Tamil News | Online Tamil News |
- சீனாவின் நாடகம் அரங்கேற்றம்: ஒரு புறம் கைகுலுக்கல்; மறுபுறம் அத்துமீறல்
- இந்து அமைப்பு பிரமுகர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை? சென்னையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 4 பேர் பலி
- 'க்ரீன் பீஸ்' அமைப்புக்கு மத்திய அரசு 'கிடுக்கிப்பிடி': உளவுத்துறையின் இரண்டாவது அறிக்கை தாக்கல்
- அனைத்து துறைகளிலும் இந்தி மொழி பயன்பாடு: அமைச்சர் உத்தரவு
- தொடர்பு மொழி பிரச்னையில் எச்சரிக்கை தேவை: கருணாநிதி 'அட்வைஸ்'
- 'மாஜி'க்களுக்கு மறுபடியும் பதவியா? தொண்டர்கள் எதிர்ப்பு; தி.மு.க., தலைமை தவிப்பு
- சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.14 ஆயிரம் கோடி: சிறப்பு புலனாய்வு குழு மீட்குமா?
- ஆபாச படங்களை காண ரீசார்ஜ்: ஆசீர்வதிக்கும் 'போலி'சார்!
- ஊருக்கு ஒரு ரேட்டு; டிரான்ஸ்பருக்கு நோட்டு: பதிவுத்துறையில் போட்டி போட்டு லஞ்சம்
- செவிலியர்களை மீட்க வேண்டும்: ஜெ., கடிதம்
- காலியாகுது கொடைக்கானல்: ரூ. பல கோடி மதிப்புள்ள மரங்கள் கடத்தல்: வனத்துறை விஜிலென்ஸ் குழுவினர் விசாரணை
| சீனாவின் நாடகம் அரங்கேற்றம்: ஒரு புறம் கைகுலுக்கல்; மறுபுறம் அத்துமீறல் Posted: புதுடில்லி: இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவோம் என்று கூறிய சீனா மறுபுறம் தனது வழக்கமான அத்துமீறலை தொடர்ந்து கொண்டே உள்ளது.நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிலையில் தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்த நாடுகளில் ஒன்று சீனா. இதனை தொடர்ந்து சீன அதிபரின் சார்பில் அவரின் பிரதிநிதியாக சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே எல்லைப்பிரச்னைகள் குறித்து விரிவாக பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ... |
| Posted: சென்னையில் நேற்று முன்தினம் இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் படுகொலை உட்பட, ஒரு ஆண்டில் நான்கு பேர், வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்களால், இந்து அமைப்புகளின் பிரமுகர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.மதுரை மாநகர், நேதாஜி சாலையில், கடந்தாண்டு, ஜூன் மாதம், 26ம் தேதி, இந்து முன்னணி பிரமுகரான, பால் வியாபாரி சுரேஷ்குமார், நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், ஈடுபட்டவர்கள் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், தகவல் அளித்தாலும், ... |
| 'க்ரீன் பீஸ்' அமைப்புக்கு மத்திய அரசு 'கிடுக்கிப்பிடி': உளவுத்துறையின் இரண்டாவது அறிக்கை தாக்கல் Posted: புதுடில்லி: 'க்ரீன் பீஸ்' அரசு சாரா அமைப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியை பெறுவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வது குறித்து, பரிசீலிக்க வேண்டும்' என, உளவுத் துறை சார்பில், புதிய அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'க்ரின் பீஸ்' என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இதன் தலைமையகம், நெதர்லாந்து நாட்டில் உள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்வது தான், இந்த அமைப்பின் முக்கிய பணியாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் உளவுத்துறை அமைப்பு சார்பில், ... |
| அனைத்து துறைகளிலும் இந்தி மொழி பயன்பாடு: அமைச்சர் உத்தரவு Posted: புதுடில்லி; ''அனைத்து துறைகள் மற்றும் பொதுவாழ்வில், இந்தி மொழியின் பயன்பாட்டை, மத்திய அரசு அதிகரிக்கும்,'' என, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.முக்கியத்துவம்: தமிழகத்தில், தி.மு.க., உட்பட, சில கட்சிகள், இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக, பல ஆண்டுகளாக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டில்லியில், நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் ரிஜிஜு கூறியதாவது: இந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதை, மற்ற மொழிகளை சீர்குலைக்கும் செயலாக பார்க்கக் கூடாது. இந்தி மொழி அலுவலக மொழி என்பதால், பல்வேறு துறைகளிலும், ... |
| தொடர்பு மொழி பிரச்னையில் எச்சரிக்கை தேவை: கருணாநிதி 'அட்வைஸ்' Posted: 'தொடர்பு மொழி பிரச்னையில், எச்சரிக்கை தேவை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க.,வை பொறுத்தவரை, தமிழ் மொழியை காத்திடவும், இந்தி திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளது. தொடர்ந்து, பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும், ஆட்சி மொழியாக உள்ள இந்திய மொழிகளை, மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கும் வகையில், ஆட்சி மொழி சட்டத்தில், தேவையான திருத்தத்தை, மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அதன்படி, தமிழை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மாற்ற வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ... |
| 'மாஜி'க்களுக்கு மறுபடியும் பதவியா? தொண்டர்கள் எதிர்ப்பு; தி.மு.க., தலைமை தவிப்பு Posted: தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்துள்ள மாவட்ட செயலர்கள் சிலர், அதிலிருந்து மீளாத நிலையில், முன்னாள் மாவட்ட செயலர்களுக்கு, மறுபடியும் பதவி கொடுப்பதற்கு, தொண்டர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக, மாவட்டங்களில் இருந்து, அறிவாலயத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது.அவப்பெயர்: தி.மு.க.,வில் ஆண்டாண்டு காலமாக, மாவட்ட செயலர்களாக இருப்பவர்களே அதிகம். இவர்களது ஆதிக்கம் காரணமாக, தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும், கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயர் தான், லோக்சபா ... |
| சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் ரூ.14 ஆயிரம் கோடி: சிறப்பு புலனாய்வு குழு மீட்குமா? Posted: ஜூரிச்: சுவிட்சர்லாந்து நாட்டு வங்கி களில் உள்ள, இந்தியர்களின் கருப்புப் பணம், 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்தியா உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், முறைகேடாக சேர்த்த பணத்தை, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில், 'டிபாசிட்' செய்துள்ளனர். இப்படி டிபாசிட் செய்துள்ளவர்களின், பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என, இந்தியாவும், மற்ற பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.சிறப்பு புலனாய்வு குழு: அதே நேரத்தில், சுவிட்சர்லாந்து உட்பட, பல வெளிநாடுகளின் வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் ... |
| ஆபாச படங்களை காண ரீசார்ஜ்: ஆசீர்வதிக்கும் 'போலி'சார்! Posted: பொள்ளாச்சி: நாம் பயன்படுத்தும் 'ப்ரீபெய்டு' மொபைல் போனுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது குறித்து அறிந்திருப்பீர்கள்...ஏன், நீங்களே பணம் செலுத்தி உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்திருப்பீர்கள். மொபைல் போனில் புதிது, புதிதாக ஆபாச படங்களை காணவும், ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதி வந்து விட்டது தெரியுமா? வேறெங்கு...? குற்ற செயல்கள் நடந்து முடிந்த பின், 'அப்படியா...?' என்று கேட்கும், போலீசார் பணிபுரியும் பொள்ளாச்சியில்தான்!இ-மெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நவீன தகவல் பரிமாற்றங்கள் வந்தபோது மகிழ்ந்த பெற்றோரில் பலர், இன்று இவற்றின் பெயரைக் கேட்டாலே அலறி ஓடுகின்றனர். இளைய ... |
| ஊருக்கு ஒரு ரேட்டு; டிரான்ஸ்பருக்கு நோட்டு: பதிவுத்துறையில் போட்டி போட்டு லஞ்சம் Posted: தமிழக பதிவுத்துறையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருந்த பொது மாறுதலை, ஆண்டுக்கொரு முறையாக மாற்றியதன் எதிரொலியாக, லஞ்சத்தின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது.தமிழக பதிவுத்துறையில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, சார்பதிவாளர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் மாற்றப்படுவது வழக்கம். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அமைச்சர் மாறும்போதெல்லாம் பொது மாறுதல் நடக்கிறது. கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பி.வி.சண்முகம், ரமணா, எம்.சி.சம்பத் என, இத்துறை, இதுவரை, மூன்றாண்டுகளில் 5 அமைச்சர்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறை அமைச்சர் மாறும்போதும், முதல் வேலையாகச் ... |
| செவிலியர்களை மீட்க வேண்டும்: ஜெ., கடிதம் Posted: சென்னை: ஈராக்கில், மருத்துவ மனையில் சிக்கித் தவிக்கும், 46 இந்திய செவிலியர்களை, பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: ஈராக்கில், தற்போது நிலவும் குழப்பமான நிலையில், திக்ரித் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த, 46 இந்திய செவிலியர்கள், உள்ளே சிக்கி உள்ளனர். இவர்களில், சினி, சிலி, சிமி, அலீனா, நீது, மனிதா, ஆகிய ஆறு பேரும், தமிழகத்தில் உள்ள, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினர், கவலையுடன் உள்ளனர். கடத்தப்பட்ட செவிலியர்கள் ஏதும் ... |
| Posted: கொடைக்கானல்: கொடைக்கானலில் மரங்கள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து வனத்துறை விஜிலென்ஸ் குழுவினர், நான்கு குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்திவருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.கொடைக்கானலில், 40 ஆயிரம் எக்டேரில் வனப்பகுதி உள்ளது. இங்குள்ள அரியவகை தாவரங்கள், வனவிலங்குகளை பாதுகாக்க, கொடைக்கானலை வன உயிரின சரணாலயமாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அப்போது, சோலைக்காடுகளுக்கு இடையூறாக உள்ள வேட்டில் மரங்களை அகற்ற அரசு உத்தரவிட்டது. முதல்கட்டமாக, மதிகெட்டான் சோலை, குண்டன் சோலை, குண்டம்பச்சி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |