Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ம.பி. தொழிற்கல்வி வாரிய ஊழல்: முன்னாள் அமைச்சர் கைது

Posted: 15 Jun 2014 01:31 PM PDT

மத்தியப் பிரதேச தொழிற்கல்வி வாரியத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அந்த மாநில முன்னாள் அமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

"எதிர்க்கட்சி அந்தஸ்து பெற ஐ.மு.கூ.வுக்கு தகுதி உள்ளது'

Posted: 15 Jun 2014 01:30 PM PDT

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு போதுமான உறுப்பினர்கள் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

உ.பி.யில் வேலை செய்ய மறுத்த தொழிலாளி எரித்து கொலை

Posted: 15 Jun 2014 01:30 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வேலை செய்ய மறுத்த தொழிலாளி எரித்துக் கொல்லப்பட்டார். மேலும் அவரது சகோதரர் பலத்த தீக்காயமடைந்தார்.

சணல் ஆலை அதிகாரி அடித்துக் கொலை: பாஜக, கம்யூனிஸ்ட் மீது மம்தா குற்றச்சாட்டு

Posted: 15 Jun 2014 01:29 PM PDT

மேற்கு வங்கத்தில் சணல் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரியை தொழிலாளர்கள் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

ம.பி.யில் பழங்குடியின பெண் பலாத்காரம்: 10 பேர் கைது

Posted: 15 Jun 2014 01:27 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், கணவர் உள்ளிட்ட 10 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக பெண் எம்.பி. மீது தாக்குதல் முயற்சி

Posted: 15 Jun 2014 01:26 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான நிரஞ்சன் ஜோதி மீது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் ராகுல் திவாரி படுகாயமடைந்தார்.

12 மாநிலங்களில் மட்டுமே உணவு பாதுகாப்புச் சட்டம் அமல்: பாஸ்வான்

Posted: 15 Jun 2014 01:26 PM PDT

நாட்டில் 12 மாநிலங்களில் மட்டுமே உணவு பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழக மேலவை குறித்த மசோதா: மத்திய அரசு மறுபரிசீலனை?

Posted: 15 Jun 2014 01:25 PM PDT

தமிழகத்தில் சட்ட மேலவை மீண்டும் அமைத்தல் உள்பட மாநிலங்களவை ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ள 7 முக்கிய மசோதாக்களை மறுபரிசீலனை செய்ய மத்திய சட்டத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆம்பூரில் கானாறு தூர்வாரும் பணி

Posted: 15 Jun 2014 01:22 PM PDT

ஆம்பூர் நகராட்சி சார்பில் கானாறு தூர்வாரும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.  வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக வேலூர் மாவட்ட

 ஆன்லைன் விசா பதிவு: வேலூரில் நாளை பயிற்சி

Posted: 15 Jun 2014 01:22 PM PDT

வேலூரில் வெளிநாட்டினர் தங்களின் பாஸ்போர்ட் விசா விவரங்களை ஆன் லைனில் பதிவு செய்து தொடர்பான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமைநடைபெறுகிறது.

குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 15 Jun 2014 01:22 PM PDT

வேலூர் ஓல்டு டவுனில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி அப்பகுதியினர் திடீர் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

புத்த மதத்தினர்- முஸ்லிம்கள் மோதல்; இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

Posted: 15 Jun 2014 01:22 PM PDT

இலங்கையில் தெற்கு கடற்கரையோர நகரான அலுத்காமாவில் புத்தமதத்தினர் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 15 Jun 2014 01:22 PM PDT

அரக்கோணம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.

600 விவசாயிகளுக்கு அரசின் உதவித் தொகை

Posted: 15 Jun 2014 01:21 PM PDT

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2013-14ஆம் ஆண்டுக்கான திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கத் தளையினை தங்கள் சொந்த செலவில் அமைத்த விவசாயிகளுக்கு தமிழக அரசின் உதவ

மனைவிக்கு கத்திக்குத்து: கணவர் கைது

Posted: 15 Jun 2014 01:21 PM PDT

திருவலம் அடுத்த குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் 54), பால் வியாபாரி. இவரது மனைவி செல்வி(42). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கணவரைப் பிரிந்து செல்வி தனியாக வசித்து வருகிறாராம். இந்நிலையில் தனது பேரனைப் பார்க்க ராபர்ட் வீட்டுக்கு செல்வி

சிறு, குறுந் தொழில்களுக்கு தனி சட்டம்

Posted: 15 Jun 2014 01:21 PM PDT

வேலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந் தொழில் அதிபர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் ஆர். அமிர்தகடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு மற்றும் குறுந் தொழில்களின்

ஆற்காட்டில் திமுக பொதுக்கூட்டம்

Posted: 15 Jun 2014 01:21 PM PDT

ஆற்காடு நகர திமுக சார்பில் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. 

கிராமப்புற இளைஞர்களுக்கு 18-ல் நேரடி வேலைவாய்ப்பு முகாம்

Posted: 15 Jun 2014 01:20 PM PDT

வேலூர் அண்ணா சாலையில் பூமாலை வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில், படித்து வேலைவாய்ப்பின்றி உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு முகாம் வரும் 18

எழுத்தாளர்கள் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 15 Jun 2014 01:20 PM PDT

எழுத்தாளர்கள் சமூகக் கூறுகளை பிரதிபலிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

மாடுகள் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

Posted: 15 Jun 2014 01:20 PM PDT

வேப்பங்குப்பம் அடுத்த ஓட்டேரிபாளையத்தைச் சேர்ந்த நீலகண்டராஜாவின் ஒரு பசுமாடு, விஜயாவின் 2 பசுமாடுகள் சில நாள்களுக்கு முன்பு திருடு போனது.  வாணியம்பாடியில் நடந்த சந்தையில் சென்று

19-ல் வாலாஜாவில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்

Posted: 15 Jun 2014 01:20 PM PDT

வாலாஜா அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சை முகாம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

சாலை விபத்தில் இளைஞர் சாவு

Posted: 15 Jun 2014 01:20 PM PDT

வேலூரை அடுத்த அடுக்கம்பாறையில் சரக்கு ஆட்டோ மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

பெண்ணை தாக்கியதாக தாய், மகன் கைது

Posted: 15 Jun 2014 01:19 PM PDT

குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஊராட்சி, பார்வதியாபுரத்தைச் சேர்ந்தவர் ரகுபதி. இவரது உறவினர் சாமிநாதன். இவர்களுக்குள் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு...

Posted: 15 Jun 2014 01:19 PM PDT

வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய பயன்கள் தொட

ரூ.60 லட்சம் மதிப்புள்ள மருந்துகளுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு

Posted: 15 Jun 2014 01:19 PM PDT

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள மருந்து லோடுடன் லாரியை 5 பேர் கும்பல் சனிக்கிழமை நள்ளிரவு கடத்திச் சென்றது. இதனை காவேரிப்பாக்கம் அருகே போலீஸார் மீட்டனர்.

2,796 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 15 Jun 2014 01:19 PM PDT

காட்பாடியை அடுத்த சேனூர் மற்றும் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 2,796 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி,

குடியாத்தம் கஸ்பாவில் கெங்கையம்மன் திருவிழா

Posted: 15 Jun 2014 01:18 PM PDT

குடியாத்தத்தை அடுத்த கஸ்பாவில் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.

மேல்நிலை நீர்த் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டிய இளைஞர் மீட்பு

Posted: 15 Jun 2014 01:18 PM PDT

ஆம்பூர் அருகே மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.

கொள்ளை முயற்சி: ஏ.டி.எம். காவலாளி வெட்டிக் கொலை

Posted: 15 Jun 2014 01:18 PM PDT

மாமல்லபுரம் அருகே தனியார் வங்கிக் காவலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்று தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி

80% மானியத்தில் சூரிய ஒளி மின் மோட்டார்கள்: பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Posted: 15 Jun 2014 01:17 PM PDT

80 சதவீத மானிய விலையில் சூரிய ஒளி (சோலார்) மின் மோட்டார்கள் அமைத்து பாசன வசதி பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள்

Posted: 15 Jun 2014 01:17 PM PDT

விவசாயிகளுக்கு மானிய விலையிலான மணிலா விதைகள் வழங்கும் நிகழ்ச்சி தண்டராம்பட்டு வேளாண்மைத் துறை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

போளூரில் குரு பெயர்ச்சி யாகம்

Posted: 15 Jun 2014 01:17 PM PDT

போளூர் வீரப்பன் தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீபால சௌந்தரி உடனுறை சோமநாதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி மஹா யாகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு முன்னேறுங்கள்

Posted: 15 Jun 2014 01:16 PM PDT

தாய்-தந்தையைவிட இவ்வுலகில் நல்ல நண்பர்கள் யாரும் இல்லை. எனவே, பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு வாழ்க்கையில் மேன்மேலும் முன்னேறுங்கள் என்று சென்னை அண்ணா

அருணாசலேஸ்வரர் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதி வழிபாடு

Posted: 15 Jun 2014 01:16 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னி ஹோத்ரி ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தார்.

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் செங்குந்தர் சங்கம் சார்பில் மாணவர்களுக்குப் பரிசுகள்

Posted: 15 Jun 2014 01:16 PM PDT

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட செங்குந்தர் சங்கம் சார்பில், ஆரணி செங்குந்தர் மண்டபத்தில் இதற்கான விழா நடை

கொழாவூரில் அம்மா திட்ட முகாம்

Posted: 15 Jun 2014 01:15 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட கொழாவூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 16 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விவசாயி வீட்டில் நகை திருட்டு

Posted: 15 Jun 2014 01:15 PM PDT

 திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டின் ஐந்தரை பவுன் தங்க நகைகள் திருடு போயின. திருவண்ணாமலையை அடுத்த குன்னுமுறிஞ்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல் (40). இவர் தனது குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் அண்மையில் புதிதாக வீடு கட்டியுள்ளார்.

மாற்றுமுறை தீர்வு மையங்களால் நீதிமன்றங்களின் பணிச்சுமை குறையும்

Posted: 15 Jun 2014 01:15 PM PDT

மாற்றுமுறை தீர்வு மையங்களால் நீதிமன்றங்களின் பணிச்சுமை குறையும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னி ஹோத்ரி தெரிவித்தார்.

பாதுகாப்போம் பள்ளிக் குழந்தைகளை

Posted: 15 Jun 2014 01:15 PM PDT

இன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள்.

முதியவர் மர்மச் சாவு

Posted: 15 Jun 2014 01:14 PM PDT

திருவண்ணாமலையில் முதியவர் மர்மமாக இறந்து கிடந்தார். திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின் நகர் முதல் தெருவைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் பாஸ்கர்.

ஜனநாயகக் கடமையும் உரிமையும்

Posted: 15 Jun 2014 01:14 PM PDT

ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள் முதலில் ஜனநாயக முறையில் செயல்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளானாலும் சரி, மாநில கட்சிகளானாலும் சரி, அவை ஜனநாயக முறையில் செயல்படுவதில்லை.

சோமாசிபாடி உள்வட்டத்துக்கு இன்று ஜமாபந்தி

Posted: 15 Jun 2014 01:14 PM PDT

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், சோமாசிபாடி உள் வட்டத்துக்கான ஜமாபந்தி திங்கள்கிழமை (ஜூன் 16) நடைபெறுகிறது.

குடியாத்தம் கஸ்பாவில் கெங்கையம்மன் திருவிழா

Posted: 15 Jun 2014 01:14 PM PDT

குடியாத்தத்தை அடுத்த கஸ்பாவில் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது.

தொடர்கிறதே இப்படி...

Posted: 15 Jun 2014 01:14 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் பேரணிகள், கருத்தரங்குகள் நடந்துகொண்டிருந்த கடந்த வியாழக்கிழமையன்று, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்ததைப் போன்ற பாலியல் வன்கலவிச் சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றிருப்பது தமிழக மக்களின் மனதை உறையச் செய்தது.

துத்திப்பட்டு

Posted: 15 Jun 2014 01:13 PM PDT

காவிரி பிரச்னையில் முன்னெச்சரிக்கை தேவை: சித்தராமையாவுக்கு தேவெகெளடா அறிவுரை

Posted: 15 Jun 2014 01:11 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் கர்நாடகத்தின் நலனைப் பாதுகாக்க முதல்வர் சித்தராமையா முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவெகெளடா அறிவுறுத்தினார்.

மாநிலங்களவை இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

Posted: 15 Jun 2014 01:10 PM PDT

மாநிலங்களவை இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 16) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 23 கடைசி நாளாகும்.

பி.இ. கலந்தாய்வு: இன்று தரவரிசை பட்டியல் வெளியீடு

Posted: 15 Jun 2014 01:09 PM PDT

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 16) வெளியிடப்படுகிறது.

புதுவை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்: மோடியிடம் ஆளுநர் வலியுறுத்தல்

Posted: 15 Jun 2014 01:05 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை புதுதில்லியில் அண்மையில் சந்தித்த துணைநிலை ஆளுநர் கட்டாரியா, புதுவையின் வளர்ச்சிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் 105 டிகிரி; சென்னையில் 104 டிகிரி: வெயிலால் மக்கள் அவதி

Posted: 15 Jun 2014 01:03 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) 104 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல, புதுச்சேரியில் 105 டிகிரி வெயில் பதிவானது.

சூரிய ஒளி மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த ராமதாஸ் கோரிக்கை

Posted: 15 Jun 2014 01:03 PM PDT

சூரிய ஒளி மின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 15 Jun 2014 12:59 PM PDT

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று, திங்கள்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்கிறார்கள்.

அரசு எம்.பி.பி.எஸ்.: 2,023 இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு

Posted: 15 Jun 2014 12:57 PM PDT

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

வில்லங்கச் சான்றுகளை இலவசமாக இணையத்தில் பார்க்கலாம்: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

Posted: 15 Jun 2014 12:51 PM PDT

பதிவுத் துறையில் பராமரிக்கப்பட்டு வரும் வில்லங்கச் சான்று விவரங்களை இலவசமாக இணையதளத்தில் பார்க்கும் வசதியை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

Posted: 15 Jun 2014 12:49 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தலைச் சந்திக்கத் தயாராகிறது தில்லி

Posted: 15 Jun 2014 12:45 PM PDT

அடுத்த 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க தில்லி தயாராகி வருவதாகத் தெரிகிறது.

ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு பரிசீலனை

Posted: 15 Jun 2014 12:42 PM PDT

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கொள்கையை மத்திய அரசு விரைவில் வகுக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சருக்கான அறிவியல் ஆலோசகர் அவினாஷ் சந்தர் கூறியுள்ளார்.

பேரவை கூட்டத்தொடருக்குப் பிறகு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

Posted: 15 Jun 2014 12:38 PM PDT

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்குப் பிறகே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

உ.பி. பேரவை இடைத்தேர்தல்: மாநில அமைச்சர்களுடன் முலாயம் சிங் ஆலோசனை

Posted: 15 Jun 2014 12:37 PM PDT

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் முலாயம் சிங், மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிகார் மாநிலங்களவைத் தேர்தல் நிலைப்பாடு: பாஜக தாமதிப்பது ஏன்? ஐக்கிய ஜனதா தளம் கேள்வி

Posted: 15 Jun 2014 12:36 PM PDT

பிகாரில் மாநிலங்களவைத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்க பாஜக தாமதிப்பது ஏன்? என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான விஜய்குமார் செளத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

"திரிணமூல் தொண்டர்களைத் தாக்க மார்க்சிஸ்ட்-பாஜக கூட்டுச் சதி'

Posted: 15 Jun 2014 12:36 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களைத் தாக்குவதற்கு பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூட்டுச் சதியில் ஈடுபடுகின்றனர் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜன்னலில் விரிசல்: பூடான் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Posted: 15 Jun 2014 12:35 PM PDT

பூடானில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு வந்த "ராயல் பூடான்' நிறுவன விமானத்தின் ஜன்னல் கண்ணாடி நடுவானில் விரிசல் விட்டதால் கொல்கத்தா விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சட்ட விரோத சுரங்கத் தொழிலை கட்டுப்படுத்த வேண்டும்: எடியூரப்பா

Posted: 15 Jun 2014 12:35 PM PDT

கர்நாடகத்தில் சட்ட விரோத சுரங்கத் தொழிலைக் கட்டுப்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக எம்.பி.யுமான எடியூரப்பா வலியுறுத்தினார்.

"எதிர்க்கட்சி அந்தஸ்து பெற ஐ.மு.கூ.வுக்கு தகுதி உள்ளது'

Posted: 15 Jun 2014 12:34 PM PDT

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு போதுமான உறுப்பினர்கள் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் "சோனார்' கருவி

Posted: 15 Jun 2014 12:33 PM PDT

ஹிமாசலப் பிரதேசத்தில் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன 17 பேரை தேடும் பணியில் உயர் தொழில்நுட்ப "சோனார்' கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இராக் செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 15 Jun 2014 12:33 PM PDT

"இராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் அந்நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். அங்கு வசித்துவரும் இந்தியர்கள் நாடுதிரும்புவது குறித்து உரிய முடிவெடுக்க வேண்டும்' என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

துணை ராணுவ படைகளுக்கு 600 மருத்துவர்கள் விரைவில் தேர்வு

Posted: 15 Jun 2014 12:25 PM PDT

நக்ஸலைட்டுகளுக்கு எதிராகப் போராடும் துணை ராணுவப் படைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 600 மருத்துவர்களைத் தேர்வு செய்ய இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை

Posted: 15 Jun 2014 12:24 PM PDT

மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

துபையில் இந்தியர் சாவு

Posted: 15 Jun 2014 12:19 PM PDT

ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் ஒன்றான ஷார்ஜாவில், கட்டடக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளி, கட்டடத்தின் மேலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

பிரிட்டன்: இந்தியர்களுக்கு எலிசபெத் ராணி கெளரவம்

Posted: 15 Jun 2014 12:18 PM PDT

பிரிட்டனில் சமூக சேவை செய்து வரும் இந்தியர்கள், எலிசபெத் ராணியால் கெளரவிக்கப்படுகின்றனர்.

பாகிஸ்தானில் விமானத் தாக்குதல்: 80 தீவிரவாதிகள் சாவு

Posted: 15 Jun 2014 12:17 PM PDT

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அந்நாட்டு போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்த்திய தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.

"கூடங்குளம் விபத்துக்கு தவறான வால்வு காரணமல்ல'

Posted: 15 Jun 2014 12:11 PM PDT

அண்மையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்கு, அணு உலையில் தவறாகப் பொருத்தப்பட்டிருந்த வால்வுதான் காரணம் எனக் கூறப்படுவதை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் மறுத்துள்ளது.

கணவர் ஏற்காததைக் கண்டித்து பெண் தர்னா

Posted: 15 Jun 2014 12:11 PM PDT

குமரி மாவட்டம் திருவரம்பு அருகே மகப்பேறுக்குச் சென்ற பெண்ணை கணவர் ஏற்றுக் கொள்ளாததால் குழந்தையுடன் அப்பெண் ஞாயிற்றுக்கிழமை  கணவர் வீட்டு முன் தர்னாவில் ஈடுபட்டார். 

கின்னஸ் சாதனைக்காக பின்னோக்கி நடந்த 1,107 பேர்

Posted: 15 Jun 2014 12:11 PM PDT

பின்னோக்கி நடந்து செல்வதை பெரிய அளவில் நிகழ்த்தியதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

திருவட்டாறு அருகே ஜெபக்கூட்டம் நடத்த எதிர்ப்பு

Posted: 15 Jun 2014 12:11 PM PDT

திருவட்டாறு அருகே வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்த ஒருபிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது.

வெள்ளமடம் கோயில்உண்டியலில் பணம் திருட்டு

Posted: 15 Jun 2014 12:10 PM PDT

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் சுடலைமாடசுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாஜக பெண் எம்.பி. மீது தாக்குதல் முயற்சி

Posted: 15 Jun 2014 12:10 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்.பி.யும், பெண் துறவியுமான நிரஞ்சன் ஜோதி மீது அடையாளம் தெரியாத 3 நபர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் ராகுல் திவாரி படுகாயமடைந்தார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 15 Jun 2014 12:10 PM PDT

ஆற்றூர் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நாகர்கோவில் கடையில் கார் எரிந்து சேதம்

Posted: 15 Jun 2014 12:10 PM PDT

நாகர்கோவிலில் பழுதுநீக்கும் கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

கல்வீச்சு: அரசு பேருந்தின் கண்ணாடி சேதம்

Posted: 15 Jun 2014 12:10 PM PDT

நித்திரவிளை அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

குமரியில் ரப்பர் தொழிற்சாலை: இராம.கோபாலன் வலியுறுத்தல்

Posted: 15 Jun 2014 12:09 PM PDT

 குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என,  இந்து முன்னணி நிறுவனர் அமைப்பாளர் இராம. கோபாலன் வலியுறுத்தினார்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக விரிவாக்கப் பணிகள்

Posted: 15 Jun 2014 12:09 PM PDT

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.73.52 கோடி செலவில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தார்.

இரணியல் ரயில் நிலையத்தில் ஜூன் 28 இல் காங்கிரஸ் மறியல்

Posted: 15 Jun 2014 12:09 PM PDT

இரணியல் ரயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என

கல்லூரியில் விழிப்புணர்வு விழா

Posted: 15 Jun 2014 12:09 PM PDT

கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புளியமரத்தில் சாய்ந்த மின்கம்பத்தை அகற்றக் கோரிக்கை

Posted: 15 Jun 2014 12:08 PM PDT

கருங்கல் அருகே புளியமரத்தில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களியக்காவிளை அருகே கோயில் சிலை சேதம்: 9 பேர் மீது வழக்கு

Posted: 15 Jun 2014 12:08 PM PDT

களியக்காவிளை அருகேயுள்ள மகாதேவர் கோயிலில் சிலையை சேதப்படுத்தியதாக 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

பிகாரில் மூளைகாய்ச்சல் பாதிப்பு: சாவு 66 ஆனது

Posted: 15 Jun 2014 12:08 PM PDT

பிகாரில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த மாநிலத்தில் இந்த நோய் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

ரத்த தான விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 15 Jun 2014 12:08 PM PDT

சர்வதேச ரத்த தான தினத்தையொட்டி குலசேகரத்தில் ரத்த தான விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மஞ்சாலுமூடு நியூ விஷன் பவுண்டேஷன் சார்பில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு இந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார்.

பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது காங்கிரஸின் தோல்விக்கு காரணம்: பிரஃபுல் படேல்

Posted: 15 Jun 2014 12:08 PM PDT

"மக்களவைத் தேர்தலின்போது, பாஜகவைப் போல பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தெளிவாக முன் நிறுத்தாதது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்' என்று முன்னாள் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல் கூறினார்.

கல்லூரி இதழில் மோடிக்கு எதிராக கருத்து: கேரளத்தில் 9 கல்லூரி மாணவர்கள் கைது

Posted: 15 Jun 2014 12:07 PM PDT

கேரள மாநிலம் திருச்சூரில், கல்லூரி இதழில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக "வெறுப்பூட்டும் வகையில்' கருத்துகளை வெளியிட்டதாக 9 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

"ஆன்லைன்வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும்'

Posted: 15 Jun 2014 12:07 PM PDT

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் எச். வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அழகப்பபுரம் அந்தோணியார் ஆலய தேர் பவனி

Posted: 15 Jun 2014 12:06 PM PDT

அழகப்பபுரம் கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய அலங்கார தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருநந்திக்கரை டாஸ்மாக் கடை மூடல்:பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 15 Jun 2014 12:06 PM PDT

குமரி மாவட்டம், திருநந்திக்கரையில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடை, நீதிமன்றத் தீர்ப்பையடுத்து மூடப்பட்டது.

உத்தரகண்ட் பாஜக நிர்வாகி கொலை

Posted: 15 Jun 2014 12:06 PM PDT

உத்தரகண்டில் காணாமல் போன பாஜக தலைவர் ராகேஷ் குமார் ரஸ்தோகி, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடியில் மீன்வளத் துறை அமைச்சர் ஆய்வு

Posted: 15 Jun 2014 12:06 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 15 Jun 2014 12:05 PM PDT

கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம்அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவில்பட்டியில் இருபெரும் விழா

Posted: 15 Jun 2014 12:05 PM PDT

கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில், பெüர்ணமி நூல் வலம் மற்றும் குருதி கொடையாளர்களுக்கான விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்கக் கோரிக்கை

Posted: 15 Jun 2014 12:05 PM PDT

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாக இருக்கும் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்து வழங்கவேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளி வீட்டில் திருட்டு: இளைஞர் கைது

Posted: 15 Jun 2014 12:05 PM PDT

கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் திருடிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

உத்தரகண்ட் மறுவாழ்வுப் பணிகள் மந்தம்: காங்கிரஸ் அரசு பதவி விலக பாஜக வலியுறுத்தல்

Posted: 15 Jun 2014 12:05 PM PDT

"உத்தரகண்ட் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டு ஓராண்டாகியும், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளத் தவறிய காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™