Tamil Star |
- மீண்டும் புதுப்பொலிவுடன் தயாராகும் காமராஜ் திரைப்படம் 'பெருந்தலைவர்' பிறந்த நாளில் வெளியாகிறது!
- 125 படங்களை இயக்கி உலக சாதனைப் படைத்த ராம நாராயணன் மரணம்!
- அட்டகத்தி தினேஷ் .. 'அதிரிபுதிரியாக' நடிக்கும் திருடன் போலீஸ்!
- குறைந்த ஊதிய வேலைக்கு இரு மகள்களையும் அனுப்ப ஆசைப்படும் ஒபாமா தம்பதி!
- சிறுமியின் மேல் ஏறிச்சென்ற டிரக்…. பதறவைக்கும் திக் திக் நிமிடம்!
- கையில ஏகப்பட்ட வித்தையைக் கற்று வைச்சிருப்பாரு போல!
- தந்தையின் கொடுமை: விமான சக்கரத்தில் சிறுவன் “த்ரில்” பயணம்!
- உலகத்துல சிரிக்க வைக்குறதுக்குனே ஒரு பட்டாளம் இருக்காங்கப்பா
- ஆமா…. இது உடம்பா?… அல்லது இரப்பரா?… பிஞ்சிலே என்னாமா பழுத்துறுக்குது!
- 2வது டெஸ்டில் இங்கிலாந்து 365 ரன்னில் ஆல் அவுட்
- உலக கோப்பை எப் பிரிவில் ஸ்னியாவை வெளியேற்றியது நைஜீரியா!
- ஈராக்-சிரியா எல்லையில் மற்றொரு பகுதியும் தீவிரவாதிகள் வசமானது!
| மீண்டும் புதுப்பொலிவுடன் தயாராகும் காமராஜ் திரைப்படம் 'பெருந்தலைவர்' பிறந்த நாளில் வெளியாகிறது! Posted: 23 Jun 2014 12:22 AM PDT
2004-ம் ஆண்டு திரைக்கு வந்து பலராலும் பாராட்டப்பட்ட 'காமராஜ்' திரைப்படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளது. 'காமராஜ்' வேடத்தில் ரிச்சர்டு மதுரம் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சாருஹாசன், வி.எஸ்.ராகவன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ரிச்சர்டு மதுரம் இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சமுத்திரகனியும் இந்தப் படத்தில் இணைகிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இவர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் விரைவில் படமாக்கப்பட உள்ளது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் இப்படத்தை எழுதி, இயக்கி இருப்பவர் பாலகிருஷ்ணன். எம்.எம்.ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் குரலில் ஒலிக்கும் நாடு பார்த்ததுண்டா என்ற பாடல் இதில் பிரபலமான பாடலாகும். புதுப்பொலிவுடன் 'காமராஜ்' படம் காமராஜரின் 112-வது பிறந்தநாளான 11.07.2014 அன்று இந்தியா முழுவதும் திரையிடப்பட உள்ளதாக இயக்குனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 125 படங்களை இயக்கி உலக சாதனைப் படைத்த ராம நாராயணன் மரணம்! Posted: 23 Jun 2014 12:18 AM PDT
125 படங்களை இயக்கி உலக சாதனைப் படைத்தவர் மறைந்த ராம நாராயணன். தமிழ் திரையுலகிலன் மிகப் பெரிய சாதனையாளர் ராம நாராயணன். சினிமாவைப் புரிந்தவர். 1976-ல் ஒரு பாடலாசிரியராக வேண்டும் என்ற நோக்கில் காரைக்குடியிலிருந்து சென்னை வந்தவர் ராம நாராயணன். 1976-ல் முதல் முறையாக ஆசை அறுபது நாள் படத்துக்கு கதை வசனம் எழுதினார். அதற்கு அடுத்த ஆண்டே மீனாட்சி குங்குமம் என்ற படத்தைத் தயாரித்தார். அன்றைக்கு அவர் பெயர் ராம் - ரஹீம். தொடர்ந்து இதே பெயரில் சில படங்களுக்கு எழுதியவர், 1980-ம் ஆண்டு முதல் முறையாக படம் இயக்கினார். அதுதான் சுமை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிஷா, மராத்தி, மலாயா என 9 மொழிகளில் படங்கள் இயக்கினார் ராம நாராயணன். இவரது 50வது படம் வீரன் வேலுத்தம்பி. திமுக தலைவர் மு கருணாநிதி வசனம் எழுதிய படம் அது. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா படம்தான் அவரது நூறாவது படம். கடைசியாக அவர் இயக்கிய படம் ஆர்யா சூர்யா. அந்தப் படத்துக்கு முன் மலாய் மொழியில் ஒரு படம் இயக்கினார். ஒரு இயக்குநராக 125 படங்களை இயக்கியது அவரது உலக சாதனையாகும். அதேபோல இவர் அளவுக்கு அதிக மொழிகளில் படங்கள் இயக்கியவர் யாருமில்லை. கரகாட்டக்காரன், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்பட பல படங்களைத் தயாரித்து, விநியோகித்துள்ளார். ஏராளமான ஆங்கிலப் படங்களை தமிழில் விநியோகித்துமிருக்கிறார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருமுறை பதவி வகித்தவர் ராம நாராயணன். திமுக தலைவர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான இவர், காரைக்குடி தொகுதியின் எம்எல்ஏவாகவும் இருந்தார். நடிகர்களை விட, மிருகங்களை அதிகம் நம்பி படமெடுப்பவர் என்று ராம நாராயணன் பற்றி, அவர் மேடையில் இருக்கும்போதே சிலர் பேசியதுண்டு. அதையெல்லாம் ஒன் சிரிப்புடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பார் ராம நாராயணன். ஆனால் ஒரு முறை, நான் மிருகங்களை வச்சி எடுத்த படம் பத்தித்தான் சொல்றாங்க... சுமை படத்தை நான்தான் எடுத்தேன். சிகப்பு மல்லி, மனைவி சொல்லே மந்திரம்னு வேற படங்களும் எடுத்தேன். அவற்றை யாரும் சொல்வதில்லை," என்றார் வருத்தத்துடன். தமிழ் சினிமாவில் ராம நாராயணன் அனைவருக்குமே நண்பர்தான். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாஸன், இளையராஜா என தமிழ் சினிமாவின் ஆளுமைகளுடன் இணக்கமான நட்பு பாராட்டியவர் ராம நாராயணன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அட்டகத்தி தினேஷ் .. 'அதிரிபுதிரியாக' நடிக்கும் திருடன் போலீஸ்! Posted: 23 Jun 2014 12:10 AM PDT
குக்கூ படத்துக்குப் பிறகு தினேஷ் நாயகனாக நடிக்கும் படம் திருடன் போலீஸ். இந்தப் படத்தை எஸ்பிபி சரண் தயாரிக்கிறார். பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை நவீனமயமாக்கி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்த எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசாகும் தருவாயில் உள்ளது. கம்ப்யூட்டர் தொழில்நுட்ப காட்சிகளில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மூலம் தனக்கு நிலையான பெயரை நிலை நிறுத்திக் கொள்ள மெனக்கெடும் தினேஷுக்கு 'திருடன் போலீஸ்' ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் கார்த்திக். இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா. நிதின் சத்யா, பால சரவணன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜான் விஜய் ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய தூண்களாக நடிக்கின்றனர். மூத்த நடிகர் ராஜேஷ் கண்ணியமான ஒரு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதிய முயற்சிகளுக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் 'திருடன் போலீஸ்' ஜூலை மாதம் இறுதியில் வெளிவருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குறைந்த ஊதிய வேலைக்கு இரு மகள்களையும் அனுப்ப ஆசைப்படும் ஒபாமா தம்பதி! Posted: 23 Jun 2014 12:03 AM PDT
அமெரிக்க அதிபரான ஒபாமா தனது இரு குழந்தைகளும் மிகக் குறைந்த ஊதியத்திலான பணிக்கு செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் அதன் மூலமாகத் தான் அவர்கள் தங்களது குணாதிசயங்களை சரியாக உருவாக்கிக் கொள்ள இயலும் என நம்புகிறாராம் ஒபாமா. அமெரிக்க அதிபரான ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெயர் மலியா மற்றும் சாஷா. பொதுவாக பெரும் பதவியில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் சவுகர்யமாக, வசதியாக வாழ வைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், அவர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கின்றனர் ஒபாமாவும், அவரது மனைவியும். தங்களது அதிகாரம், செல்வாக்கு மற்றும் வசதியின் நிழல் தங்களது குழந்தைகளின் மீது பட்டு விடாமல், அவர்களது எதிர்காலத்தை அவர்களே நிர்ணயம் செய்யும் வகையில் வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் அவர்கள். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர் ஒபாமாவும், அவரது மனைவியும். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு குழந்தை கடின உழைப்பின் சுவை என்னவென்றது அதுவே உழைத்து உணர வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதன் மூலமாகவே வாழ்க்கையின் ருசியை அவர்கள் உணர இயலும். எங்கள் குழந்தைகளுக்கு கடின உழைப்பை கற்றுக் கொண்டு வாழவே நாங்கள் விரும்புகிறோம். ஊதியம் குறைவானதாக இருந்தாலும், அதன் மூலம் அவர்களது தங்களது எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அத்தகைய வாய்ப்புகள் அவர்களுக்கு உருவாக வேண்டும் என ஆவலாகக் காத்திருக்கிறோம். ஏனெனில் உழைப்பிற்கான ஊதியம் எப்போதும் வேடிக்கையானதாக இருக்கக் கூடாது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலாளர்கள் குறித்த புள்ளி விபரம், கடந்த 1999ம் ஆண்டு 52 சதவீதமாக இருந்த 16 முதல் 19 வயது வரை உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 32 சதவீதமாக குறைந்துள்ளதாகக் கூறுகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வாலிப வயதில் ஐஸ்க்ரீம் கடையிலும், அவரது மனைவி மிஷல் புத்தக பைண்டிங் தொழிலும் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுமியின் மேல் ஏறிச்சென்ற டிரக்…. பதறவைக்கும் திக் திக் நிமிடம்! Posted: 22 Jun 2014 11:57 PM PDT |
| கையில ஏகப்பட்ட வித்தையைக் கற்று வைச்சிருப்பாரு போல! Posted: 22 Jun 2014 11:53 PM PDT |
| தந்தையின் கொடுமை: விமான சக்கரத்தில் சிறுவன் “த்ரில்” பயணம்! Posted: 22 Jun 2014 11:49 PM PDT |
| உலகத்துல சிரிக்க வைக்குறதுக்குனே ஒரு பட்டாளம் இருக்காங்கப்பா Posted: 22 Jun 2014 11:42 PM PDT |
| ஆமா…. இது உடம்பா?… அல்லது இரப்பரா?… பிஞ்சிலே என்னாமா பழுத்துறுக்குது! Posted: 22 Jun 2014 11:39 PM PDT |
| 2வது டெஸ்டில் இங்கிலாந்து 365 ரன்னில் ஆல் அவுட் Posted: 22 Jun 2014 11:31 PM PDT
இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 257 ரன்னுக்கு சுருண்டது. சங்கக்கரா அதிகபட்சமாக 79 ரன் எடுத்தார். சண்டிமால் 45, கருணரத்னே 28, கேப்டன் மேத்யூஸ் 26, ஜெயவர்தனே 22 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பிளங்கட் 5, பிராடு 3, ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 365 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர் சாம் ராப்சன் 127, கேரி பேலன்ஸ் 74, இயான் பெல் 64 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் எரங்கா, மேத்யூஸ் தலா 4, நுவன் பிரதீப், தம்மிகா பிரசாத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 108 ரன் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக கோப்பை எப் பிரிவில் ஸ்னியாவை வெளியேற்றியது நைஜீரியா! Posted: 22 Jun 2014 11:23 PM PDT
உலக கோப்பை எப் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் நைஜீரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் போஸ்னியா ஹெர்சகோவினா அணியை வீழ்த்தியது. நைஜீரியா வீரர் பீட்டர் ஒதிம்விங்கி 29வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த போஸ்னியா அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிப்பதுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. நைஜீரியா (4), ஈரான் (1) அடுத்த இடங்களில் உள்ளன. போஸ்னியா அணி ஒரு புள்ளி கூட பெறாமல் பின்தங்கி உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈராக்-சிரியா எல்லையில் மற்றொரு பகுதியும் தீவிரவாதிகள் வசமானது! Posted: 22 Jun 2014 11:17 PM PDT
ஈராக்-சிரியா எல்லையில் உள்ள மற்றொரு பகுதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஈராக்கின் நினேவா மாகாணத்துக்கும், சிரியாவின் அல்-ஹசேகா மாகாணத்துக்கும் இடைப்பட்ட மிகப் பெரிய பகுதியை தீவிரவாதிகள் இரு தினங்களுக்கு முன் கைப்பற்றினர். தற்போது இரு நாட்டு எல்லையில் உள்ள அல்-குவாம் எல்லைப் பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அருகில் உள்ள ராவா, அனா நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதையடுத்து ஈராக்-சிரியா எல்லையில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு தீவிரவாதிகளின் கட்டப்பாட்டுக்கு வந்தன. மூன்றாவது பகுதி ஈராக் அரசுக்கு ஆதரவான குர்த் இன மக்களின் கட்டப்பாட்டில் உள்ளது. ஏற்கெனவே சிரியாவில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு தற்போது ஈராக்-சிரியாவில் புதிய இஸ்லாமிய நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை இதனிடையில் தீவிரவாதிகள் கடத்தியுள்ள 39 இந்தியர்களையும் பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பரிதவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் பணியாற்றும் நிறுவனங்களுடன் இநதிய தூதரக அதிகாரிகள் பேசி வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











