Tamil News | Online Tamil News |
- புதிய ரயில்வே திட்டங்களில் பாதி செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
- ஈராக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துங்க: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடி
- தொடரும் மின்தடைஅதிகாரிகள் ஆலோசனை
- தி.மு.க., மறுசீரமைப்பு: 65 மாவட்டங்களாக பிரிப்பு
- அண்டை நாடுகளுடன் நல்லுறவு: பூடானில் பிரதமர் மோடி உறுதி
- மலிவு விலை 'அம்மா மருந்தகம்' திறப்பில் தாமதம்
- ஓட்டுகள் குறைவு:அ.தி.மு.க.,வில் நடவடிக்கை?
- ஜாதி பின்புலத்தை கையில் எடுக்குமா தி.மு.க.,: கருணாநிதியை உசுப்பிய தென் மாவட்ட தலைவர்
- பிரேசில் செல்வாரா பிரதமர் மோடி?
- உ.பி.,யில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசம் : ஆட்சியை காப்பாற்றி கொள்வாரா அகிலேஷ்?
- அண்ணா பல்கலை 'கட்-ஆப்' மதிப்பெண்களில் சாதனை: 200க்கு 200 எடுத்து 271 மாணவர்கள் முதலிடம்
| புதிய ரயில்வே திட்டங்களில் பாதி செலவை மாநில அரசு ஏற்க வேண்டும்: ரயில்வே அமைச்சர் அறிவிப்பு Posted: புதுடில்லி: ''திட்டங்களை நிறைவேற்ற புதிய விதிமுறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்களுக்கான செலவில் பாதியை, மாநில அரசுகள் ஏற்பதோடு, திட்டங்களுக்கான நிலங்களையும் இலவசமாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தவுள்ளோம்,'' என, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அளித்துள்ள பேட்டி: இதற்கு முன் ரயில்வே அமைச்சர்களாக இருந்தவர்கள், திட்டங்களுக்கான செலவையும், அவற்றை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகள் பற்றியும் கவலைப்படாமல், ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளனர். ... |
| ஈராக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துங்க: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடி Posted: நியூயார்க்: ஈராக்கில், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளதாலும், அவர்களின் பிடியில், தலைநகர் பாக்தாத் எந்த நேரமும் வீழலாம் என, எதிர்பார்க்கப்படுவதாலும், ஈராக் மீது அமெரிக்க படையெடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற குரல் அமெரிக்காவில் வலுத்துள்ளது.ஈராக்கில், அமெரிக்காவுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறி, கடந்த 2003ல், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதிபராக இருந்த சதாம் உசேனை பதவியிலிருந்து இறக்கியதுடன், அந்நாட்டு இடைக்கால அரசால், சதாம் உசேனை தூக்கிலிடவும் செய்தது. எட்டு ... |
| தொடரும் மின்தடைஅதிகாரிகள் ஆலோசனை Posted: அரசு உத்தரவுக்கு மாறாக, சென்னை உட்பட பல இடங்களில், மின்தடை செய்யப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நேற்று, தலைமை செயலகத்தில், அரசு உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.தமிழகத்தில், 2008 முதல் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க, மின்தடை அமல்படுத்தப்பட்டது. வட சென்னை, மேட்டூர் விரிவாக்கம், வல்லூர் அனல் மின் நிலையங்கள் மூலம், 2,550 மெகாவாட்; காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால், தற்போது, வழக்கத்தை விட கூடுதல் மின்சாரம் கிடைக்கிறது.இதையடுத்து, 'ஜூன், 1ம் தேதி முதல், மின்தடை இருக்காது' என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்த ... |
| தி.மு.க., மறுசீரமைப்பு: 65 மாவட்டங்களாக பிரிப்பு Posted: தி.மு.க.,வை அமைப்பு ரீதியாக மறு சீரமைப்பு செய்து, 32 ஆக இருந்த கட்சியின் மாவட்டங்கள், 65 ஆக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை, கட்சியின் பொது செயலர் அன்பழகன், நேற்று வெளியிட்டார்.லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை. குறுநில மன்னர்கள் போல் செயல்படும், தி.மு.க., மாவட்ட செயலர்களின் போக்கே, படுதோல்விக்கு காரணம். பல ஆண்டுகளாக, புதியவர்களை கட்சிக்குள் வர விடாமலும், இளைஞர்களை வளர விடாமலும் தடுத்து வருகின்றனர் என, குற்றச்சாட்டு எழந்தது.கட்சியின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட ஆறு பேர் அடங்கிய குழுவும், கட்சி தலைமையிடம் இந்த ... |
| அண்டை நாடுகளுடன் நல்லுறவு: பூடானில் பிரதமர் மோடி உறுதி Posted: திம்பு : ''அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா வளர்ச்சி அடைந்தால், அண்டை நாடுகளும் தானாக வளர்ச்சி அடையும்,'' என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பூடான் நாட்டின் பார்லிமென்டில் பேசினார்.இமயமலை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு, இரண்டு நாள் பயணமாக, நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு மோடி சென்றார்.அடிக்கல் நேற்று முன்தினம் மதியம், தலைநகர் திம்பு சென்ற மோடி, அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். ... |
| மலிவு விலை 'அம்மா மருந்தகம்' திறப்பில் தாமதம் Posted: தமிழகத்தில், மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 'அம்மா மருந்தகம்' திறக்கப்படும் என, அறிவித்து பல மாதங்கள் ஆகியும், அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் குறைந்த விலையில் உணவுகள் தரும், 'அம்மா' உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும், அத்திட்டத்தை அரசு விரிவு படுத்தியுள்ளது. அதுபோன்று, மலிவு விலை காய்கறி கடைகள் திறக்கப்பட்டுஉள்ளன. தொடர்ந்து, மலிவு விலையில், 'அம்மா குடிநீர்' விற்பனைக்கு வந்து உள்ளது.100 இடங்களில்...இதுபோன்று, மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், ... |
| ஓட்டுகள் குறைவு:அ.தி.மு.க.,வில் நடவடிக்கை? Posted: தமிழகத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளில் போட்டியிட்ட அ.திமு.க., 37 இடங்களில் வெற்றி பெற்றது. தர்மபுரியில், பா.ம.க.,வும், கன்னியாகுமரியில், பா.ஜ.,வும் வெற்றி பெற்றன. இதையடுத்து, அத்தொகுதிக்கான, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், அமைச்சர் ஆகியோரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.அமைச்சர், மாவட்ட செயலர், மேயர் பதவிகளை தொடர்ந்து, ஒன்றிய, நகர செயலர் பதவி பறிப்பு பட்டியல் தயாராகி வருகிறது. மாவட்டந்தோறும், சட்டசபை தொகுதி மற்றும் மாநகராட்சி, நகராட்சி வார்டுகள் வாரியாக, பதிவான ஓட்டுகள் விவரமும், ஆய்வு செய்யப்படுகின்றன.தர்மபுரி லோக்சபா தொகுதியில், ... |
| ஜாதி பின்புலத்தை கையில் எடுக்குமா தி.மு.க.,: கருணாநிதியை உசுப்பிய தென் மாவட்ட தலைவர் Posted: லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பின், தோல்வி குறித்து பல ரூபங்களிலும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. கட்சியின் தென் மாவட்ட மூத்த தலைவர் ஒருவரை வரவழைத்து, தோல்வி குறித்து விசாரித்த தோடு, அதை எப்படி சீர்படுத்துவது என்றும் கேட்டிருக்கிறார்.வழக்கம்போல மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கட்சியை நடத்தும் விதம், தேர்தல் நேரத்தில் அவர்கள் நடந்து கொண்டது, மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் நெருக்கம், நல்ல பெயர், கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தி குறித்தெல்லாம், ... |
| பிரேசில் செல்வாரா பிரதமர் மோடி? Posted: புதுடில்லி : தென் அமெரிக்க நாடுகளில், ஒன்றான பிரேசிலில், கடந்த 13ல், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ளன; இதன் இறுதிப் போட்டி, பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில், அடுத்த மாதம் 13ல் நடக்கிறது.இதை காண வருமாறு, பிரேசில் நாட்டின் பெண் அதிபர், தில்மா ரூசெப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.'பிரிக்ஸ்' எனப்படும், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகளின் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம், கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்தது; அது, அடுத்த மாதம், 15 - 17ல், பிரேசிலில் ... |
| உ.பி.,யில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசம் : ஆட்சியை காப்பாற்றி கொள்வாரா அகிலேஷ்? Posted: சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., மாநிலத்தில், சமீபகாலமாக, வன்முறைகளும், கொலை மற்றும் கற்பழிப்புகளும் அதிகரித்துள்ளன. இதனால், அவர் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இங்குள்ள பதான் மாவட்டத்தில், சமீபத்தில், சிறுமியர் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், பெரோசாபாத் நகரில், நேற்று முன்தினம் இரவு, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, 30 முதல் 32 வயதுடைய இரு போலீஸ் கான்ஸ்டபிள்கள், கொள்ளையர்கள் சிலரை ... |
| அண்ணா பல்கலை 'கட்-ஆப்' மதிப்பெண்களில் சாதனை: 200க்கு 200 எடுத்து 271 மாணவர்கள் முதலிடம் Posted: சென்னை: அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்' பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டு, வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு, 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 271 பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தனர்.பி.இ.,- பி.டெக்., படிப்புகளில் சேர, 1.73 லட்சம் மாணவர்கள், அண்ணா பல்கலையில் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, கட்-ஆப் மதிப்பெண், ரேங்க் பட்டியல், நேற்று காலை வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.ரைமண்ட் கூறுவது என்ன?அப்போது, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 17,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |