Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குன்னூர் அருகே ரயில்வே கேட் மீது ரயில் மோதல்

Posted: 12 Jun 2014 03:29 PM PDT

குன்னூர் ரன்னிமேடு பகுதியில் ரயில்வே உதிரி பாகங்களை ஏற்றி வந்த சரக்கு ரயில், ரயில்வே கேட் மீது மோதி விபத்துள்ளானது.

பைக் மீது லாரி மோதல்:பள்ளி மாணவர் பலி

Posted: 12 Jun 2014 03:29 PM PDT

குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலையில் லாரி பைக் மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி மாணவன் பலியானார்.

சேரம்பாடி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம்

Posted: 12 Jun 2014 03:28 PM PDT

பந்தலூர் சேரம்பாடி பஜாரிலுள்ள ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டதாக அப் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Jun 2014 03:28 PM PDT

பந்தலூர் சேரங்கோடு ஊராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களுக்கு "சீல்

Posted: 12 Jun 2014 03:28 PM PDT

வெள்ளாணைப்பட்டி ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை "சீல்' வைத்தனர் .

குடிநீர் பற்றாக்குறைத் தீர்க்க துரித நடவடிக்கை: அவிநாசி பேரூராட்சிக் கூட்டத்தில் முடிவு

Posted: 12 Jun 2014 03:27 PM PDT

அவிநாசி பேரூராட்சிப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறைத் தீர்க்க துரித நடவடிக்கை எடுப்பது என பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞர் கைது

Posted: 12 Jun 2014 03:27 PM PDT

உறவினர் உள்ளிட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தை பெற்று மோசடி செய்ததாக பல்லடத்தை சேர்ந்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினப் பேரணி

Posted: 12 Jun 2014 03:27 PM PDT

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி (ஜூன் 12) திருப்பூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளர் நல வாரியத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும்

Posted: 12 Jun 2014 03:27 PM PDT

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்து வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் வலியுறுத்தி உள்ளது.

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம்

Posted: 12 Jun 2014 03:26 PM PDT

வைகாசி விசாகத் தேர் திருவிழாவையொட்டி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில்,

ஸ்ரீநவசக்தி நாராயணி பீடம் கால்கோள் விழா

Posted: 12 Jun 2014 03:26 PM PDT

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் ஸ்ரீநவசக்தி நாராயணி பீடம் ஸ்ரீசக்ர திருக்கோவில் கால்கோள் விழா மற்றும் திருப்பணித் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

அங்கன்வாடி மையம் திறப்பு

Posted: 12 Jun 2014 03:26 PM PDT

வெள்ளக்கோவில், டி.ஆர்.நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் அங்கன்வாடி மையத் திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடமாகும் பள்ளிக்கூட சுவர்கள்: காங்கயம் அரசுப் பள்ளியில் புதுமை!-எம்.கோசலைராமன்-

Posted: 12 Jun 2014 03:26 PM PDT

காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கூட சுவர்களில் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் விதமாக படங்கள் வரைந்து விளக்கியுள்ளனர்.

ஊரக வேலை வாய்ப்புத் திட்ட விவகாரம்: ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு சிஐடியு கண்டனம்

Posted: 12 Jun 2014 03:25 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பனியன் தொழிலை சேர்க்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரியிருப்பதற்கு பனியன் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) கண்டனம் தெரிவித்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Jun 2014 03:25 PM PDT

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. குட்டைத் திடலில் இருந்து தொடங்கிய இப் பேரணியை, உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் வெ.

வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2014 03:25 PM PDT

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் உடுமலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டுப்போன தென்னை மரங்களைக் கணக்கெடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Posted: 12 Jun 2014 03:25 PM PDT

வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலையில் சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

Posted: 12 Jun 2014 03:24 PM PDT

உடுமலையில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தைத் தொழிலாளர் முறையில் கிடைக்கும் வருவாய் சமூக அவமானம்

Posted: 12 Jun 2014 03:24 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறையில் கிடைக்கும் வருவாய் சமூக அவமானம் என்பதை உணர்ந்து குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகம் படைக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட சட்ட உதவி மைய நீதிபதி ஜே. தமிழரசி வலியுறுத்தினார்.

ரத்த தான விழிப்புணர்வு முகாம்

Posted: 12 Jun 2014 03:23 PM PDT

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள்

Posted: 12 Jun 2014 03:23 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2014 03:23 PM PDT

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுகர்வோர் விழிப்புணர்வுப் போட்டி: மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 12 Jun 2014 03:23 PM PDT

சங்கர்நகர், சங்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியகுளத்தில் ரேஷன் கடை திறப்பு விழா

Posted: 12 Jun 2014 03:22 PM PDT

பாளையங்கோட்டை ஒன்றியம், அரியகுளம் ஊராட்சியில் ரேஷன்கடை, பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் இன்று கிராமங்களில் அம்மா திட்ட முகாம்

Posted: 12 Jun 2014 03:22 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் 10 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

மின் கம்பத்திலிருந்து விழுந்து பேரூராட்சி ஊழியர் பலி

Posted: 12 Jun 2014 03:22 PM PDT

ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புக்குட்டி மகன் பழனி (32). இவர் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணியை மேற்கொண்டுவந்தாராம்.

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 12 Jun 2014 03:22 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜமாபந்தி எனும் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

வி.ஏ.ஓ. தேர்வு: 52,037 பேர் எழுதுகின்றனர்

Posted: 12 Jun 2014 03:22 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் 52 ஆயிரத்து 37 பேர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வை (வி.ஏ.ஓ.) சனிக்கிழமை (ஜூன் 14) எழுதுகிறார்கள்.

கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து கோயில் சுவரில் மோதல்

Posted: 12 Jun 2014 03:21 PM PDT

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வியாழக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்து தச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கோயில் சுவரில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 12 Jun 2014 03:21 PM PDT

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்தி மூலம் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கூடங்குளம் பகுதி வளர்ச்சிப் பணி: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2014 03:21 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினர் திருநெல்வேலியில் வியாழக்கிழமை

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் மறுதேர்வு நடத்தக் கோரி உண்ணாவிரதம்

Posted: 12 Jun 2014 03:20 PM PDT

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மறுதேர்வு நடத்தக் கோரி மாணவர்-மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 இளம் வயதுத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 12 Jun 2014 03:20 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற இருந்த 16 இளம் வயதுத் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் பொறுப்பேற்பு

Posted: 12 Jun 2014 03:20 PM PDT

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக எல்.டி. துளசிராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

நெல்லை, குமரி விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்கக் கோரி எம்.பி. மனு

Posted: 12 Jun 2014 03:19 PM PDT

நெல்லை, கன்னியாகுமரி விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கார் மீது பனைமரம் விழுந்து சிறுவன் சாவு; ஓட்டுநர் காயம்

Posted: 12 Jun 2014 03:19 PM PDT

திருநெல்வேலி அருகே கார் மீது பனைமரம் விழுந்ததில், திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய சிறுவன் உயிரிழந்தான்.

வீரவநல்லூர் அஞ்சல் நிலையத்தில் கொள்ளை முயற்சி

Posted: 12 Jun 2014 03:19 PM PDT

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் புதன்கிழமை இரவு, அஞ்சல் நிலையத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ. 1,400, செல்போன் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். கருவறையில் உள்ள

பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு

Posted: 12 Jun 2014 03:19 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் மிதமான மழை பெய்து வருவதையடுத்து, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை பாபநாசம் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 857.64 கனஅடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

கட்டடத்துக்காக வெட்டப்படுகிறதா கோயில் மரம்?

Posted: 12 Jun 2014 03:18 PM PDT

மதுரையில் வணிக வளாக கட்டடம் கட்டும் நோக்குடன் நூறாண்டு கடந்து நிற்கும் கோயில் மரம் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

குழந்தைத் தொழில் முறை ஒழிப்பு தினம்: விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 12 Jun 2014 03:18 PM PDT

குழந்தைத் தொழில் முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். குழந்தைத் தொழில் முறை ஒழிப்பு தினத்தையொட்டி தொழிலாளர் நலத்துறை சார்பில் மதுரை

புதிதாக இணைக்கப்பட்ட பகுதி பிறப்புச் சான்று பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஆணையர்

Posted: 12 Jun 2014 03:17 PM PDT

மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பிறப்புச்சான்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன்

கடவுள் முன்பு அனைவரும் சமம்: நீதிபதி

Posted: 12 Jun 2014 03:17 PM PDT

கடவுள் முன்பு அனைவரும் சமமானவர்கள். மனிதர்களுக்கு மரியாதை வழங்குவதில் தான் பிரச்னை எழுகிறது என வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன்

10-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் விநியோகம்

Posted: 12 Jun 2014 03:17 PM PDT

மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் பட்டியல் விநியோகம் வியாழக்கிழமை துவங்கியது.

விஏஓ தேர்வு: 171 மையங்களுக்கு விடியோ ஒளிப்பதிவாளர்கள் நியமனம்

Posted: 12 Jun 2014 03:17 PM PDT

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்களில், 171 மையங்களுக்கு தலா ஒரு விடியோ ஒளிப்பதிவாளர் நியமிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்

ரயில்வேயில் தனியார் நுழையக் கூடாது: என்.கண்ணையா வலியுறுத்தல்

Posted: 12 Jun 2014 03:17 PM PDT

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

கூடலழகர் பெருமாள் கோயில் திருத்தேரோட்டம்

Posted: 12 Jun 2014 03:16 PM PDT

மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: தென்மேற்கு ரயில்வே குழு பாராட்டு

Posted: 12 Jun 2014 03:16 PM PDT

மதுரையில் ரயில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாக தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் குழு தெரிவித்தது.

கொத்தடிமை தொழிலாளர்: நிலுவை வழக்குகளுக்கு விசாரணை முகாம்

Posted: 12 Jun 2014 03:16 PM PDT

கொத்தடிமை தொழிலாளர் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை முகாமை, தேசிய மனித உரிமைகள் ஆணையம்

மழைநீர் தொட்டி: விளக்க முகாம்

Posted: 12 Jun 2014 03:15 PM PDT

வாடிப்பட்டி வேளாண்மைத்துறை உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள், வேளாண்மை கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் முறை

தந்தை கண்டிப்பு: மாணவர் மாயம்

Posted: 12 Jun 2014 03:15 PM PDT

மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் விஜய்(17). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார். கடந்த 10-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம்.

பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 12 Jun 2014 03:14 PM PDT

மதுரையில் வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீஸ் பாதுகாப்பு கோரி இந்து முன்னணி நிர்வாகி மனு: டி.ஜி.பி.-க்கு நோட்டீஸ்

Posted: 12 Jun 2014 03:14 PM PDT

போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி இந்து முன்னணி நிர்வாகி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க டி.ஜி.பி.-க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை: விபத்தைக் குறைக்க ஸ்பீடு ரேடார் கன்

Posted: 12 Jun 2014 03:14 PM PDT

மதுரையில் விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகன வேகத்தை அளவிடும் ஸ்பீடு ரேடார் கன் சாதனத்தை விரைவில் செயல்படுத்த மாநகர் போலீஸ் திட்டமிட்டுள்ளது.

அரசு செலவில் பிரேசிலுக்கு கோவா எம்எல்ஏக்கள் பயணம்

Posted: 12 Jun 2014 03:14 PM PDT

உலக கோப்பை கால்பந்து விளையாட்டு போட்டியைக் காண பிரேசில் நாட்டுக்கு ரூ. 89 லட்சம் செலவில் கோவாவின்

வைகாசி விசாகத் திருவிழா நிறைவு: தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

Posted: 12 Jun 2014 03:13 PM PDT

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா வந்தார்.

மேலூர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Posted: 12 Jun 2014 03:13 PM PDT

தொழிலாளி மாயமான வழக்கை உடனடியாகப் பதிந்து விசாரிக்காத நிலையில், அவர் கொல்லப்பட்டு சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறை மேலூர் ஆய்வாளர் மற்றும் கீழவளவு சிறப்பு சார்பு

நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா

Posted: 12 Jun 2014 03:13 PM PDT

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே உள்ளது ராயபாளையம். இங்குள்ள ஸ்ரீ வசந்த சாய் அறக்கட்டளை (முக்தி நிலையம்) சார்பாக தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், செல்லம்பட்

ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா

Posted: 12 Jun 2014 03:13 PM PDT

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் 10-ஆம் தேதி பால்குடம், அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதிக மதிப்பெண் எடுத்தமுன்னாள் படைவீரர்களின் குழந்தைக்கு ரொக்கப்பரிசு

Posted: 12 Jun 2014 03:13 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் ஜேட்லி நாளை நேரில் ஆய்வு

Posted: 12 Jun 2014 03:12 PM PDT

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமையை  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

முன்னாள் ராணுவவீரர் விபத்தில் சாவு: உறவினர்கள் மறியல்

Posted: 12 Jun 2014 03:12 PM PDT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஐயனார்குளத்தைச் சேர்ந்தவர் முருகன்(40). முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்தார்.

கூலித்தொழிலாளி கொலை: சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Posted: 12 Jun 2014 03:12 PM PDT

தனியாமங்கலத்தில் கொலை செய்து குவாரித் தண்ணீரில் வீசப்பட்டவரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியாமங்கலத்தை சேர்ந்த விறகுவெட்டும் கூலித்தொழிலாளி ஐயப்பன்(48). இவரை கடந்த 4-ஆம்

ஜூலை இறுதி வரை மதுரையில் குடிநீருக்கு சிக்கலில்லை

Posted: 12 Jun 2014 03:12 PM PDT

வைகை அணையில் இப்போது இருக்கும் தண்ணீரைக் கொண்டு ஜூலை இறுதி வரை மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் தேவையைச் சமாளிக்க முடியும் என ஆணையர் சி.கதிரவ

மதுரை சிஇஓ இணை இயக்குநராக பதவி உயர்வு

Posted: 12 Jun 2014 03:12 PM PDT

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.அமுதவல்லி, பதவி உயர்வில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு வழக்குரைஞர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி வழக்கு

Posted: 12 Jun 2014 03:11 PM PDT

அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் பதவி உயர்வு:கோட்டம் வாரியாக வெளியிடத் தடை

Posted: 12 Jun 2014 03:11 PM PDT

தீயணைப்பு வீரர்கள் பதவி உயர்வுப் பட்டியலை கோட்டம் வாரியாக வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

குடிநீர் கோரி வேலூரில் திடீர் சாலை மறியல்

Posted: 12 Jun 2014 03:10 PM PDT

வேலூர் காகிதப்பட்டறையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தி பொது மக்கள் திடீர் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2014 03:10 PM PDT

தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வலியுறுத்தி வேலூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

212 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 12 Jun 2014 03:10 PM PDT

வேலூரில் மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய திடீர் ஆய்வில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் 212 கிலோ வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

போலி பில் அச்சடித்து மணல் குவாரியில் பணம் மோசடி: இரு இளைஞர்கள் கைது

Posted: 12 Jun 2014 03:09 PM PDT

வாலாஜாவை அடுத்த பூண்டி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று இரண்டாம் நிலை மணல் சேமிப்பு கிடங்கினை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜீ என்பவர் நடத்தி வருகிறார்.

ஆம்பூர் அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா: அமைச்சர் கே.சி.வீரமணி இன்று பங்கேற்பு

Posted: 12 Jun 2014 03:09 PM PDT

ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மின்வாரிய அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தந்தை இரவில் தர்னா

Posted: 12 Jun 2014 03:09 PM PDT

வேலூர் கோட்டை வட்டச் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தனது 3 மகன்களுடன் ஒருவர் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு அலுவலகங்கள் நாளை இயங்கும்

Posted: 12 Jun 2014 03:09 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசு அலுவலகங்கள் சனிக்கிழமை இயங்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஓராண்டு சிறை

Posted: 12 Jun 2014 03:08 PM PDT

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தாறுமாறாக பேருந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையை வேலூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் 4 வழங்கியது.

திருப்பாற்கடலில் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Jun 2014 03:08 PM PDT

வாலாஜா ஒன்றியம், திருப்பாற்கடல் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு, மாணவர் சேர்க்கை மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடந்தது.

திமுக பொதுக் கூட்டம்

Posted: 12 Jun 2014 03:08 PM PDT

நெமிலியில் பேரூர் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது.

9 மையங்களில் நாளை கிராம நிர்வாக அலுவலர் எழுத்துத் தேர்வு

Posted: 12 Jun 2014 03:08 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் சனிக்கிழமை நடைபெறும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் 45 ஆயிரத்து 791 பேர் பங்கேற்கின்றனர்.

குயப்பேட்டையில் இன்று குரு பெயர்ச்சி சிறப்பு யாகம்

Posted: 12 Jun 2014 03:06 PM PDT

 வேலூர் குயப்பேட்டை ஸ்ரீராம பஜனை மந்திரம் வேத சபையில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.

60 மின் மோட்டார்கள் பறிமுதல்

Posted: 12 Jun 2014 03:06 PM PDT

குடியாத்தம் நகரில் வீட்டுக் குடிநீர்க் குழாய்களில் பொருத்தி குடிநீர் உறிஞ்சிய 60 மின் மோட்டார்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Jun 2014 03:06 PM PDT

வருவாய்த் துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், மக்களவைத் தேர்தல் பணிக்கான 2 மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்

தீவிரவாதிகள் மூவரிடமும் இன்று விடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரணை

Posted: 12 Jun 2014 03:05 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை வெள்ளிக்கிழமை 3 நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த வேண்டிய சூழலில்

வருவாய்த் துறையில் 7 பேருக்கு இடமாறுதல்

Posted: 12 Jun 2014 03:05 PM PDT

வேலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில், 3 மண்டல துணை வட்டாட்சியர்கள் பதவி உயர்வில் வட்டாட்சியராகவும், 4 துணை வட்டாட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரிசி கிடங்கில் பணம், பொருள்கள் திருட்டு

Posted: 12 Jun 2014 03:05 PM PDT

வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் ஜனதாபுரம் ஜெய்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரிசி கிடங்கு மற்றும் அலுவலகம் நடத்தி வருகிறார்.

பேருந்து மீது கல்வீச்சு

Posted: 12 Jun 2014 03:05 PM PDT

சோளிங்கரில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு தொழிலாளர்களை வியாழக்கிழமை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனப் பேருந்து மாறன்கண்டிகை அருகே வரும்போது திடீரென அங்கு

வாலாஜா வட்ட ஜமாபந்தி நிறைவு

Posted: 12 Jun 2014 03:05 PM PDT

வாலாஜா வட்டத்தில் கடந்த 4ம் தேதி ஜமாபந்தி துவங்கி 12ம் தேதி (வியாழக்கிழமை) நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரும், ஜமாபந்தி அதிகாரியுமான எம். நீலவேணி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரவிசந்திரன் வரவேற்றார்.

மழலைக் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம்

Posted: 12 Jun 2014 03:04 PM PDT

வாலாஜாவை அடுத்துள்ள சுமைதாங்கியில் உள்ள நாக் குழுமப் பள்ளிகளில் கே.ஜி. மற்றும் எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் என்று சொல்லக்கூடிய வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது.

தமிழக முதல்வருக்கு கூட்டுறவு கட்டடச் சங்கம் பாராட்டு

Posted: 12 Jun 2014 03:04 PM PDT

மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதையொட்டி தமிழக முதல்வருக்கு பாராட்டுத் தெரிவித்து ஆம்பூர் கூட்டுறவு கட்டட சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 12 Jun 2014 03:04 PM PDT

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அரசு கலைக் கல்லூரிக்கு இலவச கணினி

Posted: 12 Jun 2014 03:04 PM PDT

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வர மங்கலத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கணினி மற்றும் பிரிண்டரை அரக்கோணம் செல்வம் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் செல்வம் இலவசமாக வழங்க

இருதரப்பினரிடையே மோதல்: 7 பேர் காயம்

Posted: 12 Jun 2014 03:03 PM PDT

அரியலூர் அருகே சொத்துத் தகராறு காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

ஜயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 12 Jun 2014 03:03 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜூன் 20-ல் பீ.டி. பருத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

Posted: 12 Jun 2014 03:02 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் பீ.டி. பருத்தி சாகுபடி தொழில்நுட்பம் குறித்த இலவச பயிற்சி ஜூன் 20-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் திட்ட ஒருங்கிணைப்பாளர் ப. விஜயலட்சுமி.

வெளிமாநில கட்டட தொழிலாளி கொலை: நண்பர் கைது

Posted: 12 Jun 2014 03:02 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வெளிமாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியை அவரது நண்பர் அடித்துக் கொலை செய்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

ஐஓசி டேங்கர் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்தம்

Posted: 12 Jun 2014 03:02 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி துவாக்குடி அருகேயுள்ள இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வியாழக்கிழமை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 12 Jun 2014 03:02 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுகையில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 12 Jun 2014 03:01 PM PDT

புதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். புதுக்கோட்டை அருகே துண்டுப்பட்டியைச் சேர்ந்த குமரன் மகன் மகேந்திரன் (35). இவர்

ஆர். உமாநாத் உருவப்படம் திறப்பு

Posted: 12 Jun 2014 03:01 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு முன்னாள் உறுப்பினரும், புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்பியுமான ஆர். உமாநாத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோசனை

Posted: 12 Jun 2014 03:00 PM PDT

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திலகர் திடல் பாரி மழலையர் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுகையில் இன்றுவழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

Posted: 12 Jun 2014 03:00 PM PDT

புதுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் ஏ. முருகேசன் தலைமையில், செயலர் வி. ஆறுமுகம் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முதல்வருக்கு கோரிக்கை

Posted: 12 Jun 2014 03:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டுமென புதுக்கோட்டை வழக்குரைஞர் சங்கமும், அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™