ஈகரை தமிழ் களஞ்சியம் |
- "தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்!
- என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்)
- என்னை எனக்கே பிடிக்கவில்லை!!!
- சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்-படிப்தற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும்.
- ஔவைக் கிழவி!
- சிவாஜியுடன் ஒரு நாள்...
- சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு...
- குறையே நிறை!
- தானியங்கள் பற்றிய தொகுப்பு மின்னூல் வடிவில் .
- இனியவை நாற்பது-கதை வடிவில்
- ஷீர்லக் ஹோம்ஸ் தமிழில்-சிறுவன் டாம் கலக்கும் அசத்தல் காமிக்ஸ்.
- செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர்!
- இன்ஃபெர்னோ.(Robert Langdon is back)
- தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு.
- தொடத் தொடத் தொல்காப்பியம் (243)
- செ செ வின் புதிரோடு......
- கள்வரும் கவின்பெறுவர்
- எண்ணும் எழுத்தும்
- நிழலே...
- தேவதை மொழி
- அன்பே...
- ஊக்கம்
- நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை
- வரலாற்றில் இன்று....!
- கரண்ட் பில் கட்டும் பொது
- நிலவு உருவானது எப்படி ?
- என்று மாறும் இந்த நிலை?!
- சிவாஜி கணேசன்...சிறப்பு கட்டுரை.
- மரத்தின் குழந்தைகள்...
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (40)
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- அழைப்பு!
- நாக்கு! (குறும்பா)
- திருமணம்! (குறும்பா)
- நட்பு அழிவதில்லை
- ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை)
- ரமணியின் கவிதைகள்
- வான் நிலா... நீ வா உலா!
- நீளும் விளையாட்டு..! -
- செசெ வின் உழைப்பாளிகள்
| "தமிழ்' என உச்சரிக்க முடியாத் தமிழர்கள்! Posted: 20 Jun 2014 02:04 PM PDT தம் தாய்மொழியாம் தமிழையே தமிழ் என்று உச்சரிக்க முடியாது - இயலாது - தெரியாது - முயலாது - தமில் என்றே உச்சரிக்கும் தமிழகத் தமிழரின் எண்ணிக்கை 95 சதவீதம் வரை இருக்குமென "ழ'கரப்பணி மன்றம் எனும் அமைப்பு அறிவித்துள்ளது. இது ஓரளவு உண்மையாயினும், தேவையற்ற பிற தமிழ் விளம்பரப் பணிகளை ஓரங்கட்டிவிட்டு இதைச் சரிப்படுத்த வேண்டியதே இன்றைய இன்றியமையாத் தமிழ்ப் பணியாகும். தமிழ் எழுத்துவடிவம் காலந்தோறும் மாறியதால் தமிழ்ச் சாரம் குறையவில்லை. தமிழ் இலக்கிய வடிவம் கவிதையிலிருந்து உரைநடையானதால் தமிழ்ச் செழிப்பு ... |
| என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) Posted: 20 Jun 2014 10:44 AM PDT என்னவளைப் பற்றி... (குறும்பாக்கள்) வளைந்து நெளிந்து செல்கிறது அழகான ஒற்றையடிப் பாதை. என்னவளின் உச்சி வகிடு! காந்தங்களுக்கு இரு துருவங்கள் உண்டாம்; இரு புருவங்கள் கண்டேன். என்னவளின் கண்கள்! தரையைத் தொட்டு விடும் தூரத்தில் விழுதுகள். என்னவளின் எழில்மிகு கூந்தல்! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 10:36 AM PDT என்னை பிடிக்கவில்லை எனக்கே என்னை பிடிக்கவில்லை பரிதாபம் பல கண்டும் பச்சாதாபம் கொள்ளாமல் பார்த்தும் பாராமல் இருக்கும் என்னை பிடிக்கவில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! ஊரிலே பெரியவனாம் - நான் உயர்ந்தவனாம் - இருந்தும் சீர் கேடுகள் பல நடந்தும் சிறப்புக்கள் பல இழந்தும் கண்டும் காணதவனாய் கலங்கம் அற்றும் அற்றவனாய் இருக்கும் எனைக்காண பிடிக்கவில்லை என்னை எனக்கே பிடிக்கவில்லை!!! மன சாட்சி கொன்றவனாய் மனித நேயம் அற்றவனாய் நடக்கும் பல கொடுமைகளை நீதம் பேசும் உணர்வுகளை என் வாழ்வுக்காய் ... |
| சுஜாதாவின் கற்றதும் பெற்றதும்-படிப்தற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும். Posted: 20 Jun 2014 10:34 AM PDT எழுத்தாளர் சுஜாதா இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் படிப்தற்கு மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இவருடய படைபுகள் அறிவுபுர்வமாக ஆழமான கருத்துக்கள் கொண்டி இருக்கும். புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இவர் படைப்புகளில் ஏதேனும் ஒன்றை படிப்பார்கலெனில் புத்தக புழுவாக மாறிவிடுவார்கள் அவ்ளோ சுவாரஸ்யாமாக எழுதகூடியவர். தன்னுடைய வாழ்நாளில் அனுபவங்களை விகடன் வாரந்திர பத்திரிகையில் "கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் எழுதி வந்தார் அல்லவா? அது அப்போது வாசகர்களிடையே ... |
| Posted: 20 Jun 2014 10:33 AM PDT ஔவைக் கிழவி! அன்பிற்குரியக் கிழவி- நம் தமிழை ஆட்சி செய்தக் கிழவி - நண்பனுக்கு இறவா வரம் தரும் நெல்லிக் கனியை ஈந்தக் கிழவி - நல் அறவுரைகளை நம் உள்ளத்துள் தங்கச் செய்து ஊக்கம் தந்தக் கிழவி - சிறப்புடை எண்ணிலா வான் புகழ் பாடல்களை ஏட்டிலே தந்தக் கிழவி - நம் மனமுடை ஐய மகற்றி மாண்புறச் செய்தக் கிழவி ஒப்பிலாக் கருத்துக்களை மாந்தருக்காய் ஓதியக் கிழவி - யாரவர்? அவர் தான் நம் ஔவைக் கிழவி! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 10:31 AM PDT சிவாஜியுடன் ஒரு நாள்... மூச்சுக் காற்றின் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருந்தது அந்தப் படப்பிடிப்பு அரங்கம். காரணம் சிவாஜி..! 'என் ஆச ராசாவே' படத்தில் நாட்டுப்புறக் கலைஞரின் வேடம் என்பதால் ஆசை ஆசையாக சிவாஜி ஒப்புக்கொண்டிருந்தார் என்று செய்தி பரவியிருக்க, சிவாஜி இருக்கும் படப்பிடிப்புத் தளம் பற்றி கட்டுரை எழுதலாம் என்ற ஆசையில் போயிருந்தேன். ரகசியம் பேசும் குரலில் டைரக்டர் கஸ்தூரி ராஜா, "லஞ்சுக்குப் பிறகு பேட்டியை வெச்சுக்குவோம். சிவாஜி ஐயா புறப்பட்டு போயிருவார். அதுவரைக்கும் வேடிக்கை ... |
| சிறகுகளும் இறகுகளும்...செத்துப்போன பின்னும் பேசும் நட்பு... Posted: 20 Jun 2014 09:11 AM PDT என்னதான் இருள்புயல் அடித்தாலும் கதிர்க் கிரண வாளெடுத்து அப்புயலின் கழுத்தைப் பொசுக்கென்று அறுக்கும் சூரியன் அமரமுடியாத கிளைகளிலும் இலைகளிலும் நுண்ணறிவுப் புழைகளிலும் நூதனமாய் அமர்ந்து நுரைத்துப் பொங்கிச் சிரிக்கும் பேணவே முடியாதப் பேய்நிமிடங்களில்கூட ப்ரியம் தளர்வின்றி தலைகோதும் உலகம் பார்க்கவேவியலாத ஓர் மர்மதேசத்தில் உயர்விவாசாயக் குணத்தோடு உள்ளுக்குள்ளேயே களைபறித்து உரமிடும் மழை கேட்டால் போதும் மழைநாட்டையே மனதிலும் மண்ணிலும் உருளவிடும் பால்வேறுபாடுகள் உடையும் பகைக்கூறுகள் ... |
| Posted: 20 Jun 2014 08:41 AM PDT சொல்வது உரைநடை; சொல்லாமல் விடுவது கவிதை. கவிஞர், தாம் சொல்லக் கருதியதைச் சொல்லாமல் படிப்போர் அவரவர் எண்ணப்படி புரிந்துகொள்ளும்படி விட்டுவிட்டு, படிப்போரின் சிந்தனைத் திறத்தைத் தூண்டி மகிழச் செய்வதே தனிச்சிறப்பாகும். சொல்லாமல் விட்டுச் சுகம் காணச் செய்த கவிஞர்களின் மூன்று கவிதைகளைக் காண்போம். திருவள்ளுவர், "செருவந்த செய்யாமை' எனும் 57-ஆவது அதிகாரத்தில், அஞ்சத் தக்கவற்றைச் செய்தல் கூடாது என்பதைக் கூறும்பொழுது, "கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை'' (57-10) என்பார். ... |
| தானியங்கள் பற்றிய தொகுப்பு மின்னூல் வடிவில் . Posted: 20 Jun 2014 08:19 AM PDT தானியத்தை கிராமப்புறங்களில் 'தவசம்' என்றே அழைக்கின்றனர். புல் குடும்பத்திலிருந்து கிடைக்கக்கூடிய விதைகளைத்தான் தானியம் என்கின்றோம். இவ்விதை உண்மையில் கனியேயாகும். ஒரே விதையும், அதனைத் சூழ்ந்து கனிச் சுவரும் இருக்கும். கனிச் சுவர் உமியாலும் மூடப்பட்டு இருக்கும். இது போன்ற கனியை காயாப்ஸிஸ் (caryopsis) என்பர். இதனை தானியம் என்றும் அழைக்கலாம். பழங்கால மனிதன் விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்டு வந்தான். அதுமட்டும் அல்லாமல் கிழங்கு, பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றையும் உண்டான். மேலும் காட்டுப் புல் விதைகளில் ... |
| Posted: 20 Jun 2014 08:14 AM PDT தமிழ் இலக்கியங்களை அனைவரும் முழுமையாகப் படித்தல் என்பது இயலாது. காரணம் நமது கல்வி முறை. தனித் தமிழில் பட்டப் படிப்புகள் படித்தவர்கள்கூட எல்லா இலக்கியங்களையும் பாடத் திட்டத்தில் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆர்வம் காரணமாக அவரவர்க்குப் பிடித்தமான இலக்கியங்களைப் படித்து அதில் முழுமையான புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட ஆர்வத்தை முடிந்த வரை பலருக்கும் ஊட்டவேண்டுமென்கிற எண்ணத்தில் சில இலக்கியங்களின் உட்பொருளை இங்கே கதை வடிவில் கூறினால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இந்த கட்டுரைத் தொடர். ... |
| ஷீர்லக் ஹோம்ஸ் தமிழில்-சிறுவன் டாம் கலக்கும் அசத்தல் காமிக்ஸ். Posted: 20 Jun 2014 08:13 AM PDT ஷீர்லக் ஹோம்ஸ் தமிழில்-சிறுவன் டாம் கலக்கும் அசத்தல் காமிக்ஸ். http://www.mediafire.com/download/w5v9g96144qmo5b/Sheerluck+6%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர்! Posted: 20 Jun 2014 08:13 AM PDT நினைத்த நேரத்தில் தாம் நினைத்தவற்றைப் பாடலாக்கிப் பாடிய மறுகணமே, அவ்வண்ணம் நிகழ்த்திக்காட்டும் தெய்வீக ஆற்றல் தமிழுக்கு உண்டு என்று நிறுவிய புலவர்களைப் பெற்ற பெருமைக்குரியது தமிழகம். அத்தகையோரை, அறம்பாடும் புலவர்கள், ஆசுகவிகள் என்று மக்கள் போற்றினர். தன்னலத்தை விடவும், பொதுநலம் பேணவும், தீயவர்களைச் சாடவும், தெய்வத்தைப் போற்றவும் தீந்தமிழைத் துணையாகக் கொண்டவர்கள் இத்தகைய புலவர்கள். அந்த வகையில் செட்டிநாடு செந்தமிழுக்கு ஈந்த திருக்கவி, முத்தப்பர் ஆவார். சிவகங்கை மாவட்டத்தில் 1750}ஆம் ஆண்டு பிறந்தவர். ... |
| இன்ஃபெர்னோ.(Robert Langdon is back) Posted: 20 Jun 2014 08:12 AM PDT 2013ம் ஆண்டு மே மாதம் டான் ப்ரவுனின் ஆறாவது நாவலான இன்ஃபெர்னோ உலகின் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இவரது ஏனைய ஐந்து நாவல்களையும் வாசித்ததனால் அவரது எழுத்தின் மைய அம்சமாகத் திகழும் வரலாற்று பார்வையிலும் ஆய்வுப் பார்வையில் மிகுந்த ஈடுபாடு எனக்கிருக்கின்றது. 2013ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இறுதியிலும் மே மாத ஆரம்ப வாரத்திலும் இத்தாலியின் சில பகுதிகளில் சுற்றுலா சென்று திரும்பியிருந்தேன். ப்ளோரன்ஸ், சியென்னா ஆகிய நகருக்குச் சென்று வந்த நினைவுகள் பசுமை குறையாமல் இருக்க இந்த நூல் வாசிப்பும் ... |
| தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு. Posted: 20 Jun 2014 08:09 AM PDT தஞ்சை சோழ மன்னர்கள் ஆண்ட பிரதேசமல்லவா? அங்கு நாயக்க மன்னர்களும் அவர்களைத் தொடர்ந்து மராட்டிய மன்னர்களும் எப்படி வந்தார்கள்? இவைகள் பற்றியெல்லாம் ஆய்வறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் "தஞ்சையை ஆண்ட நாயக்கர் வரலாறு" எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். அவர்களைத் தொடர்ந்து தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இது குறித்து மக்கன்சி சுவடிகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அதன் அடிப்படையில் தஞ்சை மராட்டியர் வரலாறு குறித்து இங்கு பார்க்கலாம். மின்னூலாக்கம் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (243) Posted: 20 Jun 2014 08:05 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 20 Jun 2014 07:50 AM PDT புதிரோடு நாடகம் நடத்துது நம்மோடு நம்வாழ்க்கை அது மதியோடு மன்றாடி மாயமாக மறைந்திடுமே மௌனம் மட்டும் அதன் சிறப்பிடமே.......... செசெ |
| Posted: 20 Jun 2014 07:37 AM PDT தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பன. யாமம் என்பது ஜாமமாக மருவி இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழரிடம் இவ்வழக்கம் இருந்துவருவதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இந்த நான்கு யாமத்திலும் எப்படி இருந்தது என்பதை அழகாக வருணித்துக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுபொங்க பதிவுசெய்து, ... |
| Posted: 20 Jun 2014 07:32 AM PDT 'எண்' என்பது கணிதத்தின் மூலக்கூறு. இது அறிவியலின் மொழி எனப்படுகிறது. இந்த எண் (கணிதம்) அறிவியலின் அரசி என்றும் போற்றப்படுகிறது. இந்த எண்ணும் எழுத்தும் (அதாவது, கணிதமும் இலக்கியமும்-அறிவியலும் இலக்கியமும்) வாழும் உயிர்களுக்குக் கண் போன்றது (சமுதாயத்தின் கண்கள்) எனக் கருதிக் கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார் வள்ளுவர் (குறள்-392). அவருடைய கருத்தை, ""எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' எனக் கொன்றை வேந்தனில் எதிரொலித்தார் ஒüவையார். கணிதத்துறையில் பழந்தமிழர் ஓங்கித் திகழ்ந்தனர். கணிதத்திற்கு ... |
| Posted: 20 Jun 2014 07:31 AM PDT எனை தொடர்ந்து வரும் நிழலே... தூரப்போ...! நீயுமா இப்படி?! உனை தூயவன் என்றெண்ணியிருந்தேனே... நீயும் சிலரைப்போல் சாய்கிறாயே... நேரத்திற்கு ஏற்றபடி! - பா. பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 07:23 AM PDT - பூனை, நாய், காக்கா. குருவி பொம்மை என எல்லோரிடமும் பேச ஒரு பாஷை வைத்திருக்கிறாள் அவர்களுக்கு இடையிலான இந்த உரையாடல்களை நாம் கவனிக்கும்போது சிரிக்க வைக்க அழகாக ஒரு சிரிப்பும் வைத்திருக்கிறாள்..! - ---------------------------- >கர்ணா சக்தி நன்றி:ஆனந்த விகடன் |
| Posted: 20 Jun 2014 07:21 AM PDT அன்பே... அன்பே! என் ஆருயிரே! இனி நாம் ஈருயிராய் உடலளவில் இருப்பினும்... ஊன் உறக்கமின்றி என்றென்றும் உனை நினைத்து ஏங்கித் தவிக்கும் எனக்கு ஐயம் சிறிதுமில்லை - நாம் ஒருவரே - மனதளவில் ஓருயிரே - இதற்கு நம் ஔவை ஆண்ட அருந்தமிழே சாட்சி! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 07:18 AM PDT விழுவது எழுவதெற்கே எழுச்சியோடு முயல்வதற்கே விழுதுகளே விருட்சமாகும் உலகத்துக்கே வெளிச்சமாகும் சோதனைகளும் வாய்ப்புகளாகும் சாதனைகளின் வார்ப்புகளாகும் வேதனைகளின் எல்லைதாண்டி விருதுகளை மாலையாக்கும் பள்ளத்தைத் தாண்டிவரும் வெள்ளம்தான் வேகங்கொள்ளும் உள்ளத்தில் உறுதிகொள்ளும் ஊக்கத்திற்கே உயர்விருக்கும் |
| நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை Posted: 20 Jun 2014 07:15 AM PDT நாம் வாழ்க்கையில் சில விஷயங்களை நீண்ட நாட்களுக்கு நினைவு கொள்கிறோம். அதே நேரம் சிலவற்றை குறுகிய காலத்தில் மற்ந்து விடுகிறோம். இது எப்படி நடைபெறுகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டறிந்துள்ளார்கள். மனித குலத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எதையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்வதற்காகவும் நல்ல நினைவுகள் நீண்டகாலம் நீடித்திருக்கின்றன என்று உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். தீய நினைவுகளை விட்டொழித்து நல்ல நினைவுகளை தக்க வைத்துக் கொள்வது, வாழ்க்கையில் கசப்பான உணர்வுகள் ... |
| Posted: 20 Jun 2014 05:48 AM PDT 1976 - புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. |
| Posted: 20 Jun 2014 05:22 AM PDT கரண்ட் பில் கட்டும் பொது அடிக்கடி டிப்பொசிட் kata சொல்லுகிறார்கள் அந்த பணம் என்ன வாகிறது |
| Posted: 20 Jun 2014 05:19 AM PDT * பூமியை தினந்தோறும் 24 மணி நேரம் சுற்றி வருவதுடன் இரவு நேரங்களில் குளுமையும், வெளிச்சத்தையும் பூமிக்கு தரும் நிலவு உருவானது எப்படி? என்பதை ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியும், அதைப்போல அளவு கொண்ட மற்றொரு கோளும் சுமார் 4.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதன் அடிப்படையில் நிலவு உருவாக்கியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். * பூமியுடன் மோதிய அந்தக் கோளுக்கு ' தியா ' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். ... |
| Posted: 20 Jun 2014 05:17 AM PDT என்று மாறும் இந்த நிலை?! கற்றதால் பெற்றதை காண்பித்தும் கிஞ்சித்தும் இரக்கமின்றி கீழ்த்தரமாய் குவலயத்தையே கூவமாக்கும் கெட்ட எண்ணத்தோடு கேட்டான் கைக்கூலி கொடு என்று கோட்டானை யொத்த அவன். கவலையோடு கற்றறிந்த ஏழை?! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| சிவாஜி கணேசன்...சிறப்பு கட்டுரை. Posted: 20 Jun 2014 05:16 AM PDT சிவாஜி கணேசன் Sivaji-Ganesan சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் ... |
| Posted: 20 Jun 2014 05:16 AM PDT - இந்த மாமரத்தின் இலைகள் எந்த தலைவாசலிலும் தோரணங்களாகாமல் இருக்கட்டும் - கிளிகளே! உள்ளிருந்து குடையும் வண்டுகளே இதன் கனிகளை இப்போது ஒன்றும் செய்யாதீர்கள் - இந்த மாமரத்தைப் போலத்தான் வளர்ந்தார்கள் இந்த இரண்டு சிறுமிகளும் இலைகள் கிழிக்கப்பட்டு மொட்டுக்கள் நசுக்கப்படு இதன் கிளைகளில் தூக்கில் தொங்கவிடப்படும் வரை - தள்ளி நின்று வேடிக்கை பாருங்கள் இந்த மரத்தின் நிழல் சாதியின் ரத்தம் வன்புணர்வின் துக்கம் - அந்த சிறுமிகளின் முடிகளையும் நகங்களையும் அவர்களின் ஆடைகளில் இந்த மரத்திலேயே ... |
| Posted: 20 Jun 2014 05:05 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 20 Jun 2014 05:01 AM PDT ![]() |
| Posted: 20 Jun 2014 04:39 AM PDT அழைப்பு! அன்று மட்டும்... என அங்கலாய்க்கும் என் ஆருயிர் நண்பனே! இழப்பதற்கு எதுவுமில்லை ஈரைந்து விரல்களுடை இரு கைகள் இருக்கையிலே... உணர்வற்றக் கூடாய் இன்னும் உறக்கம் எதற்கு? ஊரே மெச்சும் படி எல்லா வளங்களும் பெற்று ஏற்றமுடன் வாழ்ந்திட... ஐயமின்றி உள்ளுறைக் கவலைகளை ஒதுக்கிவிட்டு உத்வேகத்துடன் ஓடோடி வா... ஔவை மொழிதனைக் கைக்கொண்டு! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 04:38 AM PDT நாக்கு! (குறும்பா) சிறு வளை நடுவே வகையாய் களிநடனம் புரியும் நஞ்சுடை நச்சுப்பாம்போ நீ?! 'தமிழ் நேசன்' -பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 04:31 AM PDT திருமணம்! கல்யாணச் சந்தையில் பேரம் படிய... இனிதே நடந்தேறியது. திருமணம்?! 'தமிழ் நேசன்' பா.பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| Posted: 20 Jun 2014 04:25 AM PDT கல்லூரியாம் பூங்கொடியில் காண் நட்பாம் நன்மலரே... நீ சிறப்பாய்! நட்பை மலர் என்றிடின் காலமதை வாட்டிடுமே... ஆம்! அவ்வாட்டமே பிரிவாம்! அத்துடன் முடிவுற்றதா? அம்மலரின் பயணம்! தன் வாட்டமாம் இறுதியில் பதிவாம் விதையினை, நெஞ்சமாம் பூமித்தாயிடம் விதைத்து சென்றிட, நினைவாம் நீரை நிறைவாய் அளித்திடின், விதையாம் பதிவுகள் விருட்சமாய் உருவெடுத்திட, என்று முடியும் இப்பயணம்... என்றும் முடிவதில்லை! நட்பு என்றும் அழிவதில்லை!! இதை மாற்றிட எவருமில்லை!!! பா. பார்த்தசாரதி, www.bparthasarathi.yolasite.com |
| ஒரு தாயின் குமுறல் (கும்பகோணம் தீ விபத்தின் போது எழுதிய கவிதை) Posted: 20 Jun 2014 04:24 AM PDT மகனே! கல்வி கற்று வந்திடுவாய்... கனவுடனே காத்திருக்க, நீ கானலாய் ஆனதென்ன! அதிகாலையில் சோறூட்டி கைகழுவி விட்டேனே, பதிலுக்கு விட்டாயோ நீயும் கைகழுவி! ஒரு கீறல் உன்னுடம்பில் ஒத்திடாத நான், உனை பெரும் உலைதனிலே விட்டதென்ன! கண்ணே! என்றழைத்தால் கல்விதான் கண்ணம்மா கற்று வருவேன் பெரியவனாய்... நின் கொஞ்சும் மழலை பேச்செங்கே?! கன்னக்குழி அழகு பார்த்து கண்பட்டு போயிடுமே! கரிதடவி விடுவேனய்யா... யார் கண் பட்டதுவோ நீ பட்டு போனாயே! கால் பட்ட தீ தழும்பில் களிம்பு தடவி விட்ட ... |
| Posted: 20 Jun 2014 04:21 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 20 Jun 2014 04:18 AM PDT வான் நிலா... நீ வா உலா! வான் நிலா இன்று வானிலை காரணம் வானிலை. வான் நிலா நீயிலா வான் வானிலை வா நிலை. வானிலா வான் நிலா கொஞ்சம் வா நிலா வசந்தம் தா நிலா. தண்ணிலா நீ அகல் நிலா காரிருள் அகல் நிலா அகற்றி அகலாய் நிலா. வெண்ணிலா நீ வா நிலா வந்து வானிலே காய் நிலா காய்த்து எம் பூமியைக் காய் நிலா. பொன்னிலா நீ பூ நிலா வந்து வானிலே நீ பூ நிலா. வெள்ளி நிலா உனை சுற்றிதான் எத்தனை வெள்ளி நிலா. தங்க நிலா எமக்கு இடம் தா... தங்க நிலா. சன்னலில் முகம் சாய்த்து சங்கடத்தில் ... |
| Posted: 20 Jun 2014 02:47 AM PDT - வினாக்களால் உலகைத் திறக்கும் ஆலாபனா விளையாட இணையின்றி எங்களில் ஒருவரை அழைக்கிறாள் அவளோடு விளையாட - ஒப்பனையற்ற மழலை மொழியில் அவளே தொடங்குகிறாள் விளையாட்டை - ஓர் ஆசிரியராக ஓர் நோயாளியாக ஓர் நுகர்வோராக ஒரு பயணியாகச் சடுதியில் மாறத்தான் வேண்டியிருக்கிறது நாங்களும் - திரும்பத் திரும்ப விளையாடிய சலிப்பின் நீட்சியில் வேலை இருக்கிறதென மெல்ல நழுவும் எம்மைத் துண்டிப்பவள் இருவர் உரையாடலைத் தாமே மொழிந்தவாறு தொடர்கிறாள் முடிவுறாத் திருவிளையாடலை..! - --------------------------- >செழியரசு நன்றி: ... |
| Posted: 20 Jun 2014 01:22 AM PDT உழைப்பாளிகள் உருக்கும் வெயிலில் உடலை வருத்தும் உழைப்பின் சிகரங்கள் நம் நாட்டு உழைப்பாளிகள் எண்ணங்களில் உயர்ந்தவர்கள் உழைப்பில் சிறந்தவர்கள் நம் நாட்டு உழைப்பாளிகள் வண்ணமாய் வளமை காண உலகம் செழிப்பு காண தன்னையே அர்ப்பணிப்பவர்கள் நம் நாட்டு உழைப்பாளிகள் தன்னலம் கருதா சிறந்த குணம் கொண்ட உழைப்பிற்கு இலக்கணமே நம் நாட்டு உழைப்பாளிகள் செசெ |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
