மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஈராக்கில் 40 இந்தியர்களையும் லாரியில் கடத்தி ரகசிய இடத்தில் சிறைவைப்பு
- பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது
- மும்பை– அகமதாபாத் இடையே 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரெயில்: மோடி திட்டம்
- தெலுங்குதேசம் கட்சிக்கு அங்கீகாரம்: மத்திய தேர்தல் கமிஷன் கடிதம்
- மேற்குவங்க சட்டசபையில் ரெயில் கட்டண உயர்வை எதிர்த்து மம்தா தீர்மானம்
- ஆந்திர சட்டசபையில் ஜெகன்மோகன் பேசியபோது திடீர் ஒத்திவைப்பு
- சைபர் குற்றங்களை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு: கல்வி துறை ஏற்பாடு
- மவுண்ட்பேட்டன் காலத்து பைல்கள் சிக்கின: நரேந்திர மோடி உத்தரவால் 1½ லட்சம் கோப்புகள் அழிப்பு
- மகிழ்ச்சியான தகவல்: செல்போன் கதிர்வீச்சால் எந்த தீங்கும் வராது - நிபுணர்கள் விளக்கம்
- டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம்: மும்பையில் காங்கிரசார் நூதன போராட்டம்
- அடுத்த வாரம் மத்திய மந்திரிசபை விரிவாக்கம் 20 பேர் இடம் பெற வாய்ப்பு
- ஆந்திராவில் முக்கிய கோவில்களில் இலவச பள்ளிகள், மருத்துவமனை: சந்திரபாபு நாயுடு
- சிவசேனா எதிர்ப்பு எதிரொலி: புறநகர் ரெயில் கட்டணம் குறையுமா?
- பா.ஜ.க. மூத்த தலைவர்கள் 7 பேர் கவர்னர் ஆகிறார்கள்
- கேரளாவில் ரூ.2¼ கோடி போதைப் பொருட்களுடன் 2 வாலிபர்கள் சிக்கினர்
- கெஜ்ரிவாலை பிடித்து ஆட்டும் சனி: ஆட்சியை பறி கொடுத்ததுடன் வீட்டுக்கும் திண்டாட்டம்
- டெல்லியில் உள்ள 33 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- பிரதமர் மோடியை இந்தி நடிகர் அமிர்கான் சந்தித்தார்: சமூக பிரச்னைகள் குறித்து பேச்சு
- இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சர்க்கரை விலை ரூ.3 வரை உயரும்
- வட இந்தியாவில் மிதமான மழை: வெயிலின் தாக்கம் குறைந்தது
| ஈராக்கில் 40 இந்தியர்களையும் லாரியில் கடத்தி ரகசிய இடத்தில் சிறைவைப்பு Posted: 23 Jun 2014 11:13 PM PDT ஈராக்கில் 40 இந்தியர்களையும் தீவிரவாதிகள் லாரியில் கடத்திச் சென்று ரகசிய இடத்தில் சிறை வைத்தனர் என்று பஞ்சாப் வாலிபர் தெரிவித்தார். ஈராக்கில் ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டையால் உள்நாட்டுப் போர் மூண்டுள்ளது. திக்ரித், மொசூல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். திக்ரித் நகரில் 46 இந்திய நர்சுகளும், மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும் தீவிர வாதிகளிடம் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. |
| பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது Posted: 23 Jun 2014 11:07 PM PDT மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஈராக் உள்நாட்டு போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் அது இந்திய பொருளாதாரத்திலும் |
| மும்பை– அகமதாபாத் இடையே 350 கி.மீ. வேகத்தில் அதிவேக ரெயில்: மோடி திட்டம் Posted: 23 Jun 2014 11:03 PM PDT பிரதமர் நரேந்திர மோடி மும்பை– அகமதாபாத் இடையே அதிவேக ரெயில் விடும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் அதிவேக ரெயில் மும்பை– அகமதாபாத் இடையே விடப்படுகிறது. இதன் திட்டமதிப்பீட்டு பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. மும்பை– அகமதாபாத் அதிவேக ரெயில் |
| தெலுங்குதேசம் கட்சிக்கு அங்கீகாரம்: மத்திய தேர்தல் கமிஷன் கடிதம் Posted: 23 Jun 2014 10:56 PM PDT ஆந்திராவில் பாராளுமன்றம், சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு முதல்– மந்திரியாக பதவி ஏற்றார் இதேபோல தெலுங்கானாவிலும் சில தொகுதிகளை தெலுங்குதேசம் கைப்பற்றியது. |
| மேற்குவங்க சட்டசபையில் ரெயில் கட்டண உயர்வை எதிர்த்து மம்தா தீர்மானம் Posted: 23 Jun 2014 10:43 PM PDT ரெயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு ரெயில் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், அதனை உடனே வாபஸ் பெறக் கோரியும் மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டத்துறை மந்திரி பார்த்தா சட்டர்ஜி தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீது முதல்– மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், |
| ஆந்திர சட்டசபையில் ஜெகன்மோகன் பேசியபோது திடீர் ஒத்திவைப்பு Posted: 23 Jun 2014 10:43 PM PDT ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பேசிக் கொண்டு இருக்கும் போதே சபாநாயகர் சபையை ஒத்தி வைத்த செயலுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஆந்திர சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசினார். அப்போது அவர் தேர்தலின் போது தெலுங்கு தேசம் அறிவித்த வாக்குறுதி |
| சைபர் குற்றங்களை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு: கல்வி துறை ஏற்பாடு Posted: 23 Jun 2014 10:35 PM PDT நாடு முழுவதும் இப்போது சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது. இதில் பள்ளி மாணவ–மாணவிகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். செல்போன், பேஸ்புக், சேட்டிங் மற்றும் இன்டெர்நெட் வலை தளங்களை பார்ப்பது மூலம் அவர்களின் மனமும், எண்ணங்களும் பாழாக்கப்படுகிறது. இதில் பாதிக்கப்படும் மாணவ–மாணவிகள் தங்களின் எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விட்டு பரிதவித்து நிற்கும் காட்சிகள் அதிகரித்து வருகிறது. |
| மவுண்ட்பேட்டன் காலத்து பைல்கள் சிக்கின: நரேந்திர மோடி உத்தரவால் 1½ லட்சம் கோப்புகள் அழிப்பு Posted: 23 Jun 2014 10:32 PM PDT பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் மத்திய அரசின் நிர்வாகப் பணிகளில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தார். 80–க்கும் மேற்பட்ட துறை செயலாளர்களை நேரில் சந்தித்து பேசிய மோடி, ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலனை முன்நிறுத்தி பணியாற்ற அறிவுறுத்தினார். முக்கிய விவகாரங்களில் உடனுக்குடன் |
| மகிழ்ச்சியான தகவல்: செல்போன் கதிர்வீச்சால் எந்த தீங்கும் வராது - நிபுணர்கள் விளக்கம் Posted: 23 Jun 2014 10:24 PM PDT நமது அன்றாட வாழ்வியலில் ஒன்றாக பின்னிப்பிணைந்து விட்ட கைபேசிகளும், கைபேசி அலைவரிசையை கொண்டு சேர்க்கும் உயர் கோபுரங்களும் 'எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்ட்' என்னும் கதிர்வீச்சினை அதிக அளவில் வெளியேற்றுகின்றன. இந்த கதிர்வீச்சானது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இந்த கருத்து தவறானது என்று இந்தியாவை சேர்ந்த கதிர்வீச்சியல் துறை நிபுணர்கள் தற்போது விளக்கம் |
| டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம்: மும்பையில் காங்கிரசார் நூதன போராட்டம் Posted: 23 Jun 2014 10:23 PM PDT ரெயிலில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (25–ந்தேதி) முதல் அமுலுக்கு வருகிறது. ரெயில் கட்டண உயர்வுக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை வாபஸ் பெறும்படி போராட்டங்களும் நடந்து வருகிறது. ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு பதிலாக மும்பையில் ரெயிலில் |
| அடுத்த வாரம் மத்திய மந்திரிசபை விரிவாக்கம் 20 பேர் இடம் பெற வாய்ப்பு Posted: 23 Jun 2014 10:17 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய பா.ஜ.க. மந்திரிசபை கடந்த மாதம் 26–ந்தேதி பதவி ஏற்றது. அப்போது மோடியுடன் 45 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். தற்போதைய மந்திரிசபையில் மூத்த மந்திரிகளில் பலர் கூடுதல் பொறுப்புகளை சேர்த்து கவனித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு துறைகளுக்கு ராஜாங்க மந்திரிகள் நியமனம் |
| ஆந்திராவில் முக்கிய கோவில்களில் இலவச பள்ளிகள், மருத்துவமனை: சந்திரபாபு நாயுடு Posted: 23 Jun 2014 10:12 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் இலவச கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் வருமானம் அதிகம் உள்ள முக்கிய கோவில் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம், இலவச கல்வி, இலவச மருத்துவ வசதி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக சிம்மாசலம், அன்னவரம், விஜயவாடா கனகதுர்கா கோவில், காணிப்பாக்கம் விநாயகர் கோவில், ஸ்ரீசைலம் சிவன் கோவில், துவாரகா |
| சிவசேனா எதிர்ப்பு எதிரொலி: புறநகர் ரெயில் கட்டணம் குறையுமா? Posted: 23 Jun 2014 10:12 PM PDT சிவசேனா கட்சி எதிர்ப்பு காரணமாக புறநகர் ரெயில் கட்டண உயர்வு குறைக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ரெயில் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பயணிகள் ரெயில் கட்டணம் 14.2 சதவீதம் உயத்தப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரெயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு நேர பயணத்தில் 2–ம் வகுப்பு கட்டணம் உயர்த்தப்படவில்லை. முதல் வகுப்பு |
| பா.ஜ.க. மூத்த தலைவர்கள் 7 பேர் கவர்னர் ஆகிறார்கள் Posted: 23 Jun 2014 10:04 PM PDT மாநில கவர்னர்களை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பதவியில் இருந்து விலகுமாறு 13 மாநில கவர்னர்களை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டது. அதை ஏற்று உத்தரபிரதேச கவர்னர் ஜோஷி, சத்தீஷ்கர் கவர்னர் சேகர் தத் இருவரும் பதவி விலகினார்கள். கேரள கவர்னர் ஷீலா தீட்சித், மராட்டிய கவர்னர் சங்கர நாராயணன் ஆகிய இருவரும் கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தனர். |
| கேரளாவில் ரூ.2¼ கோடி போதைப் பொருட்களுடன் 2 வாலிபர்கள் சிக்கினர் Posted: 23 Jun 2014 09:28 PM PDT கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அரிபாடு மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. அதில் அரிபாடு எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உள்ள லாட்ஜில் போதை பொருட்கள் விற்பனை |
| கெஜ்ரிவாலை பிடித்து ஆட்டும் சனி: ஆட்சியை பறி கொடுத்ததுடன் வீட்டுக்கும் திண்டாட்டம் Posted: 23 Jun 2014 08:31 PM PDT டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், திலக் லேன் பகுதியில் அவருக்கு அரசாங்கம் வழங்கிய வீட்டில் தொடர்ந்து வசித்து வருகிறார். பதவியை ராஜினாமா செய்த பின்னரும் தொடர்ந்து அரசுக்கு சொந்தமான வீட்டில் வசித்தால் மாத வாடகையாக 85 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று டெல்லி அரசு கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எனினும், பிளஸ் 2 படித்து வரும் தன் மகளின் தேர்வு முடியும்வரை அங்கு |
| டெல்லியில் உள்ள 33 தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 23 Jun 2014 08:21 PM PDT டெல்லியில் பல நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. இவற்றில் நேற்று 33 நாடுகளின் தூதரகங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தன. ஒரே முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட அந்த கடிதங்களில், 'இந்த தூதரகங்கள் உடனடியாக மூடப்படவில்லை என்றால் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்படும்' என்ற மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. |
| பிரதமர் மோடியை இந்தி நடிகர் அமிர்கான் சந்தித்தார்: சமூக பிரச்னைகள் குறித்து பேச்சு Posted: 23 Jun 2014 04:44 PM PDT பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிர்கான் சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தனது டி.வி. தொடரான சத்யமேவ ஜெயதேவில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்கி கூறினார். பிரதமரை சந்தித்த பின் பேசிய அமிர் கூறியதாவது, "தான் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து உரிய கவனம் செலுத்துவதாக பிரதமர் தன்னிடம் |
| இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: சர்க்கரை விலை ரூ.3 வரை உயரும் Posted: 23 Jun 2014 02:10 PM PDT சர்க்கரை இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டதால், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.3 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை நிறுவனங்கள் கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கின்றன. சர்க்கரைக்கான உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாலும், அதே சமயத்தில், வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதி காரணமாக, உள்ளூரில் சர்க்கரை விலை குறைவாக இருப்பதாலும் இந்த |
| வட இந்தியாவில் மிதமான மழை: வெயிலின் தாக்கம் குறைந்தது Posted: 23 Jun 2014 11:11 AM PDT கடந்த மாதம் முதல் வட இந்திய நகரங்களில் கடுமையாக காணப்பட்ட வெயிலின் தாக்கம் தற்போது சிறிதளவு குறைந்துள்ளது. அங்கு தற்போது பெய்து வரும் மிதமான மழை வெயிலின் தாக்கத்தை குறைத்து இதமான வானிலையை தந்து மக்களின் புழுக்கத்தை குறைத்துள்ளது. இன்று காலை தலைநகர் டெல்லியில் பல இடங்களில் சுமாரான மழையும், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |