Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காங்கிரஸ் கற்றுக்கொண்ட பாடம்

Posted: 24 Jun 2014 01:18 PM PDT

காங்கிரஸ் தோற்றுவிட்டது. 129 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட காங்கிரஸ், வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

வேண்டாம், வேண்டவே வேண்டாம்!

Posted: 24 Jun 2014 01:16 PM PDT

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய உருப்படியான சட்டங்களில் ஒன்று நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளித்தல், மறு குடியிருத்தல் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையையும், முறையான இழப்பீட்டையும் உரிமையாக்கும் சட்டம்.

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 24 Jun 2014 01:14 PM PDT

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருவியில் குளிக்கும்போது எண்ணெய், ஷாம்பு, சீயக்காய், சோப்பு போன்ற வேதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

காற்றாலைகளை துணை மின் நிலையங்களுடன் இணைக்க வரைவு விதிகள் வெளியீடு

Posted: 24 Jun 2014 01:12 PM PDT

காற்றாலைகள், காய்கறிக் கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் துணை மின் நிலையங்களுடன் தனியாக இணைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு சட்டம்: மெட்ரிக் கல்வி இயக்குநரின் உத்தரவை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

Posted: 24 Jun 2014 01:11 PM PDT

தனியார் பள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாணவர்களிடம் வருமான சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவை இடைத்தேர்தல்: 4 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

Posted: 24 Jun 2014 01:10 PM PDT

தமிழகத்தில் மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நான்கு சுயேச்சைகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

நாளை முதல் ஜூலை 4 வரை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

Posted: 24 Jun 2014 01:09 PM PDT

மாவட்டவாரியாக தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஜூன் 26 முதல் ஜூலை 4-ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

Posted: 24 Jun 2014 01:09 PM PDT

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்

Posted: 24 Jun 2014 01:08 PM PDT

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை பல்கலை.யில் இன்று எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு

Posted: 24 Jun 2014 01:07 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

மீனவர் பிரச்னை: இலங்கை அரசுடன் பேசி பிரதமர் நிரந்தர தீர்வு காண வேண்டும்: கருணாநிதி

Posted: 24 Jun 2014 01:04 PM PDT

தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கை அரசுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பி.இ. கலந்தாய்வு: விளையாட்டுப் பிரிவில் 51 இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Posted: 24 Jun 2014 01:03 PM PDT

பொறியியல் மாணவர் சேர்க்கையில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தமுள்ள 500 இடங்களில் 449 இடங்கள் நிரம்பியுள்ளன.

புதுகை மீனவர்கள் 11 பேர் சிறைப்பிடிப்பு: ஜூலை 7 வரை காவல்

Posted: 24 Jun 2014 01:01 PM PDT

இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை ஜூலை 7 வரை சிறையிலடைக்க யாழ்ப்பாண ஊர்க்காவல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

553 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

Posted: 24 Jun 2014 12:59 PM PDT

கலசப்பாக்கம் பகுதியில் உள்ள கலசப்பாக்கம், வில்வாரணி, ஆதமங்கலம் புதூர் அரசுப் பள்ளிகளில் 553 மாணவர்களுக்கு விலையில்லா

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு: இன்று கலந்தாய்வு

Posted: 24 Jun 2014 12:58 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் முதுகலை ஆசிரியர் பதவி

செங்கம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு

Posted: 24 Jun 2014 12:58 PM PDT

செங்கம் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேரூராட்சித் தலைவர் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

செய்யாறில் இன்று விவசாயிகள் மாநாடு: அமைச்சர்கள் பங்கேற்பு

Posted: 24 Jun 2014 12:57 PM PDT

செய்யாறில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள விவசாயிகள் மாநாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறை

செய்யாறு முகாமில் இலங்கை அகதி உண்ணாவிரதம்

Posted: 24 Jun 2014 12:57 PM PDT

செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள கைதி செந்தூரன் திடீரென தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 

நீர்வடிப் பகுதி சங்க உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

Posted: 24 Jun 2014 12:56 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டத்தின் கீழ் சங்க உறுப்பினர்களுக்கான

இன்று முதல் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு

Posted: 24 Jun 2014 12:55 PM PDT

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பங்கள் அனுப்பி உள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு

மலேரியா நோய் கண்டறிதல் பயிற்சி முகாம்

Posted: 24 Jun 2014 12:54 PM PDT

பொது சுகாதாரத் துறை மற்றும் வந்தவாசி நகராட்சி சார்பில் மலேரியா நோய் கண்டறிதல் குறித்த பயிற்சி முகாம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் திருட்டு

Posted: 24 Jun 2014 12:54 PM PDT

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை திருடிச் சென்ற

டெட்டனேட்டர், ஜெலட்டின், டிராக்டர் பறிமுதல்: விவசாயி கைது

Posted: 24 Jun 2014 12:52 PM PDT

திருவண்ணாமலை அருகே உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட டெட்டனேட்டர், ஜெலட்டின், டிராக்டரை போலீஸார்

நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியல்

Posted: 24 Jun 2014 12:52 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம் ஈயகொளத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த புலிவானந்தல் கிராம பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை (100 நாள் வேலை)

பிளஸ் 2 வரை தமிழ் மொழி கட்டாயம்: பரப்புரை இயக்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 24 Jun 2014 12:51 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை தமிழ் வழிக் கல்வி பரப்புரை இயக்கத்தினர்

மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

Posted: 24 Jun 2014 12:50 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு என்ற தலைப்பில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பி.சி., எம்.பி.சி. மாணவ-மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Jun 2014 12:50 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு எழுதுபொருள்கள்

Posted: 24 Jun 2014 12:49 PM PDT

செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச எழுது பொருள்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் எ.வ.வேலு ஆஜர்

Posted: 24 Jun 2014 12:49 PM PDT

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, செவ்வாய்க்கிழமை

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 24 Jun 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை அருகே உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

மருத்துவ அலுவலர் பணியிடம்: ஜூன் 27 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Jun 2014 12:48 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடத்துக்கு

காதல் ஜோடி தலைமறைவு: பெண்ணின் தந்தை தற்கொலை

Posted: 24 Jun 2014 12:47 PM PDT

ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி பெற்றோருக்குத் தெரியாமல் தலைமறைவானார்கள்.

செம்மரக் கடத்தலில் தொடர்புள்ள அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை

Posted: 24 Jun 2014 12:46 PM PDT

அரசியல் கட்சி பிரமுகர் போர்வையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட சிலரது பெயர்களை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது ம.பி. முதல்வர் அவதூறு வழக்கு

Posted: 24 Jun 2014 12:46 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா மீது அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான், செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கோயில்களில் கட்டண தரிசனம்: ரத்து கோரி ஜூலை 20-ல் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி

Posted: 24 Jun 2014 12:46 PM PDT

கோயில்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 20-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி

வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களை பிரபலப்படுத்தாதீர்: ஊடகங்களுக்கு சரத் பவார் வலியுறுத்தல்

Posted: 24 Jun 2014 12:45 PM PDT

""வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடையாக இருப்பவர்களை ஊடகங்கள் பிரபலப்படுத்த வேண்டாம்'' என்று தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அமைச்சருமான சரத்பவார் வலியுறுத்தியுள்ளார்.

அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

Posted: 24 Jun 2014 12:45 PM PDT

அரசால் வழங்கப்பட்ட ஆடு, மாடுகளை  கால்நடைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பணியிடை நீக்கத்தைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

Posted: 24 Jun 2014 12:45 PM PDT

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர் ஆகியோருக்கு ஆதரவாக, சேலம் வட்டாட்சியர்

கர்நாடக பேரவையில் எதிர்க்கட்சிகள் தர்னா: ஏழைகளுக்கு வீடுகள் வழங்கியதில் பாரபட்சம்

Posted: 24 Jun 2014 12:44 PM PDT

கர்நாடகத்தில் வாஜ்பாய் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு வீடுகள் வழங்கியதில் காங்கிரஸ் அரசு பாரபட்சமாகச் செயல்பட்டதாகக் கூறி, சட்டப்பேரவையில் பாஜக, மதச் சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

பேருந்தை வழிமறித்து கும்பல் துணிகரம்: கணவரைத் தாக்கி இளம்பெண் கடத்தல்

Posted: 24 Jun 2014 12:44 PM PDT

பேருந்தை வழிமறித்து கணவரைத் தாக்கிவிட்டு இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்றது. இதுதொடர்பாக அந்தப்

சீனாவில் இருந்து பால்பொருள்களை இறக்குமதி செய்வதற்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு: மத்திய அரசு

Posted: 24 Jun 2014 12:44 PM PDT

சீனாவில் இருந்து பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மும்பை புறநகர் ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

Posted: 24 Jun 2014 12:43 PM PDT

மும்பை புறநகர் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று சிவசேனை கட்சி மற்றும் பாஜக எம்.பி.க்கள் 10 பேர் ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கௌடாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு தோனிக்கு ஆந்திர நீதிமன்றம் வாரண்ட்

Posted: 24 Jun 2014 12:43 PM PDT

ஹிந்து மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியாக தொடரப்பட்ட வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு நேரில் ஆஜராவதற்கான வாரண்ட்டை ஆந்திர நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளது.

நிறுவனங்களுக்கு தகுதி மீறி சலுகை: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

Posted: 24 Jun 2014 12:42 PM PDT

"குறிப்பிட்ட சில தொழில் நிறுவனங்களுக்கு தகுதியை மீறி ஒடிஸா அரசு சலுகை காட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்' என்று காங்கிரஸூம் பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.

மண்ணெண்ணெய் விலையை மாதம் ரூ. 1 உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

Posted: 24 Jun 2014 12:40 PM PDT

மண்ணெண்ணெய் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் முதல் ரூ. 1 வரை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கல்வி பயில செல்லும் ஆதரவற்றோர் இல்ல மாணவி

Posted: 24 Jun 2014 12:34 PM PDT

அமெரிக்கா சென்று கல்வி பயில மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர ஆதரவற்றோர் இல்ல மாணவியான அங்கேலா பெர்னாட்டி ரிலே (19), தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் ஆட்சியை பிடிப்போம்: காங்கிரஸ்

Posted: 24 Jun 2014 12:33 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் குறிக்கோள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

முசாஃபர்நகர் கலவரம்: 10 பேருக்கு எதிராக வழக்கு

Posted: 24 Jun 2014 12:32 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, அரசியல் மற்றும் சமூக தலைவர்கள் 10 பேருக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலி என்கவுன்ட்டர்: போலீஸ் அதிகாரிக்கு மரண தண்டனை: 7 பேருக்கு ஆயுள்

Posted: 24 Jun 2014 12:32 PM PDT

பிகார் மாநிலம் பாட்னாவில், 12 ஆண்டுகளுக்கு முன்பு, போலி என்கவுன்ட்டரில் மூன்று மாணவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு பாட்னா விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மனித உரிமை மீறல் வழக்கு: மன்மோகனுக்கு சட்ட பாதுகாப்பு குறித்து அமெரிக்க நீதிமன்றம் கேள்வி

Posted: 24 Jun 2014 12:31 PM PDT

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக தொடரப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கில், அவருக்கு சட்ட பாதுகாப்பு வழங்குவது குறித்து அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அமெரிக்க நீதித்துறைக்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அலாஸ்காவில் நிலநடுக்கம்

Posted: 24 Jun 2014 12:31 PM PDT

அமெரிக்காவில், அலாஸ்காவின் லிட்டில் சிட்கின் தீவுப் பகுதியில் 8.0 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டு: இந்தியருக்கு 25 ஆண்டு சிறை

Posted: 24 Jun 2014 12:30 PM PDT

அமெரிக்காவில் சிறுமி ஒருவருக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்தியருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

"மொபைல் சேவா' திட்டத்துக்கு ஐ.நா. விருது

Posted: 24 Jun 2014 12:30 PM PDT

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள "மொபைல் சேவா' திட்டத்துக்கு 2014ஆம் ஆண்டின் "ஐ.நா. பொதுச்சேவை விருது'க்கான இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

Posted: 24 Jun 2014 12:29 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயிலில் 25ஆவது ஆனி உத்திரத் திருவிழா,

ஒடிஸாவில் அரசு டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

Posted: 24 Jun 2014 12:29 PM PDT

அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 62ஆக ஓடிஸா அரசு உயர்த்தியுள்ளது.

ஆந்திரத்தை ஊழலற்ற மாநிலமாக உருவாக்க சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 24 Jun 2014 12:29 PM PDT

ஆந்திரத்தை ஊழலற்ற மாநிலமாக உருவாக்க உறுதியளித்தும், கருப்புப் பணத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வனதிருப்பதி பெருமாள் கோயில் மேலாளருக்கு கொலை மிரட்டல்: முதியவர் கைது

Posted: 24 Jun 2014 12:29 PM PDT

நாசரேத் அருகே புன்னை நகர், வனதிருப்பதி ஸ்ரீநினிவாசப் பெருமாள் கோயில் மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக

மாநில கால்பந்து சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி அரையிறுதிக்குத் தகுதி

Posted: 24 Jun 2014 12:28 PM PDT

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மாநில கால்பந்துப் போட்டியின்

முன்னாள் ஆளுநர்களுக்கு கடன் அடிப்படையில் சிகிச்சை வசதி

Posted: 24 Jun 2014 12:28 PM PDT

"மத்திய அரசு மருத்துவத் திட்டத்தின்' (சிஜிஹெச்எஸ்) கீழ் வரும் மருத்துவமனைகள் அனைத்தும், முன்னாள் ஆளுநர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கடன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கும் வசதியை வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jun 2014 12:28 PM PDT

நாசரேத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து முன்னணியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடற்படையில் சேரத் தயாரானது புதிய போர்க்கப்பல்: எதிரிகளின் நீர்முழ்கிகளை தாக்கி அழிக்க வல்லது

Posted: 24 Jun 2014 12:28 PM PDT

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் கமோர்த்தா, அடுத்த மாதம் கடற்படையில் சேர தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 24 Jun 2014 12:27 PM PDT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன ஊர்தி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தெய்வசெயல்புரத்தில் 915 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அரசு நடவடிக்கை தேவை: ஜி. ராமகிருஷ்ணன்

Posted: 24 Jun 2014 12:27 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், தெய்வசெயல்புரத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க

கோவில்பட்டியில் இன்று நடக்கவிருந்த நகராட்சி முற்றுகை போராட்டம் வாபஸ்

Posted: 24 Jun 2014 12:26 PM PDT

கோவில்பட்டி நகராட்சிக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பில்

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்

Posted: 24 Jun 2014 12:25 PM PDT

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

நாகர்கோவில்

Posted: 24 Jun 2014 12:25 PM PDT

திட்டக் கமிஷனை கலைப்பதா? காங்கிரஸ் எதிர்ப்பு

Posted: 24 Jun 2014 12:25 PM PDT

மத்திய திட்டக் கமிஷன் கலைக்கப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கார் திருடும் கும்பல்: 6 பேர் கைது; 3 கார்கள் பறிமுதல்

Posted: 24 Jun 2014 12:24 PM PDT

நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கார்கள் திருடியதாக 6 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

களியக்காவிளையில் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து பயணிகள் பாதிப்பு

Posted: 24 Jun 2014 12:24 PM PDT

களியக்காவிளை அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து திடீரென சாலையில் பழுதாகி நின்றதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jun 2014 12:23 PM PDT

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை முறையாக வழங்கக் கோரி நாகர்கோவிலில் சி.ஐ.டி.யூ. சார்பில்

ஆளுநர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை: மார்கரெட் ஆல்வா

Posted: 24 Jun 2014 12:23 PM PDT

""ஆளுநர்கள் ராஜிநாமா செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இல்லை'' என்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் மார்கரெட் ஆல்வா கூறினார்.

ஆங்கிலவழிப் பிரிவுக்கு அனுமதி: அரசு உதவி பெறும் பள்ளிகள் வலியுறுத்தல்

Posted: 24 Jun 2014 12:23 PM PDT

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆங்கிலவழிப் பிரிவுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்

நாகர்கோவிலில் ரூ. 76 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 24 Jun 2014 12:22 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

Posted: 24 Jun 2014 12:21 PM PDT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

ஆறுமுகனேரி

Posted: 24 Jun 2014 12:21 PM PDT

ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயில்: 25ஆவது ஆனி உத்திரப் பெருந்திருவிழா, 2ஆம் திருவிழா,

ரப்பர் விலை தொடர் சரிவு: உரிய காலத்துக்கு முன்பே மரங்கள் அழிப்பு

Posted: 24 Jun 2014 12:20 PM PDT

ரப்பர் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ரப்பர் மரங்களை உரிய முதிர்வு காலத்துக்கு முன்பே வெட்டிவிட்டு மறு நடவு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

சரல்விளை அருகே பைக் மீது வேன் மோதல்: காவலர் சாவு

Posted: 24 Jun 2014 12:20 PM PDT

சரல்விளை அருகே பைக் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த காவலர் இறந்தார்.

கிள்ளியூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

Posted: 24 Jun 2014 12:19 PM PDT

கிள்ளியூரில், எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

பெண் ஒருவர் அமெரிக்க அதிபராக வேண்டும்: மிஷெல் ஒபாமா

Posted: 24 Jun 2014 12:18 PM PDT

அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டம் அருகே பணம் கேட்டு மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 24 Jun 2014 12:18 PM PDT

மார்த்தாண்டம் அருகே மதுஅருந்த பணம் கேட்டு தொழிலாளியை மிரட்டிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

களக்காடு அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் உதவி-ஆய்வாளரை கொல்ல முயற்சி: 2 டிராக்டர் பறிமுதல்; 8 பேர் கைது

Posted: 24 Jun 2014 12:18 PM PDT

களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் காவல் உதவி-ஆய்வாளரை டிராக்டரை

ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

Posted: 24 Jun 2014 12:17 PM PDT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

சூடான்: மதம் மாறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலை

Posted: 24 Jun 2014 12:16 PM PDT

சூடானில் மதம் மாறியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறையில் குழந்தை பிறந்ததால், அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Jun 2014 12:16 PM PDT

தாழக்குடியில் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

போர் குற்ற வழக்கு: வங்கதேச புரட்சிப் படை தலைவர் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 24 Jun 2014 12:16 PM PDT

வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி என்ற புரட்சி அமைப்பின் தலைவர் மோதிஉர் ரஹ்மான் நிஜாமி (69) மீதான போர் குற்ற வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

வீட்டின் கதவை உடைத்து 26 கிராம் தங்க நகைகள் திருட்டு

Posted: 24 Jun 2014 12:16 PM PDT

செங்கோட்டை அருகே வடகரையில் வீட்டிலிருந்த பீரோவை உடைத்து 26 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

பள்ளி வேன் மீது தனியார் வேன் மோதல்: நர்சிங் மாணவிகள் 10 பேர் காயம்

Posted: 24 Jun 2014 12:15 PM PDT

களியக்காவிளை சந்திப்பு அருகே நர்சிங் பயிற்சிப் பள்ளி வேன் மீது தனியார் வேன் மோதியதில், நர்சிங் மாணவிகள் 10 பேர் காயமடைந்தனர்.

முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் ஆய்வு: இலங்கை

Posted: 24 Jun 2014 12:15 PM PDT

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தைத் தோண்டி ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கொசு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Jun 2014 12:15 PM PDT

கன்னியாகுமரியில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தியப் பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டன் விருது

Posted: 24 Jun 2014 12:14 PM PDT

பிறந்த குழந்தையின் செவித்திறனை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த இந்திய பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டனின் "ரோலக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.

கடையம் அருகே பெண்ணிடம் நகைப் பறிப்பு

Posted: 24 Jun 2014 12:14 PM PDT

கடையம் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளத்தில் ஜமாபந்தி

Posted: 24 Jun 2014 12:13 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கும்

தாய்லாந்து ராணுவத்திற்கு எதிராக புதிய அமைப்பு

Posted: 24 Jun 2014 12:13 PM PDT

தாய்லாந்தில் ராணுவத்துக்கு எதிராக, பியூ தாய் கட்சியின் தலைவர் சருபாங் ருவாங்சுவான், செவ்வாய்க்கிழமையன்று புதிய அமைப்பைத் தொடங்கினார்.

33 பேருக்கு கறவை மாடு கடனுதவி வழங்கல்

Posted: 24 Jun 2014 12:13 PM PDT

ஆசீர்வாதபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில், 33 பேருக்கு கறவை மாடு கடனுதவி வழங்கப்பட்டது.

தனியார் பேருந்து, சிற்றுந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தல்

Posted: 24 Jun 2014 12:12 PM PDT

கோவில்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க

சிரியா ரசாயன ஆயுதங்கள் முழுமையாக ஒப்படைப்பு: அமெரிக்கா வரவேற்பு

Posted: 24 Jun 2014 12:12 PM PDT

சிரியா தனது வசமுள்ள கடைசி ரசாயன ஆயுங்களையும் சர்வதேச கண்காணிப்பாளர்களிடம் முழுமையாக ஒப்படைத்திருப்பதை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள்

Posted: 24 Jun 2014 12:12 PM PDT

அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் உடன்குடியில் திங்கள்கிழமை நடைபெற்றன.

28-இல் திருச்செந்தூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 24 Jun 2014 12:11 PM PDT

தூத்துக்குடியில் ஜூன் 28 ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என

இலங்கையில் இந்திய கலாசார மையம்

Posted: 24 Jun 2014 12:11 PM PDT

இலங்கையில் தமிழர்கள் அதிகம் உள்ள வடக்கு மாகாணத்தில், கலாசார மையம் ஒன்றை ரூ. 55 கோடி செலவில் இந்திய அரசு அமைக்க உள்ளது.

தீப்பெட்டிக்குத் தேவையான மூலப்பொருள்களை சிட்கோ மூலம் வழங்கக் கோரிக்கை

Posted: 24 Jun 2014 12:11 PM PDT

கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்  நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™