Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமெரிக்காவில் தயாராகியுள்ள பறக்கும் மோட்டார் சைக்கிள்.

Posted: 08 Jun 2014 11:57 PM PDT

அமெரிக்காவில் தயாராகியுள்ள பறக்கும் மோட்டார் சைக்கிள். கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் விமானம் போன்று பறக்கும் மோட்டார் சைக்கிளை தயாரித்துள்ளது. இதற்கு ஏரோ எக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் விமானங்களில் இருப்பது போன்று ஏறி இறங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓடுதளம் தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்தே தரையில் இருந்து எழும்பி பறக்க முடியும். இது தரையில் இருந்து 10 அடி உயரத்தில் 72 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் படைத்தது. அதில், விமானி தவிர 2 பேர் பயணம் செய்யலாம். 140 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும். ஒரு தடவை எரி பொருள் நிரப்பினால் 75 நிமிடங்கள் பறக்கும். அதன் விலை 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை 3 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பல மில்லியன் நிறங்களில் எழுதும் புதிய பேனா

Posted: 08 Jun 2014 11:53 PM PDT

பல மில்லியன் நிறங்களில் எழுதும் புதிய பேனா

[caption id="attachment_66439" align="alignleft" width="200"]பல மில்லியன் நிறங்களில் எழுதும் புதிய பேனா பல மில்லியன் நிறங்களில் எழுதும் புதிய பேனா[/caption] எந்த நிறத்திலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த நிற பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர்.இந்த பேனா மூலம் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் எழுதலாம். அச்சகங்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் படி இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. பேனாவில் நீலம், மஜந்தா, மஞ்சள், கறுப்பு வண்ணங்களில் தனித்தனியே மைகள் இருக்கும். அதில் சிறிய ரக எலக்ட்ரோனிக் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். எந்த நிறத்தில் எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை தேர்வு செய்வதற்கு பேனாவில் எலக்ற்ரோனிக் வசதிகள் உள்ளன. அதை தேர்வு செய்ததும் சென்சார் கருவி அதற்கு தகுந்தபடி மையை கலந்து பேனாவின் முனைக்கு அனுப்பும். இதன் மூலம் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் நாம் எழுதிக் கொள்ளலாம். இந்த பேனாவை வைத்து லட்சக்கணக்கான நிறங்களில் கூட எழுத முடியும் என்று பேனாவை உருவாக்கி இருப்பவர்கள் கூறியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிபா 2014 உலகக் கிண்ண தகவல்களை திரட்டித் தருவதற்கு தயாராக உள்ளது கூகுள்

Posted: 08 Jun 2014 11:52 PM PDT

பிபா 2014 உலகக் கிண்ண தகவல்களை திரட்டித் தருவதற்கு தயாராக உள்ளது கூகுள்

6பல்வேறு தகவல்களையும் இலகுவாக தேடித்தரும் கூகுள் தேடுதளமானது மிகப்பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிபா 2014 உலகக் கிண்ண தகவல்களை திரட்டித் தருவதற்கு தயாராக உள்ளது. எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பமாகும் காற்பந்தாட்ட உலகக் கிண்ணப்போட்டி தொடர்பான அனைத்து தகவல்களையும் மொபைல் சாதனங்கள் உட்பட அனைத்து கணனிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக வோர்ல்ட் கப் எனுப் பதத்தினை மட்டும் கொண்டு கூகுள தேடுதளத்தில் தேடினால் போதும் போட்டி நடைபெறும் நாள், நேரம், மோதும் அணிகள் உட்பட்ட அட்டவணைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சோனி அறிமுகம் செய்துள்ள சிறிய அளவிலான திரை

Posted: 08 Jun 2014 11:49 PM PDT

சோனி அறிமுகம் செய்துள்ள சிறிய அளவிலான திரை

2சமகாலத்தில் கையில் அணியக்கூடிய ஸ்மார்ட் கடிகாரம், இலத்திரனியல் கைப்பட்டி போன்ற சாதனங்களுக்கு அதிக அளவில் மவுசு காணப்படுகின்றது. இதனால் சோனி நிறுவனம் 640 x 480Pixel உடையதும் 0.23 அங்குல அளவுகொண்டதுமான OLED திரையினை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. 70 டிகிரி அதி துல்லியமான பார்வைக்கோணத்தை உடைய இத்துணைச் சாதனத்தினைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் நவீன தொழில்பங்களை உள்ளடக்கிய இலத்திரனியல் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™