Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உளவுத்துறை அறிக்கை குறித்து மத்திய அரசு விசாரணை: உதயகுமாருக்கு வெளிநாட்டு நிதி வந்தது எப்படி?

Posted:

சென்னை: இந்தியாவின் மின் உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்க, தன்னார்வ அமைப்புகளுக்கு, வெளிநாடுகளிலிருந்து பண உதவி அளிக்கப்படுகிறது. குறிப்பாக, 'கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய உதயகுமாருக்கு, இரு தவணைகளில், 38,720 அமெரிக்க டாலர் (23.23 லட்சம் ரூபாய்) அளிக்கப்பட்டுள்ளது' என, மத்திய உளவுத் துறை (ஐ.பி.,) தெரிவித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கையை, பிரதமர் மோடி, நிதி, உள்துறை அமைச்சகங்கள், நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை செயலர் ஆகியோருக்கு, உளவுத்துறை அனுப்பியுள்ளது. இந்த அறிக்கை மீது, மத்திய அரசு விசாரணையைத் ...

இந்தியாவின் பலத்தை உலக நாடுகளுக்கு தெரிவியுங்கள்: ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு மோடி வேண்டுகோள்

Posted:

புதுடில்லி: ''இந்தியாவின் பலத்தை, உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் ஏஜென்ட்களாக, இந்திய வெளியுறவு சேவையான - ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் செயல்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பயிற்சி நிறைவு: ஐ.எப்.எஸ்., அதிகாரிகளாக தேர்ச்சி பெற்ற ஒரு அணியினர், டில்லியில் பயிற்சி பெற்றனர். அவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்ததை ஒட்டி, நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் எனில், எந்த விதமான குறைபாடும் இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதோடு, அவற்றை நல்ல முறையில், 'பேக்' செய்தும், வெளிநாடுகளுக்கு ...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிசீலனையா? 'இல்லவே இல்லை' என உமா பாரதி மறுப்பு

Posted:

''காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான திட்டம் எதுவும், பரிசீலனையில் இல்லை. இப்பிரச்னையில், உச்ச நீதிமன்றம் கூறும் அறிவுரைக்கு ஏற்ப, மத்திய அரசு முடிவு எடுக்கும்,'' என, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறினார்.டில்லியில் நேற்று, நிருபர்களைச் சந்தித்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியிடம், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோரிக்கை விடுத்திருந்தார். இது விஷயமாக, அமைச்சக குறிப்பு தயாரிக்கப்பட்டு, அதிகாரிகளின் பார்வையில் இருப்பதாக, செய்தி வெளியாகி உள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக ...

வாங்கும் சம்பளம் ரூ.3,500; கொடுக்கும் லஞ்சம் ரூ.6,000: சாதனை படைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்

Posted:

அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி ரேஷன் அரிசி கடத்தல் என்பது நடக்காத ஒன்று; மாதம் 3,500 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்பது கொடுமை தான் என, ரேஷன் கடை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழகத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தில், பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ...

ஐ.ஏ.எஸ்., தேர்வில் 45 வது இடம்: தமிழில் எழுதி சாதித்தார் தேனி இளைஞர்

Posted:

தேனி: தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார் தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், 26. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. இதில், தேவதானப்பட்டி ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தேசிய அளவில் 45 வது 'ரேங்க்' பெற்றார்; தமிழக அளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றார். இவர் தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர். இவரது தந்தை பழனிச்சாமி, கெங்குவார்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளர்; தாயார் ...

'நான்கு அணைகளுக்கு கேரளா உரிமை கொண்டாட முடியாது!': மூத்த பொறியாளர் சங்கம் பதிலடி

Posted:

சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பிற்கு கீழ், கேரள எல்லையில் உள்ள நான்கு அணைகள் வருகின்றன. எனவே, அந்த நான்கு அணைகளுக்கு, கேரள மாநில அரசு, இனி, உரிமை கொண்டாட முடியாது,'' என, தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்க செயலர், வீரப்பன் கூறினார்.கேரள சட்டசபையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜமீலா பிரகாசம் பேசியதாவது: கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த அணைகள் பாதுகாப்புக்கான தேசிய குழு கூட்டத்தில், 'முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய, நான்கு அணைகளின் முழு உரிமையும், எங்களுக்கே சொந்தம்' என, தமிழகம் ...

ராமதாசும், நானும் உண்மையை சொன்னோம்: கருணாநிதி

Posted:

'மின்சாரம் பற்றி ராமதாசும், செம்மொழி பற்றி நானும் சொன்னது உண்மை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: மின்சாரம் பற்றி ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும், செம்மொழி பற்றி நானும் விடுத்த அறிக்கைக்கும் முதல்வர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியுள்ளனர். அதிலிருந்தே நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் உண்மை. நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல்வர் பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால் தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்து, பதில் சொல்ல ...

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தேர்தல் அறிவிப்பு: அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற கடும் போட்டி

Posted:

சென்னை: 'தமிழகத்தில், காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம், 3ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுபவர், வெற்றி உறுதி என்பதால், அக்கட்சியில், இப்பதவியை கைப்பற்ற, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 1991 முதல் 1996 வரை, அ.தி.மு.க., ஆட்சி நடந்தது. அப்போது, மத்திய அரசு, 'ஜவகர் யோஜ்கர் யோஜனா' என்ற திட்டத்தின் கீழ் வழங்கிய நிதி மூலம், தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு, கூரை அமைக்கும் பணி நடந்தது.ஊழல்: இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமா ...

அயோத்தி, வாரணாசி, மதுராவில் கூடுதல் பாதுகாப்பு: பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம் எதிரொலி

Posted:

புதுடில்லி: அயோத்தி, வாரணாசி மற்றும் மதுராவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இந்த நகரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய உள்துறை செயலர் அனில் கோஸ்சுவாமி தலைமையில், டில்லியில் நேற்று கூட்டம் நடைபெற்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஜி.பி., திலீப் திரிவேதி, உத்தர பிரதேச மாநில டி.ஜி.பி., பானர்ஜி, அம்மாநில உள்துறை முதன்மை செயலர் தீபக் சிங் சிங்கால் உட்பட, பலர் பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில் தான், மூன்று நகரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. பிரபலமான ...

வெற்றியுடன் துவங்கியது பிரேசில் : குரோஷியா தோல்வி

Posted:

சாவ் பாலோ: உலக கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக துவங்குகியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும், இத்தொடரின் போட்டிகளில் மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது. சாவ் பாலோவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. சொதப்பல் துவக்கம்: பரபரப்பாக துவங்கிய ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™