Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெஷாவரில் பாக்.,விமானம் மீது துப்பாக்கிசூடு:ஒருவர் பலி

Posted:

பெஷாவர்:பாகிஸ்தானில் ரியாத்திலிருந்து பெஷாவர் விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் விமானத்தின்மீது அடையாளம் தெரியாத ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பயணி பலியானார்.ஒருவர் காயமடைந்தார்.இச்சம்பவத்தால் பெஷாவரில் அனைத்து விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். அவர்களை பாதுகாக்க துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.பயணிகள் மீட்பு:நேற்று இரவு பெஷாவர் விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்(பி.ஐ.ஏ.) பி.கே756 விமானத்தில் ரியாத்திலிருந்து 180 பயணிகள் சவுதிஅரேபியாவிலிருந்து பெஷாவருக்கு வந்ததாக ...

டில்லி பல்கலை - யு.ஜி.சி., மோதல் விவகாரம்: தலையிட மறுத்து விட்டது உச்ச நீதிமன்றம்

Posted:

புதுடில்லி: நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பு தொடர்பாக, டில்லி பல்கலைக் கழகம் மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவான - யு.ஜி.சி., இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தில் தலையிட, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தப் பிரச்னை தொடர்பாக, முதலில், டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி உள்ளது.அவசர கூட்டம்: உச்ச நீதிமன்றத்தில், டில்லி பல்கலை ஆசிரியர் சங்கத்தின், முன்னாள் தலைவர் மிஸ்ரா தாக்கல் செய்த மனு: யு.ஜி.சி., வழிகாட்டிக் குறிப்புகளின் அடிப்படையில் தான், நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்பை, கடந்த ஆண்டு, டில்லி பல்கலைக் கழகம் ...

விசாரணையா... வீட்டுக்கு வாங்களேன்! ப்ரீத்தி அறிவிப்பால் போலீசார் அதிர்ச்சி

Posted:

மும்பை; பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன் முன்னாள் காதலரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது சமீபத்தில், போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நெஸ் வாடியா, தன்னிடம் அத்து மீறி நடந்ததாகவும், தரக் குறைவாக பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.புகார் அளித்த அடுத்த நாளே, அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை துவக்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து, இரண்டு நாட்களுக்கு முன், மும்பைக்கு வந்தார் ப்ரீத்தி ஜிந்தா. அவரிடம், புகார் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு ...

ரூ.52 ஆயிரம் கோடி முறைகேடு: ஒடிசா மாநிலத்தில் கண்டுபிடிப்பு

Posted:

புவனேஸ்வர்: ஒடிசாவில், தொழிற்சாலைகள் துவங்க தொழில் நிறுவனங்களுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்த நிலங்களை, தங்கள் சொந்த நிலங்கள் போல் காட்டி, 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, வங்கியில் முறைகேடாக கடன் பெறப்பட்டுள்ள மோசடியை, கணக்கு தணிக்கை அதிகாரி அம்பலப்படுத்தியுள்ளார்.பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு, ஒடிசாவில் உள்ளது. இம்மாநில சட்டசபையில், நேற்று முன்தினம், கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையை, நிதி அமைச்சர், பிரதீப்குமார் அமத் தாக்கல் செய்தார். அதில் தான் இந்த முறைகேடுகள் அம்பலமாகின. அரசு குத்தகைக்கு கொடுத்த ...

2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை

Posted:

லோக்சபா தேர்தல் முடிவுகள், அகில இந்திய அளவில் பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக வந்திருப்பதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் ரொம்பவும் சந்தோஷமாகி விட்டார். கொஞ்ச காலம், தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லாததால், தன்னுடைய அரசியல் செயல்பாடுகளை அமுக்கிப் போட்டிருந்த அவர், மீண்டும் எதிர்கால திட்டத்துடன், பல்வேறு காரியங்களில் இறங்கி இருப்பதாக, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் செய்தி பரவி இருக்கிறது.கருத்து வேறுபாடுஇது தொடர்பாக, விஜய் ஆதரவாளர்கள் வட்டாரங்களில் கூறியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், தலைமையிடம் நெருக்கமாக இருந்து ...

தொண்டர்களை சந்திக்கும் 'உங்களுடன் நான்' திட்டம்

Posted:

தே.மு.தி.க., நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கட்சியில் தக்கவைக்கும் நோக்கத்துடன், 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியை நாளை முதல், விஜயகாந்த் துவக்க இருக்கிறார்.கடந்த 2011ம் ஆண்டு, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவர் ஆன பிறகு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.அதற்கு முன்பு கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எளிதில் சந்தித்த விஜயகாந்த், அதன்பிறகு சந்திப்பதை தவிர்த்தார். எதிர்கட்சி தலைவராக பணியாற்ற, சட்டசபைக்கும் அவர் செல்லவில்லை. இதற்கிடையில், கட்சியும் சமீபத்திய லோக்சபா தேர்தலில் படுதோல்வி ...

மோடிக்கு கருணாநிதி கோரிக்கை

Posted:

சென்னை : 'தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடராமல் தடுக்க, நிரந்தரமான ஒரு தீர்வு காண, பிரதமர் மோடி, இலங்கை அரசுடன் பேசி முடிவு காண வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து, விரட்டி அடிக்கின்றனர். இலங்கைக்கு கொண்டு சென்று சிறையில் அடைப்பதும், காவலை நீடிப்பதும், மீனவர்களின் படகுகளையும், வலைகளையும், நாசமாக்குவதும், தொடர் கதையாக நீண்டு கொண்டு போகிறது.புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், 10 படகுகளில், கோடியக்கரை தென் கிழக்கு பகுதியில், மீன் பிடித்துக் ...

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் 12வது கடிதம்

Posted:

சென்னை : 'தமிழக மீனவர்கள், 64 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெ., கடிதம் எழுதி உள்ளார்.பிரதமராக மோடி பதவி ஏற்ற பின், காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி வருகிறார். இதுவரை, 11 கடிதங்களை அனுப்பி உள்ளார். இதில், மூன்று கடிதங்கள் மீனவர் பிரச்னை தொடர்பானது. இந்நிலையில், நேற்று, 12வது கடிதத்தை, பிரதமர் மோடிக்கு, அவர் அனுப்பி உள்ளார். இது, மீனவர் பிரச்னை தொடர்பானது.முதல்வர் அனுப்பிய கடிதம்:புதுக்கோட்டை ...

பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் புதிய கவர்னர்கள் நியமனம்: முதல் கட்டமாக 10 பேருக்கு வாய்ப்பு

Posted:

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன், மாநில கவர்னர்கள் பலர் மாற்றப்பட உள்ளனர். புதிய கவர்னர்களாக நியமிக்கப்பட உள்ள, பா.ஜ., மூத்த தலைவர்களின் பட்டியலை, அந்தக் கட்சி மேலிடம் தயாரித்து வருகிறது.மோடி அரசு: மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றதும், முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட, மாநில கவர்னர்கள் பலரை பதவி விலகும்படி கேட்கப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில கவர்னர்கள் பதவி விலகி விட்டனர். மேற்கு வங்கம் மற்றும் நாகாலாந்து மாநில கவர்னர்களும் பதவி விலக ...

ஈராக்கில் சிக்கிய இந்தியர்களை மீட்க ராணுவம் செல்லுமா? பத்திரமாக மீட்கப்படுவர் என்கிறார் அருண் ஜெட்லி

Posted:

புதுடில்லி: ''ஈராக் உள்நாட்டு போரில், இந்தியர்கள் பலர் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்க, எல்லாவிதமான நடவடிக்கைகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. ஈராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ராணுவத்தை அனுப்பும் திட்டம் இல்லை,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.போர்க் கப்பல்கள் பராமரிப்பு, கடற்படையில் பணியாற்றும் காமண்டர்களின் பணிகள் மற்றும் கடற்படையில் நிறைவேற்றப்படும், முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டு மாதங்களுக்கு முன், கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது. அப்போதைய கடற்படை தளபதி ஜோஷி, மேற்கு பிராந்திய கமாண்டர் ...

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி: மருந்துகளை இலவசமாக வழங்க அரசு திட்டம்

Posted:

புதுடில்லி : நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் மருத்துவ செலவினங்களை குறைக்கும் வகையிலும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் கூறியதாவது:மக்களின் செலவினங்களை குறைக்கவும், அனைவரும் நோய் பாதிப்பிலிருந்து விடுபடவும், மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, காய்ச்சல், உடல் வலி போன்ற சாதாரண நோய்கள் முதல் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற பரவலாக ...

சமையல் எரிவாயு ரூ.5; கெரசின் 50 காசுகள் உயர்த்த திட்டம்

Posted:

புதுடில்லி : சமையல் எரிவாயு விலையை மாதம்தோறும், சிலிண்டருக்கு, ஐந்து ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு, 50 காசுகளும் உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு, மத்திய அரசு தற்போது மானியம் வழங்கி வருகிறது. பெரும் சுமைஇந்த மானியத்தால், மத்திய அரசுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது. எனவே, மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.இதன் முதல்கட்டமாக, டீசல் விலையை, மாதம் தோறும், லிட்டருக்கு, 50 காசுகள் ...

புறநகர் ரயில் 2ம் வகுப்பு பயணிகளுக்கு சலுகை: 80 கி.மீ., வரை கட்டண உயர்வு இல்லை: அறிவித்தபடி மற்ற கட்டணங்கள் உயர்வு

Posted:

புதுடில்லி : ரயில்வே துறை சமீபத்தில் அறிவித்த, ரயில் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதேநேரத்தில், ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, புறநகர் ரயில் கட்டணத்தில் மட்டும், நேற்று திடீரென சலு கை அறிவிக்கப்பட்டது. அதன்படி, புறநகர் ரயில்களில், 80 கி.மீ., தூரத்திற்கு மட்டும், 2ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை.ரயில்வே துறை கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதனால், ரயில் போக்குவரத்தை மேம்படுத்தவும், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கவும், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™