Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தருமபுரி அருகே லாரி- வேன் மோதல்: 3 பேர் சாவு

Posted: 09 Jun 2014 02:25 PM PDT

தருமபுரி அருகே திங்கள்கிழமை அதிகாலை லாரி மீது வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்): அதிகரித்தது விண்ணப்ப விநியோகம்

Posted: 09 Jun 2014 02:24 PM PDT

ஐந்தாண்டு பி.ஏ.,பி.எல். (ஹானர்ஸ்) படிப்பு கலந்தாய்வுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

87 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபர் ராஜபட்ச உத்தரவு

Posted: 09 Jun 2014 02:23 PM PDT

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 87 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் ராஜபட்ச நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் 13-இல் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

Posted: 09 Jun 2014 02:21 PM PDT

நாடு முழுவதும் 365 நாள்களும் நீதிமன்றங்கள் இயங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகம், புதுச்சேரியில் வரும் 13-ஆம் தேதி நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா, சசிகலா 30-இல் ஆஜராக உத்தரவு

Posted: 09 Jun 2014 02:18 PM PDT

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு விசாரணைக்கு வரும் 30-ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதிமுக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்: மதுரை நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

Posted: 09 Jun 2014 02:18 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தாக்கப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 2 பேர் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு 3,000 பேர் மறுகூட்டலுக்கு 600 பேர் விண்ணப்பம்

Posted: 09 Jun 2014 02:17 PM PDT

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி இந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

அதிமுக செயற்குழுக் கூட்டம்: வரும் 21-இல் கூடுகிறது

Posted: 09 Jun 2014 02:16 PM PDT

அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 21 ஆம் தேதி கூடுகிறது. கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் வெற்றி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கான வட்டிச் சலுகை தராததால் சிரமத்தில் ஜவுளித் தொழில் உரிமையாளர்கள்

Posted: 09 Jun 2014 02:08 PM PDT

தொழில் நுட்ப மேம்பாட்டு நிதியைப் பெற்ற ஜவுளித் தொழில் உரிமையாளர்கள், அதற்கான வட்டிச் சலுகையாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு கடந்த 7 ஆண்டுகளாகத் திருப்பித் தராததால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கருணாநிதி, ஞானதேசிகன் இரங்கல்

Posted: 09 Jun 2014 02:08 PM PDT

கர்தினால் லூர்துசாமி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்தினால் லூர்துசாமி உடல் அடக்கம்

Posted: 09 Jun 2014 02:07 PM PDT

ரோமில் காலமான கர்தினால் சைமன் லூர்துசாமியின் உடல், புதுவையில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

காவிரி நதிநீர் மேலாண்மைக் குழு அமைக்க மதிமுக வலியுறுத்தல்

Posted: 09 Jun 2014 02:04 PM PDT

காவிரி நதிநீர் மேலாண்மைக் குழு அமைக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நரேந்திர மோடி அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரை: விஜயகாந்த், ராமதாஸ், வைகோ பாராட்டு

Posted: 09 Jun 2014 02:04 PM PDT

நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

சாலைகளில் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

Posted: 09 Jun 2014 02:01 PM PDT

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த மழை: 40 மரங்கள் சாலையில் விழுந்தன

Posted: 09 Jun 2014 02:00 PM PDT

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையில் 42 மரங்கள் சாலையில் விழுந்தன.

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை சராசரியைவிட குறைவாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted: 09 Jun 2014 01:58 PM PDT

இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, இந்தியாவில் சராசரியைக் காட்டிலும் குறைவாகவே பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: பிரதமர் மோடியுடன் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழு இன்று சந்திப்பு

Posted: 09 Jun 2014 01:53 PM PDT

காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து முறையிட உள்ளது.

தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்

Posted: 09 Jun 2014 01:51 PM PDT

அடுத்த கல்வியாண்டில் (2015-16) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் கட்டாய மொழிப்பாடமாக இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

புத்தூரில் வெடிபொருள்கள் பதுக்கிய வழக்கு விசாரணை: தீவிரவாதிகளை அழைத்துச் சென்ற ஆந்திர போலீஸார்

Posted: 09 Jun 2014 01:51 PM PDT

ஆந்திர மாநிலம், புத்தூரில் ஆபத்தான வெடிபொருள்களை பதுக்கி வைத்த வழக்கு விசாரணைக்காக வேலூர் மத்தியச் சிறையில் உள்ள தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை அந்த மாநில போலீஸார் திங்கள்கிழமை அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்று கைதான இலங்கை அகதிகள் 4 பேர் விடுதலை

Posted: 09 Jun 2014 01:50 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்று கைதாகி திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 4 இளைஞர்கள் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ரூ.4.04 கோடி ரொக்கம், 73 சவரன் பறிமுதல் வழக்கு: கரகாட்டக் கலைஞர் மோகனா நீதிமன்றத்தில் சரண்

Posted: 09 Jun 2014 01:49 PM PDT

வேலூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4.04 கோடி ரொக்கம், 73 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கரகாட்டக் கலைஞர் மோகனா (54) மற்றும் அவரது சகோதரி நிர்மலா (63) ஆகியோர் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-இல் திங்கள்கிழமை சரணடைந்தனர்.

நாடாளுமன்ற செயல்பாடு: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

Posted: 09 Jun 2014 01:46 PM PDT

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செயல்படுவது குறித்து அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

44 சுங்கச்சாவடிகள் மூடப்படும்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

Posted: 09 Jun 2014 01:45 PM PDT

மகாராஷ்டிரத்தில் சாலை வரி வசூலிக்கும் 44 சுங்கச்சாவடிகள் மூடப்படும் அந்த மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்தது. மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே சீரான சரக்கு, சேவை வரி: மாநில அரசுகள் ஒத்துழைக்க அருண் ஜேட்லி வேண்டுகோள்

Posted: 09 Jun 2014 01:45 PM PDT

நாடு முழுவதிலும் ஒரே சீரான சரக்கு, சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்து: பெண் ஊழியர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 09 Jun 2014 01:45 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள இரவு நேரக் காவலர் பணிக்கு ஆள்களை தேர்ந்தெடுத்ததாக, ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி நியமன ஆணை வழங்கிய மோசடி வழக்கில் தொடர்புடைய இளநிலை உதவியாளர் செந்தமிழ்ச்செல்வி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.

இந்து அமைப்பு நிர்வாகிகளை தாக்கிய வழக்கு: ஹைதர் அலியை காவலில் வைக்க உத்தரவு

Posted: 09 Jun 2014 01:45 PM PDT

கோவையில் இந்து அமைப்பு நிர்வாகிகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வழக்கில், தீவிரவாதி ஹைதர் அலியை வரும் 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆத்தூர்: மஞ்சள் கிடங்கில் தீ விபத்து

Posted: 09 Jun 2014 01:45 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை மஞ்சள் கிடங்கில் நிகழ்ந்த பெரும் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 20 ஆயிரம் மூட்டை மஞ்சள் எரிந்து நாசமானது.

"லிபியா பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது'

Posted: 09 Jun 2014 12:48 PM PDT

லிபியாவில் இடைக்கால நாடாளுமன்றத்தின் மூலம் அகமது மைடிக் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடர்: மலேசியாவை வென்றது இந்தியா

Posted: 09 Jun 2014 12:47 PM PDT

மலேசியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி டெஸ்ட் தொடரில் இந்தியா 5-0 என்ற கணக்கில் மலேசிய மகளிர் அணியை வீழ்த்தியது.

பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 09 Jun 2014 12:44 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மோசடிக்கு முற்றுப்புள்ளி

Posted: 09 Jun 2014 12:41 PM PDT

பத்திரிகைகளில் ஒரு செய்தி அடிக்கடி வெளியாவதைக் கண்டிருக்கலாம். சீட்டுப் பிடிப்பது என்ற பெயரில் சிற்றூர்களிலிருந்து பெருநகரம் வரை பலர் பொதுமக்களிடமிருந்து மாதாமாதம் பணம் பெற்று மாதம் ஒருமுறை பணம் கட்டியவர்களை அழைத்து ஏலம் விட்டுக் கூடிய அளவில் கழிவு கேட்டு ஏலமெடுப்பவருக்குப் பணம் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இதன் பெயர் ஏலச்சீட்டு.

ஆகாச கங்கையும் அற்புத உரமும்!

Posted: 09 Jun 2014 12:39 PM PDT

பூமியின் பெரும்பங்கு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. ஆனால் கடல் நீரைக் குடிக்க முடியாது.

எதிர்பார்ப்பில் விவசாயிகள்...

Posted: 09 Jun 2014 12:39 PM PDT

அடுத்த மாதம் தான் தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலையறிக்கை தொடர்பாக, நிதியமைச்சர் அருண் ஜேட்லி விவசாயம் தொடர்பான அமைப்புகளையும், எம்.எஸ். சுவாமிநாதன் தொடங்கி பல வல்லுனர்களையும் அழைத்துப் பேசியிருக்கிறார்.

2ஜி: தயாளு அம்மாளின் மனு மீதான விசாரணை ஜூலை 2-க்கு ஒத்திவைப்பு

Posted: 09 Jun 2014 12:37 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்

Posted: 09 Jun 2014 12:36 PM PDT

தமிழக காவல்துறையின் பாதுகாப்பு பிரிவின் நுண்ணறிவு பிரிவு டி.ஐ.ஜி.யாக சி. ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு:

பி.இ. கலந்தாய்வு: நாளை ரேண்டம் எண் வெளியீடு

Posted: 09 Jun 2014 12:36 PM PDT

பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் புதன்கிழமை (ஜூன் 11) வெளியிடப்பட உள்ளது.

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Posted: 09 Jun 2014 12:33 PM PDT

தமிழக மீனவர் பிரச்னைக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர்- ஒட்டக்கோவில் இருவழி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Posted: 09 Jun 2014 12:33 PM PDT

அரியலூர் - ஒட்டக்கோவில் இடையே 8 கி.மீ. தொலைவிலான புதிய இருவழி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவன் கோயிலில் சிலைகள் திருட்டு

Posted: 09 Jun 2014 12:33 PM PDT

கொரடாச்சேரி அருகே சிவன் கோயிலில் இருந்த 5 கற்சிலைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இருவழி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Posted: 09 Jun 2014 12:33 PM PDT

அரியலூர் - ஒட்டக்கோவில் இடையே 8 கி.மீ. தொலைவிலான புதிய இருவழி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பத்தாம் வகுப்பு நேரடி தனித்தேர்வர்கள் ஜூன் 30-க்குள் அறிவியல் செய்முறைப் பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும்

Posted: 09 Jun 2014 12:32 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வை நேரடி தனித்தேர்வர்களாக எழுத உள்ளவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Jun 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: சார்ஆட்சியர் விசாரணை

Posted: 09 Jun 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இளம்பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். குன்னம் அருகேயுள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சத்யா (19).

கட்டடத் தொழிலாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 09 Jun 2014 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்க்குப்பை ஊராட்சிக்குள்பட்ட புதூர் கிராமத்தில் இந்தோ அறக்கட்டளை சார்பில், கழிப்பறை கட்டும் கட்டடத் தொழிலாளர்களுக்

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

Posted: 09 Jun 2014 12:31 PM PDT

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் திறப்பு

Posted: 09 Jun 2014 12:31 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. மின்னணுத் திரை மற்றும் மழை நீர் சேகரிப்பு தகவல் மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் டிப்ளமோ: 5,500 விண்ணப்பங்கள் விற்பனை

Posted: 09 Jun 2014 12:31 PM PDT

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்காக இந்த ஆண்டு 5,500 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

Posted: 09 Jun 2014 12:31 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் வட்டத்தில் ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

சிலட்டூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா

Posted: 09 Jun 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சிலட்டூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுகை காந்திநகர் பள்ளியில் விலையில்லா நோட்டு வழங்கல்

Posted: 09 Jun 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா நோட்டு மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டன.

அறந்தாங்கி - பேராவூரணி சாலை திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தல்

Posted: 09 Jun 2014 12:30 PM PDT

ரூ. 4.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசியல் காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அறந்தாங்கி -  பேராவூரணி சாலை திட்டப் பணிகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடியதில் தகராறு: 30 குடிசைகளுக்கு தீவைப்பு

Posted: 09 Jun 2014 12:30 PM PDT

புதுக்கோட்டை அருகே புறம்போக்கு இடத்தை சொந்தம் கொண்டாடியதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட குடிசைகளுக்கு தீவைத்துச்

மக்கள் குறைகேட்பு முகாமில் ரூ. 12.93 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

Posted: 09 Jun 2014 12:30 PM PDT

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 12.93 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட

பி.ஆர்க். கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 14 கடைசி

Posted: 09 Jun 2014 12:29 PM PDT

ஐந்தாண்டு பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 3 ஆயிரம் பேர் சமர்ப்பித்துள்ளனர்.

"பள்ளி வாகனங்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும்'

Posted: 09 Jun 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்  குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்று இயக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 09 Jun 2014 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jun 2014 12:29 PM PDT

முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான அரசு உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்களும், பயிற்சி மருத்துவர்களும்

பொது இடங்களில் புகைபிடித்தோருக்கு அபராதம் விதிப்பு:ரூ. 22,800 வசூல்

Posted: 09 Jun 2014 12:28 PM PDT

தஞ்சாவூரில் பொது இடங்களில் புகைபிடித்த மற்றும் மற்றவர்களை கவரும் வகையில் விற்பனை செய்தவர்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ. 22,800 அபராதம் வசூல் செய்தனர்.

மழைநீர் சேகரிப்பு மாதிரி கட்டமைப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 09 Jun 2014 12:28 PM PDT

தஞ்சாவூரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இரு சரக்கு ஆட்டோக்களின் பின்புறம் மழைநீர் சேகரிப்பு மாதிரி கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டு, அவை மாநகர் முழுவதும் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை தொடங்கியது.

குரூப் 4 தேர்வு: 16 முதல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

Posted: 09 Jun 2014 12:28 PM PDT

குரூப் 4 தொகுதிக்கு உட்பட்ட 181 காலியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

மருத்துவக் காப்பீட்டு அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Posted: 09 Jun 2014 12:28 PM PDT

திருவையாறு, நடுக்காவிரி, கண்டியூர் ஆகிய சரகங்களில் மருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்குப் புகைப்படம் எடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முதல்

புகையிலை விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம்

Posted: 09 Jun 2014 12:28 PM PDT

தமிழகம் முழுவதும் சைக்கிளில் புகையிலை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வரும் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் வந்தார்.

வரதராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு

Posted: 09 Jun 2014 12:27 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டையில் பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு சுமார் 43 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை நடைபெற்றது.

மழை நீரை சேகரித்தால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்: ஆட்சியர்

Posted: 09 Jun 2014 12:27 PM PDT

மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் அதிகளவில் ஏற்படுத்தப்படுவதன் மூலம், குடிநீர்த் தட்டுப்பாடு தீரும் என்றார் ஆட்சியர் து. முனுசாமி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சிகளின் கருத்து அவசியமில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

Posted: 09 Jun 2014 12:27 PM PDT

அனைத்து தரப்பினரும் ஒரே கருத்தைக் கொண்டிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கமலாலயக் குளக்கரையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Jun 2014 12:27 PM PDT

திருவாரூர் தியாகராஜர் கோயில் அருகே இடிந்து விழுந்த கமலாலயக் குளக்கரையில் ஆட்சியர் எம். மதிவாணன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

கோயில் வாசலில் முதியவர் சடலம்

Posted: 09 Jun 2014 12:26 PM PDT

திருவாரூர் அருகே அம்மையப்பனில் கோயில் வாசலில் முதியவர் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது. 

காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்

Posted: 09 Jun 2014 12:26 PM PDT

காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

மதுபோதையில் மனைவியை கொன்ற கணவர்

Posted: 09 Jun 2014 12:26 PM PDT

ஆலங்குடி அருகே திங்கள்கிழமை மது போதையில் மனைவியை தாக்கிக் கொன்ற கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள

கந்தர்வகோட்டை அருகே ஊராட்சித் தலைவர் மர்மச் சாவு

Posted: 09 Jun 2014 12:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளன

ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்து தொடர்புடைய பெண் ஊழியர்புதுகை நீதிமன்றத்தில் சரண்

Posted: 09 Jun 2014 12:25 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு அலுவலகங்களில் காலியாக உள்ள இரவு நேரக் காவலர் பணிக்கு ஆள்களை தேர்ந்தெடுத்ததாக, ஆட்சியர் பெயரில் போலி கையெழுத்திட்டு பணி நியமன ஆணை வழங்கிய மோசடி வழக்கில் தொடர்புடைய இளநிலை உதவியாளர்

நாகை மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Jun 2014 12:25 PM PDT

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மீனிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள் தயாரிக்க பயிற்சி

Posted: 09 Jun 2014 12:25 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் 12-ம் தேதி மீனிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வேதாரண்யத்தில் கூட்டுறவு வங்கி இடம் மாற்றம்

Posted: 09 Jun 2014 12:24 PM PDT

வேதாரண்யம் மேலவீதியில் செயல்பட்டு வந்த கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, நாகை சாலையில் அமைந்துள்ள புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு திங்கள்கிழமை சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

பரோலில் வந்துதலைமறைவான கைதி கைது

Posted: 09 Jun 2014 12:24 PM PDT

தரங்கம்பாடி அருகே உள்ள பெரிய மாணிக்கப்பங்கு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கார் மோதி அங்காடி ஊழியர் சாவு

Posted: 09 Jun 2014 12:24 PM PDT

ஆக்கூர் புங்கன்தோப்பைச் சேர்ந்தவர் குருநாதன் (50). காழியப்பநல்லூரில் அங்காடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் காழியப்பநலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே காரைக்காலிலிருந்து வந்த கார் அவர் மீது மோதியது. பல

சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நலநிதி அளிப்பு

Posted: 09 Jun 2014 12:24 PM PDT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி காலமான 55 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ. 8.25 லட்சம் நல நிதி வழங்கப்பட்டது.

கராத்தே போட்டியில் சிறப்பிடம்:காவலர் குழந்தைகளுக்கு பாராட்டு

Posted: 09 Jun 2014 12:23 PM PDT

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவில் காவலர் குழந்தைகளுக்கான காரத்தே போட்டியில் திருவாரூர் காவலர்களின் குழந்தைகள் சிறப்பிடம் பெற்றனர். 

திருவாரூர், நாகையில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 09 Jun 2014 12:23 PM PDT

திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் 40 பயனாளிகளுக்கு ரூ. 1.60 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முல்லைப்பெரியாறு விவகாரம்: மத்திய அரசு தலையிட கேரள அரசு வலியுறுத்தல்

Posted: 09 Jun 2014 12:22 PM PDT

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கேரள மாநில மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் 4 தீவிரவாதிகள் கைது

Posted: 09 Jun 2014 12:21 PM PDT

அருணாசலப் பிரதேசத்தில் என்எஸ்சிஎன்(ஐ) என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரகண்ட் போலி என்கவுன்ட்டர் வழக்கு: 17 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை: தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 09 Jun 2014 12:21 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரண்பீர் சிங் என்ற எம்பிஏ பட்டதாரி போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிபிஐ நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

மேற்கு வங்கம்: குழந்தைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 09 Jun 2014 12:18 PM PDT

மேற்கு வங்க மாநிலம், மால்டா மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு மேலும் இரு குழந்தைகள் பலியானதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

முண்டே மறைவுக்கு மாநிலங்களவை இரங்கல்

Posted: 09 Jun 2014 12:18 PM PDT

அண்மையில் கார் விபத்தில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சண்டீகரில் தீ விபத்து: 2 தீயணைப்பு வீரர்கள் சாவு

Posted: 09 Jun 2014 12:18 PM PDT

சண்டீகரில் 4 மாடிக் கட்டடத்தில் நிகழ்ந்த தீ விபத்தின்போது, தீயை அணைக்க முயன்ற 2 தீயணைப்பு வீரர்கள் கீழே தவறி விழுந்து உயிரிழந்தனர்.

ஒடிஸாவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்கள் புதுப்பிப்பு

Posted: 09 Jun 2014 12:17 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோடி அரசிடம் உறுதியான திட்டமில்லை: குடியரசு தலைவர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து

Posted: 09 Jun 2014 12:16 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிடம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவையான உறுதியான திட்டங்கள் இல்லை என்றும், அனைத்தும் வெறும் கனவுகள்தான் என்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது: பிரணாப்

Posted: 09 Jun 2014 12:15 PM PDT

பெண்களுக்கு சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் விமான நிலையம், பஸ்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 50 பேர் சாவு

Posted: 09 Jun 2014 12:10 PM PDT

பாகிஸ்தானின் விமான நிலையம் மற்றும் பஸ்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்குப் பூட்டு போட்ட பெற்றோர்கள்

Posted: 09 Jun 2014 12:10 PM PDT

செங்கம் அருகே பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்குப் பூட்டுபோட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

திருவண்ணாமலையில் முதிர்வடைந்த பாலிசிகளுக்கான தொகையை வழங்கக் கோரி, தனியார் நிதி நிறுவனக் கிளையை வாடிக்கையாளர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

ஆரணி பகுதி அரசுப் பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இன்று கருணாநிதி பிறந்த நாள் கவிதைத் திருவிழா

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில், கருணாநிதி பிறந்த நாளையொட்டி கவிதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

வந்தவாசி பகுதியில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் க.ஷண்முகானந்தம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு புகார்மனு அனுப்பியுள்ளார். மனு விவரம்:

ஸ்விட்சர்லாந்து: உயரத்தில் இருந்து குதிப்பதில் உலக சாதனை

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை படைத்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தாற்காலிகப் பணியாளர்கள் 20 பேர் நியமனம்

Posted: 09 Jun 2014 12:09 PM PDT

கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய தாற்காலிகப் பணியாளர்களாக 20 பேரை நியமனம் செய்தல் என தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அதிமுக தெருமுனை பிரசாரம்

Posted: 09 Jun 2014 12:08 PM PDT

தமிழக அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஆரணியில் தெருமுனை பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சிப் பள்ளியில் விநாடி-வினா போட்டி

Posted: 09 Jun 2014 12:08 PM PDT

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு விநாடி-வினா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

சீனாவில் வெடி விபத்து: 3 பேர் சாவு

Posted: 09 Jun 2014 12:07 PM PDT

சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jun 2014 12:04 PM PDT

பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியிலுள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் உலோக ஊடுருவி தொழிற்சாலை முன்பு எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™