Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம்

Posted:

கொச்சி:முல்லை பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகளும், எங்களுக்கே சொந்தம்; இதில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை, என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான உம்மன் சாண்டி கூறியதாவது:கேரளாவில் உள்ள, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும், தமிழகத்துக்கு சொந்தம் என, அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்; இது, தவறு. இந்த அணைகளை பராமரிக்கும் பொறுப்பு, தமிழக அரசிடம் இருந்தாலும், அந்த மாநிலம், இந்த அணைகளுக்கு உரிமை கோர முடியாது. அந்த அணைகள் கேரளாவுக்கே சொந்தம். இதில், எந்தவித ...

பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்

Posted:

சென்னை:பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இஸ்ரோ வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.இதற்கான, 49 மணி நேர, கவுன்ட் - டவுன் நேற்று முன்தினம் காலை, 8:52 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட், 44.4 மீட்டர் உயரம் ...

தூதரக தாக்குதல் சதி வழக்குஎன்.ஐ.ஏ., விசாரணை துவக்கம்

Posted:

புதுடில்லி:சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் துாதரகம் ஆகியவற்றை தகர்க்க திட்டமிட்டதாக, இலங்கையைச் சேர்ந்த ஷாகிர் உசேன் என்பவர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். மலேசிய போலீசாரும், இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., உதவியுடன், துாதரகங்களை தகர்க்க, இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.இந்த வழக்கு குறித்து, சர்வதேச அளவில்விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்தது. இதனால், இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.,விடம் ...

சம்பளம் ரூ.50 ஆயிரம் போதாது! உ.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை

Posted:

லக்னோ : உத்தர பிரதேச எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என, சட்டசபையில் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதில், கட்சி பேதமின்றி, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், தங்களின் மாத சம்பளமான, 50 ஆயிரம் ரூபாயை, மேலும் அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., சட்டசபையில், 403 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், 271 பேர் கோடீஸ்வரர்கள். எனினும், தங்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம், 50 ஆயிரம் போதாது என, அவர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதற்கு முன், 2010ல், முந்தைய முதல்வர், மாயாவதி ...

'பேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்

Posted:

'பேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத்துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அதற்கு பதிலடி கொடுக்க, தே.மு.தி.க., வட்டாரம் தயாராகி வருகின்றது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின், சட்டசபை செயல்பாடுகள், லோக்சபா தேர்தல் பிரசாரம், மேடைப் பேச்சு, பத்திரிகையாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை ஆகியவற்றை, 'பேஸ்புக், டுவிட்டர், கூகுள்' போன்ற சமூக வலைத்தளங்களில், கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.இது, தே.மு.தி.க.,வினருக்கு கடுமையான மனவருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன. அதனால், சமூக ...

'நதிநீர் இணைப்பு பணிகளில் தமிழக அரசின் முயற்சி என்ன?'

Posted:

சென்னை: 'நதிநீர் இணைப்பு திட்டத்தின் பணிகளை, தி.மு.க., ஆட்சி காலத்தில் விட்ட இடத்திலிருந்து, தொடர்ந்து நிறைவேற்றிட, அ.தி.மு.க., ஆட்சியில், என்ன முயற்சி எடுக்கப்பட்டது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை, தமிழகத்தின் வைப்பாறுடன் இணைப்பது பற்றி, கேரள சட்டசபையில் நடந்த விவாதத்தை, என் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை, தன் பதில் அறிக்கையில், ஜெயலலிதா ...

அ.தி.மு.க.,விலும் வருகிறது அதிரடி மாற்றம்

Posted:

தி.மு.க.,வில், மாவட்டங்களை பிரித்து, 65 ஆக்கியது போல், அ.தி.மு.க.,விலும் கட்சி அமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை, ஆளும் கட்சி தலைமை வட்டாரத்தில், துரிதமாக நடந்து வருகிறது.தேர்தல் தோல்வி காரணமாக, கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகளை, தி.மு.க., தலைமை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, ஏற்கனவே இருந்த, 32 மாவட்டங்களை பிரித்து, 65 ஆக உயர்த்தி உள்ளனர்.மூன்றாக பிரித்து...மிக முக்கியமாக, சென்னையை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என, நான்காக பிரித்துள்ளனர். கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களை, மூன்றாக ...

சுவிஸ் வங்கி பணம் கரைகிறதா?

Posted:

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தைப் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை தரத் தயார் என, அந்நாடு அறிவித்துள்ளதால், பட்டியலை விரைவாக வழங்குமாறு, மத்திய அரசு, சுவிஸ் நாட்டுக்கு கடிதம் எழுதிஉள்ளது.முறைகேடான பணம்இந்தியாவில் முறைகேடாக பணத்தை சம்பாதித்த சிலர், அந்தப் பணத்தை இங்கு வைத்திருந்தால் பிரச்னையாகும் என கருதி, முறைகேடான வழிகளில், சுவிஸ், சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளின் வங்கிகளில் பதுக்கியுள்ளனர்.சுவிஸ் நாட்டு வங்கியில் உள்ள அந்த பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வர, முந்தைய, பிரதமர், மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ...

பிரதமரை சந்திக்க டில்லிக்கு படையெடுக்கும் வெளிநாட்டு தலைவர்கள்: பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி எதிரொலி

Posted:

புதுடில்லி: பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், இந்த துறையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இதற்காக, பிரதமர் மோடியை சந்திப்பதற்கு இந்தியா வரவுள்ளனர்.இந்திய ராணுவத்தை உலகத் தரம் வாய்ந்த வகையில், நவீன மயமாக்க, பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, ராணுவத்துக்கு தேவையான அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்கும், நம் நாட்டிலேயே அவற்றை தயாரிப்பதற்கும், மத்திய அரசு முயற்சி ...

முறையான தகவல் தெரியாமல் உறவினர்கள் அலைக்கழிப்பு

Posted:

சென்னை : சென்னை, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதிலும், மீட்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை அறிவதிலும், சிரமம் ஏற்பட்டதால், போலீசாருக்கும், உறவினர்களுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர்; அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற எந்த விவரமும், துவக்கத்தில் அதிகாரிகளுக்கு தெரியவில்லை. எனவே, கட்டடத்தில் எத்தனை பேர் பணிபுரிந்தனர்; எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கினர் என்ற விவரங்களை அறியும் பணியில் ஈடுபட்டனர்.உயிருடன் மீட்கப்பட்டவர்கள், உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு ...

முதல்வர் வருகையால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது நிறுத்தம் : 13 மாடி கட்டடம் நொறுங்கியதில் 13 பேர் பலி, 21 பேர் தப்பினர்

Posted:

சென்னை, மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மூன்று பெண்கள் உட்பட, 13 கட்டடத் தொழிலாளர்கள் பலியாயினர் என்பது இதுவரை உறுதியாகி உள்ளது. மேலும், 58 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.இந்த நிலையில், தொடர்ந்து, விரைவாக நடக்க வேண்டிய மீட்புப் பணி, முதல்வர் வருகைக்காக பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இடையில், 10 நிமிடம் பெய்த ஆலங்கட்டி மழையும் பணிகளை பாதித்தது.மீட்பு பணிநேற்று முன்தினம் மாலை, 4:45 மணிக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் இருந்து நடந்து வந்த மீட்புப் பணி, நேற்று அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது. அதில், 32 பேர் ...

இடிந்த கட்டடத்திற்காக விதிகளை தளர்த்தி 2 அரசாணைகள்:சி.எம்.டி.ஏ., மீது தவறில்லை என்கிறார் முதல்வர் ஜெ.,

Posted:

சென்னை, மவுலிவாக்கத்தில் நேற்று முன்தினம் இடிந்து விழுந்த, 11 மாடி கட்டடத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டதிலேயே பல்வேறு விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என்பது, தெரியவந்து உள்ளது. மனை மற்றும் சாலை அகலத்தில் இருந்த விதிமீறல்களை வரன்முறைபடுத்த, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது.சென்னை, போரூர் அருகில், மவுலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' நிறுவனம் சார்பில், 11 மாடிகள் கொண்ட இரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கட்டடம், சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™