Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விஜய்- அமலா பால் திருமண வரவேற்பு: நேரில் வந்து வாழ்த்திய கருணாநிதி, முக ஸ்டாலின்

Posted: 12 Jun 2014 11:52 PM PDT

vijay

vijayஇயக்குநர் விஜய் - அமலா பால் திருமண வரவேற்பில் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் திமுக தலைவர் கருணாநிதி. விஜய் - அமலா பால் திருமணம் நேற்று காலை மேயர் ராமநாதன் செட்டியார் அரங்கில் நடந்தது. மாலையில் அதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. காலையில் திருமணத்துக்கு வரத் தவறிய பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்தினர். திமுக தலைவர் மு கருணாநிதி நேரில் வந்து வாழ்த்தினார். அவர் காலில் விழுந்து மணமக்கள் வாழ்த்துப் பெற்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் முக ஸ்டாலின் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். அவருடன் திமுக நிர்வாகிகளும் வந்திருந்தனர். இயக்குநர் விஜய் - அமலா பால் திருமணத்துக்கு நடிகர் விஜய்க்கு பதில் அவர் மனைவி சங்கீதா கலந்து கொண்டார். திருமண வரவேற்புக்கு நேரில் வந்து வாழ்த்தினார் நடிகர் விஜய்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

கௌதம் மேனனுக்காக 20 வயது வாலிபராக மாறும் அஜீத்?

Posted: 12 Jun 2014 11:47 PM PDT

ajith-double-role

ajith-double-roleகௌதம் மேனன் படத்தில் அஜீத் 20 வயது இளைஞராக வருகிறாராம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போதைக்கு தல 55 என்று தலைப்பு வைத்துள்ளனர். தினமும் படம் குறித்து ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தல 55 படத்தில் அஜீத் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தில் அஜீத் குமார் ஒரு கதாபாத்திரத்தில் 20 வயது இளைஞராக நச்சென்று வருகிறாராம். மற்றொரு கதாபாத்திரத்தில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் லுக்கிலேயே வருகிறாராம். வாலிபர் கதாபாத்திரத்திற்காகத் தான் அஜீத் ஜிம்முக்கு சென்று உடலை கும்மென்று ஆக்கியுள்ளாராம். 44 வயதில் ஆமீர் கான் 20 வயது வாலிபராக 3 இடியட்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் 43 வயதாகும் அஜீத் 20 வயது இளைஞராக நடிக்கவிருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியப் பெட்டகம்: புளி

Posted: 12 Jun 2014 11:35 PM PDT

puli

puliஉப்பு, காரமில்லாத உணவு எப்படி பலருக்கும் தொண்டைக்குள் இறங்க மறுக்குமோ, அப்படித்தான் புளிப்புச் சுவை இல்லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்கலாக இருந்தால்தான் பலருக்கும் முழுமையாக சாப்பிட்ட திருப்தியே வரும்.புளியிலிருந்து பெரிதாக நமக்கு சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை. அது சமையலுக்கு ருசி கூட்டுகிற தவிர்க்க முடியாத ஒரு பொருள்... அவ்வளவுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்கிற ரசம் பசியோடு இருக்கிற பல நேரங்களில் அமிர்தமாக ருசிக்கும். வெறும் புளித்தண்ணீர்தான்... ஆனாலும், அதற்கு அப்படியோர் சுவை. இன்னும் அன்றாடச் சமையலில் சாம்பார், வத்தக் குழம்பு, கூட்டு என பெரும்பாலான உணவுகளுக்கு புளி சேர்த்தால்தான் ருசியே. தென்னிந்தியச் சமையலைப் பொறுத்த வரை புளிப்புச் சுவைக்கு புளிக்குத்தான் முதலிடம். எலுமிச்சை, மாங்காய் போன்றவை எல்லாம் அப்புறம்தான். புளியில் நிறைய நல்ல அம்சங்களும், கொஞ்சம் கெட்ட விஷயங்களும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவத்தில் புளிக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக லேகியம் உள்ளிட்ட அவர்களது மருந்துத் தயாரிப்புகளில் புளி சேர்ப்பார்கள். அப்போதுதான் அது கெட்டுப் போகாது. வயிறு சம்பந்தப்பட்ட மருந்துகளுக்கும் புளி சேர்ப்பதுண்டு. புளி மிகச்சிறந்த மலமிளக்கி. எனவே, மலச்சிக்கலுக்கும் இது நல்ல மருந்து. புளிய இலையின் துளிர்களைக் கொதிக்க வைத்துச் செய்கிற கஷாயம், மலேரியா நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. புளியங்கொட்டைக்கும் மருத்துவக் குணம் உண்டு. கண்களுக்கான டிராப்ஸ் தயாரிப்பில் புளியங்கொட்டை பயன்படுத்தப்படுகிறதாம். தொண்டைக் கமறல், ஜலதோஷமாக இருக்கும் போது, ரசம் சாப்பிடச் சொல்வார்கள். நீர்த்த புளிக்கரைசலுடன், மிளகு, சீரகமும் சேர்ந்து, தொண்டைக் கமறலை குணப்படுத்தும். காய்ச்சல், மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு புளி சேர்த்த உணவு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். புளி மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட். ரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. புற்றுநோய்க்கு எதிராகப் போராடக் கூடியது. வெளிப்பூச்சுக்கும் புளி நல்ல மருந்து. அந்தக் காலங்களில் ரத்தக் கட்டுக்கு புளிப்பற்று போடுவார்கள். அதே போல தலைவலி, தோல்புண், வீக்கம் போன்றவற்றுக்கும் புளியைத் தடவினால் நிவாரணம் தரும். இத்தனை நல்ல குணங்கள் உள்ள புளியை ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவுக்கு மேல் எடுக்கக் கூடாது. அந்த அளவு தாண்டினால், பேதி ஏற்படும். யாருக்கெல்லாம் புளி கூடாது? இதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்வதால், அவர்களுக்கு புளி கூடாது. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் மற்றும் ருமட்டாயிட் ஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும் புளி வேண்டாம். அது அவர்களது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களும் புளி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள். நீரிழிவு நோயாளிகளும் புளியை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அது குளூக்கோஸின் அளவை குறைத்து விடும். ரத்தத்தை சுண்டும் குணம் கொண்டது புளி என்பதால் எல்லோருமே அளவோடு அதை உபயோகிப்பதே பாதுகாப்பானது என்ன இருக்கிறது? 100 கிராம் புளி விழுதில் கலோரி 283 கிலோ கலோரி புரதம் 3.1 கிராம் கொழுப்பு 0.1 கிராம் நார்ச்சத்து 5.6 கிராம் இரும்பு 17 மி.கி. கால்சியம் 170 மி.கி. புளி ஸ்பெஷல் ரெசிபி புளி அவல் என்னென்ன தேவை? கைக்குத்தல் சிவப்பு அவல் - 100 கிராம், கெட்டியான புளிக்கரைசல் - கால் கப், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிப்பதற்கு, வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. எப்படிச் செய்வது? அவலைக் கழுவி, ஊற வைத்து, வடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வேர்க்கடலை, மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் புளிக்கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, எண்ணெய் கக்கும் அளவுக்கு கொதித்ததும் இறக்கவும். இதுதான் புளிக்காய்ச்சல். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, இன்னும் சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, ஊறிக் கொண்டிருக்கிற அவலைச் சேர்த்துப் பிரட்டவும். பிறகு அதில் புளிக்காய்ச்சலை சேர்த்துக் கிளறி, பரிமாறவும். குடம்புளி குழம்பு என்னென்ன தேவை? குடம்புளி - 2 துண்டு, கத்தரிக்காய் - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, குழம்பு மிளகாய் தூள் - தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 1, உப்பு - தேவைக்கேற்ப, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை - தாளிப்பதற்கு. எப்படிச் செய்வது? குடம்புளியை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். கத்தரிக்காயை நான்காக வகிர்ந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காயும் பச்சை மிளகாயும் சேர்த்து நன்கு வதக்கவும். குடம்புளியை அப்படியே கரைக்கவும். அது சாதாரண புளி மாதிரி கரையாது. சக்கையை நீக்க வேண்டாம். அதிலேயே குழம்பு மிளகாய் தூளைச் சேர்த்துக் கரைத்து, கத்தரிக்காய் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இது பார்ப்பதற்கு சற்றே நீர்த்த மாதிரித் தெரியும். ஆனால், நேரம் போகப் போக கெட்டியாகும். புளிசட்னி என்னென்ன தேவை? பேரீச்சம் பழம் - 10, வெல்லம் - 50 கிராம், புளி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் - 1. எப்படிச் செய்வது? பேரீச்சம் பழத்தை விதை நீக்கி, தண்ணீரில் ஊற வைக்கவும். மிக்ஸியில் முதலில் மிளகாயை அரைக்கவும். பிறகு பேரீச்சம் பழம் சேர்த்து அரைத்து, அடுத்து வெல்லம் சேர்த்து அரைக்கவும். கடைசியாக புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லா வற்றுக்கும்  தொட்டுக் கொள்ளலாம். பிரெட்டில் ஸ்பிரெட் மாதிரித் தடவி சாப்பிடவும் நன்றாக இருக்கும். பேரீச்சம் பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கும் இந்த வகையில் கொடுத்தால் சாப்பிடுவார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உயிர்பிழைக்க இந்த பன்றி எடுக்கும் ரிஸ்க்கை பார்த்தீங்களா?…. கடைசியில தப்பிச்சிருக்குமா?

Posted: 12 Jun 2014 11:29 PM PDT

Pig-Jumps-and-Escapes-From-Moving-Truck-On-Its-Way-To-Sla

Pig-Jumps-and-Escapes-From-Moving-Truck-On-Its-Way-To-Sla

This posting includes an audio/video/photo media file: Download Now

தம்மாத்துண்டு சைக்கிளை வைச்சுக்கிட்டு இவர் போடுற சீனை பாருங்க

Posted: 12 Jun 2014 11:24 PM PDT

Tim-Knoll---Parkour-BMX-Bike-Stunts

Tim-Knoll---Parkour-BMX-Bike-Stunts

This posting includes an audio/video/photo media file: Download Now

இளம் ஆசிரியையிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வருக்கு தர்ம அடி

Posted: 12 Jun 2014 11:20 PM PDT

Principal-Misbehaved-with-Lady-sub-staff-Beaten-badly

Principal-Misbehaved-with-Lady-sub-staff-Beaten-badly

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆவேசத்துடன் தாக்க வந்த யானையை தலைதெறிக்க ஓட வைத்த இளைஞர்!

Posted: 12 Jun 2014 11:13 PM PDT

elephant

elephant

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொம்ப நல்லா வித்தை காட்டுற தம்பி !

Posted: 12 Jun 2014 11:09 PM PDT

Very-difficult-trick

Very-difficult-trick

This posting includes an audio/video/photo media file: Download Now

நெய்மார் அதிரடியுடன் வெற்றிக்கணக்கை துவக்கிய பிரேசில்!

Posted: 12 Jun 2014 11:02 PM PDT

thiago-silva-left-and-croatia-ivica-olic-

thiago-silva-left-and-croatia-ivica-olic-பிரேசில் தனக்கே உரித்தான ஸ்டைலில் குரோஷியா அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டித்தொடர் இந்திய நேரப்படி நேற்றிரவு 1.30 மணிக்கு பிரேசிலில் துவங்கியது.

முன்னதாக கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் பிரேசிலும், ஐரோப்பிய நாடான குரோஷியாவும் பலப்பரிட்சை நடத்தின. சாவ்பவுலோ நகரில் இப்போட்டி நடந்தது.

போட்டி தொடங்கிய 11 நிமிடத்தில், குரோஷியாவின் நிக்கிக்கா ஜெலாவிக் கோல் அடிக்க முயன்றார். அதைத் தடுக்க முயற்சித்தார் பிரேசிலின் மார்செலோ.

ஆனால் மார்செலோவின் காலில் பட்டு கோலானதால் அவரே சேம் சைட் கோல் அடித்து குரோஷியாவுக்கு லீட் எடுத்துக் கொண்டார்.ஸ்தம்பித்த ரசிகர்கள்... கொந்தளித்தனர் உலக கோப்பையில் சேம் சைட் கோல் அடிப்பது பிரேசிலுக்கு இதுதான் முதல் தடவை என்று விளையாட்டு பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சேம்சைடு கோலால், மைதானத்தில் குழுமியிருந்த பிரேசில் அதிபர் டில்மா ரவுசெப் உட்பபட 62 ஆயிரத்து 103 ரசிகர்களும் ஒரு நிமிடம் அப்படியே அமைதியில் ஸ்தம்பித்தனர்.

சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணியே தனது நாட்டுக்கு எதிராக சேம்சைடு கோல் போட்டதால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

அப்போதுதான் வீறு கொண்டு எழுந்தார் பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம், நெய்மார். 29 மற்றும், 71வது நிமிடங்களில் நெய்மார் அடுத்தடுத்து அடித்த கோல்கள், குரோஷியாவை முந்திச்செல்ல உதவின.

91வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் மற்றொரு கோலை அடிக்க 3க்கு1 என்ற கோல் கணக்கில் பிரேசில் எளிதாக வென்றது. உள்ளூர் ரசிகர்கள் உற்சாக கூத்தாடினார்கள்.

ஆட்ட நாயகன் விருதை சந்தேகமின்றி நெய்மாருக்கு வழங்கினர். இதுகுறித்து நெய்மார் கூறுகையில், "நான் எத்தனை கோல்கள் அடித்தேன் என்பதைவிட அணி வெற்றிபெற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பிரேசில் தனது ஆட்டத்தை துவக்கிவிட்டது. முதல் கோலை நான் சரியாக உதைக்கவில்லை.

எப்படியோ கோல் கம்பத்துக்குள் சென்றுவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் 22 வயது இளம் வீரர் நெய்மார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக கோப்பையுடன் ஓய்வு ஆண்ட்ரியா பிர்லோஉறுதி!

Posted: 12 Jun 2014 10:54 PM PDT

Andrea-Pirlo

Andrea-Pirloஇத்தாலி அணியின் நடுகள வீரர் ஆண்ட்ரியா பிர்லோ (35). பந்தை சக வீரர்களுக்கு கடத்திக் கொடுத்து கோல் அடிக்க உதவுவதில் பிரபலமானவர். இத்தாலி அணிக்காக இதுவரை 109 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர், பிரேசிலில் நடக்கும் உலக கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கூறியுள்ளார். இது குறித்து கூறுகையில், 'இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள இதுவே சரியான தருணம். வயதான பிறகும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. பிரேசில் தொடரில் இத்தாலி அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடிக்கணக்கான ரசிகர்களின் பெருமித்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கோலாகல துவக்கம்!

Posted: 12 Jun 2014 10:47 PM PDT

football

footballஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பெருமித்த எதிர்பார்ப்புக்கு இடையே 20வது உலக கோப்பை கால்பந்து தொடர் பிரேசிலில் கோலாகலமாக நேற்று நள்ளிரவு தொடங்கியது. துவக்க விழாவில் உலக தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்றனர். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான மக்கள் துவக்க விழாவை கண்டு ரசித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை கால்பந்து தொடர் இந்தாண்டு தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் நடக்கிறது. இதில், நடப்பு சாம்பியனான ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில் உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடக்க உள்ள இத்தொடருக்காக பிரேசில் அரசு பணத்தை வாரி இறைத்துள்ளது. 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பரிசுக்குவியல்கள் காத்திருக்கின்றன. புதிய மைதானங்கள் அமைக் கவும், வீரர்கள் மற்றும் வெளிநாட்டி லிருந்து வரும் ரசிகர்களுக்கு வசதியை ஏற்படுத்தி தரவும் சுமார் ரூ.84 ஆயிரம் கோடியை செலவத்துள்ளது. ஏற்கனவே கால்பந்து வெறியர்களான பிரேசில் மக்கள், தங்கள் நாட்டில் உலக கோப்பை போட்டி நடப்பதால் இன்னும் ஆர்வமிகுதியில் காணப்படுகின்றனர். காணும் இடமெல்லாம் கால்பந்து சார்ந்த நிகழ்வுகள், கேட்கும் ஒலியெல்லாம் கால்பந்து குறித்த பேச்சுக்கள், கனவிலும் கோல்கம்பத்துக்குள் பிரேசில் வீரர் அடிக்கும் பந்து செல்லும் காட்சி என பிரேசில் முழுக்க கால்பந்து மயமாகவே காட்சி அளிக்கிறது. கால்பந்து போட்டியை நடத்த ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை பிரேசில் அரசு செய்தது. உலகின் பல நாடுகளிலும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே கவுன்டவுண் தொடங்கிய நிலையில், அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த உலக கோப்பை கால்பந்து திருவிழா நேற்று நள்ளி ரவு தொடங்கியது. சா பாலோ நகரில் உள்ள எரீனா கோரிந்தியான்ஸ் ஸ்டேடியத்தில் துவக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய இந்த அரங்கேமே ரசிகர்களால் நிரம்பி வந்தது. துவக்க விழாவில் பிபா தலைவர் செப் பிளாட்டர், உலக நாடுகளின் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், விவிஐபிக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரேசில் நாட்டின் இயற்கை வளங்கள், மக்களின் வாழ்வோடு கலந்துள்ள கால்பந்து போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், இசை, நடனம் நடத்தப்பட உள்ளன. அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் மற்றும் பாப் பாடகர் பிட் புல் குழுவினர் 'அனைவரும் ஒன்றே' என்ற உலக கோப்பை கால்பந்துக்கான பாடலை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். 90 ஆயிரம் விளக்குகள் அடங்கிய எல்இடி பந்து மூலம் நடத்தப்படும் கலை நிகழ்ச்சி பார்வைகயாளர்களை வெகுவாக கவர்ந்தது. டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட துவக்க விழா நிகழ்ச்சியை கால்பந்து அணிகள் விளையாடும் நாடுகள் மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் விடிய விடிய கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து, 2014 உலக கோப்பையின் முதல் ஆட்டம் நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கியது. போட்டியை நடத்தும் பிரேசிலும், குரோஷியா அணிகளும் களமிறங்கின. துவக்க விழாவை உலகம் முழுவதும் 300 கோடி பேர் ரசித்து பார்த்தனர் 32 நாட்டு அணிகள் மோதுகின்றன 3000 கோடிக்கு பரிசுக்குவியல்

This posting includes an audio/video/photo media file: Download Now

வடமாகாணத்துக்கான தனி காவல்துறை பிரிவு!

Posted: 12 Jun 2014 10:40 PM PDT

police

policeவடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து, தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடமாகாண சபைக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அண்மையில் நிதிச் நியதி சட்ட மூலங்கள் சபைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் வடக்கு மாகாணத்துக்கான தமிழ் பேசும் தனி காவற்துறை பிரிவினை உருவாக்கும் நியதி சட்ட மூலத்தை சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதன் அவசியம் குறித்து ஏற்கனவே கடந்த மாகாண சபைக் கூட்டத்தின் போது அவர் தெளிவுபடுத்தியிருந்தார். ஏற்கனவே வடமாகாண சபைக்கான தேர்தலின போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வடக்குக்கு தனி காவற்துறை பிரிவை உருவாக்க முற்படுவார் என்று, பேரினவாத கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன. இந்த நிலையில் சிவாஜிலிங்கத்தின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை புழல் சிறையிலிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை!

Posted: 12 Jun 2014 10:34 PM PDT

pazhal-jail

pazhal-jailசென்னை, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்கள் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சென்னை அருகே, ஆந்திர கடலோரத்தில் கடந்த 7ம் திகதி அத்துமீறி மீன் பிடித்த 12 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அரசு உத்தரவின்படி நேற்று இரவு இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 51 பேர் நேற்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தரவின்படி விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, , இலங்கை கடற்படையினரால் மோசமாகத் தாக்கப்பட்டதாக விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாராளுமன்ற தீர்மானம் ஐநா நடவடிக்கையை கட்டுப்படுத்தாது!

Posted: 12 Jun 2014 10:29 PM PDT

dr.navaneetham-pillay

dr.navaneetham-pillayமனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு எதிரான தீர்மானம் பற்றி எதிர்வரும் 17,18ம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புகின்றது என அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். இந்த வருடம் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த விசாரணைக்குழுவை நியமித்தது. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், பொறுப்பு கூறுதல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமை ஆணைய உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்திடம் கேட்டிருந்தார். ஆயினும் அரசாங்கம் இதனை நிராகரித்திருந்தது, அது இந்த விசாரணைக்குழுவுடன் ஒத்துழைக்க மாட்டாதென முறைப்படி அறிவித்தது. மேலும், அரசாங்கம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் முன்னெடுப்புக்கு எதிராக வரும் 17ம் திகதி நாடாளுமன்றில் ஒரு தீர்மானத்தை கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இது பற்றி நாடாளுமன்ற அலுவல்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை ஆராயவுள்ளது. ஆளுங்கட்சியில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் பற்றிய நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. அரசாங்கத்தின் இவ்வாறான நாடாளுமன்றத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நடவடிக்கையை கட்டுப்படுத்தாது என ஐ.தே.க கூறியுள்ளது. நாட்டின் தேசிய நலனை விட்டுக்கொடுக்கும் எந்த நடவடிக்கையையும் நாம் எதிர்க்கின்றோம். இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம், நாடாளுமன்ற தீர்மானத்தை கவனத்திலெடுக்காது அதன் நடவடிக்கை தொடரும் என எதிரணியின் பிரதான கொறடா ஜோன் அமரதுங்க கூறினார். இலங்கை மீதான சர்வதேச நடவடிக்கைகளுக்கு வழிவகுத்து கொடுத்தமைக்கு இந்த அரசாங்கம் வகை கூறவேண்டுமென அமரதுங்க கூறினார். அரசாங்கம் சமயோசிதமாக செயற்பட்டிருப்பின் இந்த நிலைமையை தவிர்த்திருக்க முடியும். விவாதத்தின் போது இது பற்றி நாம் கேள்வி எழுப்புவோம் என அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜீ 77 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதிக்கு பொலிவியாவில் அதி உயர் விருது!

Posted: 12 Jun 2014 10:24 PM PDT

Rajapaksa

Rajapaksaஇலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பொலிவியாவின் அதி உயர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். ஜீ.77 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிவியா செல்லும் ஜனாதிபதிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதியினால் இந்த விருது வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் ஜனநாயக விருதான இது சமதானத்துக்கும்ää ஜனநாயகத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டுக்கு வருகைதரும் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்ராறியோ மாகாணத்தின் சட்டசபைக்காக இன்று தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்புக்கு எதிராக லிபரல் வெற்றி!

Posted: 12 Jun 2014 10:16 PM PDT

Lberal

Lberalகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் சட்டசபைக்காக இன்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி ஆட்சியை அமைக்கும் சாத்தியமே அதிகம் காணப்படுகிறது. பல ஊழல் குற்றச்சாட்டுக்களிற்கு இக்கட்சி உள்ளாக்கப்பட்டிருந்தாலும் ஏனைய கட்சிகளின் கொள்கைகளோ தலைவர்களோ உறுதியான நிலைப்பாட்டையுடையவர்களாக அடையாளப்படுத்தப்படத் தவறியமையால் லிபரல் கட்சியையே மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக முன்னேற்றகர கண்சவேட்டிவ் கட்சி இரண்டாம் நிலையைத் தக்கவைத்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக புதிய ஜனநாயகக் கட்சி மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளது. இதர சிறு கட்சிகளோ அல்லது சுயேட்சை வேட்பாளர்களோ எந்தவொரு தொகுதியிலும் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் இச் செய்தியெழுதப்படும் வரை இல்லாதவொரு சூழ்நிலையே காணப்படுகிறது. இந் நிலையில் லிபரல்கட்சி பெரும்பாண்மைப் பலத்தைப் பெறும் என்பது உறுதியாக்கப்பட்டுவிட்டது. இத் தேர்தலில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். நீதன் சாண் போட்டியிட்ட தொகுதியின் மத்திய பாராளுமன்றத்திற்கான உறுப்பினராக ராதிகா சிற்சபைஈசன் தேர்வு செய்யப்பட்டதும் நீதனும் ராதிகாவும் புதிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராதிகா மத்திய தேர்தலில் வெற்றியீட்டிய போது 5,000 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தார். தற்போது நீதன் சாண் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது இந்தத் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சிக்கான செல்வாக்கு குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. முன்னேற்றகர கண்சவேட்டிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரு தமிழர்களும் வெற்றி வாய்ப்பைத் மீண்டும் தவற விட்டுள்ளனர். இரண்டாம் இனைப்பு ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள 107 தொகுதிகளில் 58 தொகுதிகளை லிபரல்கட்சியும், 28 தொகுதிகளை முன்னேற்றகர கண்சவேட்டிவ் கட்சியும், 21 தொகுதிகளை புதிய ஜனநாயகக் கட்சியும் தக்க வைத்துள்ளன. இதன் பிரகாரம் அறுதிப் பெரும்பாண்மைக்குத் தேவையான 54 ஆசணங்களை விட மேலதிகமாக 4 ஆசணங்களைப் பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. அநேகமான தருணங்களில் கருத்துக் கணிப்பின் பிரகாரமே ஆட்சியமையும் என்பதும் இம்முறைய கருத்துக் கணிப்பினைப் புறந்தள்ளி லிபரல் கட்சி அறுதிப் பெரும்பாண்மை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வம்சாவழி மேதை அமெரிக்க உயர்நிலை பள்ளி பட்டதாரி!

Posted: 12 Jun 2014 10:10 PM PDT

Boy

Untitled-110வயதுடையஇந்தியவம்சாவழிமேதைவீட்டுபள்ளிகல்விமூலம்யு.எஸ்சில்உயர்கல்விபட்டதாரியாகியுள்ளார். யு.எஸ்சில்உயர்நிலைபள்ளிபட்டதாரியாகும்ஒருஇளவயதினர்இவராவார்.தனிஷ்க்ஆபிரகாம்என்றஇச்சிறுவன்கலிபோர்னியாவில்சக்ரமென்ரோஎன்றஇடத்தைச்சேர்ந்தவர். கலிபோர்னியாஆட்டோஅருங்காட்சியகத்தில்ஞாயிற்றுக்கிழமைதனிப்பட்டஒருவைபவத்தில்தனதுஉயர்நிலைபள்ளிடிப்ளோமாவைபெற்றார். தனது7வதுவயதிலிருந்துவீட்டுப்பள்ளியில்கல்விகற்றஆப்ரகாம்கடந்தமார்ச்மாதம்மாநிலபரீட்சைஒன்றில்சித்திஅடைந்தார். அதன்மூலம்டிப்ளோமாபட்டம்பெறதகுதியானகல்வித்தரத்தைபெற்றார்.அதிகாரத்துவம்காரணமாகஅவ்வளவுசுலமாகஇருக்கவில்லை.ஆனால்நான்கடினமாகஉழைத்துஇறுதியில்உயர்நிலைபள்ளிடிப்ளோமாவைபெற்றுள்ளேன்என்றுதெரிவித்துள்ளார். கலிபோர்னியாபல்கலைக்கழகத்தில்சேர்ந்துமருத்துவம்கற்கவிரும்புவதாககூறியுள்ளார். 7-வயதிலேயே 2-ம், 3-ம்-வகுப்பிற்குரியபுத்தகங்களைவாசித்தல், கணிதபயிற்சிசெய்தல்போன்றனவற்றைதன்னால்செய்யமுடிந்ததுஎனவும்தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்காவில் அறிமுகமாகும் புதிய எடிட்டர் சம்ஜித்!

Posted: 12 Jun 2014 09:14 AM PDT

ks-ravikumar-introducing-new-editor-in-linga

ks-ravikumar-introducing-new-editor-in-lingaதமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு படத் தொகுப்பாளரை அறிமுகம் செய்கிறார் கே எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து தான் இயக்கும் லிங்கா படத்தில். அவர் பெயர் சம்ஜித். தமிழுக்குதான் இவர் புதியவரே தவிர, ஏற்கெனவே மலையாளத்தில் கேரளா கபே, ப்ளாக்பெர்ரி போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியவர். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய போலீஸ் கிரி படத்துக்கும் இவர்தான் எடிட்டர். லிங்கா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்துக்கான எடிட்டிங் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். 20 சதவீத படம் முடிந்துவிட்டதாக சம்ஜித் தெரிவித்துள்ளார். லிங்கா படத்தை சீக்கிரமே திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதால், தனது வேகத்துக்கேற்ப பணியாற்றும் சம்ஜித்தை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் -55 படத்தில் அனுஷ்காவுக்கு போட்டியாக த்ரிஷா!

Posted: 12 Jun 2014 09:10 AM PDT

trisha

trishaஅஜீத் -55 படத்தில், அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட வேடத்தில் த்ரிஷா நடிக்கிறார். அஜீத் - கவுதம் மேனன் இணையும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். த்ரிஷாவுக்கு இரண்டாவது கதாநாயகி வேடமா என்ற கேள்வி, செய்தியாக வெளிவந்தது. இதைத் தொடர்ந்து, கவுதம் மேனன் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர். அதில், 'த்ரிஷா இரண்டாவது நாயகி கிடையாது. அனுஷ்காவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட நாயகி வேடத்தில்தான் நடிக்கிறார். காரணம், இந்தக் கதையை த்ரிஷாவை மனதில் வைத்துதான் கவுதம் மேனன் எழுதினார்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூச்சாண்டி… தலைப்பை ஏற்பாரா சூர்யா?

Posted: 12 Jun 2014 09:06 AM PDT

surya

suryaஅஞ்சான் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் அல்லவா... இந்தப் படத்துக்கு பூச்சாண்டி என தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்தத் தலைப்பு உறுதியானதல்ல... இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. சூர்யா - லிங்குசாமியின் அஞ்சான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்தவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்படத்துக்கு கடந்த மாதமே பூஜையும் போட்டுவிட்டார்கள். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பல நடிகைகள் பெயர் அடிபட்டு வருகிறது. இப்போதைய நிலவரப்படி நயன்தாரா அல்லது எமி ஜாக்சன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு 'பூச்சாண்டி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பூச்சாண்டி என்ற தலைப்பை தன் தம்பி பிரேம்ஜிக்காக முன்பு பதிவு செய்து, அதை இயக்கப் போவதாக அறிவிப்பும் வெளியிட்டார் வெங்கட் பிரபு. ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. கார்த்தியை வைத்து பிரியாணி படத்தை இயக்கினார். தலைப்பு விஷயத்தில் மிகவும் கவணமாக இருப்பவர் சூர்யா. அவர் பூச்சாண்டி என்ற தலைப்பை ஏற்பாரா என்பது கேள்விக்குரியது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™