Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எளிதில் தொப்பையை குறைக்கும் வழிகள்!

Posted: 16 Jun 2014 03:52 PM PDT

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ...

ஈராக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துக: ஒபாமாவுக்கு நெருக்கடி

Posted: 16 Jun 2014 03:43 PM PDT

நியூயார்க்: ஈராக்கில், அல் குவைதா ஆதரவு பயங்கரவாதிகளின் வெறியாட்டம் அதிகரித்துள்ளதாலும், அவர்களின் பிடியில், தலைநகர் பாக்தாத் எந்த நேரமும் வீழலாம் என, எதிர்பார்க்கப்படுவதாலும், ஈராக் மீது அமெரிக்க படையெடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்ற குரல் அமெரிக்காவில் வலுத்துள்ளது. ஈராக்கில், அமெரிக்காவுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறி, கடந்த 2003ல், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அதிபராக இருந்த சதாம் உசேனை பதவியிலிருந்து இறக்கியதுடன், அந்நாட்டு இடைக்கால ...

மீன்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Posted: 16 Jun 2014 12:24 PM PDT

* மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன. * முதுகெலும்புள்ள மற்ற உயிரினங்களின் எண்ணிக்கையை விட மீன்களின் எண்ணிக்கை அதிகம். * மீன்கள் குளிர் ரத்த பிராணிகள். இவற்றின் உடல் சூடு, அவை வாழும் நீரின் வெப்பநிலையைப் பொறுத்து மாறும். * ஏறக்குறைய எல்லா மீன்களும் துடுப்புகளைப் பெற்றுள்ளன. இவை நீந்துவதற்குப் பயன்படுகின்றன. அதே போல் செதில்கள் மீன்களின் உடல் பாதுகாப்புக்கு உதவுகின்றன. * மீன்களில் சுமார் 22 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகை மீனும் நிறத்திலும் ...

100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார்

Posted: 16 Jun 2014 12:22 PM PDT

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கார்களில் அதிகபட்சமாக 30 கிமீ(இந்திய சாலைகளில்) மைலேஜ் கிடைப்பதே அரிதான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வோகன், அதிக மைலேஜ் கொண்ட கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு சோதனை அடிப்படையில் 100 கிமீ மைலேஜ் தரும் காரை உருவாக்கியது. இதில் வெற்றியடைந்ததை தொடர்ந்து ஜெர்மனியில் உள்ள வோக்ஸ்வோகன் ஆலையில், இந்த கார்களை தயாரிக்கும் பணியில் களமிறங்கியது. சோதனை ஓட்டத்தை பார்த்தவர்கள் அப்போதே ...

குயில் டாக்டர்! சிறுவர்கதை

Posted: 16 Jun 2014 12:11 PM PDT

ஒரு கிராமத்தில் சின்னா என்ற சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தான். அவனிடம் ஓர் உண்டியல் இருந்தது. ஆற்றங்கரை ஓரமுள்ள ஈரக் களிமண்னை உருண்டையாக உருட்டி, அதை உண்டி வில்லில் வைத்துக் குறி பார்த்து மாங்காய், கொய்யா போன்ற பழங்களை அடித்து வீழ்த்துவான். அப்படி ஒரு சமயம் உண்டி வில்லால் அடிக்கும் போது, அது மாமரத்திலிருந்த ஆந்தை உடலைத் தாக்கி விட்டது. ஆந்தைக்கு வலி தாங்க முடியவில்லை. அதனுடைய தோழனான காகத்திடம் ஓடிற்று. ""ஆட்டுக்கார பையன் உண்டி வில்லால் அடித்து விட்டான். வலிபொறுக்க முடியவில்லை!'' ...

ஏழு வயது சிறுமியை கற்பழித்து கொன்ற நபருக்கு மரண தண்டனை

Posted: 16 Jun 2014 12:07 PM PDT

பாரபங்கி: உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவளை செங்கல்லால் அடித்துக் கொன்ற நபருக்கு, நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கி நகரில், 2012 ஜூன் 18ம் தேதி, ஏழு வயது சிறுமியை, அவரது அண்டை வீட்டுக்காரர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, செங்கல்லால் அடித்து, அச்சிறுமியை கொன்றார். இது தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், பானு யாதவ் என்ற நபரை கைது செய்தனர். இந்த வழக்கு, பாரபங்கி ...

முண்டாசுபட்டி - விமர்சனம்!

Posted: 16 Jun 2014 12:05 PM PDT

மூடநம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு படமெடுப்பவர்களுக்கு மத்தியில் மூடநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள்தான் என்று சொல்கிற படமாக இது வந்திருக்கிறது. புகைப்படம் எடுத்தால் மரணம் என்று நம்புகிற கிராமமொன்றைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மனிதர்கள் எப்படி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.அதை முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள். 1982 இல் கதை நடக்கிறது. பழைய யாசிகா கேமிராவை வைத்துக்கொண்டு சிறுநகரமொன்றில் புகைப்படநிலையம் ...

ஜான்சி ராணி இறந்த தினம்: ஜூன் 17- 1858

Posted: 16 Jun 2014 12:03 PM PDT

ராணி லட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (நவம்பர் 19, 1835– ஜூன் 17- 1858) வடமத்திய இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். நவம்பர் 19, 1835-ல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்- பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார். இவருக்கு நான்கு வயதாகும்போது ...

வாஞ்சிநாதன் இறந்த தினம்: ஜூன் 17- 1911

Posted: 16 Jun 2014 12:02 PM PDT

வாஞ்சிநாதன் (1886 - ஜூன் 17, 1911) ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடிய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு புரட்சியாளர். திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்று பின்னர் தன்னையும் சுட்டு மரணம் அடைந்தவர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன். இவரது இயற்பெயர் சங்கரன் எனினும் இவர் வாஞ்சி என்றே அழைக்கப்பட்டார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா ...

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!

Posted: 16 Jun 2014 11:55 AM PDT

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக படு தோல்வியை கண்டது. இதையடுத்து தி.மு.க., தனது கட்சி அமைப்பில் மறு சீரமைப்பு செய்துள்ளது. இதன்படி, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட அமைப்புகள் 65 ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியி இருந்து நடிகை குஷ்பூ விலகியுள்ளார். கட்சியில் தன்னுடைய உழைப்பும் அர்பணிப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்தது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது என்று நடிகை குஷ்பூ கூறியுள்ளதாக ...

13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014

Posted: 16 Jun 2014 11:48 AM PDT

உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 12-வது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக உள்ளது. 13-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், தகுதி சுற்றுகள் மூலம் வெற்றி பெற்ற 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர், ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இத்தொடரில், 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'B' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ...

நிமோனியாவுக்கு ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகள் பலி

Posted: 16 Jun 2014 11:44 AM PDT

குழந்தைகளை தாக்கும் பலவித கிருமிகளில் 'நிமோகாக்கஸ்' என்னும் நுண்கிருமி நுரையீரலை பாதிக்கும். காது, மூக்கு தொண்டையில் நோய் கிருமிகளை பரப்பி 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கடுமையாக பாதிக்க கூடியது. ஒவ்வொரு ஆண்டும் 4.3 கோடி நிமோனியா நோயாளிகளில் 5 வயதுக்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகள் இறக்கிறது. தமிழ்நாட்டில் 50 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் உயிரிழக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்களுக்கு நிமோனியா நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததே ஆகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட ...

குருபகவானால் அமையும் முக்கிய யோகங்கள்

Posted: 16 Jun 2014 11:41 AM PDT

கஜகேசரி யோகம்: சந்திர பகவானுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 ஆம் இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். இதனால் பணவருவாய், பகைவர்களை வெல்லும் திறமை, புகழ் மற்றும் தீர்க்காயுளும் உண்டாகும். நூறு யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கம் வந்தால் அத்தனை யானைகளும் சிதறி ஓடுவதுபோல் தோஷங்கள் பறந்து விடும் என்பது பொருள். குருசந்திர யோகம்: சந்திர பகவான் குருபகவானுடன் சேர்க்கை பெற்றோ குருபகவானுக்கு 5 ஆம் அல்லது 9 ஆம் இடத்தில் இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகும். இதனால் ஜாதகர் உயர்ந்த ...

நரகத்தின் நுழைவாயில் என்று வர்ணிக்கப்படும் வாயு எரிமலை

Posted: 16 Jun 2014 11:33 AM PDT

மத்திய ஆசிய நாடான துர்க்மேனிஸ்தானில் 'காராகும்' என்ற பாலைவனம் உள்ளது. இந்த பாலைவனத்தில் 1971–ம் ஆண்டு விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது துளையிடும் எந்திரம், பாதாள குகைக்குள் சென்றது போலிருந்தது. அப்போது ஒரு ஆழமான புதைகுழி உருவானது. அதிலிருந்து நெருப்பு சுவாலைகள் வெளியாக தொடங்கின. அதை வாயு எரிமலை வாய் என்று கண்டு கொண்ட விஞ்ஞானிகளுக்கு ஒரு அச்சம் வந்தது. அதாவது, இந்த எரிமலை வாயிலிருந்து விஷ வாயுக்கள் வெளியானால் என்னாவது, உயிர் அல்லவா போய்விடும்? எனவே அது எரிந்துகொண்டிருக்கட்டும் ...

சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது

Posted: 16 Jun 2014 11:26 AM PDT

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்ற இளைஞர் கடந்த 11-ஆம் தேதி எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து,12-ஆம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு தீவிரமாக தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று மாலை அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இதயத்தோடு சேர்த்து, பல்வேறு உடல் உறுப்புகளும் லோகநாதனிடம் இருந்து தானமாக பெறப்பட்டன. அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராஜீவ்காந்தி ...

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது

Posted: 16 Jun 2014 11:22 AM PDT

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.... ..அதாவது என்னுடைய பொருட்கள், ...

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 16 Jun 2014 11:14 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடிக்கு அழைப்பு

Posted: 16 Jun 2014 11:04 AM PDT

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜூலை 13-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியைக் காண இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு வந்துள்ளது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும்படி மோடி மற்றும் பிற தலைவர்களுக்கு அதிபர் தில்மா ரூசெப் அழைப்பு விடுத்திருப்பதாக பிரேசில் தூதரகம் தெரிவித்துள்ளது. பூட்டான் பயணத்தை இன்று நிறைவு செய்த மோடி, கால்பந்து போட்டியை காண்பதற்காக முன்னதாகவே பிரேசிலுக்கு செல்வாரா என்பது ...

இதற்கு ஒரு கவிதை தாருங்கள்..

Posted: 16 Jun 2014 08:43 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (37)

Posted: 16 Jun 2014 08:22 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

பாரதிக்கு - கோரிக்கை (கவிதை )

Posted: 16 Jun 2014 06:40 AM PDT

பாரதிக்கு - கோரிக்கை



சாதித்தீ. . . . . . இல்லையென. .ஓதியேநீ. . . . . .சென்றாலும்
ஊதியதை. . . வளரவிட்டு. . . . .மோதுகின்ற. .உன்மத்தர்
ஆதிக்கம். . . . .நீக்கியே. . . . . . . .அமைதியை. . நாட்டிட
மேதினியில். .மீண்டும்நீ. . . . . . வா



அன்புத் தமிழ் நெஞ்சம்  .  .  பொன். செல்லமுத்து

ரயில் எந்த இடத்தில் போகுது என்பதை அறிய

Posted: 16 Jun 2014 06:28 AM PDT

ரயில் எந்த இடத்தில் போகுது என்பதை எவ்வாறு அறிவது

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 16 Jun 2014 06:20 AM PDT

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

அழகிய குளிரும் அழகுதான்...

Posted: 16 Jun 2014 05:13 AM PDT

என்னங்க இது?...

மணி 11க்கு மேல ஆகுது...வெயில் நல்லாத்தான் அடிக்குது...ஆனால் சூடே இல்லை...மாறாக குளிர்கிறது...
மழை சுடுகின்றதே வெயில் குளிர்கின்றதேன்னு பழனிபாரதி அண்ணன் சொன்னது பெங்களூரு பத்திதானா?...

காலை 6 மணிக்கு பெங்களூரு மண்ணைத் தொட்டது முதல் குளிர்ச்சிதான் உள்ளேயும் வெளியேயும்...

இன்னும் சிலநாள்கள் பெங்களூரு மாநகரம்தான் எங்கள் மனமைதானம்...

சும்மா சொல்லக்கூடாது...அழகிய குளிரும் அழகுதான்...

மறு பிறவி எடுத்தார் ஷூ மாக்கர் ! கோமாவில் இருந்து திரும்பினார்

Posted: 16 Jun 2014 05:06 AM PDT

கடந்த 6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரபல கார்பந்தய வீரர் ஷூ மாக்கர் உடல்நலம் பெற்றார். நலம் பெறுவது கடினம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தேறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது. பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் 'பார்முலா-1' கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆறுமாதம் கழித்து 'கோமாவில்' இருந்து மீண்டார். நினைவு திரும்பிய இவர், வீட்டிற்கு திரும்பினார். ஜெர்மனியின் முன்னாள் 'பார்முலா-1' கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை ...

பொருளுக்குப் பொருளுண்டு

Posted: 16 Jun 2014 04:28 AM PDT

பொருளில்லா வாழ்விலே பொருளில்லை -அந்த வெறுமையைப் போக்கிட வழியில்லை இருள்சூழ்ந்த தேடலில் இலக்கில்லை - என்றும் இயலாமை நிலைக்கு முடிவில்லை அருளுணர்வு வழிதேடிப் போவோரும் - அந்த ஆண்டவன் திருப்பணியில் வாழ்வோரும் கருமமே கண்ணெனக் கொள்வோரும் - என்றும் கடமையாற்ற வேண்டுவது பொருள்தானே! பொருளின்றி இவ்வுலகில் வாழ்வுண்டோ-அதைப் போராடிப் பெறுவதில் பழுதுண்டோ பிறர்பழி பாவங்கள் நாடாது - நல்ல பொருளீட்டி வாழ்ந்திடுதல் முறையன்றோ!!!

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை!

Posted: 16 Jun 2014 04:23 AM PDT

உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும் இலவசமாக போன் செய்யலாம் – இன்டர்நெட் தேவையில்லை! சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன் செய்ய வேண்டியிருக்கும் ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது.  ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டிருப்போம். இன்டர்நெட் வசதியும் இருக்காது.. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டுவாங்குவோம்.. இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் ...

வரலாற்றில் இன்று....!

Posted: 16 Jun 2014 04:19 AM PDT

1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற
பெயருடனிருந்த இயக்கத்திற்கு
தமிழீழ விடுதலைப் புலிகள்
என்று பெயர் மாற்றப்பட்டது.

மருத்துவம் : பயங்கரத்தை நோக்கிப் பயணிக்கிறோம்!

Posted: 16 Jun 2014 04:18 AM PDT

பல நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்றுவிட்ட நிலையில் சிறிய காயங்கள், சாதாரணத் தொற்றுகள் இவற்றிலிருந்து கூட நம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாத, அவர்கள் அதற்குப் பலியாகும் பரிதாபமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனற்றவையாகி விட்டன. எழுபது ஆண்டுகளுக்கு முன் (1945)மருத்துவத்திற்கான நோபல் பரிசு பென்சிலின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்த ஐரோப்பிய மருத்துவ ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஃபிளம்மிங்கிற்கு ...

மசாலா டீ தயாரிப்பது எப்படி?

Posted: 16 Jun 2014 04:11 AM PDT

அண்மையில் தமிழக சுற்றுலா சென்றிருந்த எனது மகள் வாங்கி வந்த மசாலா டீ யை இன்று தான் ருசி பார்த்தேன். செம சூப்பராக இருந்தது. சமையலில் சிறந்த ஜாம்பவான்கள் நிறைந்த நமது ஈடில்லா ஈகரையில் உள்ள யாராகிலும் இந்த செம சூப்பரான மசாலா டீ எப்படி தயாரிக்கிறதுன்ன இந்த சின்ன பையனுக்கு சொல்லி தர்ரீங்களா?
அதுக்காக இப்பவே எனது நன்றிய சொல்லிக்கிறேனுங்கோ.

உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!

Posted: 16 Jun 2014 03:15 AM PDT

விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் .



GT-P3100
ROM: Sungsonic™ HD

ரமணியின் கவிதைகள்

Posted: 15 Jun 2014 10:35 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

சிறகடிக்கும் நினைவலைகள்-4

Posted: 15 Jun 2014 10:00 PM PDT

உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது. உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன் செம்மண்சாலையில் தென் மேற்கு பருவக்காற்று திசை மாறி சுழண்டு சுழண்டு வீசுகையில் நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை. காற்றுத்திருடன் பிறை சூடி ஓடுகையில் அவன் தாவி தாவி என்னிடமே கொண்டுவந்தான் முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான் இவளின் காதலன் இவன்தான் என்று. குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள். முதல்நாள் பார்த்துப் பேசிய போது. காற்றின் காதலி நாணல் புல் சாய்ந்து நிலமகளை பார்ப்பது போல உன் முகமும் ...

வேலன்:-பிடிஎப் கட்டர் -PDF CUTTER

Posted: 15 Jun 2014 06:28 PM PDT

ஆடியோ கட்டர்.வீடியோ கட்டரைப்போல பிடிஎப் பைல்களை கட்  செய்திட இந்த பிடிஎப் கட்டர் பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக் குதேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். இதில் மூன்று விதமான கட்டிங் ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.முதலாவது ஓரு குறிப்பிட்ட பக்கங்கள் முதல் தேவையான பக்கங்கள் வரை தொடர்ச்சியாக கட் செய்திட இதில் முதலில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து தேவையான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™