ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு
- 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன
- கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம்
- பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது
- அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா? - கருணாநிதி
- ஆண்டிராய்டு ஒன் - கூகுளின் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்கள்
- கானாவின் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
- எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
- சீதாபழத்தின் மருத்துவ குணங்கள்!
- கண்ணீர் துளிகள்!
- புனித தத்துவப் பாடல்கள்
- பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் !
- ஏப்ரல் முதல் தேதியிலா?
- குழந்தை நன்றாகச் சாப்பிட என்ன செய்ய வேண்டும்?
- அரசரை வென்ற புளியம்பழம்
- இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல்
- ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி
- துறவை வலியுறுத்தாத பௌத்தம்
- சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா
- உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ
- ராகு கேது கோயிலும் வழிபாட்டு பயன்களும்
- கையளவு கால்பந்து மைதானம்!
- பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்
- பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம்
- சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது
- செசெ வின் இந்த சாக்கடையை எங்கே வடிப்பது
- Kelvi Pathil
- அம்மா..
- இந்திய தேசிய கீதத்தின் பொருள்!
- காவேரி டெல்டா மீத்தேன் திட்டம் ஆவணப்படம் முழுவதும்
- தமிழ் கிராமிய நாட்டு புறப்பாடல்கள்
- கவலைகள் மறக்க சிரி...சிரி...!
- அறிவியல் ட்ரிக்ஸ்
- வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க
- பயத்தை போக்குவது எப்படி?
- linksys compact wireless-g usb adapter model wusb54gc driver
- ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா!
- ஒரு பக்க கதைகள்
- மழலைச் செல்வத்தின் மகிமை
| தமிழகத்தில் அம்மா திட்டங்கள் - ஒரு தொகுப்பு Posted: 28 Jun 2014 02:21 PM PDT அம்மா என அழைக்கப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதே பெயரில் ஏராளமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிலும் இந்தத் திட்டங்கள், வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துள்ளன. அம்மா என்ற பெயரில் ஜெயலலிதா படத்துடன் முன்வைக்கப் படும் இவை, அடித்தட்டு மக்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. விலைவாசி உயர்விலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் மலிவு விலையில் தரமான பொருள்களை விற்கும் இந்தத் திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கும் ... |
| 20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன Posted: 28 Jun 2014 02:09 PM PDT சென்னை: சென்னை விமான நிலையத்தில் 25 அடி உயரத்தில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் 2015 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி மற்றும் கிரானைட் கற்களால் பிரமாண்ட சுவர், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியில் இருந்து, விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் ... |
| கணினித் தொழில்நுட்ப 'அடிமைத்தனத்துக்கு' சிகிச்சை அளிக்க புதிய மையம் Posted: 28 Jun 2014 02:08 PM PDT கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? கணினி யுகத்தில், நமது முன்னோர் காலத்தில் எவரும் கற்பனை செய்து பார்க்காத சில நவீன கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. ட்ரன்க் கால் வசதி மூலம் நீண்ட தொலைவில் இருந்த உறவினர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தது ... |
| பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் 49 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கியது Posted: 28 Jun 2014 02:05 PM PDT ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தவுள்ள பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் கவுன்ட்டவுன் தொடங்கியது. பி.எஸ்.எல்.வி–சி 23 என்ற ராக்கெட் 30ஆம் தேதி காலை 9.52 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 714 கிலோ எடையுள்ள 'ஸ்பாட் 7', ஜெர்மனியைச் சேர்ந்த 'அய்சாட்', சிங்கப்பூரின் வெலோக்ஸ், கனடாவின் என்.எல்.எஸ். ரகத்தைச் சேர்ந்த 2 செயற்கை கோள்கள் ஆகியவற்றை பி.எஸ்.எல்.வி–சி 23 ராக்கெட் சுமந்து செல்கிறது. ராக்கெட்டை ஏவுவது ... |
| Posted: 28 Jun 2014 02:02 PM PDT விலைவாசி உயர்வு பற்றி கவலைப்படாமல் அம்மா உணவகம், உப்பு, மருந்து வியாபாரம் நடத்தினால் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து விடுமா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில்: ஜெயலலிதா ஆட்சியில் விலைவாசி நாளுக்கு நாள் கொடிய விஷம்போல் ஏறிக் கொண்டே போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் அளித்து விட்டார்கள் என்ற மமதையில் அதிமுக ஆட்சியினர் மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கவே மறுக்கிறார்கள். அவர்களுக்குள்ள முதல் கவலை பெங்களூர் ... |
| ஆண்டிராய்டு ஒன் - கூகுளின் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்கள் Posted: 28 Jun 2014 02:00 PM PDT இந்தியா போன்ற வளரும் நாடுகளின் சந்தையைக் குறி வைத்து, ஆண்டிராய்டு ஒன் என்ற பெயரில் மலிவு விலை ஸ்மார்ட் ஃபோன்களைக் கூகுள் தயாரிக்கிறது. இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறும்போது, ஆண்டிராய்டு இயங்கு தளம் கொண்ட இந்த ஃபோன்கள் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஃபோன்களின் திரை அளவு 4.5 அங்குலம் இருக்கும். இதில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்த இயலும். குறு நினைவகங்கள் (microSD card) வசதியுடன் பண்பலை வானொலிகளைக் கேட்கும் ... |
| கானாவின் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். Posted: 28 Jun 2014 01:58 PM PDT அக்ரா: உலக கோப்பை கால்பந்து தொடரில் மோசமான தோல்வியை சந்தித்ததால், கானாவின் விளையாட்டு துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரில், கானா அணி, 'ஜி' பிரிவில் ஜெர்மனி, அமெரிக்கா, போர்ச்சுகல் அணிகளுடன் இடம் பிடித்தது. அமெரிக்காவுக்கு எதிராக தோல்வி கண்ட கானா அணி, ஜெர்மனியிடம் 'டிரா' செய்தது. பின், போர்ச்சுகலுக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்து, 'ரவுண்டு–16' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. கடந்த 2010ல் நடந்த உலக கோப்பை தொடரில் ... |
| எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை Posted: 28 Jun 2014 01:56 PM PDT எயிட்ஸ் தடுப்புக்கான பிரச்சாரம் ஆணுறைப் பயன்பாட்டை மட்டும் வலியுறுத்தாமல் குடும்ப உறவின் முக்கியத்துவத்தையும் சொல்லவேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியிருந்தது சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. சமீபத்தில் நியு யார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு மத்திய சுகாதார துறை அமைச்சர் பேட்டி அளித்த போது, இந்தியாவில் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான பிரச்சாரங்கள் ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என்றும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதில் ... |
| சீதாபழத்தின் மருத்துவ குணங்கள்! Posted: 28 Jun 2014 01:52 PM PDT சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளைக் கொண்டது. சீதாபழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளது. இவ்வளவு சத்துக்கள் சீதாபழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மருத்துவ குணங்கள்! சீதாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீதாபழச் சதையோடு உப்பைக் கலந்து ... |
| Posted: 28 Jun 2014 01:39 PM PDT கண்ணீர்துளிகள்! நீண்ட நாட்களுக்கு பிறகு -நான் அவளை சந்தித்தபோது அவள் கண்களில் ஆனந்த கூத்தாட்டம் கண்டன கண்ணீர் துளிகள் !! |
| Posted: 28 Jun 2014 01:35 PM PDT புனித தத்துவப் பாடல்கள் எனது சுயஉள்ளுணர்வின் வெளிப்பாட்டுத் தொகுப்புகள் பதிப்புரிமை : நூலாசிரியர் - கோ.நந்தகுமார். ------------------------------------------------------------------- பரப்பிரும்மம் காத்துமழித்திட முதலிலேநீ படைப்பவனானாயே பள்ளிகொண்டோன் தொப்புள்கொடி மலருள் பிரும்மனானாயே பரமசிவனேவி பயிரவனோர் தலைகொய்ய நான்முகனானாயே பரத்தோரின் காலத்தைக் கபாலமெழுதிநீ பிரும்மலிபியானாயே -கோ.நந்தகுமார்...44 ------------------------------------------------------------------ பக்ஷிகளின் ராஜனே ... |
| பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் ! Posted: 28 Jun 2014 01:32 PM PDT உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் ! உங்கள் பெயர் எந்த ஆங்கில எழுத்தில் (alphapet ) ஆரம்பிக்கிறதோ , அதன் பலன் நான் அறிந்தவர்கள் பெயரில் கூறி உள்ள பலன் சரியாக இருக்கிறது . உங்களுக்கு எப்படி? ரமணியன் -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எழுத்து A A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், ... |
| Posted: 28 Jun 2014 01:30 PM PDT உமக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும் மறந்து போவதற்கு. அலுவலகம் போகும் புருஷனுக்கு தயார் செய்து கையசைத்து பொய்யாக வேணும் புன்னகைத்து... பிள்ளைகள் எழுப்பி குளிக்கச் செய்து தலைவாரி உடை மாற்றி பள்ளி வண்டிக்குள் தள்ளி திரும்ப... சொந்த பந்தம் பாத்திரம் பட்ஷணம் அக்கம் பக்கம் மேலுக்கேனும் ஒரு நிமிட நலம் விசாரிப்பு... ரேஷன் கடை மளிகைப் பொருள் துவைத்து முடிக்க பூசை புணஷ்காரம் ஏதேனும் என்றால் செய்து வைக்க... பசியை மறந்து இயங்கிக்கொண்டிருந்தாலும் இடையில் கொஞ்சம் அருந்திக் ... |
| குழந்தை நன்றாகச் சாப்பிட என்ன செய்ய வேண்டும்? Posted: 28 Jun 2014 01:28 PM PDT என்னுடைய குழந்தை பெயர் அபி அவளுக்கு என்ன சாப்பிட கொடுத்தாலும் சரியாகாவே சாப்பிடுவதில்லை. அனைத்து சத்தான உணவுகளும் தருகிறேன், உடல் எடை அதிகம் இல்லை. நல்லா சாப்பிட என்ன செய்வது. ப்ளீஸ் சொல்லுங்க... |
| Posted: 28 Jun 2014 01:21 PM PDT ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். உலகத்திலுள்ள அத்தனை பொருட்கள் மீதும் அவருக்கு ஆசை. அவர் ஆசைப்படாத பொருளே இல்லை என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால் அவர் ஆசை மீதே அவருக்கு ஆசை. அதனால் மக்கள் அவரை ஆசைராஜா என்று அழைத்தார்கள். ஆசைராஜாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டாமா? உடனே அவருடைய மந்திரிகள் அவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் வரவழைத்துக் கொடுத்தனர். அது உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் வரவழைத்து விடுவார்கள். இப்படி ஆசைராஜா உலகத்திலுள்ள எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார். ... |
| இஸ்லாமிய வாழ்வியல்: இஸ்லாம் = சமாதானம் = அடிபணிதல் Posted: 28 Jun 2014 01:20 PM PDT இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக சீரமைத்துக் கொள்வதற்கு இரண்டுவிதமான வாழ்வாதாரங்கள் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன. ஒன்று தனிப்பட்ட வாழ்க்கையையையும் சமூக வாழ்க்கையையும் நடத்திச் செல்வதற்கும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவசியமான எண்ணற்ற சாதனங்கள். மற்றொன்று சமுதாயத்திலும் அதன் பண்பாட்டிலும் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காகத் தனிப்பட்ட மற்றும் கூட்டுவாழ்க்கை பற்றிய அறிவு. மனிதனுடைய ஆன்மிகத் தேவைகளையும் சமுதாயப் பண்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக மனித இனத்தினரிடையே தன் ... |
| ரமலானை நோக்கி: நோன்பு என்ற புத்தாக்கப் பயிற்சி Posted: 28 Jun 2014 01:18 PM PDT அந்த மனிதருக்கு வயது 65. நல்ல உடல் நலம். ஒரே ஒரு மகன். அவன் படித்து நல்ல நிலையில் இருக்கிறான். 20 வருடத்திற்கு முன்னரே அவரது வங்கி வைப்புத்தொகை 10 லட்சங்கள். இன்னும் நல்ல முறையில் வணிகம் செய்து கொண்டுதான் இருக்கிறார். எப்போது சந்தித்தாலும் எப்படி இருக்கிறீர்கள்? என்ற என் கேள்விக்கு சோர்வான முகத்துடன் 'ஒண்ணும் இல்லப்பா' என உதட்டை பிதுக்கிக் கொண்டே பதில் சொல்வார். பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலானவர்களுக்குச் சலித்த மன நிலையுடன்தான் ஒவ்வொரு நாளும் ... |
| Posted: 28 Jun 2014 01:16 PM PDT வாராணசியில் அந்தக் காலத்தில் யசன் என்ற செல்வந்த இளைஞன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை பிடிக்காமல் போய், ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் புத்தரைச் சந்தித்தான். புத்தரைப் பார்த்தவுடன் அவரது சக்தியால் கவரப்பட்டான். பௌத்த மார்க்கத்தைக் கடைப்பிடிக்க புத்தர் அவனிடம் அறிவுறுத்தினார். துறவியாகி பௌத்த சங்கத்தில் அவன் சேர்ந்தான். அவனைத் தேடி வந்த அவனது தந்தையும் புத்தரைச் சந்தித்துச் சீடராக மாறினார். ஆனால், அவர் வீட்டையும் குடும்பத்தையும் துறந்துவிடவில்லை. ... |
| சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Posted: 28 Jun 2014 01:15 PM PDT சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா புதுடில்லி; இந்தியாவிற்குட்பட்ட அருணாசல பிரதேசத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை சீனா மீண்டும் வெளியிட்டுள்ளது. இது இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அக்பரூதீன் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அருணாசல் பிரதேசம் இந்தியாவிற்குட்பட்டது. இது சீனாவின் அங்கம் அல்ல என்பது சீனாவுக்கு நன்று தெரியும் இருந்தும், இவ்வாறான வரைபடம் ... |
| உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ Posted: 28 Jun 2014 01:12 PM PDT # உலகில் உள்ள இரண்டாவது குட்டி நாடு மொனாக்கோ. கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகம் உள்ள வாட்டிகனுக்கு அடுத்து உலகில் உள்ள குட்டி நாடு இது. # மொத்தமே 499.2 ஏக்கர்தான் இந்த நாட்டின் பரப்பளவு. நம்ம ஊரில் உள்ள ஒரு கிராமத்தைவிட சிறிய நாடு. # மொத்த சாலை தூரம் - 4.4 கிலோமீட்டர்தான். கடலோரப் பகுதி - 4.1 கிலோ மீட்டர். # நிலப்பரப்பு பட்டியலில் உலக அளவில் மொனாக்கோவுக்கு 248வது இடம். (110 ஏக்கர் பரப்புக் கொண்ட வாட்டிகன் 249வது இடம்) # ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அருகே மொனாக்கோ உள்ளது. # ... |
| ராகு கேது கோயிலும் வழிபாட்டு பயன்களும் Posted: 28 Jun 2014 01:10 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருத்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலந்தயடிதட்டில் ராகு பகவான் மங்கள ராகுவாகவும் கேது பகவான் ஞான கேதுவாகவும் அமர்ந்து அருள் பாலிக்கிண்றார்கள் இங்கு தினமும் காலை தென்காளஹஸ்தி சிவனுக்கு பூஜை முடிந்த உடன் ராகு கேதுவிற்கு பூஜை நடை பெறுகிறது . வாரத்தில் கிழமை 4.30 க்கு ராகு காலத்தில் 5 வகை அபிஷயங்களுடன் பூஜை நடை பெறுகிறது இதில் கலந்து கொண்டு 108 முறை ராகு கேது காயத்திரி மந்திரங்களை ஜெபித்து வருபவர்களுக்கு ராகு கேதுவால் ஏற்படும் அணைத்து துன்பங்களும் விலகி விடும் ... |
| Posted: 28 Jun 2014 01:08 PM PDT உலகமே உலகக் கோப்பை கால்பந்து காய்ச்சலில் உற்சாகமாக இருக்கிறது. தன் பங்குக்கு அந்தக் காய்ச்சலை வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கோயம்புத்தூர், வெள்ளலுரைச் சேர்ந்த வெங்கடேஷ். 130 மில்லிகிராமில் உலகக் கோப்பையின் மாதிரியைத் தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார் இவர். கோப்பையின் அடியில் பொறிக்கப்பட்டிருக்கும் 'பிரேசில்' என்ற வார்த்தை பளிச்சிடுகிற அளவுக்குத் தத்ரூபமாக இருக்கிறது உலகக் கோப்பையின் அந்த மினியேச்சர். 16 ஆண்டுகளாக நகை வடிவமைப்பாளராக வேலை செய்துவருகிற அனுபவம் வெங்கடேஷுக்குக் கைகொடுத்திருக்கிறது. கால்பந்து, ... |
| பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் Posted: 28 Jun 2014 01:06 PM PDT பஹ்ரைனில் தீவிரவாதிகள் நடத்திய தீ வைப்பு போராட்டத்தின் விளைவாக பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்ற 3 இந்தியர்கள் கியாஸ் சிலிண்டர் வெடித்து, படுகாயமடைந்தனர். பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பணியாற்றி வரும் அவர்கள் 3 பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர், வழியில் சாலையை மறித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். சமீபத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டு ... |
| பஸ்–கார் மோதல்; 3 பேர் நசுங்கிச்சாவு மேலும் 6 பேர் படுகாயம் Posted: 28 Jun 2014 01:06 PM PDT அரசு பஸ்–கார் மோதிக்கொண்ட விபத்தில், காரில் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:– காரில் சென்றனர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே கூட்டப்புளி என்ற கடற்கரை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் ஒரு காரில், துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டனர். கூட்டப்புளியில் இருந்து கன்னங்குளத்தை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இது நாகர்கோவில்–திருச்செந்தூர் ... |
| சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது Posted: 28 Jun 2014 12:58 PM PDT சென்னை: சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். - இவர்களில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. - சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. ... |
| செசெ வின் இந்த சாக்கடையை எங்கே வடிப்பது Posted: 28 Jun 2014 09:28 AM PDT பொது இந்த சாக்கடையை எங்கே வடிப்பது ஊழல் என்ற - ஒரு விஷக்காத்து; ஊர்வலம் போகுது-வறுமை இடம் பாத்து. யாரைச், சேர வந்ததோ; ஏழை ஊரைச் சென்றதோ; ஏழ்மை கண்டுக் கொண்டாதோ; குணத்தைக் காட்டி விட்டதோ. வறுமை, வாடைக் காத்து; வீசும் போதும் - பசி எடுத்து திறிந்ததோ. தன்னலம் மட்டும் அறிந்ததோ; பிறர்நலம் கெடவே வளர்ந்ததோ. எங்கே வடிப்பது? யார், கொண்டு முடிப்பது? வடி இறங்காச் சாக்கடையை. செசெ |
| Posted: 28 Jun 2014 07:22 AM PDT பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள் ? A. 8 B. 12 C. 18 D. 108 |
| Posted: 28 Jun 2014 07:14 AM PDT நான் கண்ட முதல் உருவம்... நான் கற்ற முதல் வார்த்தை... நான் பெற்ற முதல் உலகம்.. நான் மகிழ்ந்த முதல் சொர்க்கம்... நான் தூங்கிய முதல் படுக்கை... நான் வேண்டிய முதல் தெய்வம்.. நான் பாடிய முதல் பாட்டு... நான் தேடிய முதல் உறவு... நான் பேசிய முதல் சொல்.... * * * * * * * * * * * * * * * ****************************** ************************************ ******************************************* கற்ற அறிவும், பெற்ற ஞானமும் ,வேலை செய்யாது... இதைவிட அழகான வார்த்தை இவ்வுலகில் ... |
| இந்திய தேசிய கீதத்தின் பொருள்! Posted: 28 Jun 2014 05:13 AM PDT ஜன கன மன அதிநாயக ஜய ஹே - மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே ! பாரத பாக்ய விதாதா - இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே. பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது. புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் ... |
| காவேரி டெல்டா மீத்தேன் திட்டம் ஆவணப்படம் முழுவதும் Posted: 28 Jun 2014 04:46 AM PDT காவேரி டெல்டா மீத்தேன் திட்டம் ஆவணப்படம் முழுவதும் https://www.youtube.com/watch?v=O-gMN0QD2pc https://www.youtube.com/watch?v=qvTh_Si3lqU https://www.youtube.com/watch?v=zC6wgxGMTx0[/size] |
| தமிழ் கிராமிய நாட்டு புறப்பாடல்கள் Posted: 28 Jun 2014 04:23 AM PDT தமிழ் கிராமிய நாட்டு புறப்பாடல்கள் எழுத்தில் கிடைக்குமா |
| Posted: 28 Jun 2014 03:22 AM PDT - வட இந்தியாவில் விளையும் முக்கியமான பயிர் ஒன்று சொல், பார்க்கலாம்..? - "நார்த்'தங்காய் சார்..! - -கி.சுவாதி, ஈரோடு. - --------------------------------------- - எங்கப்பா அரிக்கேன் லைட் வெளிச்சத்துலதான் படிச்சார்... நான் தெரு லைட் வெளிச்சதுத்துலதான் படிச்சேன். இதிலிருந்து என்ன தெரிகிறது? - நீங்க யாருமே பகல்ல படிக்க மாட்டிங்கன்னு தெரியுது..! - -எம்.சோமசுந்தரம், - ------------------------------------------- - தினமும் அரை மூடி டானிக் குடிக்கச் சொன்னேனே, குடிச்சீங்களா..? - நல்லா ... |
| Posted: 28 Jun 2014 03:20 AM PDT |
| வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Posted: 28 Jun 2014 02:43 AM PDT சில முக்கியமான பைல்கள்.புத்தகங்கள்.குறிப்புகள் பிடிஎப் வடிவில இருக்கும். அதில் உள்ள படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். ஒன்றிரண்டு படங்கள் தேவைப்பட்டால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகத்தில் உள்ள அனைத்துபடங்களும் தேவையென்றால் அதற்கு காலதாமதம் ஏற்படும்.அவ்வாறு படங்களை மட்டும் விரைந்து பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான ... |
| Posted: 28 Jun 2014 02:20 AM PDT பய உணர்வு தோன்றுவதற்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. பயம் என்பது ஆழ்மனதில் பதிந்த நிரந்தர பயமாகவும், அவவ்ப்போது ஏற்படும் தற்காலிக பயமாகவும் இருக்கலாம். நம் மூளையிலுள்ள இருபக்க டெம்பொரல் லோபின் உட்புறம் உள்ள 'அமிக்டலா' என்னும் திசுக் கூட்டம்தான் பயம் ஏற்படுவதற்கான அடிப்படை மூளை அமைப்பாகும். எதிர்மறை மன உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இது முக்கியமாகச் செயல்படுகிறது. தன்னம்பிக்கையின்மையும், மனத் தடுமாற்றமுமே பயத்தின் முதல் அறிகுறி. பயம் என்பது பொதுவாக சிறுவயதிலேயே குழந்தைகளிடம் ஏற்பட்டுவிடுகிறது. ... |
| linksys compact wireless-g usb adapter model wusb54gc driver Posted: 28 Jun 2014 02:18 AM PDT எனக்கு linksys compact wireless-g usb adapter model wusb54gc driver வேண்டும் |
| ராம நாராயணன்: தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா! Posted: 28 Jun 2014 01:51 AM PDT குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி மாறன், குமார ராஜா, வசந்த பாலன் என்று அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதே சமுதாயத்திடம் சற்று காலங்கள் பின்னோக்கி, இதே கேள்வியை கேட்டுப் பார்த்தால், கண்டிப்பாக ராம நாராயணன் அவர்கள் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகித்திருப்பார். ராம நாராயணன்... இவர் குழந்தைகளின் ... |
| Posted: 28 Jun 2014 01:48 AM PDT உண்மை நிர்மலா கேட்டாள். ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...' பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு. போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு. வசுமதி ... |
| Posted: 28 Jun 2014 01:44 AM PDT சின்னச் சின்ன அடி எடுத்து, சிங்கார நடை நடந்து, நமது செல்லக்கிளி "அம்மா' என்று அழைக்கும் போது.. மழலைச் செல்வத்தின் மகிமை புதிய கோணத்தில் புரிய தொடங்குமல்லவா! உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்து நின்று பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும். வீட்டிலிருக்கும் சின்ன நாற்காலிகள், ஸ்டூல்கள் எல்லாம் நம்ம குட்டி இளவரசி பிடித்துக் கொண்டு நடக்கவும், தள்ளிக் கொண்டே செல்வதற்கும்தான்! இரண்டு கால்களையும் அகலமாக வைத்துக் கொண்டு மெள்ளத் தடுமாறி நடக்கும். கால் பாதங்கள் வளைவு இல்லாமல் தட்டையாக இருக்கும். நடக்க ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |