என்பது எல்லாராலும் செல்ல முடிந்த ஒன்றல்ல. மிகக் கடினமான யாத்திரை. ஆனால் வருந்தத் தக்கது என்னவெனில் இந்த திருக்கைலை இந்தியர்கள் அனைவருக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் ஈசனே திருக்கைலாய நாதனாகவும் இருக்க, அது அமைந்திருக்கும் பகுதியோ சீனாவிடம் சென்றுவிட்டது. நினைத்த உடனே செல்ல முடியாத இடம். இதற்கும் நம் முன்னோர்கள், ஆசாரியர்கள் பலர் சென்று வந்துள்ளதாகக் கேள்விப் படுகிறோம். சேரமான் ...

என் நிலை

Posted: 30 Jun 2014 08:15 AM PDT

எத்தனை வார்த்தைகளில்
சொன்னாலும்
ஒன்றுதான்
என்நிலை

நீள் நெடு
பயணமாய் தொடரும்
உன் இதயத்தின்
மையம் நோக்கி
என் பாதம்.

தான் தன் சுகம் நாவலினை டவுன்லோட் செய்ய

Posted: 30 Jun 2014 08:14 AM PDT

சிவசங்கரி -தான் தன் சுகம் நாவலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/zwvon858vi8b54e/Thaan-Than-Sugam-Sivasankari%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

ரதி வீதி -காதலர்களை வசீகரிக்கும் மின்நூல்..

Posted: 30 Jun 2014 08:13 AM PDT

உ ங்களுக்கு காதல் எந்த வடிவத்தில் இருந்தாலும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே வாசிக்க ஆரம்பியுங்கள் மாறாக காதல் என்றால் எழுத்து என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணம் உடையவர்களுக்கு இந்த மின்நூல் உகந்தது அல்ல . ஏனென்றால் இவை எழுதிப்பழகிக்கொண்டிருக்கும் ஒருவனின் சிதறல்கள் .இங்கே சிதறியிருப்பவை அனைத்தும் என் இதயக்கிடங்கிலிருந்து வார்த்தை வாளி வாயிலாக வாரியிறைத்தவையே . காதலால் பின்னிப்பிணைந்திருக்கும் இருவரின் உரையாடல்களாக இதைப்படிப்பீர்களானால் நிச்சயம் இம்மின்நூல் உங்களுக்கு புதிய உற்சாகம் ...

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Posted: 30 Jun 2014 07:31 AM PDT

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் . இவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 ...

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

Posted: 30 Jun 2014 07:06 AM PDT

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் . பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் . என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் . திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் . கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே , எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் , படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன் ...

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்

Posted: 30 Jun 2014 06:28 AM PDT

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் இன்று காலை சரியாக 9.52 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆந்திர மாநில முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் உடன் இருந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்கள் இதன்மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 714 கிலோ ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 30 Jun 2014 06:26 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை

Posted: 30 Jun 2014 05:33 AM PDT

'தாய்மை' – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான். தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது. எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள். ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு ...

ஓர் உயரிய காதல் ...

Posted: 30 Jun 2014 05:26 AM PDT

ஓர் உயரிய காதல் ... இந்நாள்... என் வாழ்வின் பொன்னாள்..! இந்நாளை நான் எங்ஙனம் உரைப்பேன்..! உரைத்திட அறியேன்... ஆமாம்... தன் காதலை என்னிடம் என்னவள் உரைத்தபோது நான் நுகர்ந்த சுவையை உரைத்திட அறியேன்?! அன்று... ஒரே வண்ண மயம் கனவுகள் அழகழகாய்  ஆயிரம்... விழித்திருந்த வேளையிலே ! உரையாடல்கள்... கொஞ்சல்கள்... சிணுங்கல்கள்... சிரிப்புகள்... எங்களுக்குள் ... நான் தனித்திருக்கிறேன் ?! கண்ணாடி முன் நின்று பார்க்கிறேன் பலமுறை... நான் என்னையே! நான் செல்லும் ...

நாமும் கூத்தர்கள்

Posted: 30 Jun 2014 05:15 AM PDT

- ஆண்டாள் "திருப்பாவை'யில் "தூமலர் தூவித் தொழுது வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்க' என்று பாடியிருக்கிறாள். - மனோ-வாக்-காயங்கள் என்ற த்ரிகரணங்களையும் பகவத்பரமாக்க வேண்டும் என்பதைத்தான் ஆர்டரை மாற்றி காயம்-வாக்-மனஸ் என்று இங்கே சொல்லி இருக்கிறாள். "வாயினால் பாடி', "மனத்தினால் சிந்திக்க', என்பதில் வாய், மனஸ் பிளெயினாகவே தெரிகிறது. - அப்படியானால் "தூமலர் தூவித் தொழுது' என்கிறது காயத்தை பகவ தர்ப்பணமாக்குவதே என்றும் ஆகிறது. அப்பர் சொன்ன "பூக் கையால் அட்டி'தான் "தூமலர் தூவி'; ...

மியாவ் என்றது யானை..!

Posted: 30 Jun 2014 02:03 AM PDT


-

-
யானையைப் பார்த்து
'ஹை பூனை ' என்று குதித்தாள்
நிலா குட்டி!
-
சட்டென மண்டியிட்டு
'மியாவ்' என்றது யானை!
-
--------------------------
>சு.கவிதா (கல்கி)

அண்ணல் நபிகளாரின் பொன் மொழிகள் மெளனம் கொள்ளுங்கள்

Posted: 30 Jun 2014 01:15 AM PDT

நாவின் பத்தினித்தனம் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். வாய்முடி இருப்பது இஸ்லாத்தின் தலை போன்றதாகும். ஈமானின் பக்தர்களுக்கு இறைநேசமும் கிரீடமும் வாய்முடி மெளனமாய் இருப்பதாகும். ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் மெளனமாய் இருப்பது குற்றமாகும். அவர் பேசுவது சிறப்பாகும். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்கள் நாவைப் பிடித்து கொண்டு இதை (தீயவழியில்) உபயோகிக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். -அல் ஹதீஸ் உங்களில் அளவுக்கு அதிகமாக பேசுவோனும், வீண்பேச்சுப் பேசுவேனும், தற்பெருமையாகப் பேசுவேனும், ...

வெற்றியின் படிகள் மூன்று

Posted: 30 Jun 2014 12:33 AM PDT

ஒரு செயலினை சிறப்பாக செய்து முடிப்பதற்கு தன்னறிவு, தன்னம்பிக்கை, சுய முயற்சி ஆகியவை தேவை. இவை மூன்றும் தான் வெற்றியின் முக்கிய மூன்று படிகள். எந்த வேலை தன்னறிவுடனும், ஆழ்ந்த ஈடுபாட்டு டனும் செய்யப்படுகிறதோ அந்த வேலையே மிகச்சிறந்த பலனைத் தருகிறது. தன்னறிவு தன்னைப் பற்றிய அறிவு, தனது தகுதிகள், திறமைகள், எல்லைகள் ஆகியவற்றை ஒருவன் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இது எல்லோருக்கும் அவசியம். இது பற்றிய ஒரு பழமையான கருத்து உள்ளது. தெரியாது என்று தெரியாதவனுக்குத் தெரியாது – அவனை விட்டுவிடு தெரியாது ...

விதியை மாற்றுவோம்…!

Posted: 29 Jun 2014 11:59 PM PDT

விதியை மாற்றுவோம்…! முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான். முடியும் என்று நம்பித் துவங்கு. செய்யச் செய்ய மனது, உறுதிப்படும், தளர்வு தள்ளிப் போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும். எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? பொறுங்கள்… இன்னும் சில வழிகள் இருக்கின்றன தேடுங்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், இழப்புகள், அவமானங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். சாதித்தே தீர வேண்டும் என்று ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (51)

Posted: 29 Jun 2014 11:49 PM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

அப்துல்கலாம் நூல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)

Posted: 29 Jun 2014 09:23 PM PDT

அப்துல்கலாம் -அக்னி சிறகுகள்(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) அக்னி சிறகுகள்தமிழில் http://www.mediafire.com/download/zeoy3gnjul9e9eg/agnisiragukal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf அக்னி சிறகுகள்ஆங்கிலத்தில் http://www.mediafire.com/download/jxb0dn03q6jbfwg/WingsoffirebyAbdulKalam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf ஒரு இந்தியனின் கனவு http://www.mediafire.com/download/ahzra2o1mw61r65/apj+indiyanin+kanavu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf இளைஞர்காலம் http://www.mediafire.com/download/tfk8cqjnurkeuhi/apj+ilaignarkalam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf Turning ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™