Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மான்கரத்தே படத்தை திட்டிய பூலோகம் டீம்!

Posted: 30 Jun 2014 10:57 PM PDT

Bhooloham

Bhoolohamசிவகார்த்திகேயன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் மான்கரத்தே. இப்படத்தில் இவர் சாமனியனாக இருந்து எப்படி ஒரு பாக்ஸிங் சாம்பியனை வெல்கிறார் என்பதே கதை, ஆனால் இதை அவர்கள் காட்டியவிதம் இவ்விளையாட்டை உயிராக நினைப்பவர்களை மிகவும் கஷ்டப்படுத்தியது. இந்த வீர விளையாட்டை கேவலமாக படமாக்கியிருந்தார்கள் என அனைத்து ஊடகங்களும் சொல்ல, இன்னும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது. தற்போது பூலோகம் படத்திலும் இந்த விளையாட்டை மையமாக கொண்டுதான் கதை உருவாக்கப்பட்டுள்ளது.இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'பாக்ஸிங்கை மிகவும் மோசமாக இதற்கு முன்பு ஒரு படத்தில் காட்டினார்களே, அது பற்றி உங்கள் கருத்து' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இயக்குனர் ' நான் ஒருபோதும் அந்த தவறை செய்யமாட்டேன், ஒரு இயக்குனரை படத்தில் தவறாக காட்டினால் எனக்கு கோபம் வருவது போல்,இதுவும் நியாமான கோபம் தான், இதை ஒருநாளும் நான் வரவேற்க மாட்டேன்' என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதா?

Posted: 30 Jun 2014 10:52 PM PDT

Linga

Lingaகே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சுதந்திரத்துக்கு முன் உள்ள காட்சிகளை படம்பிடித்து முடித்த கே.எஸ். ரவிக்குமார் தற்போது ஹைதராபாத்தில் இந்த நூற்றாண்டில் உள்ள காட்சிகளை படம் பிடித்து வருகிறாராம். இந்த ஷெடியூலில் ரஜினி, சந்தானம், அனுஷ்கா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படக்குழுவினர் கூறுகையில், இதுவரை படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்துள்ளது. பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் 90% படம் முடிந்துவிடும். மேலும் படத்தில் வி.எப்.எக்ஸ் வேலைகள் நிறைய செய்ய வேண்டியது இருப்பதால், படத்தை முழுதாக முடிக்க அதிக நேரம் தேவைப்படும் என்று கூறினர். இதனால் லிங்கா படம் டிசம்பர் மாதம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆனாரா அஜித்?

Posted: 30 Jun 2014 10:49 PM PDT

Ajith

Ajithஅஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் தல கல்லூரி மாணவனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், அதை படக்குழு ரகசியம் காத்துவருகிறது என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் வந்த படத்தின் அஜித் லுக்கில், தல கையில் ஒரு காப்பு அணிந்திருந்தார்.அந்த காப்பில் ஸ்பேனரை வளைத்து வைத்தது போல் வித்தியாசமாக தெரிகிறது. இதை பார்த்தால் ஒருவேளை அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜினியராக வருவார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. 

This posting includes an audio/video/photo media file: Download Now

கைது செய்ய வந்த போலிசாரை மிரட்டிய பெண் தாதா! சினிமா பாணியில் பரபரப்பான வீடியோ

Posted: 30 Jun 2014 10:39 PM PDT

punjab-police-pakhandi-baba

punjab-police-pakhandi-baba

This posting includes an audio/video/photo media file: Download Now

ஷாக் கொடுக்க நினைச்சது ஒரு குத்தமா!…இப்படி ஆயிடுச்சே!

Posted: 30 Jun 2014 10:31 PM PDT

Pool-Prank-Goes-Horribly-Wrong

Pool-Prank-Goes-Horribly-Wrong

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேறியது!

Posted: 30 Jun 2014 10:28 PM PDT

Germani

Germaniஉலகக்கோப்பை கால்பந்து: அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விம்பிள்டன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி!

Posted: 30 Jun 2014 10:23 PM PDT

caroline-whosniyaki

caroline-whosniyakiவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், முன்னணி வீராங்கனைகள் அனா இவானோவிச் (செர்பியா), கரோலின் வோஸ்னியாக்கி இருவரும் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினர். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் ஸ்டிரைகோவாவுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 2-6, 5-7 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் சேபைன் லிசிக்கியுடன் (19வது ரேங்க்) மோதிய அனா இவானோவிச் (11வது ரேங்க்) 4-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார். நான்காவது சுற்றில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டை எதிர்கொண்ட அலைஸ் கார்னெட் (பிரான்ஸ்) 6-7 (5-7), 5-7 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார். வாவ்ரின்கா முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை எதிர்கொண்ட சென்னை ஓபன் சாம்பியன் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா (சுவிஸ்) 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி தனது 3வது சுற்றில் 3-6, 6-3, 4-6, 7-6 (7-5), 6-4 என ஐந்து செட்களில் கடுமையாகப் போராடி இத்தாலியின் போலெல்லியை வீழ்த்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கம் தடுத்தாலும் இலங்கை மக்கள் தம்முடன் தொடர்பு கொள்வார்கள்! விசாரணையாளர் ஜஹாங்கிர் அறிவிப்பு

Posted: 30 Jun 2014 09:49 PM PDT

asma-jahangir

asma-jahangirஇலங்கை மீதான சர்வதேச விசாரணை திட்டமிட்டபடி இடம்பெறும் என்று அஸ்மா ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார். விசாரணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளும் மக்களை இலங்கை அரசாங்கம் தடுக்க முயன்றாலும் தமது விசாரணைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்று அந்த விசாரணைக் குழுவின் வல்லுநர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கிர் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் சாட்சியம் அளிக்கும் மக்களை எதேச்சாதிகாரமாக தடுக்க முயல்வது இலங்கை அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்றும் அஸ்மா ஜஹாங்கிர் குறித்து ஊடகத்துக்கான பிரத்தியேக செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லா தரப்பினரும் புரிந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது விசாரணைக் குழு பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் விசாரிக்கும். இதன் போது இலங்கை அரசாங்கம் தடுத்தாலும் மக்கள் தம்முடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டு கொள்வார்கள் என்றும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் அஸ்மா ஜஹாங்கிர் கூறியுள்ளார். அரசாங்கங்கள் ஒத்துழைப்பு வழங்காதிருந்த பல சர்வதேச விசாரணைகளை இதற்கு முன்னர் தாம் நடத்தியிருப்பதாகவும் விசாரணைக்குழு வல்லுநர் ஜஹாங்கிர் தெரிவித்தார். தமக்கு இரகசியமாக தகவல்களை அளிப்போரின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும். இதேவேளை தமது விசாரணைகள் வரும் ஆகஸ்ட் முதல்-இரண்டு வாரங்களில் தொடங்கும் வாய்ப்புள்ளதாகவும் அஸ்மா ஜஹாங்கிர் கூறினார். தமது பரிந்துரைகள் அடங்கிய விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், ஐநா மனித உரிமைகள் பேரவையே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் என்றும் வழக்கறிஞர் ஜஹாங்கிர் சர்வதேச செய்திச் சேவையிடம் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையை அஸ்மா ஜஹாங்கிர் கடந்த ஆண்டு வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தணிக்கை மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது: ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு!

Posted: 30 Jun 2014 09:43 PM PDT

cpj-logo

cpj-logoஇலங்கையில் ஊடக கட்டுப்பாடு நீக்கப்பட்டால் மாத்திரமே நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும் என்று சி.பி.ஜே என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மையில் இனக்கலவரம் ஏற்பட்டது. இதன்போது பல்வேறு சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை அரசாங்கம் செய்திகள் வெளியாவதை தடுப்பதில் ஈடுபட்டிருந்தது. இதன்காரணமாக பல்வேறு உண்மை தகவல்கள் தடுக்கப்பட்டதுடன் இனங்களுக்கு இடையில் வதந்திகளும் பரப்பப்பட்டன. இந்தநிலையில் உண்மை தகவல்கள் மக்களை சென்றடைவதற்கு ஊடக கட்டுப்பாட்டை தவிர்ப்பது அவசியமாகும் என்று சிபிஜே குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இறுதிப்போரின் போது ஊடகத்தணிக்கை இருந்ததன் காரணமாகவே இரண்டு தரப்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டன. ஊடகங்களுக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டிருக்குமானால் இந்த மீறல்கள் இடம்பெற்றிருக்காது. எனவே ஊடகக்கட்டுப்பாடு மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. கட்டுப்பாட்டை தவிர்ப்பதன் மூலமே அதனை மேற்கொள்ளலாம் என்று ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமைச்சர்களின் செயற்பாடு குறித்து ஜனாதிபதி ஆலோசனை!

Posted: 30 Jun 2014 09:40 PM PDT

Rajabaksa

Rajabaksaவெளிநாட்டு விஜயங்களின் போது அமைச்சர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். வெளிநாட்டு விஜயங்களின் போது சில நியதிகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டு விஜயங்களின் போது எவ்வாறு அரசாங்கப் பணத்தை பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச நிதி முகாமைத்துவம் மற்றும் சரியான பயன்பாடு என்ற தொனிப் பொருளில் இந்த நியதிகள் உருவாக்கப்பட்டுளளன. இந்த நியதிகள் தொடர்பிலான ஆவணமொன்று ஏற்கனவே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த புதிய நியதிகள் அடங்கிய ஆவணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுனர்களின் விஜயங்கள் தொடர்பில் எவ்வித கட்டுப்பாடுகளும் பிறப்பிக்கப்படாமை ஆளும் கட்சியினருக்கு இடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Posted: 30 Jun 2014 09:33 PM PDT

passengers

passengersசிக்காக்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்சிற்கு புறப்பட்ட யுனைடெட் விமானம் ஒன்று Wichita என்ற இடத்திற்கு திசை திருப்ப பட்டது. விமான பயணத்தின் போது அவசர சேவை ஸ்லைட் விமானத்தின் உள்ளே பொருமியதால் போயிங் 737 விமானம் Mid-Continent விமானநிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 100-பயணிகள் இருந்துள்ளனர். விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள அவசரகால ஸ்லைட் எப்படியோ உட்பக்கமாக பொருமியதாக அறியப்படுகின்றது. அச்சமயம் அருகில் எவரும் நிற்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எவரும் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவரவில்லை. பயணிகளை அவரவர்கள் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு கூடிய விரைவில் அனுப்பிவைக்க முயல்வதாக யுனைரெட் எயர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் ஞாயிற்று கிழமை மாலை நடந்துள்ளது. இடி போன்ற ஒரு சத்தத்தையும், ஒரு இரைப்பு சத்தத்தையும் கேட்டதாக சில பயணிகள் கூறியுள்ளனர். இதேசமயம் வேறு பயணிகள் தங்கள் ஸ்மாட் போன்களை உபயோகித்து இந்த திகிலூட்டும் தருணத்தை பதிவு செய்தும் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுஷ்காவுக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் அஜித், ரஜினி படக்குழு!

Posted: 30 Jun 2014 03:33 AM PDT

anushka

anushkaநம் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படங்கள் தற்போது தலைதூக்கி வருகிறது. அதற்கு முன் பெரிய பட்ஜெட் படங்கள் என்றால் ஹீரோவை நம்பிதான் தயாரிப்பார்கள். அதற்கு உதாரணம் ரஜினி நடித்த எந்திரன்.ஆனால் காலம் மாறி இப்போது ஹீரோயினை நம்பி 100 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது. தெலுங்கில் உருவாகி கொண்டிருக்கும் பாகுபலி படத்தை பற்றி தான் சொல்கிறேன். கிராபிக்ஸ், செட், ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் கூட்டம் என்று பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள் அங்கே. இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றி செய்தியை கேட்ட பிறகு தான் கல்யாணம் என்று ஒத்தக்காலில் நிற்கிறாராம் நெட்ட நாயகி அனுஷ்கா. அப்ப 2015 வரைக்கு மேள சப்தம் கிடையாதா? இது போதாது என்று தற்போது இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி தமன்னாவையும் உள்ளே கொண்டு வந்துள்ளார். மேலும் அஜித், ரஜினி படங்களிலும் தற்போது நடித்து வருவதால், இதனால் அப்படத்திற்கு ஏதும் பாதிப்பு வருமோ என்றும் சிலர் புலம்புகின்றனர். எது எப்படியோ சீக்கிரம் படத்தை முடிங்க, பாவம் அனுஷ்கா.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஆர்யா!

Posted: 30 Jun 2014 03:25 AM PDT

Arya

Aryaகோலிவுட்டில் ஈகோ இல்லாத கதாநாயகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஆர்யா தான். பணத்திற்காக மட்டும் நடிக்காமல், நட்பிற்கு மரியாதை கொடுத்து கெஸ்ட் ரோல் என்றால் கூட நடித்து தருவார்.

தற்போது முன்னணி ஆங்கில பத்திரிக்கை ஒன்று கடந்த வருடத்தின் விரும்பத்தக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் 2012ல் 10வது இடத்தில் இருந்த ஆர்யா, தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார்.மேலும் இவரை தொடர்ந்து சூர்யா, அஜித், தனுஷ், விஜய், சிம்பு என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கமல் கோபம்! மன்னிப்பு கேட்ட சந்தானம்

Posted: 30 Jun 2014 03:18 AM PDT

kamal-santhanam

kamal-santhanamவாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டுக்கு வராத அதன் ஹீரோ சந்தானம் மீது கமல் கோபம் கொண்டதால், அவருக்கு போன் செய்து மன்னிப்புக் கேட்டுள்ளார் சந்தானம். சமீபத்தில் சந்தானம் நடித்த வாலிப ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கமல் வந்திருந்தார். சந்தானமே நேரில் வந்து அழைத்ததால் அவர் வந்திருந்தார். ஆனால் விழாவின் நாயகனான சந்தானமோ நிகழ்ச்சிக்கே வரவில்லை. லிங்கா படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருந்ததாகக் காரணம் கூறினாராம். இது கமலுக்கு பெரும் கோபத்தைத் தந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சந்தானம் குறித்து ஒரு வார்த்தை பேசாத கமல், விழா முடிந்ததும் தன் கோபத்தை நேரடியாகவே காட்டிவிட்டுச் சென்றாராம், தயாரிப்பாளரிடம். 'சந்தானம் நேரில் வந்து கேட்டுக் கொண்டதால் நான் வந்தேன். அவரோ தன் ஷூட்டிங்தான் முக்கியம் என்று நின்றுவிட்டாரே'என்றாராம். விஷயத்தைக் கேள்விப்பட்ட சந்தானம், உடனே கமலுக்கு ஹைதராபாதிலிருந்து போன் செய்து பேசியுள்ளார். தன் நிலைமையைச் சொல்லி, மன்னிப்புக் கேட்ட பிறகே, கமல் கொஞ்சம் அமைதியானாராம்!

This posting includes an audio/video/photo media file: Download Now

இங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான பிரச்சினை: விந்தணு இல்லாமல் கஷ்டப்படுகிறார்களாம்!!

Posted: 30 Jun 2014 03:11 AM PDT

sperm-in-boldsky

sperm-in-boldskyஇங்கிலாந்தில் ஒரு வித்தியாசமான பிரச்சினை தலை விரித்தாடி வருகிறதாம். அதாவது அங்கு ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்து விட்டதாம். விந்தனு இல்லாமல் பெரும் சிக்கலில் அந்த நாட்டு ஆண்கள் தவிக்கிறார்களாம். பெரும்பாலான ஆண்களிடம் சக்தி குறைந்த விந்தனுவே இருப்பதாகவும் பிரிட்டிஷ் பெர்டிலிட்டி சொசைட்டி எச்சரித்துள்ளது. நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதாகவும் அது கூறுகிறது. இதன் காரணமாக விந்தனுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் இங்கிலாந்து மருத்துவமனைகள். இதுகுறித்து பிரிட்டிஷ் பெர்டிலிட்டி சொசைட்டியின் தலைவர் டாக்டர் ஆலன் பேஸி கூறுகையில், சில மருத்துவமனைகள் தரம் குறைந்த விந்தனுக்களையும் கூட வாங்கும் நிலைக்குப் போய்க் கொண்டிருப்பது கவலை தருகிறது. ஆனால் இதுபோன்ற தரம் குறைந்த விந்தனுக்களைக் கொண்டு கருத்தரிக்க முயலும் பெண்கள் பெரும் செலவுகளையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். நல்ல, சக்தி வாய்ந்த விந்தனுக்களைத் தானம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது இங்கிலாந்தில் தானமாக பெறப்படும் விந்தனுவில், நான்கில் ஒன்று, வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டதாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா, டென்மார்க்கிலிருந்துதான் விந்தனுக்கள் அதிக அளவில் தானமாக பெறப்படுகிறதாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஊருக்குள்ள இப்படித்தான் நடக்குதோ?… பெண்களே இது உண்மை தானா?

Posted: 30 Jun 2014 03:04 AM PDT

Girl-Facebook

Girl-Facebook

This posting includes an audio/video/photo media file: Download Now

பில்லியர்ட்ஸில் இவங்க காட்டுற வித்தைய பாருங்க!

Posted: 30 Jun 2014 02:52 AM PDT

Mavi-Kocaeli

Mavi-Kocaeli

This posting includes an audio/video/photo media file: Download Now

இது என்னனு தெரிந்தால் வாயில் எச்சில் கொட்டும்…. ஆனால் சாக்லேட் இல்லை!

Posted: 30 Jun 2014 02:45 AM PDT

The-Making-of-Meat-Rushmore

The-Making-of-Meat-Rushmore

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்களின் அசத்தலான ஹைஹீல்ஸ் நடனம்!

Posted: 30 Jun 2014 02:38 AM PDT

YANIS-MARSHALL-CHOREOGRAPHY

YANIS-MARSHALL-CHOREOGRAPHY

This posting includes an audio/video/photo media file: Download Now

10 மணி நேரத்திற்குள் இறக்கும் தருவாயில் காதலன்: நெஞ்சை உருக்கும் திருமணம்!

Posted: 30 Jun 2014 02:33 AM PDT

marriage

marriage

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™