Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கையெழுத்தின் தலையெழுத்தென்ன?

Posted: 12 Jun 2014 03:44 PM PDT

கல்விப் பயிற்சிக்கும் கையெழுத்துக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறது... கையால் எழுதுவது இன்னமும் அவசியமா? அப்படியொன்றும் அவசியமில்லை என்றே பல கல்வியாளர்கள் கருதுகின்றனர். கையால் எழுதுவது அந்தக் கால வழக்கம் என்று அந்தப் பழக்கத்தைப் பரணில் தூக்கிப்போட காலம் இன்னும் வந்துவிடவில்லை என்று உளவியலாளர்களும் நரம்பியல் நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். கையெ ழுத்துக்கும் கல்விப் பயிற்சிக்கும் ஆழ்ந்த தொடர்பு இருப்பதை விளக்கும் சான்றுகள் இப்போது வரத் தொடங்கியிருக்கின்றன. முதலில் கையால் எழுதப் பழகுவதன் மூலம் ...

தமிழ்தான் நம் ஆதாரம்!

Posted: 12 Jun 2014 03:42 PM PDT

உலகெங்கும் தாய்மொழிக் கல்விகுறித்து அக்கறை காட்டி வருகிறார்கள். ஒரு குழந்தை தனது தாய்மொழியில் பெறும் கல்வியே ஆழமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் என்பது திரும்பத் திரும்பக் கல்வியாளர்களாலும் உளவியலாளர்களாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் லாப நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, கல்வியில் தாய்மொழியின் பங்கை முற்றிலும் ஒழித்துவிடுவதில் முனைப்புக் காட்டியிருக்கின்றன. தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பிலிருந்து ...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Posted: 12 Jun 2014 03:40 PM PDT

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ...

உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு

Posted: 12 Jun 2014 03:38 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் மாங்கூழ், அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதியாகும் மாங்கூழ் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. உலகில் 63 நாடுகளில் மா பயிரிடப்படுகிறது. மொத்த மாம்பழ உற்பத்தியில் 19 மில்லியன் டன் மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 926 ஹெக்டேர் பரப்பில் மா பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மா சீசன் காலங்களில் மட்டுமே ...

24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – சாஹிட் ஹமிடி

Posted: 12 Jun 2014 03:33 PM PDT

24 மணி நேரத்திற்குள் அந்நிய தொழிலாளர்களை அழைத்துச் செல்லுங்கள் – முதலாளிகளுக்கு உள்துறை அமைச்சு எச்சரிக்கை வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் அந்நிய தொழிலாளர்களை, மலேசியாவிற்கு வந்து இறங்கிய 24 மணி நேரத்திற்குள் முதலாளிகள் வந்து அழைத்துச் செல்லவேண்டும். இல்லையேல் அவர்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்று நேற்று கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தை பார்வையிட்டப் பின் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவ்வாறு தொழிலாளர்கள் திருப்பி ...

பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)

Posted: 12 Jun 2014 03:00 PM PDT

உலகக் கோப்பையின் முதல் ஆட்டம் இன்னும் 10 நிமிடங்களில் துவங்க உள்ளது! ரசிகர்கள் ஸ்டேடியத்தில் மிகுந்த உற்சாகத்துடன் திரண்டுள்ளார்கள். மலேசியாவில் அனைத்து உணவகங்களிலும் கால்பந்து ரசிகர்கள் நிரம்பி வழிகிறார்கள். நான் மட்டும் தனியாக வீட்டில் அமர்ந்து விளையாட்டை ரசிக்க உள்ளேன்! ஆட்ட முடிவு 3:1 அல்லது 3:0 என்றிருக்கலாம் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். முடிவு என்ன என்பதை இன்னும் 90 நிமிடங்களில் அறிந்து கொள்ளலாம்.

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Posted: 12 Jun 2014 12:46 PM PDT

எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...

வசந்த விழா - கந்த கோட்டத்தில்

Posted: 12 Jun 2014 12:23 PM PDT

இன்று (12/06/14) கந்த கோட்டம் முருகன் கோவிலில் வள்ளலார் என்னும் தலைப்பில் அடியேனுடைய சொற்பொழிவு நடைபெற்றது. நிறைவான ரசிகர்கள். மனம் நிறைந்த நிகழ்வு. 

வான் நிலா... நீ வா உலா!

Posted: 12 Jun 2014 12:14 PM PDT

வான் நிலா... நீ வா உலா! வான் நிலா இன்று வானிலை காரணம் வானிலை. வான் நிலா நீயிலா வான் வானிலை வா நிலை. வானிலா வான் நிலா கொஞ்சம் வா நிலா வசந்தம் தா நிலா. தண்ணிலா நீ அகல் நிலா காரிருள் அகல் நிலா அகற்றி அகலாய் நிலா. வெண்ணிலா நீ வா நிலா வந்து வானிலே காய் நிலா காய்த்து எம் பூமியைக் காய் நிலா. பொன்னிலா நீ பூ நிலா வந்து வானிலே நீ பூ நிலா. வெள்ளி நிலா உனை சுற்றிதான் எத்தனை வெள்ளி நிலா. தங்க நிலா எமக்கு இடம் தா... தங்க நிலா. சன்னலில் முகம் சாய்த்து சங்கடத்தில் ...

பொன்மொழிகள்

Posted: 12 Jun 2014 12:02 PM PDT

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :)

Posted: 12 Jun 2014 11:26 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

செசெ வின் இந்த சாக்கடையை எங்கே வடிப்பது

Posted: 12 Jun 2014 09:52 AM PDT

பொது      இந்த சாக்கடையை எங்கே வடிப்பது   ஊழல் என்ற - ஒரு விஷக்காத்து; ஊர்வலம் போகுது-வறுமை இடம் பாத்து.   யாரைச், சேர வந்ததோ; ஏழை ஊரைச் சென்றதோ; ஏழ்மை கண்டுக் கொண்டாதோ; குணத்தைக் காட்டி விட்டதோ.   வறுமை, வாடைக் காத்து; வீசும் போதும் - பசி எடுத்து திறிந்ததோ.   தன்னலம் மட்டும் அறிந்ததோ; பிறர்நலம் கெடவே வளர்ந்ததோ.   எங்கே வடிப்பது? யார், கொண்டு முடிப்பது? வடி இறங்காச் சாக்கடையை.                              செசெ

பொள்ளாச்சி; 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

Posted: 12 Jun 2014 08:35 AM PDT

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாணவிகளை பார்வையிட சென்ற சப்.கலெக்டர், அவர்கள் நிலையைக் கண்டு மயக்கமுற்றார். இந்த மாணவிகள் பலாத்காரம் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமீப காலமாக கற்பழிப்பு, கொலை , என உ.பி., அரசை உலுக்கி வருகிறது. நேற்று கூட ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே ஒரு பெண் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார். ...

நாட்டையும் கட்சியையும் கெடுத்தவர் சிதம்பரம்தான்! - காங்கிரஸ் கூட்டத்தில் காட்டம்

Posted: 12 Jun 2014 07:30 AM PDT

தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கைவிட... பதிலுக்கு, ''காங்கிரஸையே ஒட்டுமொத்தமாகத் தோற்கடித்த சிதம்பரத்துக்கும் அவரது கோஷ்டிகளுக்கும் ஞானதேசிகனை விமர்சிக்க அருகதை இல்லை'' என்று ஞானதேசிகன் ஆதரவாளர்கள் அறிக்கை வெளியிட... தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு. இந்த நிலையில்தான், 7-ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ப.சிதம்பரம் கோஷ்டியினர் ...

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா-2014

Posted: 12 Jun 2014 06:24 AM PDT

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக உலக மக்களின் கவனத்தையும், அதற்காக காத்திருக்கும் உலகளாவிய ரசிகர்களையும் கொண்ட விளையாட்டு உலக கோப்பை கால்பந்து போட்டி மட்டுமே. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டிக்கு தனிச் சிறப்பு. இது வெறும் விளையாட்டு மட்டுமல்ல; சாதனைக்கான பிறப்பிடம். திருவிழாப்போல கொண்டாடப்படும் இந்நிகழ்வு 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேசில் நடத்தும் 20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று 12-ந் தேதி அரங்கேற ஆயத்தமாகிறது. கோப்பையை வெல்லப்போவது யார்? வெற்றி வாய்ப்பு ...

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்

Posted: 12 Jun 2014 05:41 AM PDT

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும். 2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 12 Jun 2014 03:17 AM PDT

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

உன் மகிமை பெரிதம்மா !!

Posted: 11 Jun 2014 11:42 PM PDT

அன்பென்று சொல்லம்மா! அடிமனதால் சொல்லம்மா! உதட்டோரம் நகையம்மா! புன்னகைதான் உன்னகையம்மா! வறுமை உனை வந்திட்டாலும் வாயில் பல பேசிட்டாலும் பண்பாடு பெரிதம்மா! பலிக்கு நீ ஆகாதம்மா! உன்னழகு உன்னுளமம்மா! உன்னுடமை அதுவேயம்மா! உடையது குறையாதம்மா! அதுவே உனை காக்குமம்மா! காளையர் உனை பேசிட்டாலும்! கலங்கமே சொல்லிட்டாலும்! கலங்கிட வேண்டாமம்மா! கனிந்திடும் உன் வாழ்வம்மா! அடக்கமது உன் சொத்தம்மா! அது தலை நிமிர்த்தும் உனையம்மா! தலை குணிந்தால் தாழ்வில்லை தலை சிறக்க உதவுமம்மா! பெண்ணுரிமை ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 11 Jun 2014 07:08 PM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Posted: 11 Jun 2014 07:00 PM PDT

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™