Tamil News | Online Tamil News |
- ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அத்வானி: நிதின் கட்காரி புகழாரம்
- அசாம், அரியானா, மகாராஷ்டிரா முதல்வர்கள் மாற்றம்: தேர்தல் தோல்விக்கு பலிகடா ஆக்குகிறது காங்கிரஸ்
- சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு திட்டம்? ரயில் கட்டணத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த அதிர்ச்சி
- போலீஸ் பாதுகாப்பு பெறும் வி.ஐ.பி.,க்களின் எண்ணிக்கை குறைகிறது: பலரின் 'பந்தா'வுக்கு முடிவு கட்ட மத்திய அரசு திட்டம்
- தனியாரிடம் அரசு போக்குவரத்து கழக பணிகள் 40 சதவீதம்: பஸ் போக்குவரத்தை நவீனமாக்க அரசு புது திட்டம்
- தோல்விக்கு காரணமான 3 மா.செ., உட்பட 33 பேருக்கு கல்தா: கருணாநிதி திடீர் அதிரடி; தி.மு.க.,வில் பரபரப்பு
- அமெரிக்க பார்லி.,யில் மோடியை உரையாற்ற அனுமதிக்க வேண்டும்: சபாநாயகருக்கு எம்.பி.,க்கள் கடிதம்
- கேரள அரசின் மெத்தனத்தால் சோதனை சாவடிகள் 'ஆமைவேகம்': கோவை எல்லையில் ? கி.மீ.,க்கு வாகனங்கள் ஸ்தம்பிப்பு
- ஈராக்கில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள்
- மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை
| ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அத்வானி: நிதின் கட்காரி புகழாரம் Posted: புதுடில்லி: ''பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரே. அவரின் தகுதிக்கு ஏற்ற பதவி தான் அது,'' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்காரி கூறினார்.துணை பிரதமர்: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது: பா.ஜ., மூத்த தலைவரான அத்வானி, ஏற்கனவே துணை பிரதமராக பதவி வகித்தவர். அவரை, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது. நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் அத்வானி. எல்லோராலும், மதிக்கப்படும் அவருக்கு, அந்தப் பதவியே தகுதியானதாக இருக்கும். கட்சியில் உள்ள, 75 ... |
| அசாம், அரியானா, மகாராஷ்டிரா முதல்வர்கள் மாற்றம்: தேர்தல் தோல்விக்கு பலிகடா ஆக்குகிறது காங்கிரஸ் Posted: லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட படு தோல்விக்கு காரணங்களைத் தேடி ஆராய்ந்து வரும் காங்கிரஸ் கட்சி, அசாம், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களை, தோல்விக்கு பலிகடா ஆக்க முடிவு செய்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் முதல்வர்களை மாற்ற, காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளது.வரலாறு காணாத தோல்விசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்க நேரிட்டது. இதுவரையில் இல்லாத அளவுக்கு, 44 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சி வெற்றி பெற்றது. இந்த படுதோல்வி, அந்த கட்சி யின் முக்கிய தலைவர்களையே அதிர்ச்சிக்கு ... |
| Posted: புதுடில்லி : ரயில் கட்டண உயர்வை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், மாதம்தோறும், 10 ரூபாய் உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு, மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றது முதல், ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்பதை, புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, சதானந்த கவுடா கூறி வந்தார்.அதன்படி, நேற்று முன்தினம் ரயில் பயணிகள் கட்டணம், 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம், 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது. இந்த ... |
| Posted: புதுடில்லி : மத்திய போலீஸ் படையின் பாதுகாப்பை பெறும், வி.ஜ.பி.,க்களின் எண்ணிக்கையை குறைக்க, பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதனால், முந்தைய ஆட்சிக் காலத்தில், 'பந்தா'வுக்காக, போலீசாருடன் வலம் வந்த பலர், இனி தனியாக வலம் வரவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.வி.ஐ.பி.,க்கள் மற்றும் வி.வி.ஐ.பி.,க் களுக்கு, அவர்களின் உயிருக்கு, பயங்கரவாதிகள் உட்பட, சில தரப்பினரால் உள்ள அச்சுறுத்தலைப் பொறுத்து, பிரிவு வாரியாக, மத்திய அரசால் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இப்படி பாதுகாப்பு வழங்கப்படுவது, அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவதும் உண்டு.தற்போது, இசட் பிளஸ், இசட், ஒய் ... |
| தனியாரிடம் அரசு போக்குவரத்து கழக பணிகள் 40 சதவீதம்: பஸ் போக்குவரத்தை நவீனமாக்க அரசு புது திட்டம் Posted: தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை சரிகட்ட, 40 சதவீத பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்க, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. மேலும் வழக்கில் இருந்து தப்பிக்க, சட்டசபை மூலம் திட்டத்தை நிறைவேற்ற, தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது.தமிழகத்தில், எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 20 ஆயிரத்து 634 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும், 16 லட்சம் லிட்டர் டீசலைப் பயன்படுத்தி, 80 லட்சம் கி.மீ., தூரத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.நஷ்டம்நாள்தோறும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்களில் பயணிக்கின்றனர். அ.தி.மு.க., ... |
| Posted: லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களை களையெடுக்கும் நடவடிக்கை, தி.மு.க.,வில் துவங்கி உள்ளது. வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 33 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி.கோஷ்டி அரசியல்...மாஜி அமைச்சர்கள் பழனி மாணிக்கம், முல்லை வேந்தன் உள்ளிட்ட மூன்று மாவட்ட செயலர்கள், அழகிரி ஆதரவு மாநில நிர்வாகியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம், 21 ஒன்றிய செயலர்கள் மற்றும் ஆறு நகரச் செயலர்கள், நேற்றைய நீக்கப் பட்டியலில் இடம் ... |
| அமெரிக்க பார்லி.,யில் மோடியை உரையாற்ற அனுமதிக்க வேண்டும்: சபாநாயகருக்கு எம்.பி.,க்கள் கடிதம் Posted: புதுடில்லி: 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு வரும்போது, அவரை பார்லிமென்டில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும்' என, அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர், அங்குள்ள சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்றதும் வெளியுறவு கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, வரும் செப்டம்பரில், நியூயார்க்கில் உள்ள ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார். அப்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் அவர் சந்தித்து பேசுவார் என, தெரிகிறது. பிரதமரின் அமெரிக்க பயணத்துக்கான தேதி இன்னும் ... |
| Posted: கோவை : தமிழக - கேரள எல்லையிலான வாளையாரில், வாகன தணிக்கைப்பணி தாமதம் காரணமாக, ? கி.மீ., தொலைவுக்கு, சரக்கு வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன; அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை, வாளையாரில், கேரள அரசின் போக்குவரத்துத்துறை, கலால்வரித்துறை, விற்பனை வரித்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், இச்சோதனைச் சாவடிகளை கடந்து கேரளாவுக்குள் நுழைகின்றன.கடந்த பத்து நாளாக, வாகன தணிக்கை பணி மிகவும் மெத்தனமாக நடப்பதால், 5 கி.மீ., தொலைவு வரை சரக்கு வாகனங்கள், 10? மணி நேரம், 12 மணி நேரம் வரை ... |
| ஈராக்கில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் Posted: புதுடில்லி : 'உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள, ஈராக்கின் நஜப் மாகாணத்தில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல், தவித்து வருகின்றனர்' என, சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு கூறியுள்ளது.இது தொடர்பாக, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:ஈராக்கின் நஜப் மாகாணத்தில், உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவர்களின் பாஸ்போர்ட்டை வழங்க, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தினர் மறுக்கின்றனர். ... |
| மழைநீர் சேகரிப்பிற்கு விளம்பரங்கள் மட்டும் போதாது; அரசின் களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை Posted: மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க விளம்பரங்கள் மட்டும் போதாது. அரசின் நேரடி களப்பணியும், கண்டிப்பும் அவசியம் தேவை என்றும் சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.வறட்சிக்கான திட்டம்: வறட்சி ஏற்படும் போதெல்லாம், மழை நீர் சேகரிப்பு மீது தமிழக அரசு அதிகம் கவனம் செலுத்தும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழை பொய்க்கும் போது ஆறு, குளம், குட்டைகள், வரத்துக் கால்வாய்கள் மற்றும் அணைகட்டுகள் என அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போகும். இதனால் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியில் அமைந்துள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து, பொது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |