Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


எரிசக்தி சேமிப்பு கொண்ட பசுமை கட்டிடங்களுக்கு மட்டுமே ஒப்புதல்: மத்திய அரசு

Posted: 09 Jun 2014 12:09 AM PDT

விரைந்து அதிகரிக்கும் கட்டுமானத் தேவைகளையும், நகரமயமாதலையும், குறைந்துவரும் ஆற்றல் வளங்களையும் சமாளிக்கும் விதமாக வரும் 2017ஆம் ஆண்டிற்குள் எரிசக்தி சேமிப்புதிறன் கொண்ட பசுமைக் கட்டிடங்களுக்கு மட்டுமே மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்ற திட்டத்தை வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 08 Jun 2014 11:53 PM PDT

டெல்லியில் இருக்கும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணணை இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:– தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு மீட்பதற்கான நடவடிக்கைளை உடனே மேற்கொள்ளும்படி

எம்பிஏ மாணவர் போலி என்கவுண்ட்டர்: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

Posted: 08 Jun 2014 11:34 PM PDT

உத்தராகண்ட் மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றம் சாட்டினர். ஆனால் போலியான என்கவுண்ட்டர் மூலம் போலீசார் தங்கள் மகனை கொன்றுவிட்டதாக அவரது தந்தை புகார் அளித்தார்.

16-வது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை

Posted: 08 Jun 2014 11:18 PM PDT

பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றும் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கும், சபாநாயகருக்கும் முகர்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: கருத்து கணிப்பு

Posted: 08 Jun 2014 11:01 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி சந்தித்தது. தமிழ்நாடு, மேற்குவங்காளம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா சிவசேனா கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் தற்போது மராட்டிய மாநிலத்தில் நடந்து வருகிறது. 15 ஆண்டுகளாக பலமாக இருந்து வரும் இந்த கூட்டணி 6 எம்.பி. தொகுதிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. பா.ஜனதா–சிவசேனா கூட்டணி காங்கிரஸ்–தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை முறியடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இதிலும் பா.ஜனதா சிவசேனா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பயிர்கடன் தள்ளுபடிக்கு கமிட்டி அமைப்பதா?: சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா கண்டனம்

Posted: 08 Jun 2014 10:55 PM PDT

புதிய ஆந்திரா முதல்– மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திர பாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். அவருடன் 2 துணை முதல்–மந்திரிகள் உள்பட 18 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதும் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான கோப்பில் சந்திரபாபு நாயுடு முதல் கையெழுத்திட்டார். மேலும் மதுக்கடைகளை மூடுவதற்கான கோப்பிலும், என்.டி.ஆர். குடிநீர் திட்ட கோப்பிலும் கையெழுத்திட்டார்.

திருவனந்தபுரத்தில் கன மழை: கார் மீது மரம் விழுந்து பெண் பலி

Posted: 08 Jun 2014 09:49 PM PDT

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. ஆரம்பம் முதலே மழை தீவிரமாக பெய்து வருவதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை நீடிக்கிறது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு போன்ற இடங்களில் அதிகளவு மழை பதிவாகி

டெல்லியில் ஜனாதிபதியுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சந்திப்பு

Posted: 08 Jun 2014 09:05 PM PDT

16-வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக, பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜான், கடந்த 6-ந் தேதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் 2-வது பெண் சபாநாயகர் என்ற சிறப்பை பெற்றுள்ள அவர், நேற்று முன்தினம் துணை ஜனாதிபதியும், மேல்-சபை தலைவருமான ஹமீது அன்சாரியை சந்தித்து பேசினார்.

போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு சந்திரசேகரராவ் கடும் எதிர்ப்பு

Posted: 08 Jun 2014 08:18 PM PDT

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார். அப்போது தெலுங்கானா பகுதியில் அமைய இருக்கும் போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'போலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு பிரதமரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒடிசா, சத்தீஸ்கார், தெலுங்கானா

சீனாவுடன் இந்தியா போட்டியிட ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு

Posted: 08 Jun 2014 05:20 PM PDT

டெல்லியில் 'இந்தியா மீண்டும் பாதைக்கு திரும்புகிறது: சீர்திருத்தத்துக்கான செயல்திட்டம்' என்ற சீர்திருத்தங்கள் குறித்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவுடன் இந்தியா போட்டியிட வேண்டுமானால் ஆற்றல், அளவு, வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படவேண்டும். இந்த நாட்டின்

காஷ்மீரில் லஷ்கர் அமைப்பின் தலைமை தளபதி சுட்டுக்கொலை

Posted: 08 Jun 2014 05:03 PM PDT

தீவிரவாத இயக்கங்களில் முக்கியமானதாக விளங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமை தளபதியான பிலால் அகமது என்கின்ற பிலால் லல்ஹரி, போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். அங்குள்ள புல்வாரா மாவட்டத்தில் கடந்த வருடம் இதயவியல்

டெல்லியில் வரலாறு காணாத வெயில்: 62 வருடங்களில் மிக அதிக வெப்பம்

Posted: 08 Jun 2014 04:57 PM PDT

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் அதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. நேற்று அங்குள்ள பாலம் விமான நிலையத்தில் 47.8 செல்சியஸ் அளவுக்கு வெயிலின் தாக்கம் பதிவாகி இருந்தது. இது கடந்த 62 வருடங்களில் பதிவான மிக அதிக வெப்பமாகும்.

தமிழக மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அரசுடன் இந்திய தூதர் பேச்சு

Posted: 08 Jun 2014 03:12 PM PDT

ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களில் ஒரு பிரிவினர், தலைமன்னார் பகுதியிலும், மற்றொரு பிரிவினர் நெடுந்தீவு பகுதியிலும் பிடிபட்டதாக இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் கோசல வாரனகுலசூரியா தெரிவித்தார்.

தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்துக்கு வருமான வரித்துறை நோட்டீசு

Posted: 08 Jun 2014 02:03 PM PDT

தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத், ஐதராபாத்தில் இருந்த தனது சொத்து ஒன்றை 2011-ம் ஆண்டு விற்றார். அதன்மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு டெல்லியில் ஒரு வீடு வாங்கினார். இதில் பெருந்தொகை புழங்கி உள்ளதை மத்திய வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, வி.எஸ்.சம்பத்துக்கு, அது நோட்டீசு அனுப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவராக குலாம் நபி ஆசாத் தேர்வு

Posted: 08 Jun 2014 01:45 PM PDT

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் மாநிலங்களவை தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சரான ஆனந்த் ஷர்மா மாநிலங்களவை துணை தலைவராக தேர்ந்தெடுப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஜனார்தன் திவேதி கூறியுள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

Posted: 08 Jun 2014 11:31 AM PDT

இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது. அப்பகுதிக்கு சுற்றுலா வந்த அம்மாணவர்கள் இந்த ஆற்றில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் பாயும்

இந்திய சீன வர்த்தக உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் ஒப்புதல்

Posted: 08 Jun 2014 10:49 AM PDT

இந்தியாவும் சீனாவும் இணைந்து தங்களது வர்த்தக உறவில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி, வருடத்திற்கு 65 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. அதில் புதிய தொழில்பூங்காக்கள் அமைப்பதும் உள்ளடங்கியுள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் லி ஆகியோருக்கிடையே இன்று

சீமாந்திரா முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்

Posted: 08 Jun 2014 10:27 AM PDT

ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று இரவு பதவி ஏற்றார். பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சீமாந்திரா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து விஜயவாடா அருகே ஆச்சார்யா

காசநோய் சிகிச்சைக்கு பணம் கேட்ட மகனை எரித்துக் கொன்ற தாய் கைது

Posted: 08 Jun 2014 09:55 AM PDT

குஜராத்தில் உள்ள சூரத் மாவட்டத்தை சேர்ந்த கிம் கிராமத்தின் சிவாஜி நகரில் ராஜூ என்ற 37 வயதுடைய ஒருவர் தன் பெற்றோர்களுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக காச நோயினால் பாதிக்கப்பட்ட அவரால் வேலைக்கு செல்லமுடியவில்லை. வீட்டிலேயே இருந்த ராஜு தனது மருத்துவ சிகிச்சைக்காக தன்னுடைய தாயிடம் பணம் கேட்டு வந்தார்.

சுஷ்மாவை சந்தித்தார் சீன வெளியுறவு மந்திரி: திபெத்தியர்கள் போராட்டம்

Posted: 08 Jun 2014 03:04 AM PDT

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, இன்று புது டெல்லியில் வெளியுறவு துறை சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து புதிய பிரதமர் மோடியுடன் நட்பு வைக்க உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மோடியை தங்கள் நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™