Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


குட்டிப் பாப்பாவுக்கு எது நல்லது, எது கெட்டது?

Posted: 24 Jun 2014 01:52 PM PDT

குழந்தை வளர்ப்பு, இன்றைய இளம் பெற்றோருக்கு ஒரு புதிர். அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த முடியாமல் பசிக்கு அழுகிறதா... தூக்கத்துக்கு அழுகிறதா? என்று தெரியாமல் விழிபிதுங்கிப் போகின்றனர். அம்மா, பாட்டி, அத்தை... போன்றோர் நிறைந்திருந்த கூட்டுக் குடும்பம் மறைந்து போனதன் விளைவுதான் இதற்குக் காரணம். பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே கடத்தப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது ...

மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்: ஜூன் 25- 1900

Posted: 24 Jun 2014 01:50 PM PDT

லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் ...

மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்: ஜூன் 25- 2006

Posted: 24 Jun 2014 01:50 PM PDT

மைக்கல் ஜோசப் ஜாக்சன் (Michael Joseph Jackson, ஆகஸ்ட் 29, 1958 - ஜூன் 25, 2009) அமெரிக்க பாப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் அதிபர், மற்றும் வள்ளல் என பல முகங்கள் கொண்டவர். புகழ்பெற்ற ஜாக்சன், இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1964-ல் இவரின் நான்கு சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்தார். பின் 1971-ல் தனியாக கச்சேரிகள் செய்ய ஆரம்பித்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ. என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் ...

உக்ரைனை மறந்துவிட வேண்டாம்!

Posted: 24 Jun 2014 11:36 AM PDT

ஈராக் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டால் உக்ரைன் பிரச்சினை மறுபடியும் தலையெடுக்கும். சர்வதேச விவகாரங்களைப் பொறுத்தவரை புதிதாக ஒன்று தோன்றினால் அதற்கு முந்தையது நினைவை விட்டு நீ்ங்கிவிடும். நேற்றைக்கு, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகவும் உலக அமைதிக்கே அச்சுறுத்தல் என்று கருதத் தக்கதாகவும் இருந்த விஷயம் அடுத்த விவகாரம் கிளம்பிய உடனேயே மறக்கப்பட்டுவிடும். ஒரு மாதத்துக்கு முன்னால் - ஈராக்கில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன்தான் தலை போகிற விஷயமாகப் பேசப்பட்டது. ரஷ்யா, கிரீமியா ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 24 Jun 2014 10:49 AM PDT

உன் விழி சுடரில்... என் கவிதைகள்!

Posted: 24 Jun 2014 10:34 AM PDT

சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...

Posted: 24 Jun 2014 10:15 AM PDT

என்னதான் இருள்புயல் அடித்தாலும் கதிர்க் கிரண வாளெடுத்து அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும் சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும் நுண்ணறிவுப் புழைகளிலும் நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும் பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட ப்ரியம் தளர்வின்றி தலைகோதும் உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில் உயர்விவாசாயக் குணத்தோடு உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும் மழை கேட்டால் போதும் மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும் பால்வேறுபாடுகள் உடையும் பகைக்கூறுகள் ...

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

Posted: 24 Jun 2014 10:05 AM PDT

சர்க்கரை நோய்க்கு இயற்கை கஷாயம் மிகவும் நல்லது. முள்ளங்கி கிழங்கு 2 எடுத்து நசுக்கி கொள்ள வேண்டும். வேப்பிலை, மா, இலைகளை பொடி செய்து செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மண் பாத்திரத்தில் பொடிகளை பேட்டு 1 லிட்டர் தண்ணீரில் நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக காய்ச்சிய பிறகு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். தினமும் 100மில்லி கஷாயம் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். 5நாளைக்கு ஒரு முறை புதியதாக கஷாயத்தை தயாரித்து வைத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயை பொருத்த வரை உணவு முறை முக்கியமான ...

இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

Posted: 24 Jun 2014 10:01 AM PDT

திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!





இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அண்ணா!

நன்றி மறப்பது நன்றன்று!!

Posted: 24 Jun 2014 09:44 AM PDT

உதவிக்கு வெகுமதி நன்றி!! உப்பாகிலும் நீ மதி சிந்தி!! குறள் பல கூறும் இந் நன்றி!! இதை போற்றினார் வாழ்வதில் நிம்மதி!! சிறு நன்றி பெரிதென்று மனதில் பதி!! உனை உயர்த்திடும் ஜெகமதில் உன் மதி!! வாலாட்டும் நன்றிக்காய் ஐந்தறிவு ஜீவி!! பகுத்தறிவு உள்ளவன் நீ இதை மதி!! நன்றி மறந்தாரை பிரிந்தே விழகிரு!! செய்ந்நன்றி கொண்டாரை சேர்ந்தே இரு!! செய்ந்நன்றி கொன்றாரை மனதால் வெறு!! உன்னுளம் உவக்க மற்றார்க்கு உதவிடு!! பலன் பார்த்து கை கோர்ப்பதை விட்டிடு!! உயிருருக்கும் வரைக்கும் நினைத்திடு!! உலகம் ...

சில்லென்று ஒரு காதல்-எளிய வடிவில் நெடுநல்வாடை .

Posted: 24 Jun 2014 09:15 AM PDT

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டு வகையின்கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் "நெடு நல் வாடை".வாடை என்பது வடக்கிலிருந்து வரும் காற்று. அதனை 'நெடு' (நீண்ட) மற்றும் 'நல்' (நல்ல) என்ற அடைமொழிகளைச் சேர்த்து ஒரு சுவாரஸ்யமான தலைப்பு வைத்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இருநூறுக்கும் குறைவான வரிகளைக் கொண்ட இந்தச் சிறு நூலில் கதை என்று பார்த்தால் பெரிதாக ஏதும் இல்லை. குளிர் அடிக்கிறது, அதை எல்லாரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று வர்ணித்துவிட்டு, ஓர் அரண்மனையைக் ...

எப்படி சரி செய்வது

Posted: 24 Jun 2014 08:37 AM PDT

என்னுடைய கம்ப்யூட்டர் விண்டோஸ் 7 ஸ்டாண்டர்ட் கிபோர்ட் வொர்க் ஆகவில்லை அதே கிபோர்ட் வேறு கம்புடேரில் வேலை செய்யுது எப்படி சரி செய்வது

அறிவாயா என்னை...?

Posted: 24 Jun 2014 08:29 AM PDT

நீ அகம் மகிழ்ந்து சிரிக்கையில் உன் எண்ணங்களை பிரதிபலித்து சிரிக்க... நீ மனம் வெதும்பி குளுங்கி அழுகையில் உனது துயரை என்னுள் வாங்கி நானும் அழ... உனது அசைவுகள் எல்லாம எனது அசைவுகளாய் நொடிக்கு நொடி காட்டி மயங்க... உன் உதைப்பை ஏற்று மறுபடி உதைக்காது நொறுங்க உன்னை வெறுமைக்கு அப்படியே பிரதிபலித்து நொறுங்கிப்போக கண்ணாடிப் பொருளா... எமக்கான மனம் எமக்கான சிந்தனை எமக்கான செயல் உமக்கானது போல் எமக்கென சிலவும் உண்டென எப்போது எப்போது அறிவாய் என்னை சொல் நீ?

கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 24 Jun 2014 08:17 AM PDT

கவிதைத் தேன் நூலாசிரியர் : முனைவர் அ. கோவிந்தராஜுagrphd52@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17. விலை : ரூ. 120 ***** நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர். உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். "கவிதைத்தேன்" என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம். தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள். ...

கொழுப்பைக் கட்டுப்படுத்தும் தர்பூசணி

Posted: 24 Jun 2014 08:11 AM PDT

இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில  பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா? தர்பூசணிப் பழத்தின் சிறப்புகள் பற்றி, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியின் ஹோம் சயின்ஸ் துறை, பேராசிரியர் சாந்தி மற்றும் டயட்டீஷியன் சுபஸ்ரீ செல்வகுமாரிடம் கேட்டோம். 'வெயில் காலத்துக்கு ஏற்ற பழம் மட்டுமல்ல... புத்துணர்ச்சியைத் தரும் பழமும் தர்பூசணிதான். தாகத்தைத் தணிக்கும் நல்ல நீராகாரம். இதில், வைட்டமின்கள், ...

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..!

Posted: 24 Jun 2014 08:08 AM PDT

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு..! ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இது எப்படி சாத்தியமானது ? ? ? கோயில் எப்படி கட்டப்பட்டது ???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும். 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் ...

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம்

Posted: 24 Jun 2014 08:04 AM PDT

அன்பிற்கினிய ஈகரை நண்பர்களே! எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகளுள் ஒன்றான இந்த கடல் கொண்ட மாமல்லபுரம், அதாவது கடலுக்கு அடியில் சென்ற பண்டைய தமிழ் நகரம் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே? இங்கிருந்து ஒரு ஆங்கில தளத்திற்கோ அல்லது பல பக்கங்கள் கொண்ட வேறு ஒரு தளத்திற்கோ லிங்க் கொடுத்து படித்துக்கொள்ள சொல்லாமல், நாம் பல இடங்களிலும் படித்த பார்த்த தகவல்களை திரட்டி இங்கு ஒரு புது பக்கதை உருவாக்குலோம். நான் பலகாலம் ஆவலுடன் இணையத்தில் தேடி வந்த தலைப்பு ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (45)

Posted: 24 Jun 2014 07:59 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்: அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு அபாயம்

Posted: 24 Jun 2014 07:40 AM PDT

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், மக்கள் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். உயிரிழப்பு ஏற்படும் முன், சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லேசான மழை பெய்த நிலையில், சில நாட்களாக, இனம் புரியாத காய்ச்சல் பரவி வருகிறது. எந்த மாதிரியான காய்ச்சல் என்று தெரியாமல் பொதுமக்கள், அரசு, தனியார் மருத்துவமனைக்கு அலைந்து திரிகின்றனர். காய்ச்சல் மட்டுமின்றி, அதிக அளவில் உடல் சோர்வு, மூட்டு ...

ஒரு பக்க கதைகள்

Posted: 24 Jun 2014 06:44 AM PDT

உண்மை நிர்மலா கேட்டாள். ஏய் வசுமதி! நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டியாமே...' பின்னே என்னடி... கல்யாணத்துக்கு முன்னாடியே முக்கா சொட்டை. என் அழகுக்கு திருஷ்டி பரிகாரமா? பைத்தியக்காரி! ஆம்பளைக்கு அடையாளமே வழுக்கைதாண்டி வழுக்கை விழுந்தவர்களுக்குத்தான் ஆண்மை அதிகம்னு என் புருஷன் அடிக்கடி சொல்லுவாரு. போடி! என் இல்லற சாம்ராஜ்யத்தை ஆளப்போறவர் முடி துறக்காத மன்னனா இருக்கணும். முதலிரவு அறையில் தன் புது மனைவி வசுமதியைப் பார்த்து சொன்னான் பாலு. வசுமதி ...

காடு...

Posted: 24 Jun 2014 06:35 AM PDT

- இந்தத் தேசத்தில் அரசியலில்லை ஆனால் அரசனுண்டு - இந்தத் தேசத்தில் ஒளியில்லை ஆனால் நடமாட்டமுண்டு - இந்தத் தேசத்தில் உணவகமில்லை ஆனால் யாரும் பட்டினியாக இருப்பதில்லை - இந்தத் தேசத்தின் உயிர்தான் நம் தேசத்தின் ஓட்டம் எனவே காடு வளர்த்து நாட்டைக் காப்போம்! - ------------------ >கா.முகம்மது ஹக்கீம் (நிஜமான நிழல்கள்) _________________

மனதோடுதான் பேசுவேன்!

Posted: 24 Jun 2014 06:32 AM PDT

அகிலா பெட்ரூமில் பேசும் குரல் கேட்டது. இந்த நள்ளிரவில் யாரோடு பேசுகிறாள்? சந்தேகத்தோடு எழுந்து பார்த்த அம்மா பார்வதிக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் வரமுடியாது என்னை ஏன் கூப்பிடுறே முடியாது' இப்படி அகிலா ஜன்னலை நோக்கிப் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் ஜன்னல் பக்கம் யாரும் இல்லை. பார்வதி கணவரை எழுப்பிச் சொல்ல இரவு முழுக்க தூக்கமின்றித் தவித்தார்கள். மகளுக்கு என்ன ஆயிற்று? யாருடனாவது காதல் கீதல் என்று மகள் சோரம் போய்விட்டாளோ என்று பயந்தார்கள். மருத்துவரிடம் சென்றார்கள். அகிலாவின் நடவடிக்கைகளைக் ...

செசெ வின் எல்லாமே விளையாட்டுதான்

Posted: 24 Jun 2014 06:28 AM PDT

எல்லாமே         விளையாட்டுதான்   ஓசையின் விளையாட்டு எழுத்துக்கள் எழுத்துக்களின் விளையாட்டு வார்த்தைகள் வார்த்தைகளின் விளையாட்டு வாக்கியங்கள் வாக்கியத்தின்  விளையாட்டு கவிதைகள் கவிதைகளின் விளையாட்டு காதல் காதலின் விளையாட்டு திருமணம் திருமணத்தின் விளையாட்டு பிள்ளைகள் பிள்ளைகளின் விளையாட்டு  ஓசைகள்                                  செசெ

கிழக்கிந்திய கம்பெனியிடம் முர்ஷிதாபாத் வீழ்ந்த நாள்: ஜூன் 24, 1763

Posted: 24 Jun 2014 06:20 AM PDT

இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் மறக்க முடியாத துரோகங்களும் உண்டு. வங்காள நவாபுக்குத் துரோகம்செய்து, கிழக் கிந்திய கம்பெனிக்கு உதவிய மிர் ஜாபர் (1691-1765) வங்காள நவாப் ஆக அறிவிக்கப்பட்ட நாள் இன்று. இந்தியாவின் முகலாயப் பேரரசுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நிகழ்ந்த முக்கியமான போர், பிளாசி போர். கிழக்கிந்திய கம்பெனியின் படைத்தளபதியாக இருந்தவர் ராபர்ட் கிளைவ். இந்தியப் பேரரசின் சார்பாக வங்காள நவாப் சிராஜ் உத் தவுலா போரிட்டார். கிளைவ் ...

சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) நூலாசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 24 Jun 2014 06:19 AM PDT

சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்) நூலாசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி கவியரசன் பதிப்பகம், 31(12) சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை-92. விலை : ரூ. 300. தொலைபேசி : 044 2479 8375 தமிழ்ப்பணி என்ற இதழின் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் பெரிய மீசைக்காரர் மட்டுமல்ல, பெரிய கவிதைக்காரர். இலட்சக்கணக்கில் பாடல்களை எழுதிக் குவித்திடும் கவிதைக் குற்றாலம். மரபுக்கவிதைகள் எழுதுவதில் முடிசூடா மன்னராக வலம் வருபவர். மரபுக்கவிதையில் ...

ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை

Posted: 24 Jun 2014 06:12 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் விலங்குகளுக்கு செலுத்தும் ஊசி மருந்தை நோயாளிகளுக்குச் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. சுமார் 400 பேருக்கு இந்த விலங்கு ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது, இந்திய மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'மெரோபீனம்' என்ற அந்த ஊசி மருந்து விலங்குகளுக்குரியது. கொடுமை என்னவெனில், அரசின் இலவச மருந்துத் திட்டத்தின் கீழ் இந்த மருந்தை அரசு மருத்துவமனை வாங்கியுள்ளது. விலங்குகளுக்குக் கொடுக்கும் மருந்தை மனிதர்களுக்கு ஊசி மூலம் ...

ஈராக் எண்ணெய் ஆலை கிளர்ச்சிப் படை வசமானது எப்படி?

Posted: 24 Jun 2014 06:10 AM PDT

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பிராந்தியத்தின் சலாவுதீன் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக கிளிர்ச்சியாளர்கள் கட்டுக்குள் வந்தது. ஈராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.(லெவண்ட்) படைகள், பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் 10 நாட்களுக்கு முன்னர் நுழைந்தது. முதலில், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் சிறைபிடித்த கிளிர்ச்சியாளர்கள் பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது முழுமையாக அந்நிலையத்தை கைப்பற்றியுள்ளது. இடையில், ...

விளையாட்டு செய்தித் துளிகள்

Posted: 24 Jun 2014 06:07 AM PDT

* 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ...

'ரிலையன்ஸை புறக்கணிப்போம்'- ட்விட்டரில் இணையவாசிகள் போர்க்கொடி

Posted: 24 Jun 2014 06:06 AM PDT

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில், 'ரிலையன்ஸை புறக்கணிப்போம்' என்ற கோஷத்தை எழுப்பி, இந்திய இணையவாசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனத்தை ஈர்த்தனர். நிகழ்நேரத்தில் முக்கிய நிகழ்வுகள், பிரச்சினைகள், சுவாரசியங்கள், பிரபலங்கள், முக்கியச் செய்திகளையொட்டி, ட்விட்டர் தளத்தில் காரசார விவாதங்கள் அரங்கேறும். அந்த வகையில், இன்று காலை முதலே #BoycottReliance (ரிலையன்ஸை புறக்கணிப்போம்) என்ற ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்தது. ஹாஷ்டேகை பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ ...

முரண்பாடு

Posted: 24 Jun 2014 06:01 AM PDT

முரண்பாடு

புகை பிடிக்காதீர் என்றும்
புகை நமக்கு பகை என்றும்
அறிவிப்புப் பலகையில்
எழுதிக் கொண்டிருந்தான் அவன்
புகை பிடித்துக் கொண்டே?!

- கவிஞர் பா.பார்த்தசாரதி,

புதிய ரயில் கட்டண விவரம் அறிவிப்பு

Posted: 24 Jun 2014 05:58 AM PDT

சென்னை: சென்னை-நெல்லை 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.340-லிருந்து ரூ.385 ஆக உயர்த்தபட்டுள்ளது. 3 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ. 880-லிருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர் சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1245-லிருந்து ரூ.1410 ஆக உயர்த்தப்படுகிறது. சென்னை-தூத்துக்குடி 2ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் ரூ.385 ஆக உயருகிறது . 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.880ல் இருந்து ரூ.1000 ஆக உயருகிறது. 2 அடுக்கு குளிர்சாதன பெட்டிக் கட்டணம் ரூ.1,245ல் இருந்து ரூ.1,410 ஆக உயருகிறது. ...

ஹைக்கூ

Posted: 24 Jun 2014 05:54 AM PDT

ஹைக்கூ

கருத்தரிக்காமலே
குழந்தை பெற்றது.
குப்பைத்தொட்டி!


என்ன வேண்டுதலோ?
ஒற்றைக்காலில் தவம்.
மரம்!


உரிக்க உரிக்க கண்கள்
உகுக்கிறது கண்ணீர்.
வெங்காயம்!


வானில் உயரப் பறக்கும்
உயிரில்லாப் பறவை.
விமானம்!

- கவிஞர் பா.பார்த்தசாரதி,

என் ஊஞ்சல்..!

Posted: 24 Jun 2014 05:47 AM PDT

என் ஊஞ்சல்! (இளஞ்சிறார்களுக்காக...) எங்கள் வீட்டுக் கொல்லையிலே வேப்ப மரமொன்று நிற்கிறது. அதன் உச்சாணிக் கிளைதனிலே என் அழகு ஊஞ்சல் ஆடுகிறது. அதை ஆசையோடு நானும் கேட்க என் அப்பா கட்டித் தந்தாரே. அதில் ஆவலுடனே நானும் அமர என் அண்ணன் ஆட்டி விடுவாரே. எனக்குப் பிடித்த ஊஞ்சலே உன்னிடம் கேட்கிறேன் ஒரு கேள்வி..? ஊசல் போன்றே நீ ஆட ஊஞ்சல் எனப் பட்டாயோ! அனுதினமும் மாலை நேரம் நானும் உன்னில் ஆடி மகிழ்வேனே..! - கவிஞர் பா.பார்த்தசாரதி,

அருள் மழை பொழிந்திடுவாய்!

Posted: 24 Jun 2014 05:45 AM PDT

அருள் மழை பொழிந்திடுவாய்! (எனை இப்புவி தந்து கவி தந்த கலியுக தெய்வம் அய்யா வைகுண்டரை வேண்டுவதாக அமைத்த பாடல்...) நான் எடுத்த பிறவிதனை நன்றாக்கித் தந்தவரே... நாள்தோறும் நவின்றிடுவேன் நாவினிக்க நும் புகழை... அன்பு வழி தந்தவரே அகிலத்தை ஆள்பவரே அடிபணிந்து வணங்கி நின்றேன் அடியேனைக் காத்திடுவாய். நற்கல்வி தந்து எனை நல்வாழ்வு வாழ வைத்தாய். உலகுக்கு உனை உரைக்க உன் மகன் எனை பணித்தாய். பூமாலை சூட்டி நின்றேன் பாமாலை பாட வைத்தாய். பாமாலை இயற்ற வைத்து அப்பாவாலே ஏற்றி வைத்தாய். என்றும் உன் ...

உரைத்திடு...

Posted: 24 Jun 2014 05:43 AM PDT

உரைத்திடு...

அன்பு நிறை என்னவளே! நீ
ஆணி வேரென என்
இதயக்கமலத்தில்
ஈசன் அருளுடன்
உறைந்து
ஊன்றி விட்ட பின்
என் செய்வேன்...
ஏழையாகிய நான் - என்
ஐயம் தெளிவித்து - நாம்
ஒன்றுபட்டு வாழ - அன்பே
ஓர் வழி உரைத்திடு - நம்
ஔவை மொழியதாய்.

- கவிஞர் பா.பார்த்தசாரதி,

அன்பே...

Posted: 24 Jun 2014 05:40 AM PDT

அன்பே... அன்பே! என் ஆருயிரே! இனி நாம் ஈருயிராய் உடலளவில் இருப்பினும்... ஊன் உறக்கமின்றி என்றென்றும் உனை நினைத்து ஏங்கித் தவிக்கும் எனக்கு ஐயம் சிறிதுமில்லை - நாம் ஒருவரே - மனதளவில் ஓருயிரே - இதற்கு நம் ஔவை ஆண்ட அருந்தமிழே சாட்சி! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com

சிவாஜியுடன் ஒரு நாள்...

Posted: 24 Jun 2014 05:37 AM PDT

சிவாஜியுடன் ஒரு நாள்... மூச்சுக் காற்றின் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்தப் படப்பிடிப்பு அரங்கம். காரணம் சிவாஜி..! 'என் ஆச ராசாவே' படத்தில் நாட்டுப்புறக் கலைஞரின் வேடம் என்பதால் ஆசை ஆசையாக சிவாஜி ஒப்புக்கொண்டிருந்தார் என்று செய்தி பரவியிருக்க, சிவாஜி இருக்கும் படப்பிடிப்புத் தளம் பற்றி கட்டுரை எழுதலாம் என்ற ஆசையில் போயிருந்தேன். ரகசியம் பேசும் குரலில் டைரக்டர் கஸ்தூரி ராஜா, "லஞ்சுக்குப் பிறகு பேட்டியை வெச்சுக்குவோம். சிவாஜி ஐயா புறப்பட்டு போயிருவார். அதுவரைக்கும் வேடிக்கை ...

ஔவைக் கிழவி!

Posted: 24 Jun 2014 05:34 AM PDT

ஔவைக் கிழவி! அன்பிற்குரியக் கிழவி- நம் தமிழை ஆட்சி செய்தக் கிழவி - நண்பனுக்கு இறவா வரம் தரும் நெல்லிக் கனியை ஈந்தக் கிழவி - நல் அறவுரைகளை நம் உள்ளத்துள் தங்கச் செய்து ஊக்கம் தந்தக் கிழவி - சிறப்புடை எண்ணிலா வான் புகழ் பாடல்களை ஏட்டிலே தந்தக் கிழவி - நம் மனமுடை ஐய மகற்றி மாண்புறச் செய்தக் கிழவி ஒப்பிலாக் கருத்துக்களை மாந்தருக்காய் ஓதியக் கிழவி - யாரவர்? அவர் தான் நம் ஔவைக் கிழவி! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)

Posted: 24 Jun 2014 05:32 AM PDT

என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) வளைந்து நெளிந்து செல்கிறது அழகான ஒற்றையடிப் பாதை. என்னவளின் உச்சி வகிடு! காந்தங்களுக்கு இரு துருவங்கள் உண்டாம்; இரு புருவங்கள் கண்டேன். என்னவளின் கண்கள்! தரையைத் தொட்டு விடும் தூரத்தில் விழுதுகள். என்னவளின் எழில்மிகு கூந்தல்! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com

என்று மாறும் இந்த நிலை?!

Posted: 24 Jun 2014 05:30 AM PDT

என்று மாறும் இந்த நிலை?!

கற்றதால் பெற்றதை
காண்பித்தும்
கிஞ்சித்தும் இரக்கமின்றி
கீழ்த்தரமாய்
குவலயத்தையே
கூவமாக்கும்
கெட்ட எண்ணத்தோடு
கேட்டான்
கைக்கூலி
கொடு என்று
கோட்டானை யொத்த அவன்.
கவலையோடு கற்றறிந்த ஏழை?!


'தமிழ் நேசன்'
-பா.பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com

கடற்கரய் கவிதைகள்

Posted: 24 Jun 2014 05:29 AM PDT

வீடு ================== நிசப்தம் இறைந்து கிடக்கும் வீட்டுக் கதவினைத் திறந்து உள் பிரவேசிக்கின்றேன். - அருகம் புல் மீதமர்ந்த பனித்துளி போன்று சோபை கொண்டிருந்த நிசப்தத்தின் மேலூர்ந்து என் மென் பாதங்கள் செம்மறியாக மேய்கையில் சட்டென்று உறைந்து பனிகட்டிகளாகின. - வீட்டின் சீதோஷ்ணம் குறையக் குறைய வீட்டின் உள் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன் நான். தரை படிந்திருந்த திவலைகள் முழுக்கபனிக்கட்டியாகி வீடு விறைக்கையில் மெல்ல நிசப்தம் என் மீது மழையெனக் கவிழ்கிறது. - இதுயென் அடர்த்தியின் ...

நிழலே...

Posted: 24 Jun 2014 05:26 AM PDT


எனை
தொடர்ந்து வரும் நிழலே...
தூரப்போ...!
நீயுமா இப்படி?!
உனை
தூயவன் என்றெண்ணியிருந்தேனே...
நீயும்
சிலரைப்போல்
சாய்கிறாயே...
நேரத்திற்கு ஏற்றபடி!

- பா. பார்த்தசாரதி,
www.bparthasarathi.yolasite.com

ஏன் அப்பா பெயரை முதலெழுத்தாக பயன்படுத்துகிறோம்?

Posted: 24 Jun 2014 05:10 AM PDT

அப்பன்நீ... அம்மைநீ... ஐய னும்நீ... அன்புடைய மாமனும் மாமி யும்நீ... அம்மை நீ... அப்பன் நீ என்று ஆரம்பிக்கலாம். ஆனால் சுவாமிகள் (திருநாவுக்கரசர்) அப்பன் நீ... அம்மை நீ என்று ஆரம்பிக்கிறார். என்ன காரணம்? பூலோகத்தில வந்து பிறந்த நமக்கு முதல் தொடர்பு அப்பாதான்... அம்மா இல்ல.... ஆன்மாக்கள் மழை வழியாக மண்ணுலகத்திற்கு வருகின்றது. அப்படி வந்த ஆன்மாக்கள் உண்ணுகின்ற காய்கனி தானியங்களிலே கலந்து அது தந்தையாருடைய வயிற்றிலே போய் இரண்டு மாதங்கள் கருவிருந்து, அந்த கரு தாயார் வயிற்றுக்கு வருது. ஆகவே முதன்முதலாக ...

வருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Posted: 24 Jun 2014 05:02 AM PDT

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை ...

- உன்னைத்தான் கிளியே

Posted: 24 Jun 2014 05:00 AM PDT


-

மலையில் சென்று தேடினேன்
கொம்புத் தேனில்லை
மண்ணில் வந்து தேடினேன்
மலர்ந்த மலரில்லை
-
நிலவில் சென்று தேடினேன்
பரந்த ஒளியில்லை
அதனால்தான் கிளியே
உன்னைத் தேடி வந்தேன்!
-
இவையெல்லாம் ஒன்றாய்
உன்னிடம் பொருந்தியிருப்பதால்!
-
----------------------------

>கா.முகம்மது ஹக்கீம்

யாருக்குத் தெரியும்..?

Posted: 24 Jun 2014 04:55 AM PDT

--- பூமியில் காற்று செல்லும் பாதை வேறு யாருக்குத் தெரியும் பூமிக்கே தெரியாத போது - கடலின் அலை வரும் நோக்கம் வேறு யாருக்குத் தெரியும் கரைக்கே தெரியாத போது - அருவி தோன்றிய இடம் வேறு யாருக்குத் தெரியும் பாறைக்கே தெரியாத போது - அதே போல் அன்பே உன்மீது என்னுள் இருக்கும் பாசம் வேறு யாருக்குத் தெரியும் உனக்கே தெரியாத போது - ------------------------------ >கா.முகம்மது ஹக்கீம் (நிஜமான நிழல்கள்)


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™