Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: அசோக்கெலாட், சச்சின் பைலட்மீது வழக்கு பதிவு

Posted:

ஜெய்ப்பூர்: இலவச ஆம்பூலன்ஸ் சேவையில் ரூ.2.56 கோடி நிதி முறைகேடு செய்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக்கெலாட் மற்றும் முனனாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரி சாவந்த்சிங் கூறியதாவது :மாநிலத்தில் சுகதாதாரத்திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவையான 108 சேவையை இயக்குவதில் கடந்த 2010-11-ம் ஆண்டில் சுகாதார நிறுவனம் ஒன்றிற்கு சாதகமாக செயல்பட்டதாகவும் இதன்காரணமாக சுமார் 2.56 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக ஜெய்ப்பூர் மாநகராட்சி மேயர் ...

உ.பி., மாநில காங்., கமிட்டி கலைப்பு: தமிழகத்திலும் விரைவில் அதிரடி

Posted:

புதுடில்லி:லோக்சபா தேர்தலில், படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சியை சீரமைக்கும் நடவடிக்கை களில், காங்கிரஸ் மேலிடம் இறங்கி உள்ளது. முதல்கட்டமாக, உ.பி., மாநில காங்., கமிட்டி கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, தமிழகம் உட்பட, பல மாநில காங்., கமிட்டிகளும் கலைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.பின்னடைவு:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவுக்கு, மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது, அந்தக் கட்சியின் ...

தமிழகத்திற்கு கேரளா புதிய நெருக்கடி!

Posted:

கோவை: சிறுவாணி அணையில் இருந்த பழைய குழாயை அடைத்தற்கான தொகையை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டுமென, கேரள அரசு நெருக்கடி கொடுத்துள்ளது.கடந்த 1977 - 83ல், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட, சிறுவாணி வனத்தில், அணை கட்டப்பட்டு, 22.40 சதுர கிலோமீட்டர் பரப்பில் தண்ணீர் தேக்கப்பட்டு, கோவைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது.இரு மாநில ஒப்பந்தப்படி, கோவை மாநகராட்சியில் இருந்து சிறுவாணி அணை பராமரிப்புக்காக, கேரள அரசுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், சிறுவாணி வனப்பகுதியில் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் விருந்தினர் மாளிகை ...

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிக்கு சிக்கல்: இரவில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மின் தடை

Posted:

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், இரவு நேரங்களில், 'ஓவர்லோடு' பிரச்னையை சமாளிக்க, 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை, மின் தடை செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2008 முதல், மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கு, சுழற்சி முறையில், மின் தடையும், தொழிற்சாலைகளில், மின்சாரம் பயன்படுத்த கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டது.கூடுதல் மின்சாரம்மேட்டூர் விரிவாக்கம், 600; வட சென்னை விரிவாக்கம், 1,200; வல்லூர், 500 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, புதிய அனல் மின் நிலையங்களில், கடந்த ஆண்டு மின் ...

உரத்தொழிற்சாலைகளுக்கு மானியம் வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted:

சென்னை: எரிவாயுவை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் காலம் உருவாகும் வரை, உரத்தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும், மானியத்தை நிறுத்தாமல், தொடர்ந்து வழங்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், இரண்டு உரம் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றவில், 'நாப்தா'வை பயன்படுத்தி உரம் தயாரிப்பது தொடர்பான பிரச்னையை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ள உரத்துறை, புதிய விலை நிர்ணய திட்டத்தை, ஏப்ரல், 2ம் தேதி ...

மாவட்ட செயலர்கள் கொட்டத்தை அடக்குவேன்: 'தினமலர்' செய்திக்கு பின் கூட்டத்தை கூட்டி கருணாநிதி அதிரடி

Posted:

தி.மு.க.,வில், கட்சி நிர்வாகத்தை வலிமையாக்க, மாவட்டங்களை பிரிப்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட, ஆறு பேர் குழுவின் கூட்டம், இதுவரை நடக்கவில்லை என, நேற்றைய, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.இந்த செய்தியை பார்த்ததும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அவசர அவசரமாக, ஆறு பேர் குழுவை கூட்ட உத்தரவிட்டார். அதன்படி, நேற்று காலையில், 11:30 மணியளவில், அறிவாலயத்தில் இந்த குழுவின் முதல் கூட்டம், கருணாநிதி தலைமையில் நடந்தது.மாவட்ட பிரிப்புகட்சியின் பொதுச் செயலர்அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், குழு ...

இன்று முதல் 'அம்மா உப்பு' விற்பனை: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்

Posted:

சென்னை: தமிழக அரசு, புதிதாக வெளி மார்க்கெட்டில், மலிவு விலை உப்பு விற்பனையை துவக்குகிறது. 'அம்மா உப்பு' என்ற பெயரில், மூன்று வகை உப்பு, விற்பனை செய்யும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, இன்று துவக்கி வைக்கிறார்.பல்வேறு திட்டங்கள்தமிழக அரசு, மக்களை கவரும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு, 20 கிலோ இலவச அரிசி, இலவச கால்நடை, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, தாலிக்கு தங்கம் திட்டம் துவங்கப்பட்டது.அதன்பின், அம்மா உணவகம், அம்மா குடிநீர், மலிவு விலை காய்கறி விற்பனை ...

நான்கு அமைச்சரவை கமிட்டிகளை கலைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

புதுடில்லி: ஆதார் அடையாள அட்டை ஆணையம் தொடர்பான கமிட்டி உட்பட, நான்கு அமைச்சரவை கமிட்டிகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலைத்தார்.இயற்கை சீற்றங்கள் மேலாண்மை, விலைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு விவகாரங்கள் தொடர்பானவை மற்ற மூன்று அமைச்சரவைகமிட்டிகள்.இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:ஆதார் அட்டை தொடர்பான, பல முக்கியமான முடிவுகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பிரச்னைகளை, அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்கள் குழுவே கவனித்துக் கொள்ளும்.அதேபோல், விலைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை ...

கங்கையில் துப்பினால் 3 நாள் சிறை தண்டனை

Posted:

புதுடில்லி: புனித கங்கை நதியில், எச்சில் துப்பினாலோ அல்லது மாசு ஏற்படுத்தும் பொருட்களை வீசினாலோ, மூன்று நாட்கள் சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்துக்களின் புனித நதிகளில் ஒன்றான கங்கையை, தாயாக ஏராளமானோர் வழிபடுகின்றனர். 'ஆட்சிக்கு வந்தால் கங்கையை சுத்தப்படுத்துவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., அறிவித்திருந்தது.அதன்படி, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், அதற்காக தனி இலாகாவை ஏற்படுத்தியது; பா.ஜ., மூத்த பெண் தலைவர்களில் ஒருவரான உமாபாரதி, கங்கையை சுத்தப்படுத்தும் துறையின் மத்திய அமைச்சராக ...

காங்., தேய்ந்தது என லோக்சபாவில் வர்ணனை: பாண்டவர் போல எழுவோம் என கார்கே பதிலடி

Posted:

புதுடில்லி: பார்லிமென்டில் நேற்று நடைபெற்ற விவாதத்தில், 'மாநில கட்சி போல, காங்கிரஸ் தேய்ந்து விட்டது' என, பா.ஜ., வர்ணித்தது. இதற்கு பதில் அளித்த, காங்கிரசார், 'மகாபாரத பாண்டவர்கள் போல மீண்டெழுவோம்' என, ஆவேசமாக தெரிவித்தனர்.பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன்தினம் உரை நிகழ்த்தினார். இதையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், நேற்று லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளிலும் நடைபெற்றது.லோக்சபாவில் நடைபெற்ற விவாதம்:ராஜிவ் பிரதாப் ரூடி - பா.ஜ., காங்கிரசின், பல ஆண்டு கால தவறான ...

மத்திய மந்திரிகள் நன்கொடை மற்றும் சொத்து வாங்க கட்டுப்பாடு: பிரதமர் மோடி திட்டத்தில் அதிக கெடுபிடி அமல்

Posted:

புதுடில்லி: மத்திய அமைச்சர்கள், நன்கொடை மற்றும் சொத்துகள் வாங்குவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி கட்டுப்பாடு விதித்துள்ளார். 'அமைச்சர்கள் அனைவரும், இரண்டு மாதங்களுக்குள், தங்களின் சொத்து மற்றும் வர்த்தக தொடர்புகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும், பிரதமர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த, 10 ஆண்டு கால, காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி, படுதோல்வி அடைந்தது. ஊழல்கள்முந்தைய ஆட்சி காலங்களில், ஸ்பெக்ட்ரம், ...

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள்: விரைவில் இந்தியா ரஷ்யா ஒப்பந்தங்கள்

Posted:

மாஸ்கோ: இந்தியா, கடந்த 2010ல் நிறைவேற்றிய, அணு உலை பாதிப்பின் போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு சட்டத்தை, ரஷ்யா ஏற்றுக் கொண்டதால், தமிழகத்தின் கூடங்குளத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பது விரைவில் கைகூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடு எந்த விதத்தில் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து, 2010ல், மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தை ஏற்க ரஷ்யா முன்வராததால், கூடங்குளத்தில் அமைய இருந்த, 3 வது மற்றும் 4 வது அணு உலை திட்டங்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™