மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் சரண் அடையாத குற்றவாளிகளின் சொத்துக்கள் ஜப்தி
- வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
- டெல்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூரில் அவசரமாக தரை இறங்கியது
- கொழிஞ்சாம்பாறை அருகே பைக் மீது லாரி மோதி கோவை பெண் பலி
- ஆந்திரா ரெயிலில் திடீர் தீ: 16 பயணிகள் காயம்
- தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: கொச்சி விமான நிலைய பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு
- கேரளாவில் மேற்கு வங்க சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை
- திருப்பதி லட்டு பிரசாதத்தில் கல்: பக்தர்கள் புகார்
- கேரளாவில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது
- திருமணத்தை மறைத்த புகாரில் வழக்கு பதிவு செய்ய முடியாது: கோர்ட்டு தீர்ப்பு
- வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு
- ராகுல்காந்தி பற்றிய திக்விஜய்சிங் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது
- இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்
- வெடிகுண்டு பீதி: 164 பேருடன் டெல்லி விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம்
- கொல்கத்தா விமானத்தில் மர்மப் பை: பயணிகள் பீதி
- தங்களின் நிபுணத்துவத்தை பிற பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கும் ஐஐடி
- மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன்: திரிணாமுல் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை
- மகளின் காதலனை குருடாக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்
- பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
- சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதி
| சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கில் சரண் அடையாத குற்றவாளிகளின் சொத்துக்கள் ஜப்தி Posted: 30 Jun 2014 10:48 PM PDT கேரள மாநிலம் சூரியநெல்லியைச் சேர்ந்த சிறுமி கடத்தி கற்பழிக்கப்பட்டதோடு அரசியல் பிரமுகர்களுக்கும் விருந்தாக்கப்பட்டதாக புகார் கிளம்பியது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு கிளம்பியதை |
| வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு Posted: 30 Jun 2014 10:35 PM PDT தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஆகிய இரு காலங்களில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அது முடிந்ததும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். தென் மேற்கு பருவ மழையின் போது தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழையின் போது தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் |
| டெல்லி விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெங்களூரில் அவசரமாக தரை இறங்கியது Posted: 30 Jun 2014 10:10 PM PDT கொச்சியில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு 9 மணிக்கு 164 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. நள்ளிரவில் அந்த விமானம் டெல்லியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கொச்சி விமான நிலைய அதிகாரிக்கு மிரட்டல் போன் வந்தது. இதையடுத்து இரவு 10 மணி அளவில் விமானம் பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கப்பட்டது. |
| கொழிஞ்சாம்பாறை அருகே பைக் மீது லாரி மோதி கோவை பெண் பலி Posted: 30 Jun 2014 09:56 PM PDT கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமாரி(வயது 59). இவரது சொந்த ஊர் கேரள மாநிலத்தில் உள்ள ஆலத்தூர். இன்று வசந்தகுமாரி தாயாரின் நினைவு நாள் ஆகும். இதில் கலந்து கொள்வதற்காக வசந்த குமாரியும், அவரது அண்ணன் மகன் சிவராமனும் மோட்டார் சைக்கிளில் ஆலத்தூருக்கு புறப்பட்டனர். |
| ஆந்திரா ரெயிலில் திடீர் தீ: 16 பயணிகள் காயம் Posted: 30 Jun 2014 09:52 PM PDT ஆந்திர மாநிலம் குண்டக்கல்–ரெய்ச்சூர் இடையே பயணிகள் ரெயில் ஓடுகிறது. இந்த ரெயில் நேற்று ரெய்ச்சூரில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு குண்டக்கல்லில் வந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. கர்னூல் மாவட்டம் நஞ்சர்பா ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயிலின் 2 பெட்டியில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றியது. |
| தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: கொச்சி விமான நிலைய பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு Posted: 30 Jun 2014 09:51 PM PDT கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். டெலிபோன் மூலம் விடுக்கப்பட்ட இந்த மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பார்வையாளர்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டது |
| கேரளாவில் மேற்கு வங்க சிறுமியை கற்பழித்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை Posted: 30 Jun 2014 09:32 PM PDT மேற்கு வங்க மாநிலம் முஷிதாபாத் மாவட்டம் கபில்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியும், அவரது உறவினர்களும் கேரள மாநிலம் பெரும்பாடி பகுதியில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 2011–ம் ஆண்டு டிசம்பர் 24–ந் தேதி இரவு பெரும்பாடி |
| திருப்பதி லட்டு பிரசாதத்தில் கல்: பக்தர்கள் புகார் Posted: 30 Jun 2014 09:28 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் புனிதமாக கருதி வாங்குவது லட்டு பிரசாதம். ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுவது உண்டு. ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் 4 பேர் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டில் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களது டிக்கெட்டுக்கு 4 லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதில் ஒன்றை எடுத்து சாப்பிட பிரித்த போது லட்டுக்குள் பெரிய கல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புனிதமாக கருதி சாப்பிட இருந்த பிரசாதத்தில் கல் கிடந்ததால் அவர்கள் மனவேதனை அடைந்தனர். இது குறித்து அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஏற்கனவே லட்டு பிரசாதத்தில் இரும்பு நட்டு, போல்டு கிடப்பதாக புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் பிரசாதத்தில் கல் கிடந்ததாக வந்த புகார் தேவஸ்தான அதிகாரிகளுக்கு புதிய தலைவலியை |
| கேரளாவில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது Posted: 30 Jun 2014 09:18 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் கிழக்கு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போனில் பேசிய மர்ம மனிதன் திருச்சூர் நகரில் உள்ள சக்தன் பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டான். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பிஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் |
| திருமணத்தை மறைத்த புகாரில் வழக்கு பதிவு செய்ய முடியாது: கோர்ட்டு தீர்ப்பு Posted: 30 Jun 2014 08:47 PM PDT பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மனைவி பெயர்? என்ற காலத்தில் எதுவும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். ஆனால் இந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது தான் முதல்முறையாக தனது மனைவி பெயர் யசோதாபென் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவரான நிஷாந்த் வர்மா கடந்த ஏப்ரல் மாதம் ரனிப் போலீஸ் நிலையத்தில் திருமணத்தை மறைத்த |
| வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு Posted: 30 Jun 2014 08:21 PM PDT கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை நாடு முழுவதும், ஏறுமுகமாக இருந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் சில்லறை விலையில் ஒரு கிலோ வெங்காயம் 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 18 ரூபாய்க்கே கிடைக்கிறது. டெல்லியில் மட்டுமின்றி பெரும்பான்மையான மாநிலங்களில் இதேபோல் மொத்த விற்பனை |
| ராகுல்காந்தி பற்றிய திக்விஜய்சிங் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது Posted: 30 Jun 2014 08:04 PM PDT காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பதில் பிரபலம் ஆனவர். கடந்த சனிக்கிழமை அவர் ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'ராகுல் காந்தி, ஆட்சி நடத்தும் மனப்பான்மை இல்லாதவர். அநீதியை எதிர்த்து போராட விரும்புபவராகவே உள்ளார். அவர் பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் |
| இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல் Posted: 30 Jun 2014 04:17 PM PDT பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது. |
| வெடிகுண்டு பீதி: 164 பேருடன் டெல்லி விமானம் அவசரமாக பெங்களூரில் தரையிறக்கம் Posted: 30 Jun 2014 02:06 PM PDT கொச்சியில் இருந்து நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பெங்களூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 156 பயனிகள் மற்றும் விமானிகள் உள்பட 8 ஊழியர்களுடன் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 8.40 மனிக்கு |
| கொல்கத்தா விமானத்தில் மர்மப் பை: பயணிகள் பீதி Posted: 30 Jun 2014 12:58 PM PDT கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு விமானம் பெங்களூர் நகரத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. |
| தங்களின் நிபுணத்துவத்தை பிற பொறியியல் கல்லூரிகளுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கும் ஐஐடி Posted: 30 Jun 2014 10:15 AM PDT இந்தியாவின் கல்வித்துறையில் முன்னணியில் செயல்பட்டுவரும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) இயக்குனர்கள் அனைவரும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணியுடன் நேற்று கோவா மாநிலத்தின் டோனா பாலாவில் நடைபெற்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.அதில் இந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் |
| மார்க்சிஸ்ட் பெண்களை கற்பழிக்க சொல்வேன்: திரிணாமுல் எம்.பி.யின் பேச்சால் சர்ச்சை Posted: 30 Jun 2014 09:12 AM PDT மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரபல வங்காள மொழி நடிகருமான தபாஸ் பால் (வயது 55) சமீபத்தில் கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசிய அவர், தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும்படி நமது இளைஞர்களிடம் கூறுவேன் என்று எச்சரித்திருக்கிறார். |
| மகளின் காதலனை குருடாக்கி கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர் Posted: 30 Jun 2014 07:36 AM PDT காதலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தாலும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிக கொடூரமாக நடந்துகொள்ளும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாக, பீகாரில் மகளின் காதலனை துடிக்க துடிக்க கொலை செய்த போலீஸ்காரர் குடும்பத்தை கூறலாம். |
| பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல் Posted: 30 Jun 2014 07:27 AM PDT பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. |
| சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதி Posted: 30 Jun 2014 05:29 AM PDT மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினை காரணமாக அவர் நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |