Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உறவினர்களுக்கு வேலையா? மத்திய அமைச்சர் கொதிப்பு

Posted:

புதுடில்லி : விமான போக்குவரத்து துறையில், மூத்த அதிகாரிகளின் உறவினர்கள் அதிக அளவில் பணியாற்றுவதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் கஜபதி ராஜு உத்தரவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், 'அமைச்சர்களும், அதிகாரிகளும், தங்களின் உறவினர்களை உதவியாளர்களாக நியமிக்க ...

சர்ச்சைக்குரிய தீவில் பள்ளிக் கட்டடம் கட்டுகிறது சீனா

Posted:

பீஜிங்:இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளுக்காக,தென் சீன கடலில் யாங்ஷிங் தீவில் ஒரு பள்ளி கட்டிடம் கட்டும் பணியை துவங்கியுள்ளது சீனா. அது சர்ச்சைக்குரிய கடல் தீவுகளில் அதன் கூற்றுக்களை வலு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட முரட்டுத்தனமான புறக்காவல் விரிவடைந்து தொடங்கியுள்ளது.18 மாதத்தில் முடிக்க திட்டம்:சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில், வியட்நாமின் எதிர்ப்பையும் மீறி எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணியைத் துவங்கியுள்ள சீனா, இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.பள்ளி ...

கடுமையான முடிவுகளையும் எடுப்பேன்:சபாநாயகர் சுமித்ரா அறிவிப்பு

Posted:

புதுடில்லி:நான் சபையை அமைதியாக நடத்திச் செல்லவே விரும்புகிறேன். அதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்களின் ஒத்துழைப்பையும் கோருகிறேன். அதே நேரத்தில், தேவைப்பட்டால் கடுமையான முடிவுகளையும் எடுக்கத் தயங்க மாட்டேன், என, லோக்சபாசபாநாயகர், சுமித்ரா மகாஜன், 71, கூறினார்.தொடர்ந்து இரண்டாவது முறையாக, லோக்சபாவின் பெண் சபாநாயகராக தேர்வு செய்யப் பட்டுள்ள சுமித்ரா மகாஜன், கூறியதாவது:லோக்சபாவின் மாண்பும், கண்ணியமும் குறையாத வகையில், அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்வேன். ஒன்றிரண்டு உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு, ஒட்டுமொத்த சபையையும் ...

டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல்: கவர்னரிடம் அறிக்கை கேட்கிறது அரசு

Posted:

புதுடில்லி:டில்லியில், எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விரைவில் அங்கு சட்டசபை தேர்தலை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக டில்லி கவர்னரிடம், மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.பெருபான்மை இல்லை:டில்லியில் கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., 31 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், ஆட்சி அமைக்க முடியவில்லை.அடுத்தபடியாக, 28 தொகுதி களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ...

தி.மு.க., மாவட்ட செயலர்களை மாற்ற வேண்டும்: 150 பக்க அறிக்கையில், ஆறு பேர் குழு வலியுறுத்தல்

Posted:

தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், ஆறு பேர் குழு சமர்ப்பித்த, 150 பக்க அறிக்கையில், 72 மாவட்டங்களை உருவாக்குவது, நீண்ட காலமாக, பணியாற்றும் மாவட்டச் செயலர்களை மாற்றுவது உட்பட, பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்தது, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி முதல், அடிமட்டத் தொண்டர்கள் வரை, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனால், கட்சியின் மாவட்ட நிர்வாகங்களை எளிமைப்படுத்தி, கட்சியை வலிமைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்க, ஆறு பேர் குழு நியமிக்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ...

ரூ.5 லட்சம் வருவாய்க்கு வரி விலக்கு? ஒரு கல்லில், இரு மாங்காய்க்கு மத்திய அரசு குறி

Posted:

புதுடில்லி : வருமான வரி வரம்பை, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் தாக்கத்தால், மறைமுக வரி வசூல் தானாகவே அதிகரிக்கும் என, மத்திய அரசு, 'கணக்கு' போட்டு வருவதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நிலைக் குழுயஷ்வந்த் சின்கா தலைமை யில், நிதி துறைக்கான, பார்லிமென்ட் நிலைக் குழு, வருமான வரி உச்ச வரம்பை, 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சமாக உயர்த்தலாம் என, பரிந்துரைத்தது. அதாவது, 3 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, வரி விலக்கும், அதற்கு மேல், 10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு, 10 ...

'வாலாட்டினால் பேச்சு கிடையாது': அருண் ஜெட்லி எச்சரிக்கை

Posted:

ஸ்ரீநகர்: ''அமைதி பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்க வேண்டுமானால், எல்லையில் வாலாட்டுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.ராணுவ அமைச்சராக பதவியேற்றபின், முதன் முறையாக, நேற்று முன்தினம், காஷ்மீருக்கு வந்த பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றும், அவரின் ஆய்வு நீடித்தது. எல்லையில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும், ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் ...

பிரதமர் மோடிக்கு பூடானில் உற்சாக வரவேற்பு

Posted:

திம்பு : பிரதமர் நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக, மிக நெருங்கிய அண்டை நாடான, பூடானுக்கு, நேற்று சென்றார். அவரின் இரண்டு நாள் பயணத்தில், பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு அருகில் உள்ள நாடு, பூடான். மன்னராட்சி நடைபெறும் அந்த நாட்டை, அதன் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, தன்னுடன் இணைக்க, முன் பல முயற்சிகளை மேற்கொண்டது. முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்அதை புறக்கணித்து, இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவுடன் உள்ள பூடானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தன் முதல் வெளிநாட்டு ...

மலிவு விலையில் 'அம்மா' மளிகை : ரூ.1,000க்கு வழங்க பரிசீலனை

Posted:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், 'அம்மா' மளிகை திட்டத்தை துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.அ.தி.மு.க., அரசால், மலிவு விலை 'அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பஸ் பயணிகள் வசதிக்காக, 10 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட, 'அம்மா' குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறை மூலம் பல இடங்களில் மலிவு விலை பண்ணை பசுமை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இத்திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.சமீபத்தில், தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில், மலிவு விலையில், 'அம்மா' உப்பு ...

தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுக்கிறார் ஜெ., : கருணாநிதி காட்டம்

Posted:

'காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், தி.மு.க.,வை வீண் வம்புக்கு இழுத்துள்ளார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:இம்மாதம் 13ம் தேதி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், 'காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், என, குறிப்பிட்டுள்ளார்.இம்மாதம் 10ம்தேதி, ஜெயலலிதா, எனக்கு பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில், 'அதை செயல்படுத்த, பிரதமருக்கு கால அவகாசம் தர வேண்டும்' என அவர் எழுதியதை, அவரே மறந்து விட்டார்.பிரதமருக்கு, முதல்வர் எழுதிய ...

ராணுவத்தில் பெண்கள் நீண்ட காலம் பணியமர்த்தப்படுவரா?

Posted:

புதுடில்லி : 'ராணுவத்தில், பெண்களுக்கு நீண்ட கால பணி வழங்க வேண்டும்; அவர்களையும், போர் போன்ற சூழ்நிலைகளில் பணியமர்த்த வேண்டும்' என, ராணுவ அமைச்சர், அருண் ஜெட்லிக்கு, ராணுவ தலைமையகம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, விரைவில் உத்தரவு வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் சுவீடன் போன்ற நாடுகளில், ராணுவத்தில் இருக்கும் பெண்கள், போர்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள், நீண்ட கால அடிப்படையில், ராணுவத்தின் பல பிரிவுகளில் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், இந்திய ராணுவத்தில், போர்களில் பெண்கள் ...

மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., எச்சரிக்கை : தொடரும் அரசியல் கொலைகளால் கடும் கோபம்

Posted:

கோல்கட்டா : 'மேற்கு வங்க மாநிலத்தில், அரசியல் காரணங்களுக்காக, பா.ஜ.,வினர் கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. அரசியல் கொலைகளை தடுக்கத் தவறினால், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என, பா.ஜ., எச்சரித்துள்ளது.மேற்கு வங்கத்தில், 2011ல் நடைபெற்ற தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதன் மூலம், 32 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.ஆட்சிக்கு வந்த துவக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியினர் பலர், ஆளும் திரிணமுல் காங்கிரசாரால் ...

வரம்பை மீறி தேர்தல் செலவு செய்யப்பட்டதா?845 வேட்பாளர் கணக்கு குறித்து இன்று முடிவு

Posted:

சென்னை : லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் போட்டியிட்ட, 845 வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு களை ஆய்வு செய்ய, தேர்தல் ஆணைய செலவின பார்வையாளர்கள், இன்று தமிழகம் வருகின்றனர். வேட்பாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை மீறி, செலவு செய்துள்ளனரா என்பதை, அவர்கள் ஆய்வு செய்வர்.ஏப்ரல் 7 முதல், மே 12 வரை, ஒன்பது கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது; நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.அவகாசம் முடிந்ததுஇந்நிலையில், 'லோக்சபா தேர்தலில், நாடு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™