ஈகரை தமிழ் களஞ்சியம் |
- செசெ வின் ஆசைதான்
- உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
- 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014
- உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
- கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!
- சித்தமெல்லாம் சிவமயம்! என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே!
- வாழைப்பூ வெங்காய அடை
- துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!
- ஒலியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
- நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு'
- மலிவு விலை மரண வியாபாரிகள்!
- செசெ வின் மனக் குரல்
- கேரள கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு
- கங்கையில் எச்சில் துப்பினால், குப்பையைக் கொட்டினால் 3 நாட்கள் சிறை, ரூ 10,000 அபராதம்
- உன் விழி சுடரில்... என் கவிதைகள்!
- காதலிக்கு ஒரு கடிதம்
- ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்...
- சில உளவியல் ஆலோசனைகள்...!
- சிறகடிக்கும் நினைவலைகள்-3
- பிரியம்
- உன் சமையலறையில் - திரை விமர்சனம்
- இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்!
- சாதித் தீ என்றும் சாதிக்கும் தீ
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- 7நாட்களில் 2வது பா.ஜ., தலைவர் கொலை; உ .பி.,யில் தொடர்கிறது வன்செயல்கள்
- விளையாட்டு செய்தித் துளிகள்
- கிரிக்கெட் செய்திகள்
- கொட்டியது சாக்லெட் உருவானது ஏ டி எம்
- வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்?
- கணினியில் பிரச்சனை
- சிஸ்டம் வாங்க உதவி வேண்டும் நண்பர்களே
- ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH)
- சிங்கம்புணரியில் தேரோட்டம்
- ராஜஸ்தானில் 48.3 டிகிரி செல்சியஸ் வெயில்
- களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம்
| Posted: 10 Jun 2014 03:00 PM PDT செசெ வின் ஆசைதான் அவள் கருங்குழல் இலை போல் அவள் கன்னத்தில் முத்தமிட ஆசைதான் கற்பனைக்கு எட்டா அவள் கன்னங்குழியில் கவி எழுத ஆசைதான் கண்ணோடு கண்ணாக கொஞ்ச நேரம் உறவாட ஆசைதான் இப்படி ஆசைகள் ஆயிரம் அவள் என் அருகில் இருந்தாள் மட்டும் என்னை அறியாமல் என்னுள் பூக்குதே!!! செ செ (செல்வம் .செல்வமூர்த்தி) Selvamoorthy8390.blogspot.com |
| உலகக் கோப்பை கால்பந்து 2014 குழு அட்டவணை Posted: 10 Jun 2014 01:49 PM PDT ![]() |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 Posted: 10 Jun 2014 01:48 PM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ... |
| 13-வது உலகக் கோப்பை ஹாக்கி 2014 Posted: 10 Jun 2014 01:34 PM PDT உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 12-வது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக உள்ளது. 13-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், தகுதி சுற்றுகள் மூலம் வெற்றி பெற்ற 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர், ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இத்தொடரில், 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'B' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ... |
| உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Posted: 10 Jun 2014 12:48 PM PDT அர்ஜெண்டினாவின் மெஸ்சி லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டுக்காரரான இவர், முன்வரிசை பொசிசனில் வல்லவர். 26 வயதான மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக 84 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார். 2006, 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். உலக கோப்பை ஆட்டங்களில் மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்துள்ளார். இம்முறை இவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம். |
| கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்! Posted: 10 Jun 2014 12:36 PM PDT
அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்! |
| சித்தமெல்லாம் சிவமயம்! என் கடன் இறைப் பணி செய்து கிடப்பதே! Posted: 10 Jun 2014 12:31 PM PDT பிறவிகளில் மானிடப் பிறவி மகத்தானது! மானிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற இறைத் தொண்டு செய்தும், இறை நாமத்தை ஜபித்தும் இறைவனின் பாதத்தை அடைய வேண்டும். சீர்படுத்தாமல் விடப்பட்ட சிவாலயங்களைச் சீர்படுத்திப் பராமரித்தும், சிவாலய குடமுழுக்குக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தும் சிவத் தொண்டு செய்து வருகிறார் கந்தசாமி சிவனடியார். ''கடந்த 37 வருடங்களாக இப்படிச் சிவத்தொண்டு செய்து வருவதை என் பிறவிக் கடமையாகவே நினைக்கிறேன்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் இவர். இடுப்பில் காவி வேஷ்டி, தோளில் துண்டு, ... |
| Posted: 10 Jun 2014 12:29 PM PDT தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி ஒரு கப், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு தலா அரை கப், இஞ்சி சிறு துண்டு (சுத்தம் செய்யவும்), பூண்டு நான்கு பல், காய்ந்த மிளகாய் ஆறு, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, சிறிய வாழைப்பூ ஒன்று (நரம்புகளை எடுத்து, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் ஒன்று (பொடியாக நறுக்கவும்), துருவிய சீஸ் ஒரு தேக்கரண்டி, எண்ணெய், உப்பு தேவையான அளவு. செய்முறை: அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும், இரண்டு மணி நேரம் ஊற விடவும். ... |
| துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்! Posted: 10 Jun 2014 12:27 PM PDT இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி விட்டதாகத் தோன்றியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத்தான் விடிகிறது. வாரத்தின் எல்லா நாட்களுக்கென்றும் ஒரு மனநிலை இருக்கிறது. திங்கள்கிழமைகள் கொஞ்சம் ஆசுவாசமாக விடியும். அன்று அவளது வேலைகள் அத்தனை சிரமமில்லை. செவ்வாய்க்கிழமை ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும், புதன் கிழமைகளில் பெரும்பாலும் முந்தைய நாளின் இரவே எதையாவது செய்து வைத்துக் கொண்டு அதை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும். ... |
| ஒலியை விட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை Posted: 10 Jun 2014 12:18 PM PDT போர்க் கப்பலிலிருந்து 290 கி.மீ. தொலைவிலுள்ள எதிரிக் கப்பலை தாக்கி அழிக்கும் திறனுடைய பிரமோஸ் ஏவுகணை திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. 15 ஆல்பா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தாவிலிருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டது. கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியிலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் தனது இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது. இச்சோதனையின் அனைத்துப் படிநிலைகளையும் பிரமோஸ் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தது என ... |
| நாளை முதல் விற்பனைக்கு வருகிறது 'அம்மா உப்பு' Posted: 10 Jun 2014 12:10 PM PDT தமிழக அரசின் மலிவு விலையிலான அம்மா உப்பு நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு உப்பு நிறுவனம் 3 வகைகளில் அம்மா உப்பை உற்பத்தி செய்துவருகிறது. குறைந்த அளவு சோடியம் உள்ள அம்மா உப்பு கிலோ ரூ.10க்கும், இரும்பு, அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.16க்கும், சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த அம்மா உப்பு கிலோ ரூ.21க்கும் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. -- தினகரன் |
| Posted: 10 Jun 2014 12:10 PM PDT கோவையில், 'ஹெல்மெட்' அணிந்து பைக்கில் சென்றவர், அரசு பஸ் ஏறி, தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, ஓர் பாடம் என்கின்றனர், போலீசார். கோவை அருகேயுள்ள துடியலூர், வெள்ளக்கிணர், ஹட்கோ காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி(41). 'நூடுல்ஸ்' உணவு வகைகளை, மொத்தமாக வாங்கி சப்ளை செய்து வந்தார். கடந்த 4ம் தேதி, காலை 9.30 மணியளவில், வியாபார விஷயமாக, அவிநாசி சாலையில் பீளமேடு நோக்கி பைக்கில் சென்றார். சுகுணா திருமண மண்டபம் அருகே சென்ற இவர், உக்கடம் - சோமனூருக்கு ... |
| Posted: 10 Jun 2014 12:06 PM PDT செசெ வின் மனக் குரல் அலைபாயும் மனதிற்கு இடம் கொடுத்தால் நிலைதடுமாறி வலைபின்னலில் சிக்குண்ட மீனாய் போவோம்.......... ஒரு, நிலைபட்ட நிழலாய் வாழ்ந்தால் இனிதே, நிறைவான சிலைபோல உன் பின்பும் ஒளி வட்டம் சூழும்............. செ செ (செல்வம் .செல்வமூர்த்தி) Selvamoorthy8390.blogspot.com |
| கேரள கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு Posted: 10 Jun 2014 12:06 PM PDT கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரில் தீவிரவாதிகள் மற்றும் சர்வாதிகாரி படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2012–2013–ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்த கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒருபக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் ... |
| கங்கையில் எச்சில் துப்பினால், குப்பையைக் கொட்டினால் 3 நாட்கள் சிறை, ரூ 10,000 அபராதம் Posted: 10 Jun 2014 12:04 PM PDT டெல்லி: கங்கையை தூய்மைப் படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அந்நதியில் எச்சில் உமிழ்ந்தாலோ அல்லது குப்பைகளைக் கொட்டினாலோ சிறை தண்டனை மட்டும் அபராதம் விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து, தற்போது பிரதமராக பதவியில் இருக்கும் மோடி, முன்னதாக கங்கை அழைத்ததாலேயே அங்கு வந்ததாக தெரிவித்திருந்தார். மேலும், தான் வெற்றி பெற்ற பிறகு மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் நடவடிக்கை மேர்கொள்ளப்படும் ... |
| உன் விழி சுடரில்... என் கவிதைகள்! Posted: 10 Jun 2014 12:02 PM PDT ![]() |
| Posted: 10 Jun 2014 11:56 AM PDT அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில் இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ... |
| Posted: 10 Jun 2014 11:48 AM PDT என்னதான் மலை பார்த்தல் மழை வியத்தல் மகிழ்தல் தொழில் என இலக்கியமாகவும் கவிதையாகவும் பேச-எழுத பேராயிரம் பேராயிரம் நீ மெல்ல மேலேறி ஸ்பரிஷ உஷ்ணத்துடன் கன்னக் கதுப்புச் சப்புவதும் முகம் எங்கும் எச்சில் தேசம் எழுதுவதும் அப்படியே உன் கட்டைவிரலை மெல்லுவதும் களிப்பும் வழியும் சிரிப்பிலும் ஆ..ஆலாலா...அஹ்...ஹ்ஹ்ஹ்... உயர் பாஷை உச்சரிப்பிலும் உலகின் உன்னதக் கவிதைளும் இலக்கியங்களும் உடைந்து உயிரிழந்து உருவமற்றதாகின்றன |
| Posted: 10 Jun 2014 11:38 AM PDT 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும். 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை ... |
| Posted: 10 Jun 2014 11:36 AM PDT வண்ணக்கோலங்கள் வாசலில் போடும் போது வானவெளி பார்க்கும்மென்று மழை பொழியும் கரு மேகம் இருளாக பந்திலிட பகலவனே ஒளிந்திடுவான். துணையாக நீ விரும்பும் உன் காதலனே கருமேக இருளிலே உனக்காக காத்திருந்தான். அந்தி நேரத்தில் யாருமற்ற வேளையில் பொழுதுறங்கும் நேரத்திலே புன்கை பூத்தாயே. இருளிலே உன் பல்லின் வெண்மையது பளிச்சிடும் ஒளியாக மின்னியது. நிரல் கொண்ட யானைகள் போல. பனைமரத்தின் காதலி ஆலமர விழுதே பின்னிப்பினைந்த மரத்தின் கீழ் ஆயிரம் வார்த்தைகள் பேசினோம் யாருமே அறியவில்லை. அந்த ... |
| Posted: 10 Jun 2014 11:32 AM PDT பிணி மூப்பு மரணம் எதன் பொருட்டோ இன்றோ நாளையோ என்றோ ஒரு நாள் என் இருப்பு சூனியமாகலாம் நாளோ வாரமோ மாதமோ ஆண்டுக்கொரு முறையோ திறந்திருக்கும் இதயத்திலோ கனவுகளின் வரத்துக்காக மூடியிருக்கும் விழிகளிலோ நான் வரவும் கூடும் வராமல் போகவும் கூடும் இப்போதே ஒரு கவிதையை எழுதி விடுகிறேன் வழிகின்ற பிரியத்தின் வண்ணத்தில் வார்த்தைகளைத் தோய்த்தெடுத்து |
| உன் சமையலறையில் - திரை விமர்சனம் Posted: 10 Jun 2014 10:25 AM PDT நடிகர் : பிரகாஷ் ராஜ் நடிகை : சினேகா இயக்குனர் : பிரகாஷ்ராஜ் இசை : இளையராஜா ஓளிப்பதிவு : ப்ரீதாசமையலில் இருக்கும் பேரார் வத்தால் உருவாகும் காதல், வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் பயணித்து எப்படி இணைகிறது என்பது தான் உன் சமையல் அறையில். மலை யாளத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் 2011-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தின் ரீமேக் கான இந்தப் படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கியிருக்கிறார். தொல்பொருள் ஆய்வாளரான காளி தாசன் (பிரகாஷ்ராஜ்) நடுத்தர வய தைக் கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் ... |
| இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்! Posted: 10 Jun 2014 10:20 AM PDT இன்று திருமண நாள் கொண்டாடும் மாணிக்கம் நடேசன் தம்பதியருக்கு வாழ்த்துகள்! இல்லறம் இனிக்க இதே போல் நூறாண்டுகள் வாழ எங்களின் அன்பான வாழ்த்துக்கள். இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் மாமா! |
| சாதித் தீ என்றும் சாதிக்கும் தீ Posted: 10 Jun 2014 09:14 AM PDT சிரித்துப் பேசி எனை மயக்கி உன் நினைவாகி பித்தனாகி அலைகிறேன் கலங்கி ஈருடல் ஓருடலாகி ஒன்றாகி நிலைத்து கவலையெலாம் நீங்கி சோலைப் பூவும் வண்டுமாகி களிக்க நினைத்த எனை அலையவிட்டாய் தனிமையாய்! நம் செயல் கதையாகி ஊரெல்லாம் பேச்சாகி அவலில்லா வாயெல்லாம் சுவைமிகு உணவாகி உண்ட போதெல்லாம் அச்சமில்லை கவலையில்லை அப்பொழுது இப்பொழுது அழுகிறேன் உன் நினைவாகி சாதி இல்லை உயர்வில்லை தாழ்வில்லை புதுமை பேசினோம் கூடி எங்கே அது மறைவாகி சிலையாகி போனதோ படுபாவிகள் விரட்டலில் திருடர்கள் ... |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 10 Jun 2014 04:40 AM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| 7நாட்களில் 2வது பா.ஜ., தலைவர் கொலை; உ .பி.,யில் தொடர்கிறது வன்செயல்கள் Posted: 10 Jun 2014 04:39 AM PDT முஷாப்பர்நகர்: கடந்த ஒரு வாரத்தில் இன்று மேலும் ஒரு பா.ஜ., தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் இந்த கொலை ஏற்கனவே கலவரம் நடந்த முஷாப்பர்நகரில் நடந்திருப்பதால் மேலும் வன்முறை பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து கலவர தடுப்பு பிரிவு போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டாட்ரி பகுதியில் கடந்த 7ம் தேதி விஜய்பண்டிட் சுட்டு கொலை செய்யப்பட்ட 4 நாட்களில் இன்று மற்றொரு பா.ஜ., நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். முஷாப்பர்நகர் (மீராப்பூர் ) பகுதியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி ஓம்வீர். ... |
| Posted: 10 Jun 2014 04:36 AM PDT * 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ... |
| Posted: 10 Jun 2014 04:19 AM PDT முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸை வாட்டி வதைத்த நியூசிலாந்து கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. 2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர். வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் ... |
| கொட்டியது சாக்லெட் உருவானது ஏ டி எம் Posted: 10 Jun 2014 04:09 AM PDT ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் ... |
| வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்? Posted: 10 Jun 2014 03:55 AM PDT ஜூன் 11 (புதன்) வைகாசி விசாகம் வைகாசி விசாகம் கொண்டாடுவது ஏன்? வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். சிம்மாசலம் என்னும் ஊரில் குன்றின் மேல் நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று தான் அப்பெருமானைக் காண இயலும். பிறகு சந்தனப் பூச்சு பூசி வைத்து விடுவார்கள். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே நாளன்றுதான். ... |
| Posted: 10 Jun 2014 03:21 AM PDT என்னுடைய லாப்டாப்பில் autorun.inf வைரஸ் save ஆகிருக்கு அதை எப்படி remove செய்வது |
| சிஸ்டம் வாங்க உதவி வேண்டும் நண்பர்களே Posted: 10 Jun 2014 03:11 AM PDT நண்பர்களுக்கு மாலை வணக்கம். நான் பிரவுசிங் மற்றும் கேம்ஸ் சென்டர் ஆரம்பிக்கப்போகிறேன். அதற்கு 4 சிஸ்டம் வாங்க இருக்கிறேன். 3 - இன்டல் ட்யுயல்கோர் மற்றும் 1 - ஐ3 சிஸ்டம் வாங்க வேண்டும். Original இன்டல் ட்யுயல் கோர் போர்டு மற்றும் 18,5 இன்ச் சாம்சங் மானிட்டர், 2 ஜிபி ராம்,500 ஜிபி Hard Disk, கேபினட், யுபிஎஸ் ஆகியவை என்ன விலையில் கிடைக்கும் என தெரிந்த நண்பர்கள் உதவுங்கள். |
| ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH) Posted: 10 Jun 2014 02:40 AM PDT உடம்பில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதற்கே அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கிருமிகள் மூலம்தான் நோய்கள் உண்டாகிறது என்பதை நிரூபிக்க, ஒரு மனிதர் நோய்க் கிருமிகளை பாலுட்டி, சோறூட்டி(!?) வளர்த்தார் என்றால் நம்ப முடிகிறதா? 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனி நாட்டில் பிறந்த ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH) சுருக்கமாக காக். சிறு வயதிலிருந்தே காக், படிப்பில் படுசுட்டி. அறிவியலிலும் கணிதத்திலும் மிகச் சிறந்த மாணவனாக விளங்கிய காக், மருத்துவராவதை தனது ... |
| Posted: 10 Jun 2014 01:58 AM PDT தேரின் படம் சிங்கம்புணரியில் ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டம் ஒன்பதாம் திருவிழா பிரம்மோச்சவத்தில் முக்கிய பங்கு தேர் திருவிழா,ஒன்பதாம் நாள் கொண்டாடுவது மரபு. ஆலயத்தின் மாற்று வடிவமே தேர்(ரதம்) 224 புவணங்களையும்,புவணங்கள் சார்ந்த தெய்வங்களையும், தனது தோற்றத்தால் உருவாக்கப்படுவது ஆலய தேர். தேரின் அங்கத்தில் உள்ள தெய்வங்கள். அச்சு-மந்திர மலை சக்கரங்கள்-சூரியன்,சந்திரன் பீடம்-ஆகாயம் தட்டுகள்-பதினான்கு உலகங்கள் கொடி-நதிகள் விதானம்-நட்சத்திர ... |
| ராஜஸ்தானில் 48.3 டிகிரி செல்சியஸ் வெயில் Posted: 10 Jun 2014 01:54 AM PDT ராஜஸ்தானில் கடும் வெயில் காரணமாக இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிக்கப்பட்டது. அதிகபட்சமாக 48.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இன்று சுருவில் 48.3 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இந்த கோடைகாலத்தில் பதிவான அதிகபட்ச வெயில் என்று கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்லாமல் ஜைசால்மர், ஜோத்பூர், பார்மர், பிகானெர், ஸ்ரீகங்கா நகர், ஆகிய நகரங்களிலும் 48 டிகிரி வெயில் கொளுத்தியது. ஜெய்ப்பூரில் அதிகபட்சமாக 46.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. மேலும் கடுமையான வெப்ப அலை இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. ... |
| களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க இயற்கை வைத்தியம் Posted: 10 Jun 2014 01:46 AM PDT 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' - வாட்டி எடுத்த கோடை வெயிலிலால் நம் சருமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதை அப்படியே விட்டுவிட்டால், சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். ''கருத்து, களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த வரமாய் இல்லத்தில் இருக்கும் பொருட்களைவைத்து பொலிவுறச் செய்யலாம்'' என்கிறார் காரைக்குடி சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன். தக்காளி தக்காளியில் லைக்கோபின், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன. சூரிய ஒளியிலிருந்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

