Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"திருந்திய நெல் சாகுபடி மூலம் கூடுதல் மகசூல்'

Posted: 19 Jun 2014 04:54 PM PDT

கூடுதல் மகசூல் பெற திருந்திய நெல் சாகுபடியில் ஈடுபடலாம் என்றார் வேளாண் துறை இணை இயக்குநர் அழகிரிசாமி.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

Posted: 19 Jun 2014 04:53 PM PDT

அரியலூரில் குண்டர் சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அன்னகாரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் உதயசூரியன் (46). இவர் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

தட்டுப்பாடின்றி தபால்தலை கிடைக்க வலியுறுத்தல்

Posted: 19 Jun 2014 04:52 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத் தபால் தலைகளும் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது

Posted: 19 Jun 2014 04:52 PM PDT

அரியலூரில் குண்டர் சட்டத்தின்கீழ் ஒருவரைக் கைது செய்ய ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார். அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் அன்னகாரன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் உதயசூரியன் (46).

ஜயங்கொண்டம் அருகே 6 குடிசைகள் தீக்கிரை

Posted: 19 Jun 2014 04:52 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மின் கசிவால் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.

கல்வியில் சிறக்க உடல் நலன் அவசியம்

Posted: 19 Jun 2014 04:52 PM PDT

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் உடல் நலனைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார் அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி.

ஜயங்கொண்டத்தில் நவீன கழிவறைப் பணி

Posted: 19 Jun 2014 04:52 PM PDT

: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் நம்ம டாய்லட் திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சத்தில் நவீன கழிவறை அமைக்கும் பணிகளை ஆணையர் வே. நவேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 19 Jun 2014 04:51 PM PDT

பெரம்பலூர் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஓய்வூதியர் கவனத்துக்கு...

Posted: 19 Jun 2014 04:51 PM PDT

பொதுத்துறை வங்கித் திட்டம் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைய தங்களது விவரங்களை ஜூன் 30-க்குள் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

ஆயத்த ஆடை, இலவச தொழிற்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு

Posted: 19 Jun 2014 04:51 PM PDT

ஆயத்த ஆடை மற்றும் வடிவமைப்பு மையத்தில் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறலாம் என்றார் பயிற்சி மைய நிர்வாகப் பொறுப்பாளர் இந்திராகவுரி.

பெரம்பலூரில் முளைப்பாரி ஊர்வலம்

Posted: 19 Jun 2014 04:50 PM PDT

பெரம்பலூரில் கட்டப்பட்ட சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர்களுக்கு ஆர்.பி. மருதராஜா நன்றி

Posted: 19 Jun 2014 04:50 PM PDT

பெரம்பலூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா வியாழக்கிழமை நன்றி கூறினார்.

மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை

Posted: 19 Jun 2014 04:50 PM PDT

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

செட்டிக்குளம் கோயிலில் குபேர ஹோமம்

Posted: 19 Jun 2014 04:50 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 18 பேர் மீது வழக்கு

Posted: 19 Jun 2014 04:49 PM PDT

ஆலங்குடி அருகே இடப் பிரச்னை காரணமாக எதிரிகளை பிடிக்கச் சென்ற போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்த 18 பேர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு விபத்தில் இறந்த 7 மாணவர்களுக்கு அஞ்சலி

Posted: 19 Jun 2014 04:49 PM PDT

புதுக்கோட்டை அருகே கடந்த ஆண்டு நேரிட்ட சாலை விபத்தில் இறந்த 7 மாணவர்களுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பயறுவகைப் பயிர்கள் சாகுபடியால் மண்வளம் மேம்படும்

Posted: 19 Jun 2014 04:49 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பில், விவசாயிகளுக்கு பயறுவகை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

புதுகையில் 15,322 மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்க திட்டம்

Posted: 19 Jun 2014 04:48 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் 15,322 மாணவிகளுக்கு ரத்தசோகையைப் போக்குவதற்கான மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து.

காதலித்த பெண்ணைதிருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது வழக்கு

Posted: 19 Jun 2014 04:48 PM PDT

புதுக்கோட்டை அருகே காதலித்த பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர், அவரது பெற்றோர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆலங்குடி, கறம்பக்குடியில் ரூ. 4.70 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா

Posted: 19 Jun 2014 04:48 PM PDT

ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்காணிப்புக்கு உள்பட்ட ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி நகரப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரூ. 4.60 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பொன்னமராவதியில்84 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 19 Jun 2014 04:48 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதியில் 84 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பேரூராட்சி பணியாளர்களால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:47 PM PDT

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவணத்தான்கோட்டையில் சிறப்பு கிராமசபை கூட்டம்

Posted: 19 Jun 2014 04:47 PM PDT

அறந்தாங்கி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்தில் ஊராட்சி பணியாளர் சாவு

Posted: 19 Jun 2014 04:47 PM PDT

அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஊராட்சிப் பணியாளர் உயிரிழந்தார்.

ஆசிரியர் தகுதிதேர்வுக்கு இலவச பயிற்சி

Posted: 19 Jun 2014 04:47 PM PDT

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி சுபபாரதி கல்வியியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ஜூன் மாதம் மலர் சாகுபடிக்கு உகந்த காலம்

Posted: 19 Jun 2014 04:46 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ஜூன் மாதத்தில் மலர் சாகுபடி செய்யலாம் என வேளாண் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் லட்சார்ச்சனை

Posted: 19 Jun 2014 04:46 PM PDT

குருபரிகார தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் வியாழக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட குறுவை சாகுபடிக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு

Posted: 19 Jun 2014 04:45 PM PDT

குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா.

நாச்சியார்கோவிலில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மகளிர் குழுவினர் மறியல்

Posted: 19 Jun 2014 04:45 PM PDT

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மகளிர் குழுவினர் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் திருக்குறள் விளக்க தொடர் வகுப்பு

Posted: 19 Jun 2014 04:45 PM PDT

தஞ்சாவூர் வள்ளலார் அறப்பணி மாமன்றம் சார்பில், திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்பு, இலக்கிய மன்றம் தொடக்க விழா அண்மையில் ராஜாஜி அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:44 PM PDT

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 25-ல்செருகுடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 19 Jun 2014 04:44 PM PDT

திருவிடைமருதூர் அருகேயுள்ள செருகுடி கிராமத்தில் வரும் 25-ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் என். சுப்பையன்

நாகை காயாரோகணசுவாமி கோயிலில் ஏழூர் பல்லக்குத் திருவிழா

Posted: 19 Jun 2014 04:44 PM PDT

நாகையில் உள்ள நீலாயதாட்சியம்மன் உடனாய காயாரோகணசுவாமி கோயிலின் ஐதீக விழாவான (பஞ்சகுரோச) ஏழூர் பல்லக்குத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், திருப்பாம்புரத்துக்கு சிறப்புப் பேருந்துகள்

Posted: 19 Jun 2014 04:44 PM PDT

ராகு - கேது பெயர்ச்சியையொட்டி, ராகு தலமான திருநாகேஸ்வரம், கேது ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் மற்றும் திருப்பாம்புரத்துக்கு ஜூன் 21-ம் தேதி சிறப்புப் பேருந்துக

நாகையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:43 PM PDT

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்ட இந்து முன்னணி அமைப்பு சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீன் பதப்படுத்தும் நிலையத்தில் தீ விபத்து: ரூ. 5 லட்சம் சேதம்

Posted: 19 Jun 2014 04:43 PM PDT

சீர்காழி வட்டம், தொடுவாய் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கா. விஜயக்குமார் (45). இவருக்குச் சொந்தமாக மீன் பதப்படுத்தும் மற்றும் ஏலக்கூடம் உள்ளது. வியாழக்கிழமை மதியம்

மன்னார்குடி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு: 3 பேர் காயம்

Posted: 19 Jun 2014 04:43 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதன்கிழமை இரவு கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.

உடனே டாக்டர் பட்டம் தர்றோம்!

Posted: 19 Jun 2014 04:35 PM PDT

உடனே டாக்டர் பட்டம் தர்றோம்!

46 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 19 Jun 2014 04:32 PM PDT

இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 46 பேரை உடனடியாக விடுவிக்கவும் அவர்களின் 11 படகுகளை திரும்பப்பெறவும் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

வண்டலூர் பூங்காவில் வன அருங்காட்சியகம் திறப்பு

Posted: 19 Jun 2014 04:30 PM PDT

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.16.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வன அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக வியாழக்கிழமை (ஜூன் 19) திறக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்: ரயில்வே ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் ஆய்வு

Posted: 19 Jun 2014 04:29 PM PDT

சென்னை மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் குறித்து இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் ரயில் நிலையம் அருகே ஆண் சடலம்

Posted: 19 Jun 2014 04:28 PM PDT

திருவாரூர் ரயில் நிலையம் அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

ஏழுமலையானை தரிசிக்க 14 மணிநேரம் காத்திருப்பு

Posted: 19 Jun 2014 04:28 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் வியாழக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில்இன்று "அம்மா' திட்ட முகாம்கள்

Posted: 19 Jun 2014 04:28 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை;காங்கிரஸ் பிரமுகர் கைது

Posted: 19 Jun 2014 04:27 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக பாஜக நிர்வாகி புதன்கிழமை நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ(எம்எல்) இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:27 PM PDT

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் -

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

Posted: 19 Jun 2014 04:27 PM PDT

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்று விசாகப்பட்டிணத்தை சேர்ந்த சாரதா மட பீடாதிபதி, சொரூபானந்தேந்திர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

கூடைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

Posted: 19 Jun 2014 04:27 PM PDT

சீர்காழியில் ஒய்.சி.சி கூடைப்பந்துக் கழகம், சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மன்னார்குடியில் பண மோசடி செய்தவரின் மகன் கைது

Posted: 19 Jun 2014 04:27 PM PDT

தகாத வார்த்தை பேசியதாக சுயஉதவிக்குழுவில் ரூ. 2 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான பெண்ணின் மகனை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:26 PM PDT

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்தக் கோரி, அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பு வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம்

சாலை விபத்தில் காயமடைந்த வங்கி பெண் ஊழியர் சாவு

Posted: 19 Jun 2014 04:26 PM PDT

முத்துப்பேட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வங்கி பெண் ஊழியர் அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்பு கலந்தாய்வு: 93 இடங்கள் நிரம்பின

Posted: 19 Jun 2014 04:26 PM PDT

ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) நடத்தப்பட்ட கலந்தாய்வில் இரண்டு படிப்புகளிலும் மொத்தமுள்ள இடங்களில் 93 இடங்கள் நிரம்பியுள்ளன.

விடுதிகள், காப்பகங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

Posted: 19 Jun 2014 04:26 PM PDT

காரைக்காலில் அரசு விடுதிகள், தனியார் காப்பகங்களில் தங்கியிருப்போர் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு: குறைகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:25 PM PDT

அரசு மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் உள்ள குறைகளைக் களையக் கோரி, அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரத்த சோகையைத் தடுக்க இரும்புச் சத்து மாத்திரை அளிப்பு

Posted: 19 Jun 2014 04:25 PM PDT

தருமபுரியில் ரத்த சோகை குறைபாட்டைத் தடுக்க மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கிராம வனக் குழுவினருக்கு சுழல் நிதி அளிப்பு

Posted: 19 Jun 2014 04:25 PM PDT

வனத் துறையினர் சார்பில் கிராம வனக் குழுவினருக்கு ரூ.3.20 லட்சம் மதிப்பிலான சுழல் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ஜூன் 21 மின் தடை

Posted: 19 Jun 2014 04:24 PM PDT

தருமபுரியில் ராகுல் காந்தி பிறந்த நாள்

Posted: 19 Jun 2014 04:24 PM PDT

தருமபுரியில் காங்கிரஸ் கட்சி, இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி நிர்வாகி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:24 PM PDT

இந்து முன்னணி நிர்வாகி படுகொலையைக் கண்டித்து, தருமபுரி, அரூர், ஒசூரில் இந்து அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக ரத்த தான தின விழிப்புணர்வுப் பேரணி

Posted: 19 Jun 2014 04:24 PM PDT

தருமபுரியில் உலக ரத்த தான தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

108 ஆம்புலன்ஸ் சேவைப் பணி: நாளை வேலைவாய்ப்பு முகாம்

Posted: 19 Jun 2014 04:23 PM PDT

தருமபுரி பெரியார் மன்றத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.

உயர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்

Posted: 19 Jun 2014 04:23 PM PDT

தருமபுரி மாவட்ட மாணவர்கள் உயர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தினார்.

சித்தேரியில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய இருவர் கைது

Posted: 19 Jun 2014 04:23 PM PDT

தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியதாக இருவரை வனத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

டாஸ்மாக் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்

Posted: 19 Jun 2014 04:22 PM PDT

தமிழகத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நுகர்வோர் விழிப்புணர்வு வாகனம்

Posted: 19 Jun 2014 04:22 PM PDT

தருமபுரியில் நுகர்வோர் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

பாலக்கோடு அருகே 630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 19 Jun 2014 04:22 PM PDT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வியாழக்கிழமை 630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:17 PM PDT

மேட்டுப்பாளையம் பகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிவந்த 6 லாரிகள் பறிமுதல்: ஓட்டுநர்கள் கைது

Posted: 19 Jun 2014 04:17 PM PDT

கோவை, போத்தனூர் செட்டிபாளையத்தில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிவந்த 6 லாரிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநர்களை கைது செய்தனர்.

பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுத் திருவிழா

Posted: 19 Jun 2014 04:17 PM PDT

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமிசெட்டிபாளையம் சாலை, அம்பேத்கர் நகர் பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராக மாட்டோம்: பொள்ளாச்சி வழக்குரைஞர் சங்கத்தினர் தீர்மானம்

Posted: 19 Jun 2014 04:16 PM PDT

பொள்ளாச்சி, டிஇஎல்சி தேவாலய விடுதி சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பாக, பொள்ளாச்சி வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என அச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் மாணவர்கள் ரத்த தானம்

Posted: 19 Jun 2014 04:16 PM PDT

மேட்டுப்பாளையம் நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாணவர்கள் சார்பில் 51 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதிநிறுவன வெள்ளிவிழா

Posted: 19 Jun 2014 04:16 PM PDT

எல்.ஐ.சி. வீட்டு வசதி நிதிநிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சரக்கு லாரிகள் தேக்கத்தால் கோவை-பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

Posted: 19 Jun 2014 04:15 PM PDT

கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள சோதனைச் சாவடியில் சரக்கு லாரிகள் தேக்கத்தால் கோவை-பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளர் இளம் பருவத்தினருக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டம் தொடக்கம்

Posted: 19 Jun 2014 04:15 PM PDT

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Jun 2014 04:15 PM PDT

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்காக அரசால் நடத்தப்படும் மகளிர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஐ.இ.டி. கல்லூரி சார்பில் அரசுப் பள்ளிக்கு வாயிற்கதவு வழங்கல்

Posted: 19 Jun 2014 04:15 PM PDT

ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரி சார்பில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மூன்று வாயிற் கதவுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

27 இல் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்

Posted: 19 Jun 2014 04:14 PM PDT

கோவை ஆட்சியர் அலுவலக முதன்மைக் கூட்டரங்கில், விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

சோலையாறில் 64 மி.மீ. மழை

Posted: 19 Jun 2014 04:14 PM PDT

சோலையாறு அணைப் பகுதியில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 64 மி.மீ. மழை பெய்தது.

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: 2 பேர் கைது

Posted: 19 Jun 2014 04:14 PM PDT

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:13 PM PDT

இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொது விநியோக திட்ட செயல்பாடு: அமைச்சர் ஆய்வு

Posted: 19 Jun 2014 04:13 PM PDT

கோவை மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வியாழக்கிழமை நடத்தினார்.

கன மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒன்றரை மீட்டர் உயர்வு

Posted: 19 Jun 2014 04:13 PM PDT

சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒன்றரை மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி இன்று தொடக்கம்

Posted: 19 Jun 2014 04:13 PM PDT

கோவை வ.உ.சி. மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. கடந்த 1977 ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தொடங்கப்பட்ட ஜம்போ சர்க்கஸ் நிறுவனம்,

கான்மேட் 2014 கண்காட்சி அறிமுக விழா

Posted: 19 Jun 2014 04:13 PM PDT

கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் 4-ஆவது முறையாக "கான்மேட் 2014' என்ற பெயரில் கட்டுமானத் துறை கண்காட்சியின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.

நமது கலாசாரத்தின் மீது பெருமை கொள்ள வேண்டும்: ஜக்கிவாசுதேவ்

Posted: 19 Jun 2014 04:12 PM PDT

நமது கலாசாரத்தின் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும் என சத்குரு ஜக்கிவாசு தேவ் தெரிவித்தார். ஈஷா யோகா மையத்தில் வியாழக்கிழமை சத்குரு தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஈஷா

கல்லூரி மாணவியர் 26 பேர்வாந்தி, மயக்கத்தால் பாதிப்பு

Posted: 19 Jun 2014 04:09 PM PDT

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவி விடுதிகளில் தங்கியுள்ள 26 மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலில் இருந்து விழுந்த கல்லூரி மாணவர் சாவு

Posted: 19 Jun 2014 04:07 PM PDT

காட்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.

சாலிகிராமம், வளசரவாக்கத்தில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 19 Jun 2014 04:07 PM PDT

குழாய் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சாலிகிராமம், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) காலை வரை குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களுக்காக 26-இல் கருத்தரங்கம்

Posted: 19 Jun 2014 04:06 PM PDT

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த இந்திய மாணவர்களுக்காக ஒரு நாள் கருத்தரங்கம் சென்னையில் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

"அம்மா' உணவகத்துக்கு பொது நிதி பயன்படுத்த எதிர்ப்பு

Posted: 19 Jun 2014 04:06 PM PDT

உதகை நகராட்சிப் பகுதியில் "அம்மா' உணவகங்கள் அமைக்க நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.70 லட்சம் செலவிட உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், உதகை நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு

டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 19 Jun 2014 04:06 PM PDT

சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் மாநகராட்சி சார்பில் புதன்கிழமை (ஜூன் 18) நடந்தது.

திருமண ஆசைகாட்டி பலாத்காரம்: இளைஞர் காவல்படை வீரர் கைது

Posted: 19 Jun 2014 04:06 PM PDT

திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வால்பாறை இளைஞர் காவல் படையை சேர்ந்தவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து வால்பாறை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் கவர்க்கல் எஸ்டேட்

அரசு தொடக்கப்பள்ளி இல்லாத செம்பாக்கம் நகராட்சி

Posted: 19 Jun 2014 04:05 PM PDT

செம்பாக்கம் நகராட்சியில் தொடக்கப்பள்ளி அமைக்க செம்பாக்கம் நகராட்சி ஒதுக்கி இருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் உத்திரவிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வால்பாறை அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 19 Jun 2014 04:05 PM PDT

வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஜந்தாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் மற்றும் ஆன்மிகக் கண்காட்சி தொடக்கம்

Posted: 19 Jun 2014 04:05 PM PDT

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஆன்மிகக் கண்காட்சி வியாழக்கிழமை (ஜூன் 19) தொடங்கியது.

காலமானார் மேத்யூ கொட்டாரம்

Posted: 19 Jun 2014 04:05 PM PDT

உதகை ரெக்ஸ் பள்ளி நிறுவனரும், காந்தல் குருசடி திருத்தலத்தின் முன்னாள் அதிபருமான மேத்யூ கொட்டாரம் (78), கேரள மாநிலம் கோட்டயத்திலுள்ள அவரது சொந்தக் கிராமமான மணிமோலா

நீலகிரியில் பரவலாக மழை

Posted: 19 Jun 2014 04:05 PM PDT

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.

கூடலூர், பந்தலூரில் காற்றுடன் கனமழை

Posted: 19 Jun 2014 04:04 PM PDT

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jun 2014 04:04 PM PDT

திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரத்தச் சோகையைத் தடுக்க இரும்புச் சத்து மாத்திரை

Posted: 19 Jun 2014 04:04 PM PDT

வளர் இளம் பருவத்தில் ரத்தச் சோகையை தடுக்க வாராந்திர இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™