Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பாரசீக வளைகுடாவில் இந்திய போர்க்கப்பல்: இந்தியர்களை மீட்க ஈராக் செல்ல ஏற்பாடா?

Posted:

புதுடில்லி: ஈராக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க, மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், பாரசீக வளைகுடா பகுதியில், இந்திய கடற்படை தன் போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது.வளைகுடா நாடான ஈராக்கில், அரசு ஆதரவு படையினருக்கும், அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது. ஈராக்கின் முக்கிய நகரங்கள் சிலவற்றை, பயங்கரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அவற்றை மீட்க, அரசுப் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். ஈராக்கில் நடக்கும் இந்த உள்நாட்டுச் சண்டையால், அந்நாட்டின் பல பகுதிகளில் தங்கியிருக்கும், 10 ஆயிரம் ...

அரசியல் ஆதாயத்துக்காக சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதா? காங்கிரஸ் தலைவர்களுக்கு 'மாஜி' அமைச்சர் அந்தோணி கண்டனம்

Posted:

புதுடில்லி: ''அரசியல் ஆதாயத்துக்காக, சிறுபான்மையினரை திருப்தி படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, பொதுமக்களுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. கட்சி மீது விழுந்துள்ள இந்த இமேஜால், கேரளாவில் மதவாத அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அந்தோணி, அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.நினைவு நிகழ்ச்சி: கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், சுதந்திர போராட்ட வீரருமான, மறைந்த கோவிந்தன் நாயரின் நினைவு நிகழ்ச்சி, திருவனந்தபுரத்தில் நேற்று ...

எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் இல்லை: சபாநாயகர் சூசக அறிவிப்பு

Posted:

"எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை என்பதற்காக, பார்லிமென்ட் நடவடிக்கைகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடாது," என, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்.இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நேற்று கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவராக, யாரும் நியமிக்கப்படவில்லை எனில், பார்லி மென்ட் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும் என நினைப்பது சரியல்ல. எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்றால், சபை சரிவர நடக்காது என எண்ண வேண்டிய அவசியமும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் அளவுக்கு எந்த கட்சியிடமும், போதுமான ...

பா.ஜ.,வின் புதிய தலைவர் யார்? இந்த வாரத்திற்குள் அறிவிப்பு

Posted:

பா.ஜ.,வின் புதிய தலைவர் யார் என்பது, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.பா.ஜ., தேசிய தலைவரான ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராகி விட்டதால் தலைவர் பதவி, வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என, தகவல் வெளியானது. 'கட்சியின் கொள்கையான, ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், நான், விரைவில் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்' என, ராஜ்நாத் சிங்கும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார். எனவே, 'புதிய தலைவர் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்' என்ற ...

இந்தியாவை கைப்பற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் திட்டம்

Posted:

பாக்தாத் :ஈராக் முழுவதையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், இந்தியாவை கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு சதித் திட்டம் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்புமேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அதிபராக இருந்த சதாம் உசேன், 2006ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டில் மக்களாட்சி மலர்ந்து, ஜலால் தலாபானி அதிபராகவும், நூரி அல் மாலிக் பிரதமராகவும் பதவியேற்றனர்.கடந்த 2002ம் ஆண்டு முதல், அந்நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களும், உள்நாட்டு கலவரங்களும் நடைபெற்று ...

சிமென்ட் விலை கிடுகிடு உயர்வால் கட்டுமான பணிகளுக்கு நெருக்கடி: நடுத்தர மக்களின் பாதிப்பை சமாளிக்க 'அம்மா சிமென்ட்' வருமா?

Posted:

தமிழகத்தில், சிமென்ட் விலை உயர்வால், கட்டுமான பணிகள் முடங்கினால், வங்கிக்கடன் பெற்று வீடு வாங்குவோர், மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தலையிட்டு, நேரடி விற்பனையை கையிலெடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, கட்டுமானத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.தமிழகத்தில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு ஆண்டுக்கு, 5 கோடி டன் சிமென்ட் தேவைப்படுகிறது. ஆனால், இங்குள்ள, 10 பெரிய சிமென்ட் ஆலைகளிலிருந்து, ஆண்டுக்கு, 4.8 கோடி டன் தான் சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த, 10 ஆலைகளும், ...

'மூத்த தலைவர்களும் தவறு செய்துள்ளனர்'

Posted:

சென்னை : ''கட்சியின் மூத்த தலைவர்களே, லோக்சபா தேர்தலில் தவறு செய்துள்ளனர்; அவர்களும் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். அதற்கான நாட்கள் தள்ளிப் போகலாம். நடவடிக்கை கட்டாயம் உண்டு,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க.,வில் புகை மூட்டம் என்றாலும், தீ விபத்து போல் சித்தரிக்கின்றனர். இதெல்லாம், தி.மு.க., மீதுள்ள அக்கறையில் ஏற்பட்டதல்ல. லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வினர் சரியாக பணியாற்றவில்லை. அ.தி.மு.க.,வினரிடம் பணம் பெற்று, தேர்தல் பணி செய்யவில்லை என்ற புகார்கள் மீது, ஆறு பேர் கொண்ட குழு அமைத்து, ...

நன்னடத்தை, ஒழுக்கம், நல்ல சிந்தனை அவசியம்: பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

Posted:

சூரஜ்குண்ட் (அரியானா) : ''பாரதிய ஜனதா கட்சியின் புதிய எம்.பி.,க்கள், நன்னடத்தை, ஒழுக்கம் மற்றும் நல்ல சிந்தனைகளுடன் செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.லோக்சபாவுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கான பயிற்சி முகாம், அரியானா மாநிலம், சூரஜ்குண்டில் நேற்று துவங்கியது.இரண்டு மணி நேரம்பயிற்சி முகாம் நடக்கும் இடத்திற்கு, காலை, 8:30 மணிக்கு வந்த, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இணைந்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசியதோடு, இரண்டு மணி நேரம் ...

30 நாள் சாதனையை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி அரசுக்கு சவால்கள்: ஓராண்டிற்குள் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண செயல்திட்டம்

Posted:

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 26ம் தேதியுடன், ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்த, 30 நாட்களில், இந்த அரசு சந்தித்த பிரச்னைகள் கொஞ்சம் தான்; வரும் நாட்களில் தான் ஏராளமான பிரச்னைகளும், சவால்களும், இந்த அரசை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. அவற்றை, ஓராண்டிற்குள் தீர்த்து, முன்னுதாரண அரசாகத் திகழ, இந்த அரசு செயல்திட்டம் தீட்டி வருகிறது.கடந்த மாதம் 26ல், தலைநகர் டில்லியில், ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். மோடி தலைமையிலான, பா.ஜ., அரசிடம் மக்களின் ...

புதிய வரைபடம் வெளியிட்டு சீன அரசு விஷமத்தனம்: இந்திய பகுதிக்குள் அத்துமீறிய ராணுவத்தினர்

Posted:

புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி யும், தங்களுக்கே சொந்தமானது என, தெரிவிக்கும் வரைபடம் ஒன்றை, சீன அரசு வெளியிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அத்துடன், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர், சமீபத்தில், அத்துமீறி நுழைந்ததும் தெரிய வந்துள்ளது.மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோருடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன தலைநகர் ...

இடிந்து நொறுங்கிய கட்டடத்தில் வீடு வாங்கியோர் கதி என்ன?

Posted:

சென்னை:சென்னையில், இடிந்து நொறுங்கிய கட்டடத்தில், வீடுகளை வாங்கியோர் கதி என்ன; அவர்கள் செலுத்திய பணம் கிடைக்குமா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.'டிரஸ்ட் ஹைட்' என்ற பெயரில் கட்டப்பட்ட, 11 மாடிகள் கொண்ட இரு படுக்கையறை பிளாட்களுடன் கூடிய கட்டடத்தில், 42 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை, கடந்த ஆண்டே பலர், முன் பதிவு செய்து வாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. 11 மாடிகள் கொண்ட குடியிருப்பில், ஒரு மாடியில் நான்கு வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் பரப்பளவு, 975 முதல் 1,115 சதுர அடி.இந்த வீடுகள் ஒன்றின் விலை, அவை அமைந்திருக்கும், மாடிக்கு ஏற்ப, 51.18 லட்சம் ரூபாய் முதல், 58.53 லட்சம் ரூபாய் ...

கட்டடம் சரிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted:

சென்னை : சென்னை, போரூரில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததற்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், தனியாரால் கட்டப்பட்டு வந்த, 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ள செய்தி அறிந்து, மன வேதனை அடைந்தேன்.தகவல் கிடைத்ததும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை, பத்திரமாக மீட்டெடுத்து, தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, ...

தரைமட்டமான 11மாடி கட்டடத்தில் சிக்கிய 50 பேர் கதி?: சென்னையில் புது கட்டடம் இடிந்து பெரும் விபத்து

Posted:

சென்னை : சென்னையில், கட்டுமானப் பணி நடந்து வந்த, 11 மாடி கட்டடம் நேற்று மாலை, முழுவதும் சரிந்து, மண்ணோடு மண்ணாகியது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த, 50க்கும் மேற்பட்டோர், இடிபாடுகளில் சிக்கினர்;5 பேர் இறந்தனர். மற்றவர்களை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய, 50 பேரின் கதி, என்ன என்பது தெரியவில்லை.சென்னை, முகலிவாக்கத்தில், 'பிரைம் சிருஷ்டி' என்ற நிறுவனம், 'டிரஸ்ட் கைட்' என்ற பெயரில், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை, கடந்த ஆண்டு துவக்கியது. ஒவ்வொன்றும், 11 மாடிகளைக் கொண்டது. ஒரு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™