மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உ.பி.யில் இடைத்தேர்தல்: 11 சட்டசபை –எம்.பி.தொகுதியை கைப்பற்ற பா.ஜ.க. வியூகம்
- தெலுங்குதேசம் கட்சிக்கு தாவிய ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. பதவி பறிபோகிறது
- டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
- கற்பழிப்பு புகார்: மத்திய மந்திரிக்கு கோர்ட்டு சம்மன்
- கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன்: சந்திரபாபு நாயுடு
- எம்.எல்.ஏ.வைப் பற்றி அவதூறு கருத்து: சினிமா தயாரிப்பாளர் கைது
- பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சந்தித்தார்
- நடன பார்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை: மகராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல்
- வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு
- சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வாருங்கள்: அதிகாரிகளுக்கு வெங்கையா நாயுடு உத்தரவு
- புதிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி: மத்திய அரசு அறிவிப்பு
- மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கும்: வெங்கையா நாயுடு
- எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க சபாநாயகருக்கு சோனியா காந்தி கடிதம்
- அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்
- கற்பழிப்பு வழக்கு: மத்திய இணை அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- சத்திஸ்கர் மாநிலத்தில் எஃகு ஆலையில் எரிவாயு கசிவால் 6 பேர் பலி: 30 பேர் காயம்
- வசுந்தரா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பைலட்
- உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண கோவா அரசியல் தலைவர்கள் பயணம்
- மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு ஆதரவா? - திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு
- யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியீடு
| உ.பி.யில் இடைத்தேர்தல்: 11 சட்டசபை –எம்.பி.தொகுதியை கைப்பற்ற பா.ஜ.க. வியூகம் Posted: 12 Jun 2014 11:15 PM PDT பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா 71 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. பிரதமர் நரேந்திரமோடியின் நண்பர் அமித்ஷா உத்தரபிரதேசத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அந்த மாநிலத்திலேயே சில மாதங்கள் தங்கி இருந்து தேர்தல் பணிகளை செய்தார். அமித்ஷாவின் ஆலோசனைப்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| தெலுங்குதேசம் கட்சிக்கு தாவிய ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. பதவி பறிபோகிறது Posted: 12 Jun 2014 11:02 PM PDT ஆந்திராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நந்தியால் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.பி.ஒய். ரெட்டி. இவர் சமீபத்தில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார். இதையடுத்து அவரது பதவியை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்கும்படி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஒய்.எஸ்.ஆர். |
| டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை Posted: 12 Jun 2014 10:38 PM PDT மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதை உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. வாரணாசி, மதுரா, அயோத்தி ஆகிய நகரங்களில் இந்து மத வழிபாட்டுத் தலங்கள் அதிகம் உள்ளன. எனவே இந்த மூன்று நகரங்களிலும் பெரிய அளவில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர். |
| கற்பழிப்பு புகார்: மத்திய மந்திரிக்கு கோர்ட்டு சம்மன் Posted: 12 Jun 2014 10:31 PM PDT அரியானா மாநிலம் சிர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ரேஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு கணவருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறினார். ஜெய்ப்பூரில் வைஷாலி நகர் உள்பட பல இடங்களில் வசித்தனர். அப்போது ரேஷ்மியை அவரது கணவர் தவறான வழியில் பயன் படுத்தினார். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக |
| கிராம மக்களுக்கு 2 ரூபாய்க்கு 20 லிட்டர் குடிநீர் கேன்: சந்திரபாபு நாயுடு Posted: 12 Jun 2014 10:01 PM PDT புதிய ஆந்திரா முதல்–மந்திரியாக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் மந்திரிகளுக்கான இலாகாவை ஒதுக்கினார். இதன்பின் மந்திரிசபையின் முதல் கூட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 6.45 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் நீடித்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு பின்னர் நிருபர்களிடம் விளக்கினார். |
| எம்.எல்.ஏ.வைப் பற்றி அவதூறு கருத்து: சினிமா தயாரிப்பாளர் கைது Posted: 12 Jun 2014 08:03 PM PDT சமூக வலைத்தளத்தில் எம்.எல்.ஏ.வைப் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்துக்குட்பட்ட நிஜாமாபாத் மாவட்டம், அர்மூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், ஜீவன் ரெட்டி. தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியை சேர்ந்த இவரைப் பற்றி டி.ரமேஷ் என்பவர் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி, அவதூறாக கருத்து |
| பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சந்தித்தார் Posted: 12 Jun 2014 05:28 PM PDT உத்தரப்பிரதேச மாநில முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என மோடியிடம் அவர் வலியுறுத்தியதாக கூறியுள்ளார். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தான் தங்கள் மாநிலம் |
| நடன பார்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை: மகராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் Posted: 12 Jun 2014 05:23 PM PDT மகாராஷ்டிரா அரசு நடன பார்களுக்கு தடை விதித்ததை உச்சநீதிமன்றம் ரத்து செய்த ஓராண்டுக்கு பின் மீண்டும் அம்மாநில அரசு புதிய சட்டம் மூலம் அதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டம் மூலம் நாட்டின் நிதித்துறை தலைநகரான மும்பையில் நடன |
| வரும் வாரத்தில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு Posted: 12 Jun 2014 05:16 PM PDT பெட்ரோல் விலை வரும் வார இறுதியில் குறைய வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனினும் ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே விலை குறைவு இருக்கும் என தெரிகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.68 டாலர் விலை குறைந்துள்ளதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் |
| சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வாருங்கள்: அதிகாரிகளுக்கு வெங்கையா நாயுடு உத்தரவு Posted: 12 Jun 2014 05:09 PM PDT மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சரான வெங்கையா நாயுடு தனது துறைக்கான அதிகாரிகளை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து தங்களது இருக்கையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். திடீரென அவர் தனது நிர்மல் பவன் அலுவலகத்திற்கு வந்தபோது அங்கு |
| புதிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி: மத்திய அரசு அறிவிப்பு Posted: 12 Jun 2014 04:58 PM PDT மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து போது ஜி.இ.வாகன்வதி அட்டர்னி ஜெனரலாக (மத்திய அரசின் தலைமை வக்கீலாக) பதவி வகித்து வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை |
| மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கும்: வெங்கையா நாயுடு Posted: 12 Jun 2014 04:54 PM PDT பாராளுமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. இனி அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடருக் காக பாராளுமன்றம் கூடும். இதுதொடர்பாக டெல்லியில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை இரண்டாம் வாரத்தில் தொடங்கும். இந்தக் கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். |
| எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க சபாநாயகருக்கு சோனியா காந்தி கடிதம் Posted: 12 Jun 2014 02:07 PM PDT பாராளுமன்ற விதிமுறைகளின்படி, மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் உறுப்பினர்களையாவது பெற்ற கட்சிக்குத்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். அதன்படி, 543 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்ற மக்களவையில் குறைந்தது 54 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியைத்தான் பிரதான எதிர்க்கட்சியாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைத்தான் அவையில் எதிர்க்கட்சி தலைவராகவும் அறிவிக்க முடியும். |
| அகில இந்திய அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் Posted: 12 Jun 2014 01:39 PM PDT ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட, சிவில் சர்வீசஸ் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 1122 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் கான்பூர் ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளநிலை பட்டமும், லக்னோ ஐ.ஐ.எம்.ல் முதுநிலை |
| கற்பழிப்பு வழக்கு: மத்திய இணை அமைச்சருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 12 Jun 2014 01:09 PM PDT கற்பழிப்பு வழக்கில் ஜெய்ப்பூர் நீதிமன்றம் மத்திய ரசாயனத்துறை இணையமைச்சரான நிகால் சந்த் மேக்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருமணமான பெண் ஒருவரை பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் தவிர மேலும் 17 பேருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இக்கற்பழிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் |
| சத்திஸ்கர் மாநிலத்தில் எஃகு ஆலையில் எரிவாயு கசிவால் 6 பேர் பலி: 30 பேர் காயம் Posted: 12 Jun 2014 10:52 AM PDT சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள பிலாய் எஃகு ஆலையில் விஷத்தன்மை வாய்ந்த எரிவாயு சென்றுகொண்டிருந்த குழாய் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.. காயமடைந்த 30 பேரில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளாக அங்குள்ள தண்ணீர் பம்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் கசிவால், |
| வசுந்தரா ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பைலட் Posted: 12 Jun 2014 09:02 AM PDT ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அரசு பதவியேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் கொலை, வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு போன்ற |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண கோவா அரசியல் தலைவர்கள் பயணம் Posted: 12 Jun 2014 07:21 AM PDT கோவா மாநிலத்தைச் சேர்ந்த 6 அரசியல் தலைவர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண பிரேசில் செல்கின்றனர். மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரமேஷ் தவாத்கர், மீன்வளத்துறை மந்திரி அவர்தனோ பர்டாடோ, மின்துறை மந்திரி மிலிந்த் நாயக் உள்ளிட்ட |
| மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு ஆதரவா? - திரிணாமுல் காங்கிரஸ் மறுப்பு Posted: 12 Jun 2014 05:34 AM PDT மாநிலங்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மெஜாரிட்டி இல்லாததால் பா.ஜனதா கட்சியுடன் ஒரு புரிந்துணர்வை எட்டியிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. |
| யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியீடு Posted: 12 Jun 2014 04:01 AM PDT மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) 2013-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் குரூப் ஏ, குரூப் பி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 1122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |